Followers

Sunday, June 25, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - அய்ந்து

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - அய்ந்து

'நரசங்சா'

நரசங்சா என்ற பெயர் இந்து மத வேதங்களில் பல இடங்களில் வரும். இதை முறையே பிரித்தோமானால் 'நர' - 'அசஙசா' என்று வரும். நர என்றால் மனிதன் அசங்சா என்றால் புகழப்பட்டவர். ஆக நரசங்சா என்பதன் பொருள் புகழப்பட்டவர். புகழப்பட்டவர் என்ற பதத்தைத்தான் நாம் அரபியில் முஹம்மது என்கிறோம். இனி நரசங்சா என்று இந்து மத வேதங்களில் வரக் கூடிய இடங்களைப் பார்ப்போம்.

1) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 13 - செய்யுள் 3

2) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 18 - செய்யுள் 9

3) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 106 - செய்யுள் 4

4) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 142 - செய்யுள் 3

5) ரிக் வேதம் - புத்தகம் 2 - பாட்டு 3 - செய்யுள் 2

6) ரிக் வேதம் - புத்தகம் 3 - பாட்டு 29 - செய்யுள் 11

7) ரிக் வேதம் - புத்தகம் 5 - பாட்டு 5 - செய்யுள் 2

8) ரிக் வேதம் - புத்தகம் 7 - பாட்டு 2 - செய்யுள் 2

9) ரிக் வேதம் - புத்தகம் 10 - பாட்டு 64 - செய்யுள் 3

10) ரிக் வேதம் - புத்தகம் 10 - பாட்டு 182 - செய்யுள் 2

11) சாம வேதம் - உத்தராசிக் - மந்த்ரா 1349

12) யஜீர் வேதம் - அதிகாரம் 29 - செய்யுள் 27

13) யஜீர் வேதம் - புத்தகம் 1 - அதிகாரட் 6 - செய்யுள் 4

14) யஜீர் வேதம் - புத்தகம் 1 - அதிகாரம் 7 - செய்யுள் 4

15) யஜீர் வேதம் - அதிகாரம் 20 - செய்யுள் 37

16) யஜீர் வேதம் - அதிகாரம் 20 - செய்யுள் 57

17) யஜீர் வேதம் - அதிகாரம் 21 - செய்யுள் 31

18) யஜீர் வேதம் - அதிகாரம் 21 - செய்யுள் 55

19) யஜீர் வேதம் - அதிகாரம் 28 - செய்யுள் 2

20) யஜீர் வேதம் - அதிகாரம் 28 - செய்யுள் 19

21) யஜீர் வேதம் - அதிகாரம் 26 - செய்யுள் 42

ராமாயணமும் மகாபாரதமும் நம் அனைவருக்கும் மிகவும் பiரிச்சயமானது. இதன் கதாபாத்திரங்கள் இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு அத்துப்படி. ஆனால் இந்த இரண்டு காவியங்களும் பிரபல்யமானதுபோல் இந்து மதத்தின் வேதங்களான ரிக் யஜீர் சாம அதர்வண வேதங்கள் மக்களிடையே கொண்டு செல்லப் படவில்லை. மக்களிடையே கொண்டு சென்றால் பல உண்மைகள் மக்களிடம் விளக்க வேண்டுமே என்ற தயக்கத்தின் காரணமாகத்தான் இந்து மத அறிஞர்கள் மறைத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்கி அவதாரம்!

கலகி என்ற இவரைப் பற்றி பல வதந்திகள் நம் நாட்டில் உலா வருகின்றன. ஆந்திராவில் விஜயகுமார் என்ற பட்டதாரி தன்னை கல்கி அவதாரம் என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டத்தையும் சேர்த்து விட்டார். இதை படித்தவர் முதல் பாமரர் வரை நம்பிக் கொண்டிருப்பதுதான் விஷேஷம். இது போன்ற போலிகள் அவ்வப்போது தலை எடுப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் மதத்தைப் பற்றிய உண்மையான புரிதல் இல்லாமையே! இந்து மதத்தை சேர்ந்தவர்களிலேயே அவர்களின் மதத்தின் வேதங்களைப் படித்தவர்கள் எத்தனை பேர் என்று கேளுங்கள். மிகக் குறைவாகவே பதில் வரும். அந்த வேதத்தின் மூல மொழியான சமஸ்கிரத பாஷையை கற்றவர்கள் எத்தனை பேர? ராஜ கோபாலச்சாரியார், சோ ராமசாமி,சங்கராச்சாரியார் போன்ற ஒரு சில பேரைத்தான் காண முடியும். தெரிந்த இந்த ஒரு சிலரும் வேதங்களை மக்களிடம் கொண்டு செல்ல முயற்ச்சிக்கவும் இல்லை.

