Followers

Monday, December 04, 2006

குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா?

குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா?

குர்ஆன் வாதத்தையும் விவாதத்தையும் ஊக்கமூட்டுகிறது:

குர்ஆனைப் பற்றி எவரும் சந்தேகம் கொண்டு விளக்கங்கள் கேட்டாலோ அல்லது விவாதத்துக்கு அழைத்தாலோ அது போன்ற சூழ்நிலைகளை குர்ஆன் ஊக்கப்படுத்துகிறது.

பல முஸ்லிம்களின் நம்பிக்கையானது குர்ஆன் வாதத்தையோ விவாதத்தையோ ஊக்கமூட்டுவதில்லை என்பது. இதனால் இவர்கள் இஸ்லாத்தை அல்லது குர்ஆனைப் பற்றி உள்ள எல்லா விதப் பேச்சுக்களில் அல்லது உரையாடல்களிலிருந்து விலகுகிறார்கள். உண்மையிலேயே குர்ஆன் வாதத்தையும் விவாதத்தையும் ஊக்கமூட்டுகிறது.

'நபியே! உம் இறைவனின் பாதையில் மக்களை விவெகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன்வழியை விட்டுத் தவறியவர்களையும் அவன் வழியைச் சார்ந்து நேர்வழிப் பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'
16 : 125 - குர்ஆன்

பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை.(FALSIFICATION TEST)

விஞ்ஞான குழுவில் வித்தியாசமான ஒரு அணுகுமுறை உள்ளது. பொதுவாக ஒருவர் விஞஞானத்தாலோ அல்லது எந்த ஒரு கலையிலோ புதிதாக ஒரு கருத்து அல்லது தத்துவத்தை கண்டுபிடித்து அமைத்தால் அத் தத்துவம் உண்மை அல்ல என்று நிரூபிக்கும் முகமாக ஒரு சோதனை முறையும் அந்த நபர் அமைத்துக் காட்ட வேண்டும். இல்லையெனில் இன்றைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 'உன்னிடம் நேரத்தை வீணாக்க எங்களால் இயலாது' என்று அவர்கள் கூறி விடுவார்கள். இந்த சோதனை முயற்ச்சிக்கு ஆங்கிலத்தில் “FALSIFICATION TEST” அல்லது தமிழில் 'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால் தான் இந்த இருபதாம் நூற்றாண்டு துவங்கும் காலத்தில் 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்' என்ற விஞ்ஞானி ஒரு புதிய தத்துவக் கோட்பாட்டைக் கண்டு பிடித்து அறிவித்தார். அதாவது 'இந்த பிரபஞ்சமானது தூசியால்தான் அமைக்கப்பட்டுள்ளது'. இந்த தத்துவத்தை உண்மையல்ல என நிரூபிக்க அவர் மூன்று வித சோதனை முறைகளை செய்து காட்டி தன் வாதத்தை நிரூபித்தார். விஞ்ஞானிகளும் அதன் பிறகு ஐன்ஸ்டீனின் தத்துவத்தை ஒத்துக் கொண்டனர்.

இதே போல் குர்ஆனும் பல்வேறு 'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' களை வழங்குகிறது. இதில் சில சோதனைகள் முந்திய காலத்திற்கு மடடும். மேலும் சில சோதனைகள் கால வரம்பில்லாமல் எல்லாக் காலத்திற்கும் தகுதியுடையதாக இருக்கின்றன. 'உண்மையிலேயே இந்த நூல் இறை வெளிப்பாடு அல்ல எனில் இதை பொய் என்று நிரூபிக்க நீங்கள் இது போல் உருவாக்குங்கள்' என குர்ஆன் சொல்கிறது.

நாம் இது போல் ஒரு ஈடு இணையற்ற 'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' யை எந்த மத வேதங்களிலும் கண்டதில்லை. இது போன்ற ஒரு சோதனை மற்ற மதத்தின் வேதங்களில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒருவர் தம் நம்பிக்கையை முன்னிலைப் படுத்தும் போதெல்லாம் தம நம்பிக்கையை தவறென்று நிரூபிக்க எதிர் நபருக்கு ஒரு வாய்ப்பும் அளிக்க வேண்டும். குர்ஆன் தவறென்று நிரூபிக்க இது போல் பலவேறு வாய்ப்புகளை குர்ஆனே அளிக்கின்றது.

1. அபூலஹபைப் பற்றிய குர்ஆனின் தீர்க்கதரிசனம்:

முகமது நபி அவர்களுக்கு அபூலஹப் என்ற பெயருடன் ஒரு சிறிய தந்தை இருந்தார். 'அபூலஹப்' என்ற பெயரின் அர்த்தமானது 'நெருப்பின் தந்தை'என்ற பொருளில் வரும். ஏனெனில் இவருக்கு நெருப்பைப் போல் சீரியெழுகின்ற கோபமுண்டாகும். இவர் இஸ்லாத்தின் மற்றும் முகமது நபியின் கடும் எதிரியாகவும் இருந்தார். எப்பொழுதாவது முகமது நபி அவர்கள் ஒரு புதியவருடன் பேசுவதை பார்த்து விட்டால் அவர்களைப் பின் தொடர்ந்து காத்து நின்று அவர்கள் விடை பெற்றபின் அந்தப் புதியவரிடம் சென்று 'முகமது நபி தங்களிடம் என்ன சொன்னார்?' என்று கேட்டபின் 'அவர் பகல் என்று சொன்னாரா? அப்படியானால் அது இரவுதான். அவர் கருப்பு என்று சொன்னாரா? அப்படியானால் அது வெள்ளைதான்' என்று முகமது நபியின் கருத்துக்கு நேர்மாறாகக் கூறுவார்.
எப்படி நமது இணையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இஸ்லாத்தை தாக்குவதையே தங்கள் முழு நேர வேலையாக கொண்டுள்ளார்களோ அதைப் போல

'அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும் அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.'
111-1-5 குர்ஆன்


குர்ஆனில் சூரா அல்-லஹப் என்ற பெயருடன் ஒரு அத்தியாயம் இருக்கின்றது. இந்த அத்தியாயத்தில் இறைவன் 'அபூலஹபும் அவன் மனைவியும் நரக நெருப்பின் அழிவுக்கு ஆளாகுவார்களென்ற முன்னறிவிப்பைக் கூறியிருக்கின்றான். இந்த முன்னறிவிப்பு கூறுவதெல்லாம் அபூலஹபும் அவன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் இவர்கள் நரக நெருப்பில் நுழைவார்கள் என்று மறைமுகமாகக் கூறுகின்றது. அபூலஹப் இறப்பதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த வசனம் குர்ஆனில் இறைவனால் அருளப்பட்டது. அபூலஹபின் பல நண்பர்கள் இந்தப் பத்து வருட காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்கள் ஆனார்கள். அபூலஹபிறகு குர்ஆன் பொய்யான வேதம் என்று நிரூபிக்க பத்துஆண்டுகள் மிக எளிதான வாய்ப்பாக இருந்தது. இஸ்லாத்தின் எதிரியும் அறிவிலியுமான அபூலஹபிறகு குர்ஆன் ஒரு பொய் வேதம் அது ஒரு மனித தயாரிப்பென்று நிரூபிக்க மிக ஆர்வம் இருந்தது. அபூலஹப் 'நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்' என்று மட்டும் கூறியிருந்தாலே குர்ஆன் பொய் என்று நிரூபிக்கப் பட்டிருக்கும். இவன் வழக்கம் போல் ஒரு பொய் சொல்லியிருந்தாலே போதுமானது. இவன் உண்மையான முஸ்லிமைப் போல் நடந்து கொள்ள வேண்டியதுமில்லை. இவன் ஒப்புக்காகவே 'நான் ஒரு முஸ்லிம்' என்று கூறியிருந்தாலே முழு குர்ஆனும் பொய்யாக்கப் பட்டிருக்கும்.

இந்த நிகழ்ச்சியானது முகமது நபி அவர்கள் அபூலஹபைப் பார்த்து 'என் சிறிய தந்தையே!நீங்கள் என் மேல் வெறுப்பு கொள்கிறீர்களா? என் தூதுவத்தை அழிக்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால் நான் ஒரு முஸ்லிம் என்று கூறும்.என் தூதுத்துவம் அழிந்து விடும். வாரும். விரைவாக கூறும்' என்று சொல்லி சவால் விட்டது போல் இருக்கின்றது. சிந்தித்துப் பாருங்கள். அபூலஹபிற்கு இதைப் பற்றி சிந்திப்பதற்கு பத்து ஆண்டு காலமிருந்தும் அவனால் இதைச் சொல்ல முடியவில்லை. வாதமுறையோடு சிந்திக்கக் கூடிய எந்த ஒருமனிதரும் தன்னால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் இது போல் ஒரு கோரிக்கை அல்லது சவாலை குறிப்பிட்டிருக்க மாட்டார். இது இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக இருக்கிறது.

