Followers

Monday, December 04, 2006

வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் முறையா?

வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் முறையா?

//என்னை மட்டம் தட்ட ஒரு இறைவனடி சேர்ந்த முது பெரும் தமிழ் ஞானியை, மாபெரும் முருக பக்தரை தவறுதலாக மேற்கோள் காட்டியுள்ளீர்கள். மறைந்த அம்மாமனிதரை தூற்றுவதற்கு சமமாகும் செய்கை இது.//
-Neelagandan

கிருபானந்த வாரியாரை எந்த அளவு மதிக்கிறேன் என்பது என் உள்ளத்துக்குத் தெரியும். அவருடைய பல கதாகாலட்சேபங்களை படிக்கும் காலங்களில் நிறையவே கேட்டிருக்கிறேன். அவருடைய நகைச்சுவை மிகவும் பிரசித்திப் பெற்றது.

ஒருமுறை கிருபானந்த வாரியார் கதாகாலட்சேபத்தில் சைவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு பையனிடம் 'முருகனின் தந்தை யார?' என்று கேட்டார். பையன் திருவிளையாடல் என்ற சினிமா படத்தைப் பார்த்தவன். அதனால் சிவனாக வேடமிட்ட நம் நடிகர் திலகத்தை நினைவில் வைத்துக்கொண்டு 'சிவாஜி' என்று சொன்னான். கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
உடனே வாரியார் சுவாமிகள் சமயோஜிதமாக 'காந்தி என்று சொல்வதை விட மரியாதையாக காந்திஜி என்று வட நாட்டார் சொல்வர். அப்பழக்கத்தால்தான் இவன் 'சிவா' என்று சொன்னால் மரியாதையில்லாமல் போகும் என்று நினைத்து 'சிவாஜி' என்று சொன்னான்' என்று ஒரே போடாக போட்டார். இது போன்ற திறமைகள் எல்லாம் ஒரு சிலருக்குத்தான் வரும்.

//அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர். -கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.//
-Suvanappiriyan

"இந்த வாதில் தோற்றால் தோற்றவர் என்ன செய்வது?" என குலச்சிறையார் கேட்டார். கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள், "வாதில் நாங்கள் அழிவோமாயின் எம்மை இந்த மன்னவன் கழுவினில் ஏற்றட்டும்." என்று கூறினார்கள். ...நீதில் வழுவாத மன்னன் மந்திரியாரை நோக்கி "வாதில் தோற்ற சமணர்கள் முன்னம் ஞானசம்பந்தர் அடியார் குழாத்துடன் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ வைத்தார்கள். ஆதலின் இவர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவில் ஏற்றி அரசநீதியை நிலை நிறுத்துக" என்றான்."
-கிருபானந்த வாரியார்

இரண்டு பேரும் சொல்வது ஒரே கருத்தைத்தான். சமணர்கள் வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றவும் என்ற ஒப்பந்தத்தை தவிர்த்து முதல் செய்தி வருகிறது. இதில் கருத்துச் சிதைவு ஏதும் ஏற்படவில்லையே!

அடுத்து நான் இஸ்லாமியன் என்பதால் இஸ்லாத்தை உயர்த்திப் பேசுவேன். அரவிந்தன் பிராமணர் என்பதால் இந்து மதத்தை உயர்த்திப் பேசுவார். இது மனிதனின் இயற்கை. எனக்கு இஸ்லாத்தில் அதிக விபரம் இல்லாமல் வாதத்தில் நான் தோற்கலாம். இதே போன்ற நிலைமை அரவிந்தனுக்கும் ஏற்படலாம். இந்த ஒரு விவாதத்தை வைத்து இஸ்லாத்தையும் இந்து மதத்தையும் எப்படி எடை போட முடியும்? இதே அளவு கோலை சமணர்களுக்கும் சைவர்களுக்கும் வைத்துப்பாருங்கள்.

ஒரு வாதத்தில் சரியான விபரம் இல்லாமல் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் மனிதாபிமானமா? அவர்களே ஒத்துக் கொண்டிருந்தாலும் இதை செயல்படுத்திய மன்னன் நேர்மையாளன் என்று எப்படி சொல்ல முடியும்? அடுத்துஒரு இடத்தில் வாதம் செய்தால் குறைந்தபட்சம் ஐந்திலிருந்து பத்து பேர் வரை அமர்ந்து வாதம் செய்ய முடியும். வாதப்படி சமணர்கள் தோற்றால் தோற்ற சமணர்களை தண்டிப்பதை விடுத்து எட்டாயிரம் சமணர்களை ஒரே நேரத்தில் கழுவிலேற்றுவது எந்த வகை நியாயம்.

சில இடங்களில் யானைகளை விட்டு சமணர்களை மிதித்து கொன்ற வரலாறும் நாம் பார்க்கக் கிடைக்கிறது. அவர்களின் நிலங்களும்,வீடுகளும் அநியாயமாக பறிக்கப்பட்டு மாற்றார்க்கு கொடுக்கப் பட்டதும் நடந்துள்ளது. இவற்றை எல்லாம் எந்த வகையில் நியாயப்படுத்தப் போகிறீர்கள்.?

//சுவன பிரியன் ஒரு RSS கைகூலியாக இருக்கலாம். இஸ்லாமிய தோழர்கள் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.//
-சாமுவேல் ஞானதாசன்

//ஐயா, சுவனப்ரியனை நான் நன்கு அறிவேன். அவர் அக்மார்க் இஸ்லாமியர்.இஸ்லாமை முழு மூச்சுடன் நம்புபவர். அவர் மேல் இந்த மாதிரி அபாண்டங்கள் வேண்டாம்//
-கால்கரி சிவா

என் சார்பாக உண்மையை விளக்கியமைக்கு நன்றி கால்கரி சிவா!

பதிவைப் படிப்பவர்களுக்கு உண்மை நன்றாக தெரியும் என்பதால் வழக்கமான இந்த சாமுவேல் (இதுவே போலி பெயர்)பொய்களுக்கு பதில் சொல்ல எந்த அவசியமும் இல்லை.

//குமாரில பட்டர் எனும் இந்துமுனிவர் பவுத்தர்களிடம் தோற்று இதுபோன்று முன்பு நெருப்பில் அணுஅணுவாக தம்மை எரித்துக்கொண்ட சம்பவம் பற்றி ஆதிசங்கரர் வரலாறு கூறுகிறது. அக்காலத்தில் இது சர்வ சாதாரண நிகழ்வு. பாண்டிய மன்னனோ,சம்பந்தரோ இதை கட்டளை பிறப்பித்து செய்யவில்லை.//
-ஜோக் பார்ட்டி!

ஆக ஒரு மதத்தவரை மற்ற மதத்தவர் போட்டுத் தள்ளுவதும், கழுவிலேற்றுவதும் சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்.நன்றி!

இதற்கு 'இந்து ஜிஹாத்' என்று பெயர் வைத்துக் கொள்வோமா! :-)

//("எண்ணாயிரம்(என்ற ஊரை சேர்ந்த) சமணர்கள் கழுவேறினர்" என்பதை அரைகுரையாக புரிந்துகொண்டு "எட்டாயிரம் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டனர்" என பின்வந்த வரலாற்று ஆசிரியர்கள் (மார்க்சிஸ்ட் முட்டாள்கள்) வியாக்கியானம் செய்து வரலாற்றில் ஏற்றி அதை நாம் இன்று வரை நம்பி வந்திருக்கிறோம்.//
-ஜோக் பார்ட்டி!

இதற்கு கம்யூனிஸ்டுகள் தான்பதில் சொல்லவேண்டும். கிருபானந்த வாரியாருக்கும் கம்யூனிஸ்டுகள்தான் சொல்லிக் கொடுத்தார்களாமா?

உதயேந்திரப் பட்டயம்!

வைணவ சமயத்தைத் தழுவியிருந்த பல்லவ மன்னன் தம் முன்னோர் சமணருக்கு விட்டிருந்த நிலத்தைக் கவர்ந்து மறையவர்க்கு உரிமையாக்கினான்.
'இரண்டாம் நந்திவர்மன் தரும சாத்திர முறைப்படி நடவாத மக்களை அழித்து இந்த நிலத்தைக் கைப்பற்றி வரியிலியாக பிராமணர்க்கு அளித்தான்.'
-உதயேந்திரப் பட்டயம்.

'இந்தநிலத்திற்கு உரியவர் சமணர்: அவர்களை அழித்து இந்நிலத்தைப் பிறர்க்கு கொடுத்தது என்பது பல்லவ மன்னனின் வரலாற்றில் ஒரு களங்கத்தை உண்டு பண்ணி விட்டது. எனினும் இச்செயல் அக்கால நிலையை ஒட்டியதாகும்.' என்று உதயேந்திப்பட்டயம் குறித்து தாமஸ் போக்ஸ் எனும் அறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.
-Indian Antiquary, volume 8,Page 281
-மேற்கோள் மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு,சென்னை 1956, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'எனினும் இச்செயல் அக்கால நிலையை ஒட்டியதாகும்' என்ற வாசகத்திலிருந்து அதிகாரவர்க்கம் அனைத்தும் திட்டம் போட்டு ஒரு மிகப் பெரும் இனத்தையே அழித்திருக்கிறதுஎன்பது தெளிவாகிறது.. இது போன்ற செய்தி அந்தகால மக்களுக்கு சர்வ சாதாரணமாக தோன்றியிருக்கிறது. இன்று சமணர் என்று சொல்லிக் கொள்ள தமிழகத்தில் ஒருவரும் இல்லாதது சைவர்களின் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

//இம்மன்றில் ஏதோ சைவசமயப் பெரியோர் சூழ்ச்சி செய்து அப்பாவியான பண்டைச் சமண பௌத்தச் சமயவாதியரை அழித்தொழித்து விட்டதாகவும், 'அவர் கடவுள் தாழ்ந்தோன்; என்கடவுள் உயர்ந்தோன்' என்று மிஷனரிமார்பாணியில் தத்தம் கருத்தினைப் பரப்பிப் பின் பெருவாரியினர் விருப்பமின்றி அவரை மீண்டும் வலிய 'மதம்' மாற்றி விட்டதாகவும் போன்ற தொனியில் அவ்வப்போது சில மடல்களைக் காண்கிறேன்.//
-Jawa Kumar

மேலே உள்ள கொடுமைகளெல்லாம் நம் நாட்டில் நடக்கவில்லையாம். ஜாவா குமாரின் கூற்றுப்படி அனைத்து சமணரும், பௌத்தரும் தாங்களாகவே விரும்பி சைவர்களாக மாறினர் என்ற கூற்றை உண்மையாக்க முயல்கிறார். இந்தக் கூற்றுக்களைபிராமணர்களைத் தவிர வேறு யாரும் நம்பப் போவதில்லை என்பதை அவருக்கு யாராவது விளக்குங்களேன்.

//அன்று சைவர்களை சமணர்கள் விரட்டினார்கள் என்றாலும், சமணர்களை சைவர் கள் விரட்டினார்கள் என்றாலும் அது இந்துக்கள் பிரச்சனை.//
-ஜெஹோவா!

இதே கேள்விகளை முஸ்லிம்களும் உங்களைப் பார்த்து கேட்கலாங்கலாண்ணா!இஸ்லாத்துக்கு எதிராக ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் அதைப் பெரிதாக்கி மகிழ்வது உயர்ஜாதி இந்துக்கள்தானே! இதை மறுக்கமுடியுமா?இத்தனை அநியாயங்களை அரங்கேற்றிவிட்டு எதைக்கொண்டு இஸ்லாத்தை நீங்களெல்லாம் விமரிசிக்கிறீர்கள்?

20 comments:

suvanappiriyan said...

புவனேஸ்வர்: மேல் சாதி இந்துக்கள் தடை விதித்ததால், சொந்தமாக கோவிலை கட்டினர் தலித்துகள். அதில் பிராமண பூசாரியை அர்ச்சகராக நியமித்துள்ளனர். அக்கோயிலில் நுழைய இந்துக்கள் எல்லாரையும் அனுமதித்தும் வருகின்றனர்.

மற்ற மாநிலங்களை விட ஒரிசா மாநிலத்தில் தலித்துகளை மேல் சாதி இந்துக்கள், கோவில்களில் நுழைய விடாமல் தடுப்பது அதிகமாக உள்ளது. பல ஆண்டு வழக்கமாகவே, ஒரிசா மாநிலத்தில் மட்டும் எந்த மேல் சாதி இந்துக்கள் கோவில்களிலும், தலித் மக்கள் அனுமதிக்கப்பட்டதே இல்லை.

புவனேஸ்வரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேந்த்ரபாடா பகுதியில் உள்ள பிரபல கோவில் ஜகந்நாதர் கோவில். அங்கு தலித்துகள் "நாங்கள் நுழைந்தே தீருவோம்" என்று சபதம் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களை அனுமதிக்க இந்துக்கள் மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து தலித்துகள் சார்பில் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அதற்கு "நாங்கள் 18ம் நூற்றாண் டில் இருந்து இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். அதை தகர்க்கக் கூடாது" என்று இந்துக்கள் பதில் அளித்தனர். இந்நிலையில், கோவிலில் நுழைந்தே தீருவோம் என்று தயாராகிவிட்டனர் தலித் மக்கள். விரைவில் கோவிலில் நுழையத்தான் போகிறோம் என்று அவர்கள் அறிவித்ததால், கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே இது தொடர்பாக தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வந்ததால், மேல் சாதி இந்துக்களுக்கு பதிலடி தர, கேந்த்ரபாடா பகுதிக்கு வெளியே, சவுரிபெர்காம்பூர் என்ற பகுதியில் தலித்துகள் ஒன்று சேர்ந்த ஒரு கோவிலை கட்டினர். அந்த ஜகந்நாதர் கோவிலில், அர்ச்சகராக பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தினர். இப்போது அந்த கோவிலில் மேல் ஜாதி இந்துக்களையும் வழிபட அனுமதித்து வருகின்றனர் தலித்துகள். அந்த கோவிலில் தலித்துகள் அதிகம் வருவதில்லை என்பதும் அவர்கள் ஆதங்கம்.

டெய்ல்பீஸ்: இதற்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இந்துக்கள் கோயிலில் தங்களை அனுமதிக்கவில்லை எனில் தங்களுக்காக தனிக்கோயில் கட்டினால் முடிந்தது பிரச்சனை. இவ்வளவு இலகுவாக தீரவேண்டிய பிரச்சனையை திராவிட ராஸ்கல்களும், செத்துப்போன கம்யூனிஸவாதிகளும் ஊதிப்பெரிதாக்கி விட்டனர். இனி இந்து ஐக்கியம் ஓங்கும்?!

-Thanks Inaiya Nirubar

இணைய நிருபர் said...

மேற்கோளுக்கு நன்றி.

http://netkural.blogspot.com/2006/12/blog-post.html

வாசகன் said...

///இதற்கு 'இந்து ஜிஹாத்' என்று பெயர் வைத்துக் கொள்வோமா!:-)///

ஜிஹாத் என்ற வார்த்தையை வைத்து முஸ்லிம்களைத் தாக்கிட முற்படுகிற ஆதிக்க வெறியர்களின் சதிக்கு அறிந்தோ அறியாமலோ பலியாகி விட்டீர்களா என்ன?

'ஒருவன் தனது இச்சையுடன் போரிடுவதே மாபெரும் ஜிஹாத்' என்கிற முகம்மது நபியின் பொன்மொழியை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எனவே,ஜிஹாத் என்பதை அடிமன காழ்ப்புணர்ச்சி என்கிற இச்சையால் உந்தப்பட்டு செயல்படுகிற இந்துத்துவ சதியாளர்களுக்கு சம்பந்தப்படுத்தாதீர்கள்.

தீவிரவாதிகளை ஜிகாதிகள் என்று குறிப்பிட்டு ஜிஹாத் (அறப்போர்) என்கிற வார்த்தையை கெடுத்துவைத்துள்ளனர். அத்தகைய அராஜகர்களை நாம் இந்துத்துவ பஜனையாளர்கள் என்று அழைப்போமே!

ஜூ.வியில் ஜென்ராம் என்பவர் 'இணைந்து வளருமா இஸ்லாமிய சமூகம்' என்ற தலைப்பில் இந்திய இஸ்லாமிய சமூகம் குறித்த கவலைகளை ஒரு சகோதர மனப்பான்மையோடு பகிர்ந்துக்கொண்டிருந்தார். அதை (ராம்கி) அவரே தன் வலைப்பூவிலும் பதிப்பிக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாத 'நீல கண்டன்', " நீயெல்லாம் உண்ணாவிரதமிருந்து போய் சேர வேண்டியது தானே" என்று தன் ஆங்காரக் காழ்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக, இஸ்லாம் என்றாலே இவர்கள் எரிச்சல்படுவது நிதர்சனம். எனவே, இவர்களிடம் சரிக்கு சமமாக வாதிடுவதும், பொருட்படுத்துவதும் வீண்வேலை என்பதே என் எண்ணம். என்றாலும், மனமாற்றம் என்பது இறைவன் கையில் என்பதை நம்புகிறேன். உங்கள் நிதானமான பதிவுகளைத் தொடருங்கள். நன்றி

Unknown said...

Mr. tamilreber.
It means you are accepting all the attrocities mentioned on the topic. As you are nothing to say, you are going to other topic.

