உலகின் பெரு வெடிப்புக் கொள்கை!
ஜெனிவா: உலகின் மிகப்பெரிய அணுபிளவு சோதனை இன்று ஜெனிவாவில் துவங்கி உள்ளது. செயற்கை பிரளயத்தை ஏற்படச் செய்து அதன் மூலம் பூமி மற்றும் உயிர்கள் உருவானதை நிரூபிக்கும் சோதனையில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய இயற்பியல் அணுபிளவு சோதனையாக கருதப்படுகிறது. இதில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 300 அடி ஆழத்திலும், 27 கிமீ தொலைவில் நீள்வட்டப் பாதையிலும் 2 புரோட்டான்களை இயக்கி, அவற்றை வெடிக்கச் செய்து அதன் மூலம் உலகம் உருவானதை அறியும் சோதனையில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீள்வட்டப்பாதையில் சுமார் ஆயிரம் காந்தப்புல சிலிண்டர்கள் இணைக்கப்பட்ட முனைகளைக் கொண்ட வெவ்வேறு மின் ஆற்றல்களைக் கொண்ட இரு புரோட்டான் அணுக்களை இணைய செய்வதன் மூலம் இந்த செயற்கை பிரளயம் உருவாக்கப்பட்டுள்ளது.ஒளி வேகத்தைக் கொண்டு சுமார் 11 ஆயிரம் சுழல் கம்பிகள் ஒவ்வொரு விநாடியின் போதும் சிதைவடைய செய்யப்படுகிறது. சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இயங்கி வரும் இந்த ஆய்வகத்தில் உலக நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பணியாற்றி வந்தனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் 30 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. உலகின் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சோதனையின் மூலம் உலகம் தோன்றியதன் ரகசியங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அறிவியல் ஆர்வளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த செயற்கை பிரளயத்தினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என உலக சுற்றுப்புற ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனால் பாதிப்பு ஏதும் நிகழாது என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். கதிரியக்க பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் உலகம் முழுவதும் இந்த சோதனைக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
-பத்திரிக்கைச் செய்தி
இந்த அணுப்பிளவு சோதனை வெற்றிகரமாக முடிந்தால் உலகம் தோன்றியது எவ்வாறு என்ற மிகப் பெரிய கேள்விக்கு விடை கிடைக்கும். நாலாயிரம் கோடியை இதற்காக செலவிட்டிருக்கிறார்கள். பல நாட்டு விஞ்ஞானிகளின் அயராத உழைப்பு என்ன முடிவை தருகிறது என்று பார்ப்போம்.
இந்த அணுபிளவு சோதனையை குர்ஆன் எவ்வாறு அணுகுகிறது என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா!
'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கைக் கொள்ள வேண்டாமா?'
-குர்ஆன் 21:30
'பூமியின் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்கு சரியான விடை இதுவே!'
'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்'
-குர்ஆன் 41:10,11
இந்த குர்ஆனிய வசனங்கள் மேலே நாம் படித்த பத்திரிக்கை செய்தியின் பல கேள்விகளுக்கு விடை தருகிறது. இது வரை விஞ்ஞானிகள் சொல்லி வந்த செய்திகளை உண்மைப் படுத்துகிறது.
இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும் உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன. இந்த இரண்டு அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். அதைத்தான் மலைகள் செய்கின்றன. பூமி உருவாகி பிறகுதான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வானம் பூமி அனைத்தும் ஒன்றாக இணைந்து பிரித்து எடுக்கப்பட்டதுதான் இந்த உலகம் என்ற விஞ்ஞானிகளின் கூற்றையும் மேற்கண்ட வசனம் மெய்ப்பிக்கிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகுதான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் முடிவை மெய்ப்பிக்கிறது மேலே நான் எடுத்துக்காட்டிய வசனங்கள்.
இது அல்லாமல் இன்னும் பல உண்மைகளும் தற்போதய ஆராய்ச்சியால் உலகம் காண இருக்கிறது. நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.
11 comments:
சுவாரசியமான தேடல். ஞானிகள் - விஞ்ஞானிகள்! இவ்விருவருக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. முன்னவர் பதில்களால் நிறைந்தவர். பின்னவர் கேள்விகளால் நிறைந்தவர்.
இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்து ஒருவரை ஒருவர் ஒப்புக்கொள்ளும் காலம் வரும் என்று நான் நம்புகிறேன்.
அற்புதமான பதிவு.
சரியான ஒப்பிடல்.
மிக நன்றிகள் சுவனப்பிரியன்.
செல்வகுமார்!
