Followers

Monday, July 13, 2009

வானமும் பூமியும் எவ்வாறு நிலை கொண்டுள்ளது?



நாம் வசிக்கும் இந்த பூமியும் வானமும் எவ்வாறு கீழே விழாமல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? நம் முன்னோர்களில் சிலர் இந்த பூமியையும் வானத்தையும் நிலவையும் பற்றி என்ன சொல்லி வைத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

ஒரு புராணம் நமது பூமியை மூன்று திமிங்கிலங்கள் ஒன்றினைந்து சுமந்து கொண்டிருக்கிறது என்கிறது. மற்றொரு புராணம் ஒரு மீனின் வாலில் பூமி நிலைபடுத்தப்பட்டுள்ளது என்கிறது. வேறு சில புராணங்கள் பன்றியின் மூக்கின் மீது இந்த பூமி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறது. மேலும் சில கதைகளில் ஒரு காளையின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் பூமி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது.

பல அரிய கருத்துக்களை கூறிய வள்ளுவரோ 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று நமது பாட்டிகளின் கதையை ஒட்டி கூறுவதைப் பார்க்கிறோம். அவர் பார்வையில் சந்திர கிரகணம் ஏற்படுவது பாம்பு விழுங்குவதால் ஏற்படுகிறது என்றும் பாம்பு அந்த சந்திரனை கக்குவதால் சந்திர கிரகணம் விலகுகிறது என்ற ரீதியில் சொல்வதைப் பார்க்கிறோம். இது நம் முன்னோர்கள் வானம், பூமி, சந்திரன் பற்றி எந்த அளவு விளங்கியிருந்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

சரி. குர்ஆன் இந்த நிகழ்வுகள் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் பார்ப்போம்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி வானங்களை இறைவனே உயர்த்தினான்.....நீங்கள் உறுதியாக நம்புவதற்க்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.'
-குர்ஆன் 13:2

'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி இறைவனே வானங்களைப் படைத்தான். உங்களை சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.'
-குர்ஆன்: 31:10


ஆகாயத்தின் கட்டுமானத்தில் எந்த திசையில் எவ்வளவு தூரம் நீங்கள் சென்று பார்த்தாலும் கண்களுக்கு தெரியக் கூடிய எந்த ஒரு தூணையும் நீங்கள் காண இயலாது. ஈர்ப்பு விசையைக் கொண்டே ஒவ்வொரு கோள்களும் பிணையப்பட்டு அந்தரத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் காண இயலாது. நம் கையில் உள்ள ஆப்பிள் தவறினால் நேராக பூமியை நோக்கி செல்கிறது. ஆப்பிள் பூமியை நோக்கி செல்கிறது என்பதை விட பூமியின் ஈர்ப்பு விசையானது ஆப்பிளை இழுக்கிறது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் பார்க்க முடிவதில்லை. இதைத்தான் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற அழகிய வார்த்தையைக் கொண்டு குர்ஆன் நமக்கு விளக்குகிறது.

அறிஞர் அரிஸ்டாட்டில் பூமியை மையமாக வைத்தே அனைத்து கோள்களும் சுழல்கின்றன என்று கூறி வந்தார். அன்றைய கிருத்தவ சபைகளும் அரிஸ்டாட்டிலின் கருத்தையே உண்மை என்று வாதிட்டது. இதன் பிறகு போலந்து நாட்டின் அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ் வானியலைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இந்த அறிஞர் கிறித்தவ சபையிலும் பணியாற்றி வந்தார். முடிவில் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் சுழலுகின்றன என்ற 'சூரிய மைய கோட்பாட்டை' உருவாக்கினார். கிறித்தவ சபைக்கு மாற்றாக இந்த கருத்து இருந்ததால் தான் கண்ட உண்மையை தனது நெருங்கிய நண்பர்களிடமே கோபர் நிக்கஸ் சொல்லி வந்தார். பிறகு தனது அறுபதாவது வயதில் ரோமில் 'சூரிய மையக் கோட்பாட்டை வலியுறுத்தி' உரை நிகழ்த்தினார். சும்மா இருக்குமா கிறித்தவ சபை! 'மத நிந்தனை' என்று குற்றம் சாட்டி அவர் கருத்து தவறு என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்து அவரை மன்னிப்பும் கேட்க வைத்தது கிறித்தவ சபை. இருந்தும் தனது எழுபதாவது வயதில் இறப்பதற்கு முன் சூரியனை மையமாக வைத்தே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை புத்தமாக வெளியிட்டு மறைந்தார் அந்த மேதை.

அறிஞர் நியூட்டனும் கிரக சஞ்சாரங்களை விளக்கி 'பேரண்டம் தாமாகவே காரணமின்றி நிலை பெற்றிருக்கவில்லை. அதனை நிலை நிறுத்தும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு உண்டு. அந்த பிணைப்பே பேரண்டம் மொத்தமும் பரவி நிற்க்கும் ஈர்ப்பாற்றலாகும்.' என்று கூறுகிறார்.

இதனையே குர்ஆன் கூறும் போது பின் வருமாறு விளக்குகிறது.

'வானங்களும் பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மை உடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.'
-குர்ஆன்: 35:41


இன்று இந்த உண்மைகளை எல்லாம் எல்.கே.ஜி படிக்கும் நம் குழந்தைகளுக்குக் கூட தெரிந்திருக்கும். ஆனால் இந்த குர்ஆன் இறங்கிய காலம் 1400 வருடங்களுக்கு முன்பு என்பதையும் அந்த மக்கள் வானியலைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவர்களாகவும் இருந்ததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

17 comments:

கோவி.கண்ணன் said...

//பல அரிய கருத்துக்களை கூறிய வள்ளுவரோ 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று நமது பாட்டிகளின் கதையை ஒட்டி கூறுவதைப் பார்க்கிறோம்.//


திருவள்ளுவரை யாரும் அறிவியலாளராகவோ, சமயத் தலைவராகவோ முன்மொழியவில்லை. 'நான் சொல்றேன் நம்புங்க நிலவை பாம்பு விழுங்குதுன்னு அவர் சொல்லவரவில்லை'
கிரஹணங்களைப் பற்றிய அன்றைய காலக் கருத்தை அவர் எடுத்து உவமையாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

'சுழன்றும் ஏர் பின்னது உலகம், என்று உலகம் உருண்டை என்பதை பண்டைய தமிழர்கள் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இதே போல் நேரடியான பொருளில் குரானில் 'உலகம் உருண்டை' என்று சொல்லும் ஆதாரம் உண்டா ?

உலகை பாயாக சுருட்டி கடலுக்கு ஒளித்தான் - என்று சொல்லும் இந்திய சமயக்கதைகளுக்கும், பூமியை பாயாக விரித்து அது அசையாமல் இருக்கு மலைகளை நட்டு வைத்தான் என்று சொல்லும் குரான் வசனங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

இரவில் சூரியன் அல்லாவின் நாற்காலிக்கு பின்னால் மறைந்து கொள்வதாக ஹதீஸில் சொல்லி இருக்கிறதாமே ? இந்த தகவல் உண்மையா ?

Unknown said...

அன்புடயீர்,

பதிவுக்கும் எண்ணங்களின் கோர்வைக்கும் கருத்துக்கும் பாராட்டு.
அறிவியல் வளர்ச்சி என்பது முதல் வகுப்பிலிருந்து முனைவர் நிலை வரை மானிடர் அவரவர்தம் துறையில் தெளிவுறுவது போன்றதே எனக் கருதலாம். மதங்களின் கூற்று யாவும் அந்த காலகட்ட போதகர் அவர்தம் சீடர், மக்கள் தகுதி, திறம் அளவே அமையமுடியும் அல்லவா.

பொய்யாமொழி (திருக்குறள் 1146) தெரிவிப்பது: கண்டதோ ஒருநாள் மட்டும். ஊரில் பரவும் புரளியோ நிலவை பாம்பு கவ்வியது (பொய்யானது) போன்று நாங்களும் கவ்வினோம், கலந்தோம், பிரிந்தோம் என்று பொய்யாக எங்கும் நிறைந்தது என்று பொருள் கொள்வது பொருத்தமும் இலக்கிய நயமும் இணைந்த மகிழ்ச்சியைத் தரும் அமைப்பு அல்லவா.

கவனப்பிரியன் கருதிப் பார்த்து ஏற்றுக் கொள்ள அலசிப் பார்க்கலாம்.

அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஜூலை 13, 2009

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//உலகை பாயாக சுருட்டி கடலுக்கு ஒளித்தான் - என்று சொல்லும் இந்திய சமயக்கதைகளுக்கும், பூமியை பாயாக விரித்து அது அசையாமல் இருக்கு மலைகளை நட்டு வைத்தான் என்று சொல்லும் குரான் வசனங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.//

கடலுக்குள் ஒளிப்பது என்பதும் பாயாக விரித்து நிலைத்து இருக்க மலைகளை நாட்டினோம் என்ற சொல்லாடலும் உங்களுக்கு ஒன்றாக தெரிகிறதா?