We believe punishment as per Islamic law will stop or atleast reduce the sin to re-occur. If you are thinking of doing that mistake think about the punishment aswell. Please stop comments other than the subject.

ஸயீத் said...

\\Killing by stoning permissible in Islam and is practised in mulsim
countries.\\

என்ன! இது புதுசா இருக்கே... ஒரு ஊரையே கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா?..

:)))))))))

அடுத்து பாருங்க வெடி குண்டு வைச்சுக் கொல்லனுமா?. -ண்னு ஒரு பின்னோட்டம் வரும்.

suvanappiriyan said...

தமிழ் ரிபர்!

//Killing by stoning permissible in Islam and is practised in mulsim
countries.//

கல்லால் எறிந்து கொல்வதையும், சமணர்களை கழுவிலேற்றியதையும் ஒன்றாக்க முனையாதீர்கள். இன்று இஸ்லாமிய நாடுகளில் கல்லால் எறிந்து கொல்வதும், கைகளை வெட்டுவதும் விபசாரம், கொலை, கொள்ளை,கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்காக சாட்சிகள் கொண்டு நிரூபிக்கப்பட்டால்தான்.

ஆனால் சமணர்களை ஒருமதத்தைப் பின்பற்றியதற்காக அனல்வாது புனல்வாது என்ற பெயரில் கழுவிலேற்றுவது எந்த வகை நியாயம்? ஒரு இடத்தில்மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் இதுபோன்ற கொடுமை பரவலாக நடந்தேறியுள்ளது.

//Today there is no animosity between Hinduism and
Jainism.//

ஜைன மதம் என்ற ஒரு மதம் இருந்தால்தானே பிரச்னை வருவதற்கு. அவர்கள் அனைவரையும்தான் வாதம் என்ற பெயரில் கழுவிலேற்றி பரலோகம் அனுப்பியாகி விட்டதே!

//But in case of muslims there is animosity against all other non-islamic faiths.//

இந்து மதக் கொள்கைகளினால் கவரப்பட்டு இந்த நாட்டு பூர்வகுடிகளை கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தக்கொடுமையை ஆதரிக்க பத்திரிக்கைகளும், கோர்ட்டுகளும், ஆள்வோரும் துணை போகின்றனர். மேலே இணைய நிருபர் கொடுத்திருக்கும் செய்தியையும் படித்துப் பாருங்கள்.

அதே சமயம் இஸ்லாம் உலக மக்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்களே என்று பிரகடனப்படுத்தி அந்த தாழ்த்தப்பட்டவன் இஸ்லாத்தை ஏற்றால் அவனைபள்ளியில் அனுமதித்து அவனை முதல் வரிசையிலும் நிற்க வைக்கிறது. ஆக தவறு எங்கு உற்பத்தி ஆகிறது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

//So please reform islam first and make it a humane faith.//

இதை இந்து மதத்தின் வர்ணாசிரமக் கொள்கையை இன்று வரை தூக்கிப்பிடித்துக் கொண்டு அதை நியாயப்படுத்திக் கொண்டும் இருப்பவர்களைப் பார்த்து நீங்கள் கெட்க வேண்டிய கேள்வி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

இணைய நிருபர்!

//மேற்கோளுக்கு நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஸயீத் said...

\\Today there is no animosity between Hinduism and
Jainism.\\

சரி ஜெயின மதத்தை விடுங்கள்.
இதை தாங்கும் மனமிருந்தால் படியுங்கள். தயவு செய்து இலகிய மனமுடயவர் இதைப் படிக்க வேண்டாம்.

இதற்க்காக மொத்த இந்து மதத்தவர்களையும் குறை சொல்வதற்கு நாங்கள் ஒன்னும் முட்டாள்களில்லை. ஒரு சில குழுக்களோ அல்லது இயக்கங்களோ மத்ததின் பெயரால் தவறு செய்தால் அதற்கு மொத்த சமுதாயமும் பொருப்பாகாது.

அனைத்து மத்திலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு.

suvanappiriyan said...

அபூ நஹிலா!

//ஜிஹாத் என்ற வார்த்தையை வைத்து முஸ்லிம்களைத் தாக்கிட முற்படுகிற ஆதிக்க வெறியர்களின் சதிக்கு அறிந்தோ அறியாமலோ பலியாகி விட்டீர்களா என்ன?//

முஸ்லிம்களின் பெயரில் நடக்கும் ஒன்றிரண்டு வன்முறைகளை வைத்து ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகள் என்றும் 'ஜிஹாதிகள்' என்றும் பிரச்சாரம் பண்ணப்படுவதை சுட்டிக்காட்டவே அவ்வாறு எழுதினேன். எனவே தான் கடைசியில் ஸ்மைலி அடையாளத்தையும் கொடுத்தேன்.