2. முஸ்லிம்களுக்கு யூதர்களைவிட கிறித்தவர்களே நெருக்கமானவர்கள்:

'நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும் இணை கற்ப்பிப்போரையும் முகம்மதே நீர் காண்பீர். 'நாங்கள் கிறித்தவர்கள்' எனக் கூறியோர் நம்பிக்கைக் கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர். அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும் அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்'
5 : 82 - குர்ஆன்

இந்த வசனத்தின்படி நாம் உலகில் இன்றும் கூட இணை வைப்பவர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு பரம எதிரிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். நம் இந்தியாவில் குஜராத் மோடி, பால் தாக்கரே, தமிழ்நாட்டு ராம கோபாலன், மேலும் யூதர்களின் கைப்பாவையான அமெரிக்கா, யூதர்களைத் தன்னகத்தே கொண்ட இஸ்ரேல் என்று குர்ஆன் சொன்ன 'இஸ்லாமிய எதிரிகள்' என்ற முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். யூத சமுதாயமானது கிறித்தவர்களைவிட ஒரு போதும் முஸ்லிம்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டார்கள். குர்ஆன் தவறென்று நிரூபிக்க இன்று யூதர்களுக்கு மிக நல்ல வாய்ப்பிருக்கிறது. இவர்கள் ஒன்றாகக் கூடி உலகம் முழுவதும் கிறித்தவர்களை விட இவர்கள் முஸ்லிம்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் என்ற முடிவை எடுத்துக் கொண்டு அதனை செயல்படுத்தி முஸ்லிம்களைப் பார்த்து 'உலகத்தில் மிக நெருங்கிய நண்பர்கள் யார்? யூதர்களா? கிறித்தவர்களா? என்று கேட்க வேண்டும். இன்று வரை யூதர்களால் இதனைச் செய்ய இயலவில்லை.

அல்லது நம் நாட்டில் ஆர்.எஸ்.எஸ், இந்து முண்ணனி போன்ற தீவிரவாத இந்து இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 'இனி மேல் நாங்கள் முஸ்லிம்களோடு சகோதரத்துவத்தோடு நடந்து கொள்வோம்' என்று தீர்மானம் போட்டு நடந்து காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். இதன் மூலமும் குர்ஆனைப் பொய் என்று நிரூபிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் உலக முடிவு நாள் வரையில் அவர்கள் முஸ்லிம்களோடு ஒத்து வரவே மாட்டார்கள். அதே சமயம் இணை வைத்தலை விட்டு விட்ட பகுத்தறிவாதிகள் பெரியார் முதல் இன்றைய கி.வீரமணி வரை முஸ்லிம்களோடு அன்போடு பழகுவதைப் பார்க்கிறோம். இங்கு தமிழ் மணத்தில் கூட பகுத்தறிவு கொள்கை உடைய வலைப்பதிவர்கள் கருத்து வேற்றுமை இருந்தாலும் முஸ்லிம்களோடு அன்போடு பழகுவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

சிலை வணக்கம் ஒன்றையே பிரதானமாகக் கொண்ட பிராமணர்களே முஸ்லிம்களை எதிர்ப்பதில் முன்னிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். பிராமணர்களைத் தவிர மற்ற இனமான திராவிட இனத்தவர், முஸ்லிம்களோடு சகோதர வாஞ்சையோடு பழகுவதையும் பார்க்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இந்து முஸ்லிம் கலவரத்தின் சூத்திரதாரி யார் என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்ஸோ, இந்துமுண்ணனியோ, சிவசேனாவோத்தான் இருக்கும். இநத இயக்கங்களின் செயல் வீரர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சியாக இருக்கிறது.

3. இது போன்ற ஒரு அத்தியயாயத்தை உருவாக்குங்கள்:

உலகத்திலுள்ள அனைத்து அரபி மொழி இலக்கியங்களில் மிக உயர்ந்தது குர்ஆன்தான் என்று முஸ்லிம்களும் அன்னிய மதக் காரர்களும் பாராட்டுகிறார்கள். இதன் கருத்து செழிப்பானது. உயர்தரமானது, உயர் நோக்கமுள்ளது. இஸ்லாத்தின் எதிரிகள் முகமது நபி அவர்களின் மீது குர்ஆனைப் போலியாகத் தயாரித்தார் என்ற பழியைச் சுமத்தியவுடன் குர்ஆன் இவர்களை எதிர்த்துரையாடி இவர்களுக்கு'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' (Falsification Test) ஒன்றை அளித்தது.

