Followers

Friday, June 16, 2006

பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!

பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!

'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ள வில்லையானால்முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.'

-குர்ஆன் 96 : 14,15,16

இந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.

குர்ஆன் இங்கு பொய் சொல்பவர்கள், தவறான நடத்தையில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் முன் நெற்றியைப் பிடிப்போம் என்று கூறுகிறது. பொய் சொல்வதற்கும்,தவறான நடத்தை நடப்பவருக்கும் அந்த நபரின் முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ?

ஒரு மனிதனின் மூளையின் அமைப்பையும் அதன் முன் பக்கத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.அங்கு நமது தலையின் முன் பகுதியில் பெரு மூளை அமைந்துள்ளதைக் காணலாம். இதைப் பற்றி உயிரியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? Essential of Anatomy & Physiology என்ற புத்தகம் மூளையின் செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. மனிதன் அதிகம் உணர்ச்சி வசப்படுதல், பொய்,கோபம், முதலான உணர்வு சம்பந்தப் பட்டவைகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்தில் இந்த முன் பக்கம் என்பது காதுகளின் ஓரத்துக்கும், தலையின் முன் பக்கத்திற்கும் அதாவது நெற்றியில் அமைந்துள்ள நரம்புகளால் இந்த செயல்கள் செயல் படுத்தப் படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நெற்றிப் பகுதியின் நரம்புகள் மனிதனின் அநேக செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும் உண்மை பேசுவதற்கும் தூண'டுகோலாய் இருக்கிறது.

இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.

Evidence from
1)This is the Truth (video tape)
2)Essential of Anatomy & Physiology, seeley and others, page 211. Also see The Human Nervous System, Noback and others, page 410,411
Figure 12 : Functional regions of the left hemisphere of the cerebral cortex. The prefrontal area is located at the front of the cerebral cortex. (Essentials of Anatomy & Physiology, Seelay and others, page 210.

No comments: