Followers

Saturday, September 16, 2006

இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்

இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்

இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி கியான்' என்றும் கூறுவர். இந்த வேதங்கள் சமஸ்கிரத மொழியில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். வேதம் இறக்கியருளப்பட்டக் காலத்தில் எழுத்துப் பயிற்சி இல்லாததால் ஆசிரியர்கள் வேதங்களை வாய் வழியாக ஓதி வந்தனர். அவ்வாறு தலைமுறை தலைமுறையாகச் சென்ற பல நூற்றாண்டுகளாக வாய் மொழியாகவே ஓதப் பட்டு வந்த வேதங்களை இன்று வரை கற்கப் பட்டும் கற்பிக்கப் பட்டும் ஓதப் பட்டும் வருகின்றன. சென்ற ஒரு நூற்றாண்டுக் காலத்திற்க்குள்ளாகத் தான் வேதங்களை எழுதுவது, அச்சிடுவது, மொழி பெயர்ப்பது என்னும் பழக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

எழுத்து முறை உலகிலேயே முதன் முதலாக பினீசியர் என்னும் கிழக்கு மத்திய தரைப் பிரதேச மக்களால் கண்டு பிடிக்கப் பட்டது என்பதை நாம் அறிவோம். பினீசியாவிலிருந்து மெசப்பட்டோமியா வழியாகவும் பாரசீகம் வழியாகவும் வந்து இப்புதுமை இந்தியாவை அடைந்திருக்க வேண்டும். ஆதியில் இந்தியாவில் பழக்கத்திற்கு வந்த எழுத்து முறை 'பிராமி' எனப்படும். இவ்வெழுத்துக்களிலேயே அசோகரது கல் வெட்டுக்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

இந்துக்களின் வேதங்கள் கி.மு. 1500 க்கும் கி.மு. ஆயிரத்துக்கும் இடைப் பட்ட காலத்தில் இயற்றப் பட்டதாக இருக்கலாம். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வியாஸர் அவற்றை தொகுத்தும் வகுத்தும் ரிக், யசூர், சாம, அதர்வம் என்று பாகு படுத்தி பதிப்பித்து இருக்கலாம் என்று இந்து மதப் பெரியார்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கான சான்றுகள் எதையும் கூறவில்லை.

வேதம் அருளப்பட்ட காலம் எழுத்துப் பயிற்சி என்பது இல்லாத காலமாதலால் வேதம் அருளப் படும்போது அது எழுதி வைக்க சாத்தியமில்லை.

காலம் காலமாக வேத மொழியாக (வாய் மொழியாக) இருந்த கிரந்தங்கள் பின்பு பிரகிருத மொழிக்கு மாற்றப் பட்டது. (பாகத அல்லது பிராகிருத மொழி என்பது பாமர மொழியாகும்) பின்பு பிராகிருத மொழியிலிருந்து சமஸ்கிரதத்திற்கு மாற்றப் பட்டது. (சமஸ்கிரதம் என்றால் செப்பனிடப் பட்ட மொழி - அறிஞர்கள் மொழி) இவ்வாறு காலம் காலமாக வாய் மொழியாக இருந்து பின்பு மொழி பெயர்ப்புக்கு உட்பட்டு வந்ததால் அதில் இடைச் சொருகல் ஏற்படவும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

நூஹ் (நோவா) நபிக்கு அருளப்பட்ட வேதம் அப்படியே இப்போது இருக்குமானால் அது மொழி மாற்றத்தைத் தவிர மற்றெல்லா வகையிலும் அது திருக் குர்ஆனுக்கு ஒத்ததாகவே இருக்கும்.

இறைவன் குர்ஆனில் பல இடங்களில் தூதர்களைக் குறிப்பிடும் போது நோவா, அப்ரஹாம், மோஸே, தாவீது, ஏசு, முகமது என்று அனைத்து இறைத் தூதர்களையும் சிலாகித்துக் கூறுகிறான்.

முகமது நபிக்கு குர்ஆனையும், ஏசு நாதருக்கு இன்ஜீலையும், தாவூத் நபிக்கு ஜபூரையும், இப்றாகீம் நபிக்கு சில ஆகமங்களையும் வழங்கியதாகக் கூறுகிறான். ஆனால் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதம் பற்றி நேரிடையாக எதுவும் குறிப்பிடவில்லை.

