Followers

Monday, December 11, 2006

குறட்டை பிரச்னையும் அதை தவிர்க்க சில வழிமுறைகளும்

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கின்றார் என்றால் 20 வருடங்கள் தூக்கத்தில் கழிகிறது. இந்த தூக்கத்திற்காகவே இரவினை உண்டாக்கியதாக அல்லாஹ் தன் திருமறையில் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான்:

இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும், பகலையும் உண்டாக்கினான்; (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்-குர்ஆன் 28: 73)

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 78: 9)

மேற்கூறிய அல்-குர்ஆனிய வசனங்களில் தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கியிருக்கிறான் அல்லாஹ். ஆனால் அந்த தூக்கத்தில் மனிதர்கள் தன்னை அறியாமலேயே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான் குறட்டை. குறட்டை பிரச்சினையால் இரவு, பகல் என்று பாராமல் எந்த நேரத்தில் தூங்கினாலும் பக்கத்தில் படுத்திருப்பவர்(கள்) பாடு படுதிண்டாட்டம்தான். ஆக, குறட்டை பிரச்னைப்பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.

பொதுவாகக் குறட்டை வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. இது தவறு, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் குறட்டை வரும். அதாவது, சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தைத்தான் குறட்டை என்கிறோம்.குரல்வளை சுருங்கும் போது வெளியேறும் மூச்சுக் காற்றின் இயல்பான அளவு குறைந்த சத்தத்தை உண்டாக்குகிறது. தொண்டையின் சுவர்களில் இருக்கும் அண்ணங்களிலிருந்தும் சப்தம் உற்பத்தியாகும். குழந்தைகளிடமும் குறட்டைப் பிரச்னை உண்டு, இதற்கு முக்கியக் காரணம் அடிநாய்டுகள் தான். குழந்தைகளது தொண்டையின் மேல் பகுதியில் அடிநாய்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். இதனால் குறட்டை வரும். இரண்டு டான்சில்களும் சந்திக்கும் இடத்திலிருந்தும் குறட்டைச் சப்தம் வர வாய்ப்பு உண்டு.அதிக உடல் எடை குறட்டைக்கு முக்கியக் காரணம், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துவிடும். முறையான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் இந்த குறட்டைப் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு.

குறட்டையில் மூன்று வகை உண்டு. முதலாவது மூளையின் மத்தியப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உண்டாவது, இரண்டாவது அப்ஸ்ட்ரக்டிவ் டைப், இது கொஞ்சம் கடுமையானது. இந்த வகையில் இயல்பான மூச்சிவிடுவதில் சிரமம் ஏற்படும், மூன்றாவது வகை மிகிஸ்ட் டைப், இது முதலிரண்டு வகையின் கூட்டணி Positive airway pressure காரணமாகவும் குறட்டை வரும்.பாலிஸோம்னோகிராபி என்ற டெஸ்ட்டுகள் மூலம் குறட்டை மூச்சுக் குழாயில் காற்று உட்புகும் தன்மை கால்களின் இயக்கம் அல்லது அசைவு உடலின் இயங்கு நிலை, நாடித்துடிப்பு, ஆக்ஸிஜன் சமச்சீரான நிலை உள்ளிட்டவற்றை கண்காணித்து தெரிந்துக் கொள்ள முடியும்.முன்பெல்லாம் குறட்டைக்குச் சிகிச்சை கிடையாது, ஆனால் இப்போது நிறைய யுருலோ டயாலிட்டோபேரிங்கோ பிளாஸ்டி இது ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரியோ என்று எண்ணி விடாதீர்கள். தொண்டையில் செய்யப்படும் ஆபரேஷன்தான் இது. தவிர ரேடியோ ஃப்ரிக்குவின்சி முறை (Radio Frequency Method) எனப்படும் நவீன சிகிச்சையும் வந்திருக்கிறது. இம்முறைகளின் மூலம் குறட்டையை பெருமளவு கட்டுப்படுத்திவிட முடியும். இவை இரண்டுமே ஆபரேஷன் செய்து குறட்டையை குறைக்கும் முயற்சிதான். நல்ல தேர்ந்த டாக்டரிடம் மட்டுமே இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு பாதிப்புகள் உண்டாகும் ஆபத்து உண்டு.

மேலும் குறட்டையை தவிர்க்க உடல் பருமனாகாமல் தவிர்த்து விடுவது அவசியம். அதுபோல் நாள்பட்ட அலர்ஜி இருப்பவர்கள் உடனடியாகச் சிகிச்சை எடுப்பது நல்லது. கழுத்து தொண்டையின் மேல் பகுதியில் கொழுப்புச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறையான மூச்சுப் பயிற்சி எடுப்பதாலும் குறட்டையை தவிர்க்க முடியும். அது மட்டுமில்லாமல் மது அருந்தும் பழக்கம் இருக்கவே கூடாது, போதை மாத்திரைகள் மற்றும் மயக்கம் தரும் மருந்துக்கள் உட்கொள்ளவே கூடாது.

Thanks to Abu Salma B.E-M.B.A

Anbudan
Suvanappiriyan

4 comments:

அஞ்சாநெஞ்சன் said...

என்ன சுவனப்பிரியன்! பி.இ., எம்.பி.ஏ. படித்த அபு சல்மா-வை ரெஃபெரன்ஸ் போட்டிருக்கீங்க! ஏதாவது நல்ல டாக்டர் எழுதின ஆர்டிகள் இல்லையா? மேட்டரை நம்பலாம் தானே?

suvanappiriyan said...

Anja Nenjan!

மேட்டரை நம்பலாம் !

Thanks for your visit.

ஸயீத் said...

நல்ல, தேவையான பதிவு அதிலும் ஹாஸ்டலில் தங்கியிருப்போர், பேச்சலராக தங்கியிருப்போர் இந்தப் பிரச்சினையினால் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள்.

ஒரே ரூமில் ஒன்றுக்கும் அதிகமான குறட்டைவிடுவோர் இருந்தால் சங்குதான். நடு இரவில் எழுந்தால் ஏதோ யுத்தக்களத்தில் இருக்கும் உணர்வை கொடுத்து விடுவார்கள்.

குறட்டை விடுவோர் மன்னித்துக் கொள்ளுங்கள்.

:)))))))

suvanappiriyan said...

Thanks for your comments Mr Saeed