என்கவுண்டர் : கொல்லப்படும் முஸ்லிம்கள்!
என்கவுண்டர் என்ற பெயரில் முஸ்லிம்களை கொல்வது என்பது இன்று சர்வசாதாரணமாகி விட்டது. கொல்லப் படுவதில் அநேகம் பேர் நிரபராதிகள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இவர்களை உயிரோடு பிடிப்பதற்கு வாய்ப்பு இருந்தாலும் திட்டமிட்டு கொன்று விடுவார்கள். உயிரோடு பிடித்தால் வாக்கு மூலத்தின் மூலம் உண்மைகள் வெளி வந்து விடும் அல்லவா? எனவே தான் காவல் துறையினர் சாமர்த்தியமாக அனைவரையும் கொன்று விடுகிறார்கள்.
ரோபிர்சிங்
இவர் டெல்லியில் சிறப்புக் காவலராக பணிபுரிபவர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் முன்னணி வீரர்.இவர்தான் நாடாளுமன்றத்தின் மீது நடந்தத் தாக்குதல்களை ஆய்வு செய்த அதிகாரி. இவர் டெல்லி அன்ஸா பிளாசாவில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை சுட்டுக் கொன்றார். முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப் படுவதை ஒரு டாக்டர் நேரிடையாக பார்த்து விட்டார். அந்த டாக்டரின் பெயர் ஹரி கிருஷ்ணா. அவர் அந்த சம்பவத்தை விளக்கும் போது 'பட்டப் பகலில் எந்த ஆயுதமும் இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் மேல் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் சுட்டதை என் கண்களால் பார்த்தேன்.' என்று கூறினார். இந்தக் கொலைகள் நவம்பர் 2002-ல் நடந்தவை. பத்திரிக்கையிலோ தீவிரவாதிகள் இரண்டு பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்
என்று செய்தி வந்தது. அதையே உண்மை என்று நாமும் நம்பி விடுகிறோம்.
தயா நாயக்!
காவல்துறையின் இணை ஆய்வாளராக பணிபுரியும் இவரின் தற்போதய சொத்துக்களின் மதிப்பு 100 கோடி.மும்பையில் பெரிய வியாபாரிகள் கடத்தல் காரர்கள் தங்களின் எதிரிகளை அழிக்க இவரிடம் பணம் தந்து விட்டால் போதும். என்கவுண்டர் என்ற பெயரில் கச்சிதமாக காரியத்தை முடித்து விடுவார்.அண்டை மாநிலமான குஜராத்தில் என்கவுண்டர் என்ற தாக்குதலுக்கு அதாவது காவல்துறையினர் செய்யும் படுகொலைகளுக்கு முஸ்லிம்கள் தேவைப் பட்டால் அதற்கும் உதவுவது இந்த தயாநாயக் தான். இதுவரை என்கவுண்டர் என்ற பெயரில் இவர் செய்த கொலைகள் 83. சேர்த்த சொத்துக்கள் 100 கோடி ரூபாய்.
இவரின் கொலைகளை வெளி உலகுக்கு கொண்டு வர பம்பாயைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கேட்டன் தாரோடக்கார் பல முயற்சிகளையும், வழக்குகளையும் போட்டார். எதுவும் பயனளிக்கவில்லை. முடிவில் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தந்தார்.அவர்கள் இவரின் சொத்துக்களை கண்டு பிடித்தனர்.இவரது வீட்டை சோதனை போட்டபோது அன்றாடம் செலவுகளுக்கு ரூபாய் 42 லட்சம் வைத்திருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. காவல்துறையால் கைது செய்யப்பட்ட இவர் 22-4-2006 அன்று சாமர்த்தியமாக பிணையில் வந்து விட்டார். ஒரு கொலைகாரனுக்கு நம் நாடு கொடுத்த தண்டனையின் லட்சணம் இதுதான்.
இஸ்ரத் ஜஹான்:
இஷ்ரத் ஜஹான் என்ற பெண்மனி சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் நாமும் பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம். பம்பாயிலிருந்து வெளிவரும் சண்டே மிட்டே, டெஹல்கா போன்ற பத்திரிக்கைகளின் புலனாய்வால் சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரும் நிரபராதிகள் என்ற நிரூபணம் ஆனது. எனவே வழக்கறிஞர்கள் குழு ஒன்று போலீசாருக்கு எதிராக வழக்கு தொடர்வது என்று முடிவு செய்து நீதி மன்றங்களை அணுகினார்கள். நீதி மன்றங்களில் வழக்கை அழுத்தமாக நடத்திட பிரேத பரிசோதனை அறிக்கைத் தேவை. இன்று வரை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் குஜராத் அரசு பிரேத பரிசோதனை அறிக்கையைத் தந்திட மறுக்கிறது. காரணம் : இந்தப் படுகொலை வழக்குமன்றம் சென்றிடுமேயானால், அவை படுகொலைகள் தான், காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக நடத்திய தாக்குதல்கள் அல்ல என்பது நிரூபணம் ஆகி விடுமல்லவா! எனவே தான் இன்று வரை அறிக்கையைத் தர குஜராத் அரசு மறுக்கிறது.
