Followers

Wednesday, December 20, 2006

வேறு கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா?

'பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.-------------------------------------------------------------------------

'எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரோ?''கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரோ?''இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்'

அடடா! என்ன அருமையான சிந்தனை!(உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு கூட நீங்க எழுதுனது தானோ!)சரி. வைரமுத்து சார்!அதை இயற்கை என்று சொல்வது தவறுங்க.அது தான் நம்மை படைத்த இறைவன்.'இதை எண்ணி எண்ணி இறைவனை வியக்கிறேன்'என்று சிறிது மாற்றம் செய்து பாருங்கள். அழகாக பொருந்திப் போகும. ஏ.ஆர். ரஹ்மானும் மிகுந்த சந்தோஷமடைவார்.

posted by சுவனப்பிரியன் @ 3:38 AM

9 Comments:
At 6:07 AM, Thekkikattan said...
ப்ரியன், நீங்கள் விசயங்களை அறிவு சார்ந்து பகிர்ந்துகொள்வதில் ஆர்வமுடன் இருப்பதாக இருந்தால் இங்கு நிறைய விசயங்கள் பரிமாறிக்கொள்லாம். ஆனால், தீர்க்கமான ஒரு மனதுடன் வைக்கும் எவைக்கும் பதிலளிப்பது ஆழ்ந்து வடித்த மடலை எழுதி முடித்தவுடன் குப்பைக் கூடையில் கசக்கி போட்டுவிடுதற்க்கு சமம்தான் உங்களுக்கு அளிக்கும் பதில்களும் என தோன்றச் செய்கிறது.முதலில் பரிணாமம் ஒத்த கொள்கையில் மதத்தின் பால் சார்ந்த எண்ண ஒட்டதில் எண்ண குளர்பாடுகள் இருக்கிறது என்பதற்க்கு தீர்வு கண்டால். அயல் கிரகங்களில் ஜீவராசிகள் இருக்கின்றனவா...இந்த பிரபஞ்சத்தில் எத்தனை பால் வீதிகள் உள்ளன, அவற்றில் எத்தனை சூரியன்கள் இருக்கின்றன, அச் சூரியன்களை சுற்றி எத்தனை கிரகங்கள் உள்ளன, எந்த கோணத்தில், எவ்வளவு தட்ப வெப்ப சூழ்நிலையை கிரகித்துக் கொண்டு என்ற கேள்விகளுக்கு பதில்களை பெறுவதற்க்கு முன்பு.என்னை பொறுத்த வரையில், நம்மை போன்ற பூமிக் கிரகங்கள் அனேகம் இப்பிரபஞ்சத்தில் இருக்க வாய்ப்புண்டு என்பதே. நாம் மட்டும் ஒன்றும் அபூர்வம்மல்ல...இப்பிரபஞ்சத்தில் என்பதே...!

At 7:21 AM, சுவனப்பிரியன் said...
திரு தெக்கிட்டான்!மாற்றுக் கருத்துக்கள் எது இருந்தாலும் அது யார் சொன்னாலும் மதிப்பளிப்பவன் நான். அதை ஆராய்ந்து அதில் உள்ள உண்மைகளை எடுத்துக் கொள்பவன். முன்னோர்கள் சொன்னதை கண்ணை மூடிக் கொண்டு பின் பற்றாமல் நம் அறிவுக்கு எட்டியதைத் தான் நம்மால் எடத்துக் கொள்ள முடியும். அதைத் தான் நானும் செய்து வருகிறேன்.

At 3:42 AM, srinidhi said...
Anyway plans are afoot to establish human colonies in moon.sowhat we do then.Humans can live inmoon.Humans have lived in space stations which are not part of earth.Scientists and technologistsdo not go by Koran and that is whythe west is forging ahead in science while the arab world iskilling itself in sectarian violence.

At 7:50 AM, சுவனப்பிரியன் said...
நிலவுக்கு சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், அது நிரந்தரமல்லவே! பூமியிலிருந்து கொண்டு போன ஆக்சிஜன்,தண்ணீர்,உணவு முதலியவை தீர்ந்த பின் பூமியிலிருந்து தான் அவைகள் திரும்பவும் அனுப்பப் பட வேண்டும். எனவே குர்ஆன் சொல்வது போல் நிரந்தர தங்குமிடம் பூமியே!அடுத்து மனிதனை சிந்திக்கச் சொல்கிறது குர்ஆன். அதன்படி அய்ரோப்பியர்கள் சிந்தித்தார்கள். கஷ்டப் பட்டார்கள். அதன் பலனை அனுபவிக்கிறார்கள். முஸ்லிம்களிடம் குர்ஆன் இருந்தும் அதன் அருமை தெரியாமல், சிந்திக்காததனால் பின் தங்கி இருக்கிறார்கள். மேலும் அய்ரோப்பியர்கள் எந்த அளவு உலகுக்கு நன்மை செய்திருக்கிறார்களோ, ஒழுங்கான வழிகாட்டுதல்இல்லாததனால் அதே அளவு தீமைகனையும் நமக்கு வாரி வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

At 10:37 AM, Sivabalan said...
Mr.சுவனப்பிரியன்,I am an atheist.My opinion is, take whatever is good from " the Quran (குர்ஆன்), the Bible, the Bhagavat Gita" to lead a peaceful life. All things, which we see, are man made except the nature.