ஜிஹாத் என்ற அரபி வார்த்தை ஜஹாதா என்ற பதத்திலிருந்து வந்தது. ஜஹாதா என்றால் அரபியில் போராட்டம் என்ற பொருள் வரும். உதாரணத்திற்கு ஒரு மாணவன் பரீட்சையில் தேற வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடினால் அது கல்வியின் மீது அந்த மாணவன் தொடுக்கும் ஜிஹாத். அதே போல் தவறான எண்ணங்களிலிருந்து விடுபட அவன் தன்னுடைய மனத்தோடு நடத்தும் போராட்டமும் ஒரு வகை ஜிஹாதே!

முஸ்லிம்களிலேயே பலர் ஜிஹாத் என்றால் புனிதப் போர் என்று அர்த்தம் கொள்கிறார்கள். புனிதப் போர் என்ற வார்த்தைக்கு நேரடி அரபி பதம் "ஹரபுன் முகத்தஸா". இந்த வார்த்தை குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த இடத்திலும் பயன் படுத்தப் படவில்லை.

"முகம்மதே! அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! இறைவனையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்: அறிந்தவன்:" - குர்ஆன் 8 : 54

எதிரிகள் சமாதானத்தை விரும்பினால் போரை நிறுத்தி சமாதானத்தின் பக்கம் வர வேண்டும். தேவையற்ற உயிர்ப் பலிகள் தடுக்கப் பட வேண்டும் என்று இந்த வசனத்தில் இறைவன்கட்டளையிடுகிறான்.

'நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்!இல்லையேல் நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள்.' -குர்ஆன் 49 :6

இந்த வசனம் மூலம் விளங்குவது நம் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றினாலும் உடன் ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்று விளங்குகிறோம். முதலில் செய்தி உண்மைதானா அல்லது வதந்தியா என்று முதலில் ஆராய வேண்டும். அரசு மூலம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும். இதிலெல்லாம் எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலை வரும் போது மட்டும் தான் ஆயுதத்தை நாம் எடுக்கலாம்.

'அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை தக்க காரணமினறி செய்யாதீர்கள்.' -குர்ஆன் 17 :33

தக்க காரணமின்றி அநியாயமாக அப்பாவிகளைக் கொல்வதை மேற்கண்ட வசனம் தடுக்கிறது.

suvanappiriyan said...

சுலதான்!

//It means you are accepting all the attrocities mentioned on the topic. As you are nothing to say, you are going to other topic.//

வழக்கமான திசை திருப்பல்தானே இது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!


ஸயீத்!

//அடுத்து பாருங்க வெடி குண்டு வைச்சுக் கொல்லனுமா?. -ண்னு ஒரு பின்னோட்டம் வரும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

dondu(#11168674346665545885) said...

வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் முறையா என்று கேட்கும் சுவனப்பிரியரே, இசுலாமிலிருந்து மதம் மாறினால் கொலைதானா என்ற கேள்விக்கும் பதில் சொல்லுங்களேன். உங்களவர் ஒருத்தர் கூறியிருக்கிறார், அதுவும் இக்காலத்தில்.

பார்க்க: http://ezhila.blogspot.com/2006/11/blog-post_12.html

அப்பதிவில் பதில் சொல்ல ஒரு இசுலாமியரும் வரவில்லையே.

மேலும் கணவன் அழைக்கும்போது மறுக்கும் பெண் தேவதைகளால் சபிக்கப்படுவாள் என்று எழுதியிருந்தீர்கள். அதே போல மனைவி அழைக்கும்போது மறுக்கும் கணவன் சபிக்கப்படுவானா, அப்படி ஏதாவது உங்கள் குரானில் கூறியிருக்கிறதா என்று கேட்டிருந்தேன். இருக்கிறது, அது பற்றி தனிப்பதிவு போடுவதாகக் கூறினீர்கள்.

நீங்கள் நல்லவர், சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவர், கண்டிப்பாகப் போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதன் சுட்டியை தர இயலுமா?