இனி இந்த வேதங்களில் கல்கி என்ற அவதாரத்தைப் பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று சிறிது ஆராய்வோம்.

"சிலை வணக்கம் புரியப்படும் தலைவரின் குடும்பத்தில் அவர்களின் நகரான சம்பாலாவில் விஷ்ணுயாஸூடைய வீட்டில் கல்கி தோன்றுவார்"
"உலகத்தின் ரட்ஷகன் அவருக்கு எட்டு போற்றுதற்குரிய தகுதிகளைக் கொடுத்து அபரிமிதமான வெற்றியையும் மகிமையையும் பிரகாசத்தையும் கொடுத்து கெளரவிப்பார். குதிரை வாகனம் அவருக்கு தேவர்களால் கொடுக்கப் படும். அவருடைய கையில் வாள் இருக்கும். இரட்ஷகனின் துணை கொண்டு அனைத்து தீய காரியங்களையும் துரோகிகளையும் வென்றெடுப்பார்.மலையின் குகையில் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுவார். பிறகு வடக்கு நோக்கி சென்று திரும்பவும் தான் பிறந்த இடத்திற்கு திரும்புவார்."

பாகவதா புராணம் -காண்டம் 12 - அத்தியாயம் 2 - சுலோகம் 18 லிருந்து 20 வரை

"அறியாமைக் காலமான அந்த நாளில் கல்கி அவதரிப்பார்.அந்நாளில் அரசர்கள் மிகப் பெரிய கொள்ளயைர்களாக இருப்பர். உலகத்தை நேர்வழிப் படுத்த வந்த அவரின் தந்தை விஷ்ணுயாத் ஆவார். கல்கி என்ற பெயரிலும் அறியப் படுவார்."

பாகவத புராணம் - காண்டம் 1 - அத்தியாயம் 3 - சுலோகம் 25

விளக்கங்கள் :
1) கல்கியின் தந்தை பெயர் விஷ்ணுயாத் என்று சொல்லப் படுகிறது. இதைத் தமிழ்ப் படுத்தினால் விஷ்ணுவின் அடிமை என்று வரும். அதாவது இறைவனின் அடிமை. இதே வார்த்தையை நாம் அரபியில் சொன்னால் அப்து+அல்லா இறைவனின் அடிமை அப்துல்லா என்று வரும். ஆக விஷணுயாத் அப்துல்லா இறைவனின் அடிமை ஆகிய இம்மூன்றும் ஒன்றே. முகமது நபியின் தந்தை பெயர் அப்துல்லா. எனவே விஷ்ணுயாத் என்பது அப்துல்லா என்று விளங்குகிறது.

2) சம்பாலா என்ற நகரத்தில் பிறப்பார்
சம்பாலா என்ற பதத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தால் "அமைதியும் பாதுகாப்பும் கொண்ட இடம்" என்ற பொருள் வரும்.

"அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடும் இடமாகவும் பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக" -குர்ஆன் 2 :125

கஅபா அமைந்திருக்கும் மக்கா நகர் அபய பூமி என்று அறிவிக்கப் பட்டு பதினான்கு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த பின்பும் அது இன்றளவும்; எந்த படையெடுப்புக்கும் ஆளாகாமல் அபய பூமியாகவும் பாதுகாப்பு கொண்ட ஊராகவும் அமைந்துள்ளது. மேலே உள்ள சம்பாலா என்ற ஊர் மக்காவையே குறிக்கும் . முகமது நபியும் மக்காவில் தான் பிறக்கிறார்.

4) கல்கி கடைசி அவதாரம்

வேதங்களில் கல்கி அவதாரம் தான் கடைசி அவதாரம் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதையேதான் குர்ஆனும் உறுதி செய்கிறது.