வத்வா என்கவுண்டர்!
வாரணாசி குண்டு வெடிப்பு ஹிந்து முஸ்லிம்களுக்கிடையில் பிளவுகளை உண்டு பண்ணி அரசியல் ஆதாயம் தேட முயற்ச்சித்த கயவர்களின் வேலை. நல்ல வேளையாக வாரணாசி ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக குண்டு வெடிப்பை எதிர்த்து குண்டு வைத்த வெறி நாய்களின் எண்ணங்களை தவிடு பொடி ஆக்கினார்கள்.
வாரணாசி குண்டு வெடிப்பு மார்ச் 7. 2006-ல் நடந்து நான்கு நாட்கள் கழித்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு பக்கத்தில் உள்ள வத்வா என்ற இடத்தில் நான்கு முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள். இந்த நான்கு முஸ்லிம்களும் காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அப்பொழுது சொல்லப் பட்டது. ஆனால் இந்த நான்கு முஸ்லிம்களும் காவல்துறையினரால் பிடிக்கப் பட்டு நான்கு மாதங்களாக காவல் துறையின் கட்டுப் பாட்டில் வைக்கப் பட்டிருந்தவர்கள். அகமதாபாத்துக்கு அருகில் ஒரு பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக இந்த நால்வரையும் போலீசார் அடைத்து வைத்துள்ளனர்.இவர்களை குஜராத் போலீசார் வசம் ஒப்படைத்தது மகாராஷ்டிர போலீசார் என்று சொல்லப் படுகிறது.இது போன்ற என்கவுண்டருக்கு அவ்வப்போது முஸ்லிம்களை சப்ளை செய்வது என்பது மகாராஷ்டிர போலீசுக்கு வழக்கமான ஒன்றே! மோடி அரசுக்கு ஆபத்து வரும்போதும், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை எழும்போதும் சாமர்த்தியமாக பிரச்னைகளை திசை திருப்பி என்கவுண்டரில் முஸ்லிம்களை போட்டுத் தள்ளுவது இவர்களின் வாடிக்கை. போலீசாரின்கட்டுப் பாட்டில் இருந்த இந்த நால்வரும் போலீசாரிடம் எதிர் தாக்குதல் நடத்தினர் என்று பழைய பஞ்சாக்கத்தையே இதிலும் பாடினர்.
ஷமீர்கான்!
2002 ஆம் ஆண்டு ஷமீர்கான் என்ற முஸ்லிம் இளைஞன் குஜராத் போலீசாரால் என்கவுண்டரில் சுடப்பட்டார். சுடப்பட்ட ஷமீர்கானோடு சேர்த்து பதினேரு பேர் கைது செய்யப் பட்டார்கள்.இவர்கள் மேல் சாட்டப்பட்ட குற்றம் இவர்கள் அனைவரும் அத்வானியையும், மோடியையும் கொல்ல திட்டமிட்டார்கள் என்பதே!ஷமீர்கானின் வாக்கு மூலம் தங்களிடம் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். போலீசாரின் கஸ்டடியில் வாக்கு மூலம் தந்த ஷமீர் எப்படி போலீசாரை திருப்பி தாக்க முயற்ச்சிக்க இயலும்? என்ற கூட சிந்திக்காமல் போலீசார் பொய்களை ஜோடித்தனர். 2005-ல் கைது செய்யப் பட்ட அனைவரும் நிரபராதிகள் என்று உச்ச நீதி மன்றத்தால் விடுவிக்கப் பட்டனர். ஷமீர்கான் கொல்லப் படாமல் இருந்திருந்தால் அவரும் விடுதலையாகி இருப்பார். பாவிகள் என்கவுண்டரில் தீர்த்து விட்டார்கள்.
சாதிக் ஜமால்!