'இந்தக் குர்ஆனைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!' என்று நபியே கூறுவீராக.
17 : 88 - குர்ஆன்

'அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.'
52 :34 - குர்ஆன்

'இவர் இதை இட்டுக் கட்டி கூறுகிறார்' என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக் கட்டி பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்! இறைவனையன்றி உங்களுக்கு இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறுவீராக!
11 : 13 - குர்ஆன்

இந்த எளிதான சவாலைக் கூட இதுவரை உலகில் யாராலும் முறியடிக்க முடியவில்லை. முகமது நபி அவர்கள் குர்ஆனை போலியாகத் தயாரித்தார்கள் என்று சொல்ல எத்தகைய அடிப்படையும் அவர்களிடத்தில் இல்லை.

'உங்களால் இதனைச் செய்யவே முடியாது. நீங்கள் செய்யா விட்டால் நரக நெருப்புக்கு அஞ்சுங்கள். கெட்ட மனிதர்களும் கற்களுமே அதன் எரி பொருட்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.'
2 : 24 - குர்ஆன்

இது போன்ற சவாலை எதிர்த்து எவராலும் வெற்றி பெற இயலவில்லை. அரேபிய நாட்டிலுள்ள பெரும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த சவாலை வெற்றிக் கொள்ள மிகவும் கடினமாக முயற்ச்சித்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் பரிதாபமான முறையில் தோல்வியடைந்தார்கள். குர்ஆனுக்குப் போட்டியாக தயாரிக்கப்பட்ட கவிதைகள் இன்றைக்கு வரலாற்றுப் புத்தகங்களில் பாதுகாக்கப் பட்டுள்ளன. இதை இப்பொழுது நாம் படித்துப் பார்த்தால் நம்மையறியாமலேயே சிரித்து விடுவோம். அந்த தகுதியில்தான் இன்று அவை இருக்கின்றன.

-மும்பைபிர்லா மதுஸ்ரீ ஆடிட்டோரியத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் “Is The Quran Gods Words?” எனும் தலைப்பில் ஆற்றிய உரையைத் தழவி எழுதப் பட்டது.

இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

21 comments:

சுவனப்பிரியன் said...

இங்கு ஒரு சிறிய உதாரணத்தையும் சுட்டிக் காட்டலாம். விடாது கருப்பு சில மாதங்களுக்கு முன்னால் பம்பாய் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை திட்டுவதோடு பத்திரிக்கை செய்திகளை நம்பி இஸ்லாமியர்களையும் சிறிது காரமாக ஒருபிடி பிடித்திருந்தார். இதைப் பார்த்த நேச குமாருக்கோ தலைகால் புரியவில்லை. அந்த பதிவில் விடாது கருப்புக்கு நேசகுமார் தந்த பின்னூட்டத்தை கீழே அப்படியே தருகிறேன்.

//அன்பின் விடாது கறுப்பு,

தெளிவான பதிவு. நறுக்குத் தெரிக்கும் கருத்துக்கள். 1400 வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் வழியாக நம்நாட்டிற்கு ஜியாரத் (புனித யாத்திரை) செய்த இஸ்லாமிய தீவிரவாதத்தையும், தனி நாடு பிரித்துக் கொடுத்த பிறகும் இந்தியாவிலேயே கூடாரம் போட்டு விட்ட இணைய ஜிகாதிகளின் இரட்டை நிலைப்பாட்டையும் அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

சுவாமி தயானந்த சரஸ்வதி போன்று புனிதர்கள் வாழ்ந்த நம்நாட்டில் அர்த்தமற்ற பார்ப்பன எதிர்ப்பைச் சொல்லி பெரியார் ராமசாமி போன்ற மூடர்கள் இந்துக்களாகிய நம்மை, சிந்தனை விலங்கிட்டு பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பழியாக்கி விட்டார்கள்.

ஆதி இந்துக்களாகிய நாம் ஒற்றுமையாக கைகோர்த்தால் இணையத்தில் அமைதி மார்க்க குச்சி மிட்டாய் விற்பவர்களை விரட்டி விடலாம். காஞ்சி பிலிம்ஸிடம் இது பற்றிப் பேசி அலுத்து விட்டது. அவர் இன்னும் பெரியார் மாயையில் உழன்று கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

மறக்காமல் என் புதிய ஈமெயிலுக்கு மெயிலிடுங்கள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது.//
-Nesa Kumar

நேச குமாரின்நினைப்பு இனி விடாது கருப்பை தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளராக மாற்றி விடலாம் என்பதே! இரண்டொரு நாளில் விடாது கருப்பு தன் பதிவிலேயே கொடுத்த விளக்கத்தையும் பார்ப்போம்.