இனங்களைக் குறிப்பிடும் போது யூதர்கள்,கிறித்தவர்கள், ஸாபியீன்கள், முஸ்லிம்கள் என்று பிரித்தறிவிக்கிறான். அதில் ஸாபியீன்களுக்கு வேதம் அருளப்பட்டதாகவும் கூறுகிறான்.

குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிய இப்னு கஸீர் தன்னுடைய விளக்கத்தில் ஸாபியீன்கள் என்பவர்கள் நூஹ் நபியுடைய இனத்தவர்களே என்று கூறுகிறார்.

ஸாபியீன்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை வணங்குபவர்களாகவும் கிரக பலன், சோதிடம், இவற்றில் நம்பிக்கையுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் வானவர்களை (தேவர்களை) வணங்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று மார்க்க அறிஞர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். இந்த வணக்க வழி பாட்டு முறைகள் அனைத்தும் அப்படியே அமையப் பெற்ற இனத்தவர் இந்துக்களே என்று தெளிவாக அறிகிறோம். ஆகவே குர்ஆன் கூறும் ஸாபியீன்கள் என்பவர் இந்துக்களே என்று தெளிவாக விளங்க முடிகிறது.

இந்த ஸாபியீன்களுக்கு அனுப்பப் பட்ட தூதர் அதாவது இந்து சமூகத்திற்கு அனுப்பப் பட்ட தூதர் நூஹ் (நோவா) நபி அவர்களே!

குர்ஆன் தவ்ராத்தையும், இன்ஜீலையும், ஜபூரையும், இப்றாஹீமின் ஆகமங்களையும் தவிர்த்து முதல் வேதம் (ஸீஹீஃபில் உலா), முன்னோர்களின் வேதம் (ஜீபூருல் அவ்வலீன்) என்ற பெயர்களையும் குறிப்பிடுகிறது. முதல் வேதம், முன்னோர்களின் வேதம் என்றால் குர்ஆன், இன்ஜீல், ஸபூர், தவ்ராத், இப்றாகீமின் ஆகமங்களுக்கு முந்தியதாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த வேதங்கள் அருளப்பட்ட தூதர்களுக்கு முந்தைய தூதர் நோவா தான். நோவா (நூஹ்) நபியின் சமுதாயம் தான் ஸாபியின்கள். ஸாபியீன்கள் தான் இக்காலத்தில் இந்துக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்துக்கள் தங்களிடையே உள்ள வேதங்களை 'ஆதிகிரந்தம்' என்றும் ' ஆதி கியான்' என்றும் கூறுகின்றனர். 'ஸீஹீபில் உலா' 'ஜீபூருல் அவ்வல்' என்னும் பெயர்களுக்கு இணையான சமஸ்கிரத சொல் 'ஆதி கிரந்', 'ஆதி கியான்' ஆகும். இதன் மூலம் குர்ஆன் கூறும் முன்னோர்களின் வேதம் என்பது 'ஆதி கிரந்தம்', 'ஆதிகியான்' என்பது தெளிவாகிறது.

இந்த பெயர் மாற்றம் தவிர்க்க முடியாதது ஆகும். குர்ஆன் கிறித்தவர்களை நசாராக்கள் என்று அழைக்கிறது. கிறித்தவர்கள் எவரும் தங்களை நசாராக்கள் என்று கூறிக் கொள்வதில்லை. அது போல் கிறித்தவர்களின் வேதத்தை குர்ஆன் 'இன்ஜீல்' என்ற கூறுகிறது. கிறித்தவர்களோ அதனை பைபிள் என்கின்றனர். குர்ஆன் தாவூதுக்கு அருளிய வேதத்தை 'ஜபூர்' என்று அழைக்கிறது. யூதர்களும், கிறித்தவர்களும் அதை 'சங்கீதம்'என்று தான் அழைக்கிறார்கள். எனவெ இந்த பெயர் மாற்றம் என்பது காலத்துக்கு தக்கவாறு மாறுகிறது என்பது தவிர்க்க முடியாதது.

நோவா அவர்களுக்கு அருளப்பட்ட இவ்விரு வேதங்களில் ஒன்று ஜலப் பிரளயத்துக்கு முன்பும், மற்றொன்று ஜலப் பிரளயத்துக்கு பின்பும் அருளப் பட்டதாய் இருக்கலாம். இறைவனே நன்கறிந்தவன்.

'நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.'
26 : 196 - குர்ஆன்

சங்கீதத்தையும், தோராவையும், சுவிஷேஷங்களையும் தவிர்த்து முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

உலகிலேயே பழமையான வேதங்கள் இந்துக்களிடமுள்ளது. ஓரளவுக்கு மூல மொழியில் உள்ள வேதங்களும் இந்துக்களுடையதே! நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது என்று குர்ஆன் கூறியதை மெய்ப்பிக்கும் படியாக இந்துக்களிடமுள்ள கிரந்தங்களிலும் குர்ஆனுக்கு ஒத்த கருத்துடைய சில வசனங்களையும், குர்ஆனுக்கு இணையான நடையழகையும் முன்பு கண்டோம்.

'நபியே! இன்னும் உமக்கு முன்னர் வஹீ மூலம் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.'
16 : 43,44 - குர்ஆன்
என்று இறைவன் குரஆனில் கூறுகிறான்.

தொன்மையான காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கியிருக்கிறேன்
8 : 6 : 11 - ரிக் வேதம்

இதிலிருந்து குர்ஆன் 'குறிப்பிடும் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும்' கொண்டு தொகுக்கப் பட்ட பாடல்களையே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் என்று விளங்கிக் கொள்ளும் படியாக ரிக் வேதத்தின் சுலோகம் அமைந்துள்ளது.

இறைவன் நோவா அவர்களுக்கு அருளிய வேதங்களான ஆதி கிரந்தம், ஆதி கியான் போன்றவை தொன்மையான காலம் தொட்டு வாய் மொழியாக, மரபுச் செய்தியாக இருந்தது. அவைகளே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதம் என்று பகுத்து தொகுக்கப் பட்டிருக்கிறது என்று விளங்க முடிகிறது.

வேதங்கள் தவிர்த்து புராணங்கள், உபநிஷத்துக்கள், ஆரண்யங்கள், ஸ்மிருதிகள் எல்லாம் இந்துக்களின் புனித நூல்களாக உள்ளன. குர்ஆனுக்கு விளக்க உரையாக முகமது நபியின் 'நபி மொழிகள்' எவ்வாறு அமைந்திருக்கிறதோ அது போல ஆதி கிரந்தங்களுக்கு ரிஷிகளால் எழுதப் பட்ட வியாக்யானங்களாக இந்த புராணங்களும் உபநிஷத்துகளும், எழுதப் பட்டிருக்க வேண்டும். அல்லது நோவாவுக்குப் பிறகு வந்த இறைத் தூதர்களின் விளக்கங்களின் தொகுப்பாகக் கூட இருக்கலாம்.

'இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேவுடைய வேதங்களிலும் உள்ளது.'
87 : 18,19 -குர்ஆன்

“Ekam Evadvitiyam”
“He is only one without a second.”
(Chandogya Upanishad 6:2:1)

“He who knows Me as the unborn, as the beginning-less, as the Supreme Lord of all the Worlds.”
(Bhagvad Gita 10:3)
and “Of (check – or For Him?) Him there is neither parents nor Lord.”
(Shwetashvatara Upanishad 6:9)

A similar message is given in Shwetashvatara Upanishad & Yajurveda:
“Na Tasya pratima asti”
“There is no likeness of Him.”
(Shwetashvatara Upanishad 4:19 & Yajurveda 32:3)


இறைவனே மிக அறிந்தவன்.

தகவல் உதவிக்கு நனறி
ஜாகிர் நாயக், அபு ஆசியா

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

2 comments:

suvanappiriyan said...

அசலமோன்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

அன்பு இணைய நண்பர்களுக்கு!

என்னுடைய உறவினர்கள் குடும்பத்தோடு மெக்கா புனித யாத்திரைக்கு சவூதி வந்திருந்ததால் அவர்களோடு இந்த ஒரு வாரம் சென்று விட்டது. எனவே இணையத்தின் பக்கம் வருவதற்கு நேரமில்லாமல் இருந்தது. விருந்தினர்கள் மெக்கா சென்று விட்டதனால் இனி வழக்கம் போல் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வோம்.

சுவனப் பிரியன்.