சாதிக் ஜமால் என்ற முஸ்லிம் இளைஞரை நரோடா என்னுமிடத்தில் அகமதாபாத் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இவர் பாவ்நகர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். வேலை தேடி மும்பாய்க்கு சென்றுள்ளார். இவரை பம்பாயிலுள்ள போலீஸ் கேடி தயாநாயக் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைத்துள்ளார். அஹமதாபாத் காவல்துறையுடன் தொடர்பு கொண்டு என்கவுண்டருக்கு தெவைப் பட்டால் என்னிடம் ஒரு முஸ்லிம் உண்டு என்ற செய்தியை கொடுத்திருக்கிறார். திட்டமிட்டபடி ஜமாலை திரும்பவும் அகமதாபாத்துக்கு அழைத்து வந்து என்கவுண்டரில் தீர்த்துக் கட்டினார்கள். இவரை கொன்றதற்கு காரணம் என்று போலீசாரால் சொல்லப் பட்டது ' நரேந்திர மோடியை கொல்ல வந்தார்' என்பதே!
மேலும் கணேஷ. குத்ரி, நரேஷ் யாதவ் என்ற இரண்டு பேரை மும்பை காவல் துறையினர் அகமதாபாத் காவல் துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இவர்களை பிரம்தர்வாஜா என்னுமிடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்தார்கள்.இவர்கள் தீவிரவாதிகள் என்றும் காவல்துறையுடன் எதிர் மோதலில் ஈடுபட்டதாகவும் கதை கட்டி விடப் பட்டது.
ஷமீர் சர்பராஷ் கான்:
இவர் ஒரு திருடர் எனவும் காவல் துறையின் கீழுள்ளகாவலர் ஒருவரை கொலை செய்து விட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி விட்டார் எனவும் அங்கு பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து குஜராத்திலுள்ள அதி முக்கியமானவர்களைக் கொலை செய்திட வந்தார் எனவும் குற்றம் சாட்டப் பட்டது. இவரையும் அகமதாபாத்தில் போலீசார் கொலை செய்து விட்டனர். ஆனால் இவரின் சொந்தங்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நீதி மன்றம் சென்றனர். ஷமீர் நிரபராதி என்பதை நிரூபித்தனர். காவல்துறையினர் உயர் நீதி மன்றம் சென்றனர்.உயர் நீதி மன்றமும் இவர் நிரபராதி என்று கூறி விட்டது. தீர்ப்பு வந்து என்ன பயன்? போன உயிர் திரும்ப வருமா?
மில்லிகெஜட் , ஏப்ரல் 2006
மேலே உள்ள கட்டுரையின் மூலம் முஸ்லிம்கள் யாரும் தவறுகளே செய்வதில்லை என்று சொல்ல நான் வரவில்லை. எல்லா சமூகத்திலும் உள்ளது போல் முஸ்லிம்களிலும் ஒரு சில சமூக விரோதிகள் இருக்கிறார்கள். அவர்களை இனம் காணுவதை விட்டு விட்டு இந்துத்வா வோடு போலீசாரும் கை கோர்த்துக் கொண்டு ஒரு சமூகத்தையே அழிக்க நினைக்கிறார்கள். இதனால் பாதிக்கப் படுவது நம் இந்தியாவின் முன்னேற்றமும் என்பதை ஏனோ இவர்கள் மறந்து விடுகிறார்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தீர்ப்பு என்ன? பானர்ஜியின் அறிக்கை மூலம் ரயில் பெட்டியின் உள்ளிருந்து தான் தீ பரவியது என்ற உண்மை வெளி வந்திருக்கிறது. இதைக் காரணமாக்கி 2000 முஸ்லிம்களை கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு இழந்த உயிர்களை திரும்ப கொண்டு வர முடியுமா? தான் திரும்பவும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற அற்ப பதவி வெறிக்காக கொன்று குவித்த உடல்கள் தான் எத்தனை! இது போல் அநியாயமாக உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்களின் சொந்தங்கள் வெறுப்புற்று ஆயுதங்களை கையிலெடுக்க ஆரம்பித்தால் நம் நாடு தாங்குமா? வல்லரசாக துடித்துக் கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு இவையெல்லாம் பின்னடைவு இல்லையா?
இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? அனைத்து அரசு துறைகளிலும் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் திட்டமிட்டு செய்யப்படும் கலவரங்கள் பெருமளவு குறைய வாய்ப்புண்டு. சமீப காலங்களில் தான் படிப்பின் மீது முஸ்லிம்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். நடு நிலையாளர்களும், அரசும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து இட ஒதுக்கீட்டை அமுல் படுத்த முன் வர வேண்டும். இந்தியா முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமானால் இது அவசியமும் கூட.
என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்
19 comments:
சுவனப்பிரியன்,
இது போன்ற நல்ல மனிதர்களை அவர்கள் முஸ்லீம்கள் என்பதற்காகவே கொலை செய்யும் காவல்துறை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதே. தற்போது சென்னையில் தாதா என்ற பெயரில் கொல்லப்பட்ட ஒருவரும் ஒரு உண்மையான முஸ்லீம்தான். ஒருவேளை அதுவே தங்களது இந்தக் கட்டுரைக்குத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம்.
முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிச்சாலே, அது காந்தியா இருந்தாலும் நாங்க சுட்டுபுடுவோம். சாதாரன முஸ்லீமெல்லாம் எங்களுக்கு சும்மா சுண்டக்காய் மாதிரி.
கொலைக்குற்றம் செய்திருந்தாலும் நாங்க சூடம் ஏத்தி சாஷ்டாங்கமா தெருவுல விழுந்துகும்பிடுவோம். நீங்க எந்த நாட்டுல இருக்கிறீங்க மறந்துட்டீங்க போல இருக்குது.
அதுக்குன்னு அவசரபட்டு பாக்கிஸ்தானுக்கு போயிடபோறீங்க. அங்க சும்மா ஒரு மேல் ஜாதிக்கார பொண்ணுக்கிட்ட நாம பேசினோமுன்னா கூட, நம்ம தங்கச்சியை நாலு பேர விட்டு கற்பழிக்க வச்சிபுடுவாங்க, அதுவும் சட்டபூர்வமா.
இந்தியாவுல காசும் பூநூலும் இருந்தா என்ன வேணுமுன்னாலும் செய்யலாம், அவ்ளோதான். சும்மா சோம்பல் முறிச்சாலே R.V ல்லாம் ஓடி வரும். "எல்லாம் மதம் செய்யும் வேலை"
Thanks to your comments Mr Muse and Mr Kanchi films.
திரு ம்யூஸ்!
//தற்போது சென்னையில் தாதா என்ற பெயரில் கொல்லப்பட்ட ஒருவரும் ஒரு உண்மையான முஸ்லீம்தான். ஒருவேளை அதுவே தங்களது இந்தக் கட்டுரைக்குத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம். //
இந்த கட்டுரை எழுத என்னை தூண்டியது எது என்பதை தெரிந்து கொண்டே மழுப்பலான பின்னூட்டத்தை அனுப்பியிருக்கிறீர்கள். உண்மை எது என்பது உங்கள் மனசாட்சியிடமே கேட்டுப் பாருங்கள். விடை தெரியும்.
ஒரு வாரத்துக்கு முன்பு ஆசியா நெட்டில் செய்திகள் பார்க்க நேர்ந்தது. ஆந்திராவின் சூரிய நாராயண ராவ் கொலை செய்யப் பட்டதைப் பற்றிய செய்தி ஒன்று.
'தாலிபான்கள் சூரிய நாராயண ராவை பிணைக் கைதியாகத்தான் பிடித்து வைத்திருந்ததாகவும், அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து நாராயண ராவை ஆப்கனில் பாதுகாப்புக்காக இருக்கும் பாகிஸ்தானிய ராணுவம் கொண்டு சென்றதாகவும் சற்று முன் கிடைத்த செய்தி தெரிவிக்கிறது. இந்தியாவை கோபமுறச் செய்வதற்காக பாகிஸ்தானிய ராணுவமே நாராயணராவைக் கொன்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன' -ஆசியா நெட் செய்தி.
நாராயண ராவைக் கொல்வதன் மூலம் தாலிபான்களுக்கு எதிராக இந்தியாவை திருப்ப பாகிஸ்தானோடு சேர்ந்து அமெரிக்கா நடத்திய நாடகமாகக் கூட இது இருக்கலாம். தேவனே உண்மையை அறிவான்.
ஒரு வாரத்துக்கு முன்பு ஆசியா நெட்டில் செய்திகள் பார்க்க நேர்ந்தது. ஆந்திராவின் சூரிய நாராயண ராவ் கொலை செய்யப் பட்டதைப் பற்றிய செய்தி ஒன்று.
'தாலிபான்கள் சூரிய நாராயண ராவை பிணைக் கைதியாகத்தான் பிடித்து வைத்திருந்ததாகவும், அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து நாராயண ராவை ஆப்கனில் பாதுகாப்புக்காக இருக்கும் பாகிஸ்தானிய ராணுவம் கொண்டு சென்றதாகவும் சற்று முன் கிடைத்த செய்தி தெரிவிக்கிறது. இந்தியாவை கோபமுறச் செய்வதற்காக பாகிஸ்தானிய ராணுவமே நாராயணராவைக் கொன்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன' -ஆசியா நெட் செய்தி.