//என்னுடைய நாலு செண்ட்:-

இந்த பதிவு இஸ்லாமையும், இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட சகோதரர்களையும் மதிப்பதால் அதன் பேரில் தீவரவாதம் செய்பவர்களையும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் கண்டிப்பதே எனது நோக்கம்.//
-Vidadu Karuppu

பாவம்! இஸ்லாத்துக்கு எதிரான காரமான அடுத்தடுத்த பதிவுகளை விடாது கருப்புவிடம் இருந்து எதிர்ப் பார்த்த நேச குமாருக்கோ பெருத்த ஏமாற்றம்.

அது மட்டுமல்ல அடுத்த இரண்டொரு நாளில் விடாது கருப்பு போட்ட தலைப்பு என்னவென்கிறீர்கள்.?

'வந்தேறிகளே! வந்தேறிகளே!'

முஸ்லிம் said...

நல்ல பதிவு

- முஸ்லிம்

Vajra said...

//
குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா?
//

இல்லை என்றால் தலை துண்டாக்கப் படும். ஆகயால் வேறு வழியில்லாமல் அது உண்மை.

podakkudian said...

தெளிவாகவும் உதாரணத்துடனும் சொல்லி இருப்பது சிறப்பு தொடர வாழ்த்துக்கள்.

சுல்தான் said...

//ஆகயால் வேறு வழியில்லாமல் அது உண்மை.//
ஆகையால் உண்மையென்று வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டுவிட்ட படியால் விருப்பு வெருப்பின்றி ஒரு தடவையாவது படித்துப்பார்த்து விடுங்கள வஜ்ரா. அப்புறம், இறைவன் நாடினால், 'ஆகையால் வேறு வழியில்லாமல் இஸ்லாம்தான் உண்மை'யென்று ஒப்புக் கொள்ளவும் நேரிடலாம்.

நல்லடியார் said...

//இல்லை என்றால் தலை துண்டாக்கப் படும். ஆகயால் வேறு வழியில்லாமல் அது உண்மை.// - வஜ்ரா

எனில், உலகம் முழுவதுமுள்ள தலையுடன் இருக்கும் அனைவரும் (வஜ்ரா உட்பட) குர்ஆன் இறைவேதம்தான் என்று ஏற்றுக் கொண்டவர்களா? வஜ்ரா விளக்கவும்.

சுவனப்பிரியன்,

நிதானமான, தெளிவான, தர்க்க ரீதியான பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். (இன்ஷா அல்லாஹ்!)

baratharasu said...

///இல்லை என்றால் தலை துண்டாக்கப் படும். ஆகயால் வேறு வழியில்லாமல் அது உண்மை///

இதைவிடவும் ஒரு பொருத்தமான பின்னூட்டம் இந்த பதிவுக்கு இருக்கமுடியுமா ? சமணகழுவேற்றம் பற்றி பேசவும் ஒரு தகுதி வேண்டும் சுவனப்ரியன் , உங்கள் புனிதநூலின் பெயரால் எத்தனை குண்டுகள்தான் வெடிக்கும் ?

bala said...

//
குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா?
//


சுவனப்பிரியன் அய்யா,

உண்மை இல்லீங்கய்யா. எதுக்கு சொல்றேன்னா..உண்மை கசக்குங்கய்யா.அப்படித்தான் நாலும் தெரிஞ்சவங்க சொல்றாங்க...இதுவோ இனிப்பா இருக்குது..அதனாலதான் சொல்றேனுங்கய்யா.

பாலா

முஸ்லிம் said...

//இல்லை என்றால் தலை துண்டாக்கப் படும். ஆகயால் வேறு வழியில்லாமல் அது உண்மை//

இது மிகைப்படுத்தப்பட்ட அவதூறு. குர்ஆன் அருளப்பட்ட காலத்திலேயே குர்ஆனை இறைவேதம் இல்லை என மறுத்தவர்கள் எவரும் கொல்லப்பட்டதில்லை தலையில்லாமல் அலையவில்லை.

இப்படியெல்லாம் சொல்ல வேண்டுமென்று வஜ்ராவுக்கு கட்டாயம் இல்லையேல் அவருக்கு தலை மிஞ்சாது இதுதான் உண்மை.

- முஸ்லிம்

சுவனப்பிரியன் said...

வஜ்ரா!

