Followers

Monday, January 30, 2006

கண்ணுக்கு கண் - ஓர் அலசல்

கேரளாவைச் சேர்ந்த நெளஷாத் சவுதி அரேபியாவில் அந்நாட்டு பிரஜையுடன் நடந்த கை கலப்பில் சவுதியின் கண்ணைப் பறித்து விட்டார். எனவே 'கண்ணுக்கு கண்' என்ற இஸ்லாமிய சட்டத்தின்படி நெளஷாத் கண்ணையும் அதே போல் எடுக்க உத்தரவிட்டது. இதில் இஸ்லாம் சம்பந்தப் பட்டுள்ளதால் நமது இந்திய பத்திரிக்கைகள் ஒன்று சேர்ந்து பிரச்சினையாக்கி உள்ளன.

சவுதி மன்னரின் இந்திய விஜயத்தில் அவரிடம் மன்னிக்கச் சொல்லி கேட்போம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். து}க்கு தண்டனை கைதிகளை நம் இந்திய ஜனாதிபதி மன்னிக்கிறார் அல்லவா? அதுபோல.

இதில் ஒன்றை நாம் பார்க்க வேண்டும். மன்னிக்கும் தகுதி பாதிக்கப்பட்டவருக்கு உள்ளதே யொழிய ஜனாதிபதிக்கோ மன்னருக்கோ இதில் எந்த அதிகாரமும் இல்லை. இதை ஏன் அனைவரும் உணருவதில்லை? தற்போது சம்பத்தப்பட்ட சவுதியும் அவரின் குடும்பத்தவரும் நெளஷாத் குடும்பத்தவரின் ஏழ்மையை கருத்தில் கொண்டு மன்னித்து விட்டதாக இன்று செய்தி கிடைத்துள்ளது. சந்தோஷம். இதுதான் முறையும் கூட.

நமது இந்திய அரசியல் அமைப்பிலும் இதுபோன்ற சட்ட திருத்தம் ஏன் நாம் கொண்டு வரக் கூடாது?

3 comments:

சீனு said...

//இதில் ஒன்றை நாம் பார்க்க வேண்டும். மன்னிக்கும் தகுதி பாதிக்கப்பட்டவருக்கு உள்ளதே யொழிய ஜனாதிபதிக்கோ மன்னருக்கோ இதில் எந்த அதிகாரமும் இல்லை. இதை ஏன் அனைவரும் உணருவதில்லை?//
இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே...

ஜோதிஜி said...

இன்று தான் உங்கள் பெரும்பாலான பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மதம் சார்ந்த விசயங்களை உங்கள் பார்வையில் எழுதியிருந்தாலும் மற்ற வலைதளங்களை குறிப்பாக திரைப்படங்கள் மற்றும் பத்துப் பைசாவுக்கு வெகுமதி இல்லாத எழுத்துக்களை விட உங்கள் ஒவ்வொரு ஆக்கமும், இதற்காக நீங்கள் உழைத்துள்ள உழைப்பிற்கும் என் வாழ்த்துகள்.

suvanappiriyan said...

ஜோதிஜி!

//இன்று தான் உங்கள் பெரும்பாலான பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மதம் சார்ந்த விசயங்களை உங்கள் பார்வையில் எழுதியிருந்தாலும் மற்ற வலைதளங்களை குறிப்பாக திரைப்படங்கள் மற்றும் பத்துப் பைசாவுக்கு வெகுமதி இல்லாத எழுத்துக்களை விட உங்கள் ஒவ்வொரு ஆக்கமும், இதற்காக நீங்கள் உழைத்துள்ள உழைப்பிற்கும் என் வாழ்த்துகள்.//

கிடைக்கும் ஓய்வு நேரத்தை இப்படி உபயோகமாக ஏதாவது செய்வோமே என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த வலைப்பூ. நம் கருத்தை மற்றவர்கள் ஏற்கிறார்களோ இல்லையோ சொல்ல வந்ததை நேரிடையாக சொல்லிவிடுவது எனது பாங்கு.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!