நாராயண ராவைக் கொல்வதன் மூலம் தாலிபான்களுக்கு எதிராக இந்தியாவை திருப்ப பாகிஸ்தானோடு சேர்ந்து அமெரிக்கா நடத்திய நாடகமாகக் கூட இது இருக்கலாம். தேவனே உண்மையை அறிவான்.
சுவனப்பிரியன், மதத்துக்காக எத்தனை முஸ்லீம்கள் எல்லை தாண்டிச் செல்கிறீர்கள்? ஒரு 2 சதவீதம்?. நீங்கள் சொல்லும் அடாவடி போலீஸ் எத்தனை பேர் இருப்பார்கள்? நான் அதனை நியாயப் படுத்தவில்லை. நம்முடைய பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக் கொள்வதுதானே நல்லது?
பயங்கரவாதம் செய்வதினால் நடுநிலை இந்துக்களின் ஆதரவை நீங்கள் இழகிறீர்கள். அமைதிப்பூங்கா தமிழக்த்தில் கோவையில் வெடி வைத்து கலவரம்(பீதி) உண்டாக்கினீர்கள். இப்போது பாஜக அங்கே காலூன்றி விட்டது. வன்முறை மூலம் 80 சதவீதம் உள்ள மெஜாரிட்டி சமூகத்த்தை அடக்க நினைகிறீர்கள். முடியுமா? அது எதிர்வினையாகத்தான் முடியும்.
என் பின்னூட்டத்திற்குப் பதிலாக குஜராத்தையும் மோடியையும் இழுப்பீர்கள். நடுநிலைவாதிகள் அவர்களை ஆதரிப்பதில்லை என்பதை மறந்துவிட்டுப் பேசுவீர்கள்.
நடுநிலைவாதிகள் இல்லாவிட்டால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? முதலில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இந்தியாவில் இருந்து உருவாவதை நிறுத்த முயற்சி செய்யுங்கள்.
காஷ்மீர் பிரச்சினையில் இந்திய முஸ்லீம்கள் இந்தியாவை ஆதரியுங்கள். பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரை மீண்டும் இந்தியா பெற ஆதரவு கொடுங்கள். ஒரு முறை உங்களின் இந்தியத் தலைமையை(தலைமை மசூதித் தலைவர் ??) பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் அறிக்கை விடுமாறு செய்யச் சொல்லுங்கள். பிறகு என்(ங்களின்) ஆதரவு உங்களுக்குத் அதுவாகக் கிடைக்கும். பல பிரசினைகள் அதுவாக முடிவிற்கு வரும்.
நாங்கள் எப்பொழுதுமே அன்பு காட்டத் தயாராகவே இருக்கிறோம். எங்களின் கை எப்போது அரவனைப்பதற்கு நீண்டே இருக்கிறது.
இந்து வெறியன் XXகுமாரை எத்தனை வலைப்பதிவாளர்கள் ஆதரிக்கிறார்கள்? கணக்கெடுத்தால் வெகுசிலரே இருப்பார்கள். அதனை வைத்து எங்கள் அனைவரையும் இந்து வெறியர்கள் என்று எண்ணாதீர்கள்(நீங்கள் அப்படி எண்ணுவதில்லை. அப்படி நினைக்கும் சிலருக்காக்ச் சொன்னேன்)
--நன்றி.
>>>> இந்த கட்டுரை எழுத என்னை தூண்டியது எது என்பதை தெரிந்து கொண்டே மழுப்பலான பின்னூட்டத்தை அனுப்பியிருக்கிறீர்கள். <<<<<
;-) !!!
மகேஷ்,
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
நடுநிலையான இந்து சகோதரர்களுக்கு இந்திய முஸ்லிம்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
எங்களை தனித்துவைக்கத் துடிக்கும் இந்துத்வ பாஃசிசங்களை முடிந்த அளவில் தோற்கடிக்க உதவுவதற்கேனும்!
பயங்கரவாதத்தை இன மத வேறுபாடின்றி எதிர்ப்பதற்கும் ஒழித்துக்கட்டுவதற்கும் ஒரு உண்மையான முஸ்லிம் முழுமனதுடன் போராடுவான். ஏனெனில் அநீதியை எதிர்ப்பது அவனது கடமைகளில் ஒன்று. மத நல்லிணக்கத்தில் முழு ஈடுபாடுள்ளவர்கள் குழுவாக அமைந்து ஒவ்வொரு பகுதியிலும் பயங்கரவாதத்தினை வேரறுக்கலாம்.
