ஒருநாள் இறந்த பின் நரகத்துக்கு செல்கிறான். அங்கு ஒவ்வொரு நாட்டுக்கெனதனித்தனி நரகங்கள். முதலில் அவன் ஜெர்மன் நரகத்துக்குப் போய் அங்கு என்ன என்று பார்த்தான். 'முதலில் உங்களை எலக்ட்ரிக் சேரில் இரண்டு மணி நேரம் உட்கார வைப்பார்கள். பிறகு ஆணியால் ஆன படுக்கையில் ஒருமணி நேரம்' அதன் பின் நாள் பூரா கசையடி' என ஒருவர் விவரிக்க அவன் அமெரிக்க நரகத்துக்கு ஓட்டமெடுத்தான். அங்கும் இதே கதை தான். ஜப்பான் ரஷ்யா சீனா என ஒவ்வொரு நரகத்திலுமே ட்ரீட்மெண்ட் ஒரே போல.
கடைசியாக அவன் நம் நாட்டு நரகத்துக்கு வந்தான். வாசலில் நீளமான கியூ. எல்லோருக்குமே இங்கு வரத்தான் ஆசை. ஆச்சரியப்பட்டு அவன் ஒருவரிடம் கேட்க அவரும் அதே எலக்ட்ரிக் சேர் ஆணி படுக்கை கசையடி என விவரித்தார்.அப்படியும் ஏன் உலகெங்கும் இருந்தும் மக்கள் இங்கு வர விரும்புகிறார்கள் என கேட்டான்.
இங்கு எலக்ட்ரிக் சேர் இருக்கு. ஆனா மெயினடென்ஸே கிடையாது. எனவே ஒர்க்கிங் கண்டிஷனில் இல்லை. ஏதோ திருட்டுப்பய வந்து படுக்கையில் இருந்த ஆணி எல்லாத்தையும் உருவிக் கிட்டு பொயிட்டான். இங்கே கசையடி கொடுக்கிற தேவதை முன்னால் அரசு ஊழியன். வருவான கையெழுத்திடுவான் பிறகு கேண்டீன் போய்விடுவான். வரவே மாட்டான் ஜாலிதான் என்றார்.
இது எப்படி இருக்கு?.
படித்தேன்! ரசித்தேன்! பகிர்ந்து கொண்டேன்!
No comments:
Post a Comment