//இரவில் சூரியன் அல்லாவின் நாற்காலிக்கு பின்னால் மறைந்து கொள்வதாக ஹதீஸில் சொல்லி இருக்கிறதாமே ? இந்த தகவல் உண்மையா ?//

நான் படித்த வகையில் இப்படி ஒரு ஹதீஸை நான் பார்க்க வில்லை. எந்த ஹதீஸ் புத்தகத்திலிருந்து எடுத்தீர்கள் என்று சொன்னால் நானும் பார்க்க வசதியாக இருக்கும்.

//குரானில் 'உலகம் உருண்டை' என்று சொல்லும் ஆதாரம் உண்டா ?//

'அவன் இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன்'
-குர்ஆன் 55:17

'கிழக்குகளுக்கும் மேற்குகளுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்'
-குர்ஆன் 70:40

ஒரு பொருள் உருண்டையாக இருந்து சுழலும் போதுதான் இரண்டு கிழக்குகளும் இரண்டு மேற்குகளும் உருவாக சாத்தியம் உள்ளது.

'அவனே பூமியை பயன்படுத்த எளிதானதாக உங்களுக்கு அமைத்தான்.எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்.'
-குர்ஆன் 67:15

பூமி தட்டையாக இருந்தால் ஒரே பகுதியில்(மேற்பரப்பில்) மட்டுமே மனிதர்கள் செல்ல முடியும். இந்த பூமி உருண்டையாக இருந்தால்தான் மேல்,கீழ்,பக்கவாட்டு என்று 'பல பகுதிகளிலும்' மனிதர்கள் செல்ல முடியும்.

suvanappiriyan said...

திரு ராதாகிருஷ்ணன்!

//ஊரில் பரவும் புரளியோ நிலவை பாம்பு கவ்வியது (பொய்யானது) போன்று நாங்களும் கவ்வினோம், கலந்தோம், பிரிந்தோம் என்று பொய்யாக எங்கும் நிறைந்தது என்று பொருள் கொள்வது பொருத்தமும் இலக்கிய நயமும் இணைந்த மகிழ்ச்சியைத் தரும் அமைப்பு அல்லவா.//

நான் வள்ளுவரை குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம். பல கட்டுக் கதைகள் நிரம்பி இருக்கும் தமிழ் இலக்கியத்தில் திருக்குறள் ஒன்றுதான் மக்களின் நேர்வழிக்கு பல வழிகளைக் காட்டுகிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இறைத் தூதர்களையும் வேதங்களையும் அனுப்பியிருப்பதாக குர்ஆன் கூறுகிறது. தமிழ் மொழிக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராக திருவள்ளுவரும், வேதமாக திருக்குறளும் கூட இருந்திருக்கலாம். நமது முன்னோர்கள் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையிலிருந்து பிறகு வந்த கலாச்சார மாற்றத்தினால் பல தெய்வ வழிபாட்டுக்கு சென்று விட்டோம். திருக்குறளின் பல கருத்துகள் குர்ஆனோடு ஒத்துப் போவதையும் பார்க்கிறோம்.

'நன்றி மறப்பது நன்றன்று', 'தீயினால் சுட்ட புண்', 'காலத்தினால் செய்த நன்றி' என்று நான் சிறு வயதில் மனனம் செய்த குறள்களின் வீரியத்தையும் இரண்டு வரிகளில் மின்னும் கருத்தாழத்தையும் எண்ணி பல முறை வியந்திருக்கிறேன்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

Kovi Kannan!

துல்கர்னைன் என்ற மாவீரரரைப் பற்றிய சில செய்திகள்!

'முஹம்மதே!' துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்' என்று கூறுவீராக!. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் மறைவதைக் கண்டார். அங்கே அவர் சமுதாயத்தைக் கண்டார்.'
-குர்ஆன் 18:83-86

தரைவழிப் பயணமும் கடல்வழிப் பயணமும் செய்து உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாற்றை நாம் இந்த பதிவில் பார்ப்போமா!

முகமது நபியின் காலத்திலிருந்து ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு 'துல்கர்னைன்' என்ற அரசர் ஒரு நாட்டில் சிறப்பான ஆட்சி செய்து வந்தார். இந்த அரசரைப் பற்றி அரேபிய மக்களும் நிறைய அறிந்து வைத்திருந்தனர். இவரைப் பற்றிய மேலும் விபரங்கள் அறிய முகமது நபியிடம் அந்த அரபிகள் பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். அந்த அரபிகளின் கேள்விகளுக்கு பதிலாகத்தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.

துல்கர்னைன் என்பது இந்த அரசருக்குரிய பட்ட பெயராகும். இச்சொல்லுக்கு 'இரு கொம்புகளின் உடைமையாளர்' என்பது பொருளாகும். இது தவிர இவரது நாடு மொழி மக்கள் பற்றிய வேறு விபரங்கள் காணக்கிடைக்கவில்லை. சிலர் இவரே 'மாவீரர் அலெக்சாண்டர்' என்றும் வேறு சிலர் இவர் ஒரு பழங்கால பாரசீக அரசர் என்றும் பல மாதிரியாக சொல்கின்றனர். இனி விஷயத்துக்கு வருவோம்.

இறைவனின் கட்டளைப்படி உலகின் சில பகுதிகளை நிர்வகிக்கும் பொருட்டு துல்கர்னைன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் ஒரு கட்டத்தில் குர்ஆன் கூறுவது போல் 'சூரியன் மறையும் இடத்தை அடைந்தார்'. இந்த வார்த்தை பிரயோகத்தில் அழகிய அறிவியல் உண்மை புதைந்துள்ளது. இந்த வார்த்தை பிரயோகத்திலிருந்து துல்கர்னைன் தனது பயணத்தை மேற்கு திசையிலிருந்து ஆரம்பித்துள்ளார் என்று அறிய வருகிறோம்.

அடுத்து 'சூரியன் நீர் நிலையில் மறைவதைக் கண்டார்' என்பதிலிருந்து அவரது பயணம் ஒரு கடற்கரையில் முடிவடைந்தது என்று தெரிய வருகிறது. ஏனெனில் சூரியன் தண்ணீரில் மறைவது போன்ற காட்சி கடற்கரையில் நின்று பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவமாகும் என்பதும் நமக்கு தெரிந்ததே!

அக்கடற்கரையை ஒட்டி ஒரு நகரம் இருந்ததாகவும் அம்மக்களிடம் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் சில உத்தரவுகளை இட்டதாகவும் நாம் குர்ஆனில் பார்க்க கிடைக்கிறது. துல்கர்னைன் இந்த நீண்ட பயணத்தில் கடற்கரையில் அமைந்துள்ள நகரத்தை அடைந்தார் என்பதிலிருந்து அதுவரை அவர் செய்த பயணம் தரை வழிப் பயணமே என்றும் அறிய முடிகிறது.

மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்!

தன்னுடைய நீண்ட பயணத்தில் கடற்கரையை அடைந்த துல்கர்னைன் திசை மாறாமல் மேலும் பயணம் செய்ய வேண்டுமானால் அவர் அதற்கு மேல் கடல் வழிப் பயணமே செய்திருக்க வேண்டும்.

'பின்னர் ஒரு வழியில் சென்றார்' -குர்ஆன் 18:89

இந்த வசனத்தில் துல்கர்னைன் அவர்கள் தனது பயணத்தை மேலும் தொடர்ந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.

'முடிவில் சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை'
-குர்ஆன் 18:90

என்ன வியப்பு! மேற்கு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த துல்கர்னைன் 'முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார்' இது எப்படி சாத்தியமாகும்? நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்கு திசையை அடைய முடியுமா? ஆனால் இந்த பூமியின் மீது மேற்குத் திசையில் சென்று கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைந்ததாக குர்ஆன் சொல்வதிலிருந்து பூமியின் வடிவம் தட்டையானது இல்லை என்றும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு.

கோவி.கண்ணன் said...

//'அவனே பூமியை பயன்படுத்த எளிதானதாக உங்களுக்கு அமைத்தான்.எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்.'
-குர்ஆன் 67:15

பூமி தட்டையாக இருந்தால் ஒரே பகுதியில்(மேற்பரப்பில்) மட்டுமே மனிதர்கள் செல்ல முடியும். இந்த பூமி உருண்டையாக இருந்தால்தான் மேல்,கீழ்,பக்கவாட்டு என்று 'பல பகுதிகளிலும்' மனிதர்கள் செல்ல முடியும்.//

என்ன சார் விளக்கம் புரியல. நேரடியாகவும் இல்லை.

'இந்தியாவின் பல பகுதிகளுக்குச் செல்லுங்கள்' என்று சொன்னால் இந்தியா உருண்டையாக இருப்பதாகப் பொருளா ?

//
'முடிவில் சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை'
-குர்ஆன் 18:90

என்ன வியப்பு! மேற்கு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த துல்கர்னைன் 'முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார்' இது எப்படி சாத்தியமாகும்? நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்கு திசையை அடைய முடியுமா? ஆனால் இந்த பூமியின் மீது மேற்குத் திசையில் சென்று கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைந்ததாக குர்ஆன் சொல்வதிலிருந்து பூமியின் வடிவம் தட்டையானது இல்லை என்றும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு.//

மேற்கே பயணம் செய்தால் பயணம் மேற்காகத்தான் போய் கொண்டிருக்கும்.

'கிழக்குத் திசையை அடைந்ததாக' ?

மேற்கில் பயணம் செய்தவர் கிழக்கில் இருந்து வந்தார் என்று சொன்னாலும் எதோ பொருள் பட இருக்கிறது எனலாம்.

அப்ப மார்கோ போலோவுக்கு முன்பே உலகத்தை சுற்றுவந்துவிட்டதாக சொல்ல வர்றிங்களா ? குரானில் இந்தியாவைப் பற்றி எதும் இருக்கிறதா ?

*****

அறிவியலுக்கு பொருந்தக் கூடிய ஊகமான விளக்கம் என்பதாகத்தான் பார்க்கிறேன். இதே விளக்கம் தமிழில் இல்லாது ஆங்கிலம் அல்லது அரபு மொழிகளிலும் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்க நம்பிக்கையை நான் தவறு என்று சொல்லவரவில்லை, அதுக்காக திருவள்ளுவரையெல்லாம் குத்திக் காட்டாமல் இருந்தால் நான் இங்கே பின்னூட்டி இருக்கமாட்டேன்.

நீங்க ஹதீஷ் பற்றி கேட்ட இணைப்பு

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//என்ன சார் விளக்கம் புரியல. நேரடியாகவும் இல்லை.

'இந்தியாவின் பல பகுதிகளுக்குச் செல்லுங்கள்' என்று சொன்னால் இந்தியா உருண்டையாக இருப்பதாகப் பொருளா ?//

கோளத்துக்குத்தான் பல பகுதிகள் மேல், கீழ், பக்கவாட்டு என்று இருக்க முடியும். தட்டையான ஒரு நிலப்பரப்புக்கு மேற்பரப்பு ஒன்றுதான் இருக்க முடியும். பூமியின் கீழ்ப்பகுதிக்கு செல்லுங்கள் என்றால் பூமியை துளையிட்டு செல்வதாக கொள்வீர்களா அல்லது கோள வடிவிலான பூமியின் கீழ் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று பொருள் கொள்வீர்களா? இப்போது ஓரளவு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

//மேற்கில் பயணம் செய்தவர் கிழக்கில் இருந்து வந்தார் என்று சொன்னாலும் எதோ பொருள் பட இருக்கிறது எனலாம்.//

இருவருமே ஒரே கருத்தைத்தான் சொல்கிறோம். சொல்லும் முறையில்தான் வித்தியாசப்படுகிறது.

//அப்ப மார்கோ போலோவுக்கு முன்பே உலகத்தை சுற்றுவந்துவிட்டதாக சொல்ல வர்றிங்களா ?//

மார்க்கோபோலோ உலகை சுற்றி வந்தது மனித இனம் வரலாறை எழுத தொடங்கிய காலத்தில். துல்கர்னைன் என்ற அரசரின் காலம் ஆபிரஹாம் மோசே காலத்தை ஒட்டி நடந்த சம்பவம். எனவே இவரின் காலத்தை துல்லியமாக சொல்ல இயலாது.

//குரானில் இந்தியாவைப் பற்றி எதும் இருக்கிறதா ?//

எகிப்து, ரோம் என்ற இரண்டு நாடுகளைப் பற்றியே குர்ஆனில் விபரம் காணக் கிடைக்கிறது.

//உங்க நம்பிக்கையை நான் தவறு என்று சொல்லவரவில்லை, அதுக்காக திருவள்ளுவரையெல்லாம் குத்திக் காட்டாமல் இருந்தால் நான் இங்கே பின்னூட்டி இருக்கமாட்டேன்.//

கேள்வி கேட்டால்தானே அதற்கான விடையும் பிறக்கும். நீங்கள் கேட்டதால்தான் மேலதிக விபரத்திற்காக பல புத்தகங்களையும் படிக்க நேர்ந்தது. எனவே தொடர்ந்து விமர்சனங்களை பின்னூட்டுங்கள்.உங்களின் பதிவில்

//எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும்.//

என்ற ஒரு கருத்தை வைக்கிறீர்கள்.

'இவர்கள் இந்த குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
-குர்ஆன் 4:82

உங்களுக்கு கொடுத்த பதிலாகவே இந்த வசனத்தை நான் பார்க்கிறேன்.

suvanappiriyan said...

Dear friends!

I have some problemes in my net work connection. So we will meet again after two or three days. Thanking you.

aik said...

அன்புள்ள சுவனப்பிரியன்,

ஆனால், 1985இல் சவுதி முஃப்டி அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் விதித்த பத்வாவின் படி, பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர் எல்லோரும் பாவிகள். அவர்கள் எல்லோருமே காபிர்கள் என்று கூறிவிட்டார். மார்க்கத்திலிருந்து பிறழ்ந்தவர்கள் என்று மார்க்கத்தீர்ப்பும் வழங்கிவிட்டார்.

ஆகவே சுவனப்பிரியன், பிஜே மாதிரி பூமி சூரியனை சுற்றுகிறது என்று கூறுபவர்கள் எல்லோருமே மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்கள்.

http://www.memri.org/bin/articles.cgi?Page=archives&Area=sd&ID=SP191308

Saudi Mufti 'Abd Al-'Aziz Ibn Baz Declared All Those Who Say the Earth Orbits the Sun To Be Apostates

Q: "Excuse me, but I don't know if we can mention names. Perhaps this is a sensitive issue for some people."

A: "If talking about this subject is a sensitive matter then that is additional evidence of how disastrous our situation has become. Anyway, I will give my opinion, and you can do what you wish.

"In Ibn Baz's book, published in 1985, he completely rejected the idea that the earth is round. He discussed the question on the basis that the earth is flat. He completely rejected the idea that the earth orbits the sun. I own the book and you can verify what I am saying.

"And so, the earth does not orbit the sun, rather it is the sun that goes around the earth. He brought [us] back to ancient astronomy, to the pre-Copernican period. Of course, in this book Ibn Baz declares that all those who say that the earth is round and orbits the sun are apostates. At any rate, he is free to think what he wants. But the great disaster is that not one of the religious scholars or institutions in the Muslim world, from the East to the West, from Al-Azhar to Al-Zaytouna, from Al-Qaradhawi to Al-Turabi and [Sheikh Ahmad] Kaftaro, and the departments for shari'a study - no one dared to tell Ibn Baz what nonsense he clings to in the name of the Islamic religion.

"The fact that you tell me that this is a sensitive matter - this means that I cannot reply to the words of Ibn Baz when he says that the Earth is flat and does not go around the sun, but rises and sets, in the ancient manner. This is a disaster. The greatest disaster is that we cannot even answer them.

"... The official religious institutions, first and foremost Al-Azhar, the faculties of shari'a, the departments of religious rulings, and so on are in a state of complete intellectual barrenness. They produce nothing but rulings like adult breastfeeding, the hadith of the fly, blessing oneself with the Prophet's urine, and flogging journalists. The field has been abandoned to the jihadist-fundamentalist ideology, as it is the only one that raises thoughts that are worthy of being discussed and rejected. This is because of the barrenness of the major official institutions which are considered to be exemplary.

"They are filled with repetitiveness, ossification, regression, protecting [particular] interests, perpetuating the status quo, and submission to the ruling authority. If the state is socialist, the Mufti becomes a socialist; if the rulers are at war, the clerics are pro-war; if the governments pursue peace, the [religious authorities] follow them. This is part of the barrenness of these institutions. This [forms a] vacuum in religious thought that is filled by the [intellectual] descendants and followers of Sayyid Qutb, for example, and that type of violent fundamentalist Islam..."

பீர் | Peer said...

ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பதிவில் உங்களுக்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! இது ஒரு அன்பு பாராட்டல்!! மற்றும் விருப்பமான வலைப்பதிவை பிறருக்கு அடையாளம் காட்டும் முயற்சியும் கூட.

suvanappiriyan said...

திரு பீர்!

இரண்டு மூன்று நாட்களாக பதிவு பக்கம் வரவில்லை. எனவே பின்னூட்டத்தை மட்டுறுத்தாமலேயே விட்டு விட்டேன். இன்றுதான் உங்களின் பின்னூட்டத்தைப் பார்த்து உங்கள் பதிவின் பக்கமும் வந்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்த வேலை காரணமாக பலரின் பதிவுகளையும் படிக்க நேரம் கிடைப்பதில்லை.

சுவாரஸ்யமான பதிவுகளில் என் பதிவையும் சேர்த்ததற்கு நன்றிகள். தமிழ் தொடர்பு விட்டுப் போய் விடக் கூடாது என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட என் வலைப் பதிவு மூன்றாவது வருடத்தை தாண்டிவிட்டது. புலி வாலை பிடித்த கதையாக இதை விடவும் முடியவில்லை. இதன் மூலம் பல நண்பர்களையும் பெற்றுள்ளேன்.

தேர்ந்தெடுத்தமைக்காக மீண்டும் நன்றி....நன்றி....

suvanappiriyan said...

ஐக்!

ஒருவரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுவது யாரின் தனிநபர் அதிகாரத்திற்க்குள்ளும் வராது. இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.

சவுதி மார்க்க அறிஞராக இருந்தாலும் மனிதர் என்ற முறையில் அவரும் தவறிழைக்கக் கூடியவரே! பெரும் பெரும் அறிவியல் அறிஞர்களே கூட சூரியனே பூமியைச் சுற்றுவதாக பல காலம் நம்பியிருந்தனர். எனவே இஸ்லாத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்க நாம் குர்ஆனைத்தான் எடுக்க வேண்டுமேயொழிய ஒரு மார்க்க அறிஞரின் தனிப்பட்ட கருத்தை அல்ல.

Anonymous said...

அஸ்ஸலாமுஅலைக்கும்..
சுவனப்பிரியன்

மிக அருமையான பதிவு,அடக்கமான பதில்,

உண்மையை உணர மறுக்கும் திரு. கோவி.கண்ணன் அவர்கள்.
கேட்க்கும் குருட்டு தனமான கேள்விகளுக்கும் அடக்கமாக பதில் சொல்லும் உங்கள் முயர்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இஸ்லாம் உங்களை நன்கு பக்குவபட்ட மனிதனாக மாற்றியுள்ளது.

குலாம்-துபை

suvanappiriyan said...

Thiru Gulam!

//அஸ்ஸலாமுஅலைக்கும்.. (சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!)
சுவனப்பிரியன்//

வஅலைக்கும் சலாம்! (அதே சாந்தியும் சமாதானமும் உங்களுக்கும் உண்டாகட்டுமாக!)

//திரு. கோவி.கண்ணன் அவர்கள்.
கேட்க்கும் குருட்டு தனமான கேள்விகளுக்கும்//

குருட்டுத்தனமான என்ற வார்த்தைப் பிரயோகத்தை தவிர்த்திருக்கலாம். எவரின் அறிவுத்திறனையும் நாம் குறைத்து மதிப்பிடலாகாது. கடுமையாக உழைத்து பல அரிய பதிவுகளை தமிழுலகுக்கு தந்து கொண்டிருப்பவர் சகோதரர் கோவிக் கண்ணன். கேள்வி கேட்டால்தான் அதற்கான பதிலை தேட வேண்டி குர்ஆனை மேலும் அதிகம் புரட்டுகிறோம். இணையத்தில் எழுத ஆரம்பித்தவுடன் இந்து நண்பர்கள் கேட்ட கேள்விகளின் பயனால்தான் நான் மேலும் இஸ்லாத்தை விரிவாக தெரிந்து தெளிவு பெற்றேன். எனவே நீங்கள் கோவிக்கண்ணன் சார்பாக சொன்னவைகளில் நான் மாறுபடுகிறேன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

பதிவுகளை படித்து யார் மனதும் நோகாமல் பின்னூட்டமும் தொடர்ந்து இடுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Gokul said...

சுவனபிரியன்,
நல்ல பதிவு. ஆனால் சில சந்தேகங்கள் ,

குரானில் பூமிக்கு மேல் ஏழு சுவர்கங்கள் இருப்பதாகவும் , (குரான் 2:29; 37:6-7; 67:3; 71:15)
அதில் சூரியனும் சந்திரனும் பூமிக்கு மிக அருகில் உள்ள சுவர்க்கத்தில் இருப்பதாகவும் (37:6-7; 67:5; 78:12-13) சொல்லி இருப்பது உண்மையா?

இதனை இப்போது உள்ள milky way galaxy மூலம் விளக்குவீர்களா?

suvanappiriyan said...

திரு கோகுல்!

//சுவனபிரியன்,
நல்ல பதிவு. ஆனால் சில சந்தேகங்கள் ,

குரானில் பூமிக்கு மேல் ஏழு சுவர்கங்கள் இருப்பதாகவும் , (குரான் 2:29; 37:6-7; 67:3; 71:15)
அதில் சூரியனும் சந்திரனும் பூமிக்கு மிக அருகில் உள்ள சுவர்க்கத்தில் இருப்பதாகவும் (37:6-7; 67:5; 78:12-13) சொல்லி இருப்பது உண்மையா?

இதனை இப்போது உள்ள milky way galaxy மூலம் விளக்குவீர்களா?//

வானங்கள் அடுக்குகளால் படைக்கப்பட்டுள்ளதா?