துரதிருஷ்டவசமாக, ஊடகம் முதல் தீர்ப்புவழங்கும் துறை வரை தன் கொடிய கரங்களை நீட்டியுள்ள இந்துத்வா சாத்தான் அப்போது தான் மனிதம் பேசுபவர்களை பிரித்துவைக்க முடிந்தவரை முட்டி மோதுகிறான்.யாரோ, எவனோ ஒரு விஷமி ஏதேனும் செய்தால்(அவன் சக இந்துவாகவோ நாத்திகனாகவோ இருந்தாலும் கூட) உடனே பதிலுக்கு முஸ்லிம் மீது காழ்ப்பு துப்புகிறான். பின்விளைவுகள் அவன் விரும்பும் வகையில் அமைந்துவிடுகின்றன.
அதே பாணியில் தான், மற்றவர்களிடமும் அவன் சென்று "நாமெல்லாம் இந்து" என்கிறான்.
நம்மவன் இட ஒதுக்கீட்டையோ, வேத உரிமையையோ, அவன் பொண்ணையோ கேட்காதவரை.
இன்னுங்குறிப்பாக 'முஸ்லிம்களை அழிக்க'மட்டும் (உதா: குசராத்)
இதையெல்லாம், இந்துவெறியர்களையெல்லாம் உங்களைப்போன்றவர்கள் புரிந்துக்கொள்வது மிகப்பெரிய ஆறுதல் அய்யா!! நன்றி.
பி.கு: முஸ்லிம் வெறியர்களும், (தன் மதத்தை விளங்காத) அறிவிலி முஸ்லிம்களும் செய்பவற்றை நானும் ஒரு போதும் ஆதரிப்பதில்லை
//உங்களின் இந்தியத் தலைமையை(தலைமை மசூதித் தலைவர் ??) பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் அறிக்கை விடுமாறு செய்யச் சொல்லுங்கள். //
அன்பு மகேஷ்,
அப்படி ஒரு தலைமை எதுவுமில்லை என்பதே இந்திய முஸ்லிம்களின் அவலமும் அங்கலாய்ப்புமாகும்.
நீங்கள் அப்படி நினைத்து எழுதியிருப்பவரை 100 சத முஸ்லிம்கள் நிரம்பிய தொகுதியில் நிறுத்தினாலும் ஒரு சாதாரண நேரிய முஸ்லிமிடம் 'காப்புத்தொகை' இழந்துவிடுவார். இதுதான் நிஜம்.
திரு மகேஷ்!
//அமைதிப்பூங்கா தமிழக்த்தில் கோவையில் வெடி வைத்து கலவரம்(பீதி) உண்டாக்கினீர்கள். இப்போது பாஜக அங்கே காலூன்றி விட்டது. வன்முறை மூலம் 80 சதவீதம் உள்ள மெஜாரிட்டி சமூகத்த்தை அடக்க நினைகிறீர்கள். முடியுமா? அது எதிர்வினையாகத்தான் முடியும்.//
கோவையில் ஒரு காவலர் கொல்லப் படுகிறார். அவரைக் கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அதிக பட்ச தண்டனை எதுவோ அதை வாங்கிக் கொடுங்கள். ஆனால் போலீசார் செய்தது என்ன? ரோட்டில் சென்று கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் இருபது பேரை சுட்டுக் கொன்றனர். இது போலீசார் செய்த முதல் தவறு. இதனால் பாதிக்கப் பட்டவர்கள் கோவையில் குண்டுகளை வெடிக்க வைத்து அப்பாவிகளை கொன்றது அடுத்த தவறு. இப்படியே சென்றால் இதன் முடிவுதான் என்ன? அது இந்துவாகட்டும் முஸ்லிமாகட்டும் வன்முறையைநாடுவது இரண்டு சமூகத்துக்குமே கேடு என்பதை உணர வேண்டும்.