நீங்கள் எந்த அளவு குர்ஆனை எதிர்க்கிறீர்களோ அந்த அளவு அதன் நம்பகத் தன்மையை அதிகப் படுத்துகிறீர்கள்.

வருகைக்கு நன்றி!

சுவனப்பிரியன் said...

முஸ்லிம்!

//நல்ல பதிவு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப்பிரியன் said...

பாலா!

//எதுக்கு சொல்றேன்னா..உண்மை கசக்குங்கய்யா//

உண்மை யாருக்குங்கய்யா கசக்கும். பொய்யிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு உண்மையைக் கண்டால் மிகவும் கசப்பாக இருக்கும். தீமைகளையே செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு நன்மையான காரியங்களைக்கண்டால் மிகவும் கசக்கும். ஒரு முறை குர்ஆனை திறந்து விளங்க முயற்ச்சியுங்கள் பாலா! பிறகு தீமை கசக்க ஆரம்பித்து விடும். நான் சொல்வது சரிதானே!

சுவனப்பிரியன் said...

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த நல்லடியார், பொதக்குடியான்,சுல்தான் போன்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

சுவனப்பிரியன் said...

பாரதரசு!

//சமணகழுவேற்றம் பற்றி பேசவும் ஒரு தகுதி வேண்டும் சுவனப்ரியன் , உங்கள் புனிதநூலின் பெயரால் எத்தனை குண்டுகள்தான் வெடிக்கும் ?//

இஸ்லாத்தின் பெயரால் வெடிக்கும் குண்டுகளில் எண்பது சதவீதம் இஸ்லாமிய எதிரிகளால் வைக்கப் படுவதுங்கண்ணா! இஸ்லாத்தை வாதத்தால் வெல்ல முடியாது என்பதால் இது போன்ற குற்றங்களை முஸ்லிம்கள் மேல் சுமத்தி பெயரை கெடுக்க நினைக்கிறார்கள். ஆனாலும் பாருங்க உலகமெங்கும் இஸ்லாம் அதி வேகமாக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

An article in Reader’s Digest ‘Almanac’, year book 1986, gave the statistics of the increase of percentage of the major religions of the world in half a century from 1934 to 1984. This article also appeared in ‘The Plain Truth’ magazine. At the top was Islam, which increased by 235%, and Christianity had increased only by 47%. May one ask, which war took place in this century which converted millions of people to Islam?

Today the fastest growing religion in America is Islam. The fastest growing religion in Europe in Islam. Which sword is forcing people in the West to accept Islam in such large numbers?

Dr. Joseph Adam Pearson.
Dr. Joseph Adam Pearson rightly says, "People who worry that nuclear weaponry will one day fall in the hands of the Arabs, fail to realize that the Islamic bomb has been dropped already, it fell the day MUHAMMED (pbuh) was born".

சுவனப்பிரியன் said...

Dear Friends!

Now I am in India.

அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்த வேலை காரணமாக உடனுக்குடன் பதில் எழுத முடியவில்லை. இரண்டொரு நாளில் திரும்பவும் வருகிறேன்.

சுவனப்பிரியன்.

Dr.Anburaj said...