"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்." - குர்ஆன் - 5 :3

"முகமது இறைவனின் தூதராகவும் நபி மார்களில் முத்திரையாகவும் இருக்கிறார்." - குர்ஆன் 33 :40

முகமது நபிக்கு பிறகு இனி வேதங்களும் வரப் போவதில்லை. இறைத் தூதர்களும் வரப் போவதில்லை.தூதுத்துவத்திற்கு சீல் வைத்தாகி விட்டது. இனி நபி வரப் போவதில்லை என இதன் மூலம் விளங்குகிறது. இந்து மத வேதங்களும் இதைத்தான் சொல்கின்றன.

5) "மலையின் குகையில் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுவார். பிறகு வடக்கு நோக்கி சென்று திரும்பவும் தான் பிறந்த இடத்திற்கு திரும்புவார்"

முகமது நபி மலைகளுக்கு நடுவே உள்ள ஹீரா குகையில் தங்கி தியானத்தில் ஈடுபட்டிருந்த போது வானவர் கேப்ரியேல் வந்து குர்ஆனின் முதல் வசனத்தை ஓதச் சொல்கிறார். அன்றிலிருந்து தான் சிறுக சிறுக குர்ஆன் இறங்க ஆரம்பிக்கிறது.
மக்காவாசிகளால் துரத்தப்படும் முகமது நபி வடக்கில் இருக்கும் மதீனா நகருக்கு தன் தோழருடன் பயணமாகிறார். மதினாவில் இவருக்கு ஆதரவு கிடைக்கிறது. சில காலத்துக்குப் பிறகு தான் பிறந்த மக்காவுக்கே திரும்பவும் வருகிறார்.

6) நன் நடத்தையில் மிகவும் போற்றுதலுக்குரியவராக இருப்பார்.

"முகம்மதே! நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்." -குர்ஆன் 68 :4

7) எட்டு போற்றத்தக்க தகுதிகள் கொடுக்கப் படுவார்.

அந்த எட்டு தகுதிகள் : 1) wisdom - அறிவுடைமை 2)Respectable lineage - மரியாதைக்குரிய பரம்பரை 3) Self control - தன்னடக்கம் 5) Revealed knowledge - அறிவை வெளிப்படுத்தும் திறமை 5)Valour - வீரம் தைரியம் 6)Measured speech - அளவான பேச்சு 7) Utmost charity - மிக உயர்ந்த ஈகை குணம் 8) Gratefulness - நனறி மறக்காத தன்மை.

1) அறிவுடைமை :
மிகச் சிறந்த அறிவு முகமது நபிக்கு கொடுக்கப் பட்டிருந்தது. நபியாக ஆவதற்கு முன்பே இவருக்கு இருக்கும் ஞானத்தைப் பற்றி அம் மக்கள் அறிந்திருந்தனர்.

2) மரியாதைக்குரிய பரம்பரை :
அந்த காலத்தில் மிகவும் உயர்ந்த குலமாக கருதப்பட்ட குறைஷி குலத்தில் முகமது நபி பிறக்கிறார்.

3) தன்னடக்கம் :
தன்னடக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக முகமது நபி திகழ்ந்தார். அவரை எதிரிகள் பல தடவை கோபப்படுத்தும் போதெல்லாம் அமைதியும் பொறுமையும் காத்து வந்ததை அவரின் வாழ்க்கையில் பல தடவை நாம் பார்க்க முடிகிறது.

4) அறிவை வெளிப் படுத்தும் :
படித்தவரும் பாமரரும் விளங்கிக் கொள்ளும் விதமாக அவர் மனிதர்களுக்கு அளித்த போதனைகள் படித்தவர்களையே வியப்பில் ஆழ்த்தியது.

5) வீரம் தைரியம் :
மிகச் சிறந்த உடல் வலிமையை முகமது நபி பெற்றிருந்தார். பல போர்களில் இவரே தலைமையேற்று சென்று வெற்றியும் பெற்று வந்திருக்கிறார். மற்ற நாட்டு தலைவர்களைப் போல் அரண்மனையில் அமர்ந்து உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கவில்லை.

6) அளவான பேச்சு :
தேவைக்கு அதிகமான பேச்சு இவரிடம் இருக்காது. கேள்வி கேட்பவருக்கு அதற்குரிய பதில் மட்டுமே வரும். பதில்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்ததால் அவரின் தொழர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.