At 10:42 AM, vrtttp said...
It's possible to establish human colonies in moon and we don't need supply oxygen from earth because moon has ice so oxygen can be extracted. It is also possible to have earth like planets elsewhere in the universe. Also, if you assume that 1% of all the stars have planets and 1 % of those stars have earth-like planets and 1% of those planets have life forms or earth-like atmosphere. you would get thousands of solar systems (i read it in discover magazine). So i think it is possible to have find life or live in another planets. The biggest problem we face is that we dont have any unity. Every country on earth should come together to form a huge alliance. Otherwise it would be hard for us to go these different worlds

At 10:07 AM, சுவனப்பிரியன் said...
திரு விஆர்டிடிபி!விஞ்ஞானிகள் சிந்திக்கட்டும்! அதை இஸ்லாம் வரவேற்கிறது. எந்த ஒரு செலவும் இல்லாமல் தண்ணீரும் காற்றும் இன்ன பிற வசதிகளும் பூமியில் இருக்க, யார்தான் இத்தனை ஏற்பாடுகளை செய்து கொண்டு நிரந்தரமாக நிலவில் தங்கியிருக்க முடியும்? கோடீஸ்வரர்களுக்கு வேண்டுமானால் சாத்தியப் படலாம்.அதுவும் பரிசீலனையில் தான் இருக்கிறது.நடுத்தர வர்க்கமான நானும் நீங்களும் சென்று நிரந்தரமாக தங்க முடியுமா?

At 10:08 AM, சுவனப்பிரியன் said...
திரு சிவ பாலன்!உண்மைதான்! அவரவர் மதத்தில் உள்ள நல்லவைகளை எடுத்து மற்ற மத்தவர்களையும் அரவணைத்து சென்றால் ஒரு குழப்பமும் இல்லையே! இதை அரசியல் வாதிகளும், அனைத்து மத தீவிரவாதிகளும் உணர வேண்டும். உணர்வார்களா?

At 1:09 AM, நல்லடியார் said...
சுவனப்பிரியன் மீண்டும் ஒரு அருமையான பதிவு கொடுத்துள்ளீர்கள். மேலும் பின்னூட்டமிட்ட சிலர் உங்களின் வாதமாகிய //எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.// என்பதை புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். இதில்லுள்ள தர்க்க நியாயத்தை உணராமல் "பரிணாமம்" பற்றி திசை திருப்புவது ஏன் என்பது சம்பந்தப் பட்டவர்களுக்கே வெளிச்சம்.

//Scientists and technologists do not go by Koran// The commenter must agree that some scientist witnessed quran for their discoveries/inventions. Pls. Google for proof.

3 comments:

Jafar ali said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சுவனப்பிரியன்!

தங்களுடைய பதிவுகளில் நான் கவனித்த வகையில் 'ஐ' என்ற தமிழ் எழுத்தை தவிர்த்து வருகிறீர்கள். இந்த பதிவிலும் ஐரோப்பியர்கள் என்பதை அய்ரோப்பியர்கள் என்றே தட்டச்சு செய்திறிக்கிறீர்கள். தங்கள் தமிழாவின் எகலப்பை செயலியை உபயோகிப்பவராக இருந்தால் A+I-ஐ என்பதை இலகுவாக தட்டச்சு செய்யலாமே! தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

என்றும் அன்புடன்:
jafar (safamarva)

suvanappiriyan said...

Thanks for your advice Mr Jaffar.

மாசிலா said...

சுவனப்ரியன் எழுதியது //வைரமுத்து சார்!அதை இயற்கை என்று சொல்வது தவறுங்க.அது தான் நம்மை படைத்த இறைவன்.'இதை எண்ணி எண்ணி இறைவனை வியக்கிறேன்'என்று சிறிது மாற்றம் செய்து பாருங்கள். அழகாக பொருந்திப் போகும. ஏ.ஆர். ரஹ்மானும் மிகுந்த சந்தோஷமடைவார்.//

உலகம், நீங்கள், நான், மற்றவர்கள் அனைத்தும் இயற்கையே.ஆண்டவன், இறைவன் இவை அனைத்தும் மனித கண்டுபிடிப்புகளே. மனிதன் தன்னைத்தானே சிறுமை படுத்தி தன் அடிமைத்தனத்தை உணர்த்தவே இப்படி செய்தான். மற்ற மனிதர்களை அடிமை
படுத்துவதற்கு இதுவே அடிப்படை காரணம். உலகம், மனிதம் தோன்றி இவ்வளவு காலங்கள் ஆகியும் இதுநாள் வரையிலும் இந்தியாவிலும் உலகின் மற்றும் பல பகுதிகளில் மதம், கடவுள் போன்ற கற்பனைகளுக்கு அடிமை ஆகாமல் இன்னும் பல குலங்கள்
வாழ்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் நம்பி வாழ்வது இயற்கையைத்தான்.

நாம் இறைவனால் படைக்கப்படவில்லை. இயற்கையால் உருவாக்கப்பட்டிருக்கிறோம்.