குரான் என்பது அரேபிய மண்ணில் தோன்றிய சமயத்துறைச் சாா்ந்த ஒரு புத்தகம்.பகவத்கீதை என்பது இந்தியாவில் சமயத்துறை சாா்ந்த ஒருபுத்தகம். அதுபோல் விவிலியமும் இஸ்ரவேலில் தோன்றிய சமயத்துறை சாா்ந்த புத்தகம் . இப்படி எடுத்துக் கொண்டால் பிரச்சனை யில்லை. ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை, பொருட்களை பிற நாட்டவா் பய்னபடுத்தி வாழ்வை வளப்டுத்துதிக் கொள்வது போல் பரஸ்பரம் அறிவை வளா்ததுக் கொள்ளலாம். அதில் அரேபியாவில் எழுதப்பட்ட குரான்தான் உண்மையானது பிற நூல்கள் அங்கிகாிக்காத மனநிலைதான் ஆபத்தானது. கடவுளுக்கு இஸ்லாம் முஸ்லீம் இந்து கிறிஸதவம்எனற வேறுபாடு கிடையாது. ஒன்று மறறதை அழிக்க நினைப்பதுதான் வேதனையானது.அதுவும் அரேபிய வல்லாதிக்கத்தைப்பேசும் குரான் மன்றும் ஹதீஸ் புத்தகங்கள் பிற கலாச்சார மக்களை -காபீா்கள் என்று இழிவு படுத்தி போா் தொடுத்து கொல்லச் சொல்கிறது. இதுதான் கொடுமை.குரான் படித்துப் பாா்த்து விட்டேன். திருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெண்தான் வழங்க இயலும். தாயுமானவர் நூல்கள், திருமந்திரம் ,திருவாசகம் திருக்குறள,நாலடியாா் விவேக சுடாமணி யோக சாஸ்திரங்கள் போன்ற பிரமாண்டமான கோடிசுாியபிரகாசம் காட்டி மக்களை அந்தணணாக்க வழிகாட்டும் அற்புத நுர்ல்களோட ஒப்பிடும் போது ”குரான் ” னுக்கு ”O” மதிப்பெண்தான் வழங்க இயலும். அன்வாருல்குரான் அல்ம்ஆாிஜ் அத்யாயம் 70 வசனம் 1 யில் வலக்கரம் கைப்பற்றிய பெண்களை வைப்பாட்டியாக -அடிமைப்பெண்ணாக- வைத்துக் கொள்ளுங்கள் என்று முஸ்லீம்-முகம்மதுவை ஏற்காத பெண்களை கொடுமைப்படுத்த அசிங்கப்படுத்ச் சொலகிறது குரான் என்ற ... அரேபிய புத்தகம்.இக்கருத்தில் இன்றுவரை உட்காா்ந்து கொண்ருக்கின்றது அரேபியா.கலாச்சார பாிணாமம்ஏற்படவவில்லை.கருத்து வளா்ச்சிக்கு குரான் இறைவேதம் என்ற கருத்து தடையாக உள்ளது. யுத்தத்தில் கைப்ற்றப்பட்ட குமுஸ் பெண்ணை - முஸ்லீம்தளபதியின் மகளைப் பாா்தது ” இப்பெண்போல்எனதுதாய் அழகாய இருந்திருந்தால் நான் மிகவும் அழகானவனாகப் பிறந்திருப்பேன் என்ற சத்ரபதி சிவாஜி இந்தயாவின் கலாச்சார பாிணாக வளா்ச்சியில் வைரமுடி.

சுவனப் பிரியன் said...

அன்பு ராஜ்!

//திருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெண்தான் வழங்க இயலும்.//

தெய்வம் தொழ அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

வேறு தெய்வங்களை தேடி அலையாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதி வாழும் மனைவி நினைத்தால் மழை வேண்டும் போது அப் பெண்ணினால் பெய்விக்கச் செய்ய முடியும்.
இது பெண்ணடிமையை வலியுறுத்துகிறது. கணவன் அவன் எவ்வளவு அரக்கனாக இருந்தாலும் அவனை தெய்வமாக பூஜிக்க வேண்டும் என்று கூறுவதை நடை முறைப் படுத்த இயலாது. இத்தகைய பெண்களால் மழை பெய்விக்க முடியும் என்றால் உலகில் வறட்சி நிலவும் இடங்களில் இவர்களை பயன் படுத்திக் கொள்ளலாம் அல்லவா! இறைவனை வணங்க வேண்டும் என்று பல குறள்களில் சொல்லும் அறிவுறுத்தும் வள்ளுவர் இந்த குறளில் கணவனை வணங்கினாலே போதும் என்று தன் கருத்திலேயே மாறு படுகிறார்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.
உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.

தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.

சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.

சுவனப் பிரியன் said...

அன்பு ராஜ்!

//திருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெண்தான் வழங்க இயலும்.//

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.
பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.
அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று

'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.
புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.
விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.

இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை,சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.

Dr.Anburaj said...