//ஒரு முறை உங்களின் இந்தியத் தலைமையை(தலைமை மசூதித் தலைவர் ??) பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் அறிக்கை விடுமாறு செய்யச் சொல்லுங்கள்//
இந்திய முஸ்லிம்களுக்கு தலைமை என்று எந்த மசூதி இமாமும் பொறுப்பேற்க முடியாது. முஸ்லிம்களின் ஒரே தலைவர் முகமது நபிதான். அடுத்து பாகிஸ்தானை எந்த முஸ்லிம் ஆதரித்தார்? போர் என்று வந்து பாகிஸ்தான் இந்தியாவின் மீது குண்டு மழை பொழிந்தால் நானும் என் குடும்பமும் இறக்க மாட்டோமா? பிறகு எப்படி நான் பாகிஸ்தானை ஆதரிப்பேன். என்னை வளர்த்து என் பிள்ளகைளையும் வளர்த்து வரும் என் தாய் நாட்டுக்கு துரோகம் பண்ண நான் நினைப்பேனா? எந்த முஸ்லிமாவது அப்படி நினைத்தால் அவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியுமா? இதெல்லாம் இந்துக்களை உசுப்பி விட்டு முஸ்லிம்களுக்கு எதிராக்க நினைக்கும் இந்துத்துவ வாதிகளின் பொய்ப் பிரச்சாரம். இந்திய பாகிஸ்தான் போரில் இந்திய தரப்பில் தங்கள் சதவீதத்துக்கும் அதிகமாக உயிர்த் தியாகம் செய்தது முஸ்லிம்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது சம்பந்தமாக விபரமாக ஒரு தனி பதிவே போடுகிறேன்..
இன்று வரை முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக உள்ள எங்கள் ஊரில் ஒரு சண்டையும் வந்ததில்லை. அண்ணன் தம்பிகள் போல் தான் இன்று வரை பழகி வருகிறோம். எங்கள் வீட்டு விஷேஷங்களில் இந்துக்களும் அவர்கள் வீட்டு விஷேஷங்களில் முஸ்லிம்களும் கலந்து கொள்வது இங்கெல்லாம் சர்வ சாதாரணம். இந்த நிலை என்றும் தொடர வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் விருப்பமும்.
வருகைக்கு நன்றி திரு ராஜா, திரு ஆதவன்!
// ஒடுக்கப்படுவது முஸ்லிம் தானா என்று பார்த்துத் தான் குரல் கொடுக்கும்படி உங்கள் நபி சொன்னாரா?
வீரப்பனாகவே இருந்தாலும் அநியாயமாக கொல்லப்பட்டால் அதை தவறு என்று சொல்லுங்கள். (I'm not justifying veerapan, hope you understand)//
திரு ஆதவன்!
அநியாயம் எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கச் சொல்லித்தான் முகமது நபி கட்டளை இட்டுள்ளார். நான் எடுத்துக் காட்டியது குஜராத் அரசாங்கமே திட்டமிட்டு ஒவ்வொரு இடத்திலும் அவர்களே குண்டுகளை வைத்து விட்டு பிறகு முஸ்லிம்களை கொல்வது தற்போது வாடிக்கையாகி விட்டது. இது தொடர்ந்தால் நம் நாட்டின் மீது வெறுப்புற்று குஜராத் முஸ்லிம்களும் வன்முறையை கையிலெடுத்தால் நம் நாடு முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைப்பது எப்போது? அதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன்.மற்றபடி வன்முறை அநியாயம் அது எந்த ரீதியில் வந்தாலும் அதை எதிர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
முகமது நபிதான் முஸ்லிம்களின் ஒரே தலைவர் என்று நான் சொன்னது ஆன்மீக தலைமையை. ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் சூழ்நிலைக் கேற்ப அரசியலில் தலைவர்களை உருவாக்கிக் கொள்ள இஸ்லாம் தடை ஏதும் சொல்லவில்லை. அத்தகைய தன்னலமற்ற தலைமை இதுவரை ஏற்படாதது வருந்தத் தக்கதே!
சுவனப்பிரியன், உங்களின் நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டேன்.
என்னுடைய இந்தக் கேள்விக்கும் பதில் சென்னீர்களானால் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும்.
//காஷ்மீர் பிரச்சினையில் இந்திய முஸ்லீம்கள் இந்தியாவை ஆதரியுங்கள். பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரை மீண்டும் இந்தியா பெற ஆதரவு கொடுங்கள்//
//ரோட்டில் சென்று கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் இருபது பேரை சுட்டுக் கொன்றனர். இது போலீசார் செய்த முதல் தவறு//
கோவையில் என்ன நடந்தது என்பதை பற்றி கோவையில் இருக்கும் யாரிடமாவது கேட்டுவிட்டு எழுதியிருக்கலாம்.
போலீசாரின் குடும்பங்களே எங்களுக்கு பாதுகாப்பு குடுங்கள் என்று உயர் அதிகாரிகளிடம் ரகளை செய்யும் அளவுக்கு துன்புறுத்தபட்டனர்.ஏகபட்ட அட்டூழியங்கள் நடந்தேறின.
இருபது பேர் செத்தார்கள் என்பதெல்லாம் கப்சா...கோவை போலீசாரின் கைகள் (வோட்டுக்காக) கட்டபட்டு இருந்தன...செத்தவன் கலவரம் செய்தவன்.