'ஏழு வானங்களை இறைவன் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா?'
-குர்ஆன் 71:15

'அவனே பூமியில் உள்ள அனைத்தையும் மனிதர்களாகிய உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தைப் படைக்க நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.'
-குர்ஆன் 2: 29

'முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.'
-குர்ஆன் 37:6

நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் குர்ஆனின் வசனங்களில் சிலவற்றை மேலே பார்க்கிறீர்கள். வானங்களை ஏழு அடுக்குகளாக படைத்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவும் வானத்தின் அமைப்பையோ அது எத்தனை அடுக்குகளாக்கப்பட்டுள்ளது என்பதையோ துல்லியமாக இதுவரை சொல்லவில்லை. இனி வருங்காலத்தில் வான் ஆராய்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வசனங்கள் உண்மைப்படுத்தப் படலாம். முன்னால் வாழ்ந்த வானியல் அறிஞர்கள் அனைவரும் வானம் ஒன்றுதான் என்ற நம்பிக்கையிலேயே இருந்தனர். பெரு வெடிப்பு சித்தாந்தத்துக்கு பிறகுதான் வானங்கள் ஒன்றுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு தற்கால விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இப்போதய அறிவியலாளர்களின் கருத்து பேரண்டங்களின் எண்ணிக்கை ஒருகால் எண்ணிலடங்காததாக இருக்கலாம் அல்லது எண்ணிலடங்காத குட்டி குட்டி பேரண்டங்களைக் கொண்ட ஒரு எல்லையற்ற மகாப் பேரண்டமாகவும் இருக்கலாம்.
(ஆதாரம்: எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம் - பக்கம் 129-130)

எனவே ஒரே வானம் மட்டுமே இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்ற கருத்து அறிவியல் உலகில் பரவத் தொடங்கி இருக்கிறது. நம் காலத்திற்கு பிறகோ அல்லது நம் காலத்திலோ பல வானங்களையும் அறிவியலார் நிச்சயமாக கண்டு பிடிப்பர்.

ஆகாயங்களின் எண்ணிக்கை எவ்வளவு என அறிவியலால் தீர்மானிக்க முடியவில்லை என்றாலும் நாம் வசிக்கும் இப்பேரண்டம் அடுக்குகளால் உருவானதே என்பதை அறிவியல் ஆய்வுகள் கண்டு பிடித்துள்ளன.

அறிவியல் அறிஞர் சர் வில்லியம் ஹெர்ஷல் பல வருடங்கள் இடை விடாது முயற்சி செய்து ஆகாயத்தில் 688 அடுக்குகள் உள்ளதாக கண்டுபிடித்தார்.

1924-ல் எட்வின் ஹப்பிள் என்பவர் தாம் பேரண்டம் என்பது காலக்சிகள் எனும் நட்சத்திர மண்டலங்களின் ஏராளமான தொகுதிகளால் உருவானதே எனக் கண்டுபிடித்தவராவார். காலக்சிகள் என்பதை சுருக்கமாக நட்சத்திரக் கூட்டங்கள், நட்சத்திர மேகங்கள், நெபுலாக்கள், ஒற்றை நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்கள், பன்மை நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள், நியூட்ரான் நட்சத்திரங்கள், கருங்குழிகள், மற்றும் நட்சத்திரக் குடும்பங்கள் உள்ளிட்ட மாபெரும் ஒரு அண்டத் தொகுதியாகக் குறிப்பிடலாம். பேரண்டத்தில் இவைகளின் எண்ணிக்கை நூறு கோடி என்றும் ஒவ்வொன்றிலும் பதினாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகவும் அறிவியலார் ஷேப்லி கணக்கிட்டுள்ளார். ஆனால் நவீன கணக்கீட்டின்படி கேலக்சியின் எண்ணிக்கையும் அவை ஒவ்வொன்றிலும் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் சில பதினாயிரம் கோடிகளாகும்.
(ஆதாரம்: எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம். பக்கம் 38:39)

நமது அறிவியல் திறமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டு வருவதால் இதை விட அதிகமான காலக்சிகள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப் படலாம். எப்படி பார்த்தாலும் நாம் வசிக்கும் பேரண்டம் காலக்சிகளின் அடுக்குகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் ஏனைய ஆறு பேரண்டங்களும் அடுக்குகளின் தொகுதிகளாக இருந்து விட்டால் அது எவ்வித அறிவியல் முரண்பாடும் இல்லாததே என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

தகவல் உதவி: 'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.'

Nanda Kr B said...

NALLA KARUTHUKKALAI SOLGIREERGAL .... ITHIL THAYAU SEITHU YARUM ENTHA MATHATHAIYUM PATRI PESA VENDAM ENDRU VIRUMBUGIREN....NAMAKKU PAYANPADA KOODIYA SEITHIGALAI MATTUM EDUTHU KOLVOME....