இப்பின்னூட்டத்தின் நகலை மேலே சுட்டிய எழிலின் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://ezhila.blogspot.com/2006/11/blog-post_12.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

டோண்டு சார்!

//இசுலாமிலிருந்து மதம் மாறினால் கொலைதானா என்ற கேள்விக்கும் பதில் சொல்லுங்களேன்.//

'உங்களுக்கு முகமது நபியிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.' - குர்ஆன் 33 :21

எந்த ஒரு இஸ்லாமிய கருத்துக்கும் குர்ஆனோ, முகமது நபியின் வழிகாட்டுதலோ இருக்க வேண்டும். யாரோ சொல்வதெல்லாம் மார்க்கம் ஆகாது. 'இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை என்று குர்ஆனில் இறைவனே கூறியிருப்பதால் இஸ்லாத்தை விட்டு போனவர்களைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. தஸ்லிமா நச்ரீன் இன்றும் இந்தியாவில் சுதந்திரமாகத்தானே உலவி வருகிறார்.

//மேலும் கணவன் அழைக்கும்போது மறுக்கும் பெண் தேவதைகளால் சபிக்கப்படுவாள் என்று எழுதியிருந்தீர்கள். அதே போல மனைவி அழைக்கும்போது மறுக்கும் கணவன் சபிக்கப்படுவானா, அப்படி ஏதாவது உங்கள் குரானில் கூறியிருக்கிறதா என்று கேட்டிருந்தேன். இருக்கிறது, அது பற்றி தனிப்பதிவு போடுவதாகக் கூறினீர்கள்.

நீங்கள் நல்லவர், சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவர், கண்டிப்பாகப் போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதன் சுட்டியை தர இயலுமா?//

நான் இதுபோல் எங்கும் எழுதவும் இல்லை. நீங்கள் என்னிடம் கேட்கவும் இல்லை. ஞாபக மறதியாக வேறு யாரையோ நினைத்துக் கொண்டு கேட்கிறீர்கள்என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் வாக்கியம் குர்ஆனில் இல்லை. முகமது நபியின் ஹதீதுகளில் தான் காணக்கிடைக்கிறது. இந்த வாக்கியத்தினால் பெண்ணுக்கு என்ன இழிவுவந்து விட்டதாக நினைக்கிறீர்கள்? எந்த பெண்ணும் இது போல் வெளிப்படையாக கணவனிடமும் கூறுவதற்கு தயங்கவே செய்வார்கள். இயற்கையாகவே பெண்ணின் மேல் ஓர் ஈர்ப்பு சக்தியை ஆண்களுக்கு இறைவன் கொடுத்திருக்கிறான்.இந்த பலகீனத்தைப்பயன் படுத்தி அவனை தவறான வழிகளுக்கு செல்ல விடாமல் தடுக்கும் கடமை பெண்களுக்கு உள்ளது என்பதைத்தான் முகமது நபி இதில் சூசகமாக சொல்கிறார். குர்ஆனில்பல இடங்களில் ஆணும் பெண்ணும் சமம் என்றே பல வசனங்கள் வருகிறது.

என் தகப்பனார் வயதை ஒத்திருக்கும் தாங்கள் என்னை நல்லவர் என்று நற்சான்றிதழ் கொடுத்ததற்கு நன்றிகள்.

உங்கள்வாழ்த்துப்பலிக்கட்டும்.

வாசகன் said...

Mr.Dondu,
Br.Abumuhai has already answered your question.

Pls visit the following:
http://abumuhai.blogspot.com/2006/07/blog-post.html

U can raise your further questions over there, if any!

வாசகன் said...

Dear Mr. Suvanappiriyan,
With your permission, I pass this message to Mr.Syeed.

Mr.Syeed, I appreciate your comments here and there and suggest you to keep in your blog.
I visited your blog but can not comment over there.
Keep up active writing.

ஸயீத் said...

\\இசுலாமிலிருந்து மதம் மாறினால் கொலைதானா என்ற கேள்விக்கும் பதில் சொல்லுங்களேன். உங்களவர் ஒருத்தர் கூறியிருக்கிறார், அதுவும் இக்காலத்தில்.\\

டோண்டு ஐயா அவர்களே!

ஜாகிர் நாயக் பற்றி ஏற்கனவே சுவனப்பிரியன் அவர்கள் அவரது கருத்தை கூறிவிட்டார்.

dondu(#11168674346665545885) said...