தங்களின் கருத்துக்கள் சாியானவைதான். கவிதைக்கு பொய்யழகு என்ற இலக்கணத்திற்கு ஒப்ப திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.ஆகவே சில மிகைப்படுத்தல் உள்ளது.நாம் கழித்து படித்துக் கொள்ள வேண்டும். குரான் என்ற அரேபியாவில் தோன்றிய புத்தகம் குறித்து எனது கருத்துக்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.இந்து மாா்க்கத்தில் எந்த தனிப்பட்ட ஒருசமய அனுஷ்டானமும் அனைவருக்கும் கட்டாயம் அல்ல.சைவ உணவு சிறந்ததுதான்.அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பாவம் புண்ணியம் என்ற கேள்வியை விட தேவையா? தேவையில்லையா? என்பதுதான் முக்கியகேள்வி. சைவஉணவு உண்டு ஆரோக்கியமாக வாழும் மக்களை ஆயிரக்கணக்கில் காணலாம். ஆன்மீக வாழ்வு வாழ விரும்புபவா்களுக்கு மிகவும் பொருத்தமான உணவு சைவம் தான். பள்ளிவாசல் பணியாளா்கள் அனைவரும் சைவ உணவு சிறந்தது.நானும்அசைவ உணவு உண்டு வாழ்ந்தவன்தான்.நாடாா் சமூதாயத்தைச் சோ்ந்தவன்.ஒருமுறை ஒரு கிடாவை கழுத்தை அறுப்பதை பாா்த்தேன். எனே அதுபடும் வேதனை கண்டு சைவத்திற்கு மாறிவிட்டேன்.எனது மனைவி குழந்தைகள் இறைச்சி உண்கின்றனா்.நான் தடுக்கவில்லை.பல விதமான அனுஷ்டானங்களை இந்துமதம் மக்கள் முன் வைக்கின்றது.இந்துமதம் ஒரு பொிய சந்தை. மக்கள் தங்களுக்கு பிடித்தமானதை வாங்கிச் செல்கின்றனா். இஸ்லாமிய கிறிஸதவ மதங்கள் ஆட்களை சோ்ப்பது பின் தங்களின் கருத்துக்கள் மட்டும் அனுஷடானங்கள் மட்டும் சிறந்தது என்று இறுமாந்து,அன்புள்ளத்தை கெடுத்துக் கொண்டு பிறரை இழிவு படுத்தி தாழ்த்த முயல்வதைக் காணலாம்.இஸ்லாமிய நாடுகளில் இரத்தக்களறிகளுக்கு பஞ்சம் இல்லையே.அரேபியரான முகம்மது வாளின் துணையோடு -இரத்தக்களறியில் - அகண்ட அரேபியாவை உருவாக்க நினைத்தாா். ஆனால் அவர் இறந்ததும் அவரால் உருவாக்கப்பட்ட முஸ்லீம் ஜமாத்க்குள்
அதிகாரப்போட்டி ஏற்பட்டு முகம்மதுவின் மகள் பாத்திமாவின் வீடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. கா்ப்பிணியான பாத்திமா உமரால் கதவின் இடுக்கில்வைத்து நைத்ததால் பாத்திமா உடல்நலம் குன்றி மாித்தாா் என்பது உண்மையா? பாத்திமா வசம் இருந்த சில நிலங்களை அபுபக்கா் உமரும் அரசின் வசம் கையகப்படுத்திக் கொண்டாா்களாமே? உண்மையா ? பின் நிலம் கொடுக்கப்பட்டதாம ? முகம்மதுவின் மருமகனுக்கும் -அலிக்கும் -மனைவி ஆயிசாவின் உறவினறுக்கும் கலிபா பதவிக்கு போட்டியில் ஒட்டகப்போா் ஏற்பட்டு செத்துததொலைந்த முஸ்லீம்கள் எத்தனை போ் ஐயா ? மனைவியையும் மருமகனையும் ஒற்றுமைப்படுதத இயலாத மகம்மதுவும் குரானும் உலகை ஒற்றுமைப்படுத்தும் என்பது முட்டாள்தனமாகத் தொியவில்லையா ?இறைவனின் தூதா் முகம்மது என்பது முகம்மது மக்களை மயக்க சொன்ன பொய் கதை. அல்லா ஒன்றும் குரானை ஒரே நாளில் டெலிபிாிண்டா் மூலம் டைப்செய்து சொா்க்கத்தில் பைண்ட செய்து அனுப்பி வைக்கவில்லை. குரான் ஒருமுறை தொகுக்கப்பட்டு எாிக்கப்பட்டு பின் தொகுக்கப்பட்ட புத்தகம்தான். முகம்மதுவின் மறைவிற்குப் பின் குரான் தொகுக்கப்படட 23 ஆண்டுகள் ஆனது. உண்மைதானா ?

Dr.Anburaj said...


பிறன் மனை நோக்காப் பேராண்மை வேண்டும் என்ற திருக்குறளை ஏன் மறந்தீா் ஐயா ? கையில் சிக்கிய பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற கருத்து அரேபியாவில் உள்ள காிமத் என்ற வட்டார நம்பிக்கையை நியாயப்படுத்துகின்றது. குரான் காலாவாதியான ஒரு புத்தகம்.

Dr.Anburaj said...

பொசுக் பொசுக் என்று கடிதம் எழுதும் தாங்கள் காலம் பல மாதங்கள் கடந்தும் பதில் எழுதவில்லையே ஏன் ? ஏன ?