//காஷ்மீர் பிரச்சினையில் இந்திய முஸ்லீம்கள் இந்தியாவை ஆதரியுங்கள். பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரை மீண்டும் இந்தியா பெற ஆதரவு கொடுங்கள்//
மகேஷ்!
காஷமீரை சொல்கிறீர்கள். பாகிஸ்தானையே இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்! இரண்டு நாடுகளும் ஒன்றாக இருந்திருந்தால் அமெரிக்காவுக்கு சரியான போட்டியாக நம் நாடு தான் இருந்திருக்கும். வெள்ளையர்கள் எந்த நாட்டுக்கு போனாலும் நாட்டை துண்டாடி அங்கு ஒரு பிரச்னையையும் உண்டாக்கி விட்டு செல்வது பழக்கம். இதற்கு ராஜாஜி, பட்டேல், ஜின்னா போன்றோர் பலியாகி விட்டனர். ஜின்னாவை விட நாட்டை பிரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தவர்கள் ராஜாஜியும், பட்டேலும் என்பதை எத்தனை பேர் அறிவர்?
இரண்டு நாடுகளும் நெருங்கி வர வேண்டும். காஷ்மீர் மக்களின் துயர் துடைக்கப் பட வேண்டும்.கோடிக் கணக்கில் நம் வரிப் பணம் பாகிஸ்தான் எல்லையில் வீணடிக்கப் படுவது நிறுத்தப் பட வேண்டும். அந்த பணத்தை வைத்து எத்தனையோ வறியவர்களை மேலுக்கு கொண்டு வரலாம். இதற்கு நம் நாடு எடுக்கும் எந்த முடிவுக்கும் இந்தியன் என்ற முறையில் நான் கட்டுப் படுவேன்.
அதே போல் பாலியல் பலாத்காரம், அப்பாவிகள் சிறைவாசம் போன்ற மனித உரிமை மீறல்களை நம் நாட்டு ராணுவம் காஷ்மீரில் கட்டவிழ்த்து விடும்போது அதையும் கண்டிக்க வேண்டும். அதுதான் ஒரு நடுநிலைவாதிக்கு அழகு.
சமுத்ரா!
//கோவையில் என்ன நடந்தது என்பதை பற்றி கோவையில் இருக்கும் யாரிடமாவது கேட்டுவிட்டு எழுதியிருக்கலாம்.//
உங்களைப் போன்ற இந்துத்வா வாதிகளிடம் கேட்டு எழுத வேண்டுமாக்கும்! அப்போ ஜீனியர் விகடன் முதற் கொண்டு தமிழக பத்திரிக்கைகள் அனைத்தும் பொய் செய்தியை கொடுத்தா! இறந்தவர்களுக்காக கலைஞர் அரசு நஷ்ட ஈடு கொடுத்தது கூட பொய் தானாமா! இருபது உடல்களை வரிசையாக்கி வீடியோ கேசட் ஒன்றும் வந்ததே அதுவும் பொய்தானாமா!இவ்வளவு ஆதாரங்களையும் தூர வைத்து விட்டு சமுத்ரா சொல்வதை மட்டும் இனி கேட்க வேண்டுமாக்கும்.
இருபது பேர் செத்தார்கள் என்பதெல்லாம் கப்சா...கோவை போலீசாரின் கைகள் (வோட்டுக்காக) கட்டபட்டு இருந்தன...செத்தவன் கலவரம் செய்தவன்.
எந்த அளவு வெறுப்பு உங்களிடம் குடி கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. இத்தனை சாட்சிகள் இருக்கும் போதே உண்மையை மறைத்து பொய் சொல்ல எப்படி உங்கள் மனது இடம் கொடுக்கிறது? ஓ,, இதற்கு பெயர் தான் இந்துத்வா என்பதோ!
'முஸ்லிம்களே! உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.' - குர்ஆன் 3 :120
இந்த குர்ஆன் வசனமே உங்களுக்கு பதில்.
மெக்கா பயணம்!
நாளையிலிருந்து வெள்ளிக் கிழமை வரை மெக்காவில் இருப்பேன். எனவே பின்னூட்டம் இடுபவர்கள் சனிக்கிழமை வரை பொறுக்கவும்.
நன்றி!
உம்ரா பயணம் இறைவன் அருளால் நலமுடன் முடிந்தது. நேற்று வெள்ளி இரவு ஒரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். இதன் அனுபவங்களை இனி வரும் ஒன்றிரண்டு பதிவுகளில் பார்ப்போம்.
அன்புடன்
சுவனப்பிரியன்
Post a Comment