"நான் இதுபோல் எங்கும் எழுதவும் இல்லை. நீங்கள் என்னிடம் கேட்கவும் இல்லை. ஞாபக மறதியாக வேறு யாரையோ நினைத்துக் கொண்டு கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்."
நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே சுவனப்பிரியன் அவர்களே. இன்னொரு பதிவருடன் உங்களை சேர்த்துக் கொண்டு குழம்பி விட்டேன். மன்னிக்கவும்.

பை தி வே அந்தப் பதிவரும் நான் கேட்ட கேள்விக்கு தனது அடுத்த பதிவிலேயே பதிலளித்து விட்டார் என்பதையும் இங்கே தெரிவித்து அவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

"ஜாகிர் நாயக் பற்றி ஏற்கனவே சுவனப்பிரியன் அவர்கள் அவரது கருத்தை கூறிவிட்டார்."
சரியாகப் பாருங்கள் சயீத் அவர்களே. சுவனப்பிரியன் அவர்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி எழுதியது இந்த விஷயம் சம்பந்தமாக இல்லை. அது பற்றி இதே பதிவின் பின்னூட்டத்தில் சுவனப்பிரியன் அவர்கள் கூறுகிறார்.: "எந்த ஒரு இஸ்லாமிய கருத்துக்கும் குர்ஆனோ, முகமது நபியின் வழிகாட்டுதலோ இருக்க வேண்டும். யாரோ சொல்வதெல்லாம் மார்க்கம் ஆகாது."

அதையே வெளிப்படையாகக் கூறி ஜாகிர் நாயக்கை கண்டித்திருக்க வேண்டாமா என்பதுதான் எனது கேள்வி. ஏனெனில் ஜாகிர் நாயக் மற்ற வகைகளில் ஒரு விஷயம் தெரிந்த இசுலாமிய அறிஞராகப் பார்க்கப்படுகிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கூறப்போனால் எழில் அவ்ர்கள் இப்பதிவை போட்டிருப்பதை விட சுவனப்பிரியனே போட்டிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

நண்பர் சுவனப்பிரியன் இந்த டோண்டு ராகவனை தவறாக எண்ண மாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

Dear Friends!

Now I ma in chennai.

அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்த வேலை காரணமாக உடனுக்குடன் பதில் எழுத முடியவில்லை. இரண்டொரு நாளில் திரும்பவும் வருகிறேன்.

சுவனப்பிரியன்.

ஸயீத் said...

This message is for Mr. Thozan with your kind permission Mr. Suvanappiriyan.

Thank you very much for your comment Mr. Thozan.

The link which has given by me is related to Mr. tamilreber comment, this is the only reason I have linked to my comment.

I agree your suggestion but I don't like to post in my blog as I don't want to hurt people heart and am not a full time onliner.

Thanks for your suggestion.

C.Sugumar said...

சுவனப்பிரியன் ஒன்றை சரியாகப் புரந்து கொள்ள வேண்டும்.முகம்மதுவின் மனைவி ஆயிசாவுக்கும் முகம்மதுவின் மருமகன் அலியாருக்கும் கலிபா பதவிக்கு சண்டை.ஒட்டகப்போர் நடந்தது.5000 -10000 பேர்கள் -முஸ்லீம்கள் முஸ்லீம்களுக்குள் சண்டை போட்டு செத்தார்கள். இதற்கு யார் காரணம் ?
மன்னன் தவறாக ஆணையிட்டு 8000 சமணர்கள் கொல்லப்பட்டனர் என்றால் தவறு மன்னனுடையதுதானே.திருக்குறள் திருமந்திரம் தாயுமானவர் பாடல்களோ கொலை பற்றி பேசவில்லை. காபீர்களை கொலை செய்.முகம்மதுவை இறைதூதராக ஏற்காத மக்களை காபீர் என்று இழிவு படுத்தி அவர்கள் கொல் என்கிறது குரான் என்ற அரேபிய புத்தகம். தவறு குரானில் உள்ளது. தவறான கருத்துக்களை கொண்டு மனு நூலை நாங்கள் தீயிட்டு கொளுத்தி விட்டோம்.ஆனால் தவறாக கருத்துக்களைக் கொண்டு குரானை கட்டி போற்றி புளுகுகின்றீர்கள்.தவறு அங்குள்ளது.

C.Sugumar said...

குரான் 2 ”178 கொலை செய்து உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது.
பிற மக்கள் மீது போர் செய்யுங்கள் என்று அரேபிய காடையர்களின் கூச்சலை குரானில் கேட்கலாம்.