சமஸ்கிரதத்தை தெய்வ மொழியாக மாற்றத் துடிக்கும் பாரதியார்!
“நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.”
இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:
“தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே” என்கிறார் பாரதியார்.
இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலேயே துளஸிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி – இவையனைத்துக்கும் பொதுப்பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் -இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து.
-பாரதியார் கட்டுரைகள், ப.46, வானதி பதிப்பகம், சென்னை, 1981.
பாரதி,செந்தமிழில் தன் பெயரைச் செப்பவில்லை தன் பெயரைக் கூட ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே எழுதி உள்ளார். அவரது மூலத்தில் எழுதிய கவிதைகள் அனைத்தும் சமஸ்கிருதம் கலந்த ‘தமிஸ்கிருத” கிரந்த எழுத்துக்களே!
இதுகுறித்து ஆய்வாளர் க.கைலாசபதி கூறுவதாவது:
“1949 இல் ஓமந்தூரார் அரசு பாரதி நூல்களின் பதிப்பு உரிமையை வாங்கியது. 1950 இல் அரசு பாரதி நூல்கள் பதிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. அக்குழுவில் இருந்த ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார் போன்றோர் பாரதியின் கவிதைகளில் மூலப்படியில் இருந்த கிரந்த எழுத்துக்களை முழுமையாக நீக்கிவிட்டதாகவும், 1909 இல் வெளிவந்த ஜன்மபூமியில் ஸமர்ப்பணம் முகவுரை ஆகியவற்றின் கீழ் ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே கையொப்பமிட்டுள்ளார்” என்றும் ஆய்வாளர் க.கைலாசபதி கூறியுள்ளார்.
— க.கைலாசபதி, பாரதி ஆய்வுகள், ப.180, நி.செ.பு.நி. 1984.
தமிழில் என்னதான் பாரதிக்கு ஆளுமை இருந்தாலும் சமஸ்கிரத பித்து பாரதியையும் விடவில்லை. ஆரியர்களின் தாய் மொழி சமஸ்கிரதம் என்பதாலேயே இந்த பித்து பாரதிக்கும் வந்துள்ளது.
இஸ்லாமியர்களில் சிலரும் அரபி மொழியை தேவ மொழி என்று கூறுவர். ஆனால் இறைவன் குர்ஆனில் 'உலக மூல மொழிகள் அனைத்தையும் தாமே உருவாக்கியதாக சொல்கிறான். இஸ்லாமியரைப் போன்றே பாரதியும் சமஸ்கிரதத்தை தேவ மொழியாக எண்ணியிருக்கிறார். உண்மை விளங்காததே இதற்கு தலையாய காரணம்.
2 comments:
கணிப்பொறியின் சி++ மொழியையும் கொண்டுவந்தது இறைவன்தான்?
பாரதியாரை விமா்சிப்பவன் அற்பன் என்னே கருதுவேன்.
Post a Comment