7) ஈகை குணம் :
தேவை என்று வந்தவர்க்கு இல்லை என்று எந்த நேரத்திலும் எவரையும் திருப்பி அனுப்பியதில்லை. இவர் பொருளாதாரத்தில் சிரமப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட பல வறிய குடும்பங்களை தன்னுடைய பொறுப்பில் பராமரித்து வந்தார்.

8) மதினாவில் அன்சாரிகள் இவருக்கும் இவரது தோழர்களுக்கும் சிரமமான நேரத்தில் செய்த உதவிகளை கடைசி காலம் வரை மறக்காமல் ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தார்.

8) கல்கி உலகை நேர்வழிப் படுத்த வந்த ஆசான் :

கல்கியானவர் உலக மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்.உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்.
இதையேதான் குர்ஆனும் முகமது நபி அரபு மக்களுக்கு மட்டும் வழி காட்டியல்ல.உலக மக்கள் அனைவருக்கும் வழி காட்டியாக அனுப்பப் பட்டவர் என்று கூறுகிறது.

"முகம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்." - குர்ஆன் 34 : 28

9)குதிரை வாகனம் அவருக்கு கொடுக்கப் படும். கையில் வாள் வைத்திருப்பார்.

முகமது நபியின் வாகனம் அதிகமாக குதிரையாகவே இருந்தது. அவர் தன்னிடம் எப்போதும் பாதுகாப்புக்காக வாள் ஒன்றையும் வைத்திருந்தார்.

10) கல்கி தீய காரியங்களை வென்றெடுப்பார்.

முகமது நபி அவதரித்த அந்த காலம் "அய்யாமுல் ஜாஹிலிய்யா" அதாவது "அறியாமைக் காலம்" என்று வரலாறுகளில் சொல்லப் படுகிறது. குடி கொள்ளை ஓயாத போர் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல் - பெண் குழந்தை பிறந்தால் சமூகத்தில் முகம் காட்ட கூச்சப் பட்டுக் கொண்டுபல நாட்கள் வீட்டை விட்டே வெளியேறி விடுதல் போன்ற பல அரக்க குணங்கள் நிறைந்த அந்த அரபுகள் மத்தியில் முகமது நபி தோன்றுகிறார். நபியானதற்கு பிறகு சில வருடங்களிலேயே அதிசயத் தக்க மாற்றங்களை அரபுக்கள் மத்தியில் உண்டாக்குகிறார். அனைத்து தீய பழக்கங்களும் அவர்களிடமிருந்து நீங்குகிறது.

11) கல்கி நான்கு தோழர்களின் துணை கொண்டு தீமைகளை வென்றெடுப்பார்.

முகமது நபிக்கு ஆரம்ப காலம் முதல் இறப்பு வரை தீமைகளை எதிர்த்து போரிடுவதில் நான்கு பேர் முன்னிலையில் இருந்தனர். அவர்கள் முறையே அபுபக்கர்- உமர் - அலி- உஸ்மான் ஆவர். இவர்கள் முகமது நபியின் மறைவுக்குப் பிறகுஇஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு ஜனாதிபதியாக இருந்து திறம்பட நிர்வாகம் செய்து வந்தனர். இந்த நால்வரையே மேலே சுட்டிக் காட்டப் படுகிறது.

12) கல்கி தேவர்களால் உதவி செய்யப்படுவார்

முகமது நபி பத்ர் என்ற போர்க் களத்தில் போரிடும் போதுசிரமமான நேரத்தில் வானவர்களை இறைவன் துணைக்கு அனுப்பினான். இதை குர்ஆனில் பின் வருமாறு கூறப்படுகிறது.

"நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது உங்களுக்கு பின்னால் அணி வகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதபுபவன்" என்று உங்களுக்குப் பதிலளித்தான்." - குர்ஆன் 8 : 9

"நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ர் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இறைவனை அஞ்சுங்கள்." - குர்ஆன் 3 : 123

கல்கி என்று சொல்லப் பட்டது முகமது நபிதான் என்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளேன். கல்கி என்பவர் முகமது நபி அல்ல என்று வாதிடுபவர்கள் அதற்கான விளக்கத்தைத் தர கடமைப் பட்டுள்ளார்கள். என் கருத்தில் தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்

சுவனப்பிரியன்.

1 comment:

Unknown said...

யார் அந்த மஹதி? (வரலாற்று பின்னணிகளுடன்..)
http://www.islamkalvi.com/?p=5155

பார்க்கவும்.