//சுவாரசியமான தேடல். ஞானிகள் - விஞ்ஞானிகள்! இவ்விருவருக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. முன்னவர் பதில்களால் நிறைந்தவர். பின்னவர் கேள்விகளால் நிறைந்தவர்.
இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்து ஒருவரை ஒருவர் ஒப்புக்கொள்ளும் காலம் வரும் என்று நான் நம்புகிறேன்.//
அழகாக சொல்லியிருக்கிறீர்கள். விஞ்ஞான வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க இறைவனைப் பற்றிய தேடலும் மனிதர்களுக்குள் அதிகரித்த வண்ணமே உள்ளன. உலகில் நாம் காணும் அனைத்து அதிசயங்களும் எந்த சக்தியும் இல்லாமல் தானாகவே உண்டாக்கப் பட்டது என்ற வாதமே அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் எதிரானதல்லவா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தகவலுக்கு நன்றி சுவனப்பிரியன்
ஆனால் பின்வரும் வசனம் நேர்மாறாக உள்ளதே?
'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது' - குர்ஆன் - 17 :37
இது சம்பந்தமாக குருவிகள் இணையதளத்தில் வந்த செய்தியையும் மேலதிக விபரமாகத் தருகிறேன்.
ஸ்விட்சர்லாந்து பிரான்ஸ் எல்லைப்புறத்தின் அடியில், அணு உடைக்கும் கருவி ஒன்றைச்சுற்றி இரு திசைகளிலும், அணுக் கருத்துகள்களைக் கொண்ட கதிர்க்கற்றைகளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவியிருக்கிறார்கள்.
பிரபஞ்சம் உருவான விதம் குறித்து மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் முயற்சி தொடங்குவதைக் குறிக்கும் ஒன்றாக இந்த பரிசோதனை அமைகிறது.
இந்த கற்றைகள் சில நேரம் சுழற்றிவிடப்பட்டு பின்னர் மோத வைக்கப்படும்போது, சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும்.
இதன் மூலம், அணுக் கருத்துகள்கள் உருவாகும் என்றும், அதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் (பௌதீகவியலாளர்கள்) நம்புகிறார்கள்.
இந்த அணுத்துகள்களின் மோதல்கள் சூரியன் உட்பட அனைத்தையும், அனைத்து சக்திகளையும் அகத்துறிஞ்சிக்கொள்ளும் வல்லமை கொண்ட ஒரு கரும் சூனிய வலயத்தை உருவாக்கக்கூடும் என்றும் அதனால் உலகம் அழியக்கூடும் என்றும் சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.
தமிழில் தகவல் பிபிசி/தமிழ்.
இரண்டு புரோத்தன் கற்றைகளும் எதிர் எதிர் தசைகளில் இருந்து நேர்த்தியாக 27 கிலோமீற்றர்கள் பருதி கொண்ட LHC வழி செலுத்துவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு கற்றைகளும் இன்னும் மோதலுக்கு உட்படுத்தப்படவில்லை.
முதலாவது புரோத்தன் கற்றை வலஞ்சுழியாக
0930 BST க்கும் இரண்டாவது புரோத்தன் கற்றை இடஞ்சுழியாக 1400 BST க்கும் தனித்தனியே இயக்கப்பட்டுள்ளன்.
இரண்டு கற்றைகளையும் எப்போது மோதச் செய்வார்கள் என்று CERN இன்னும் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. எனினும் குறைந்த சக்தி மொத்துகைகள் முதலில் அனுமதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7604293.stm
குரங்கு!
//அற்புதமான பதிவு.
சரியான ஒப்பிடல்.
மிக நன்றிகள் சுவனப்பிரியன்.//
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அதுசரி! வலைப் பூவிற்கு தமிழில் லட்சக்கணக்கான பெயர்கள் கொட்டிக் கிடக்க குரங்கு என்ற இந்த பெயரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நண்பர் அனானி!
//தகவலுக்கு நன்றி சுவனப்பிரியன்
ஆனால் பின்வரும் வசனம் நேர்மாறாக உள்ளதே?
'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது' - குர்ஆன் - 17 :37//
இந்த வசனத்தில் நேர்மாறாக என்ன செய்தியை பார்த்தீர்கள்?
உலகின் மிக உயரமான மலை இமயமலையாகும். இதன் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டர். பூமியை துளைத்து மனிதன் சென்றிருக்கும் தூரம் வெறும் 3 கிலோ மீட்டர்தான். ஆப்ரிக்காவில் ஒரு தங்கச் சுரங்கத்தில் மனிதன் சென்றிருக்கும் தூரம் 3 கிலோ மீட்டரே! இதுவே மனிதன் சென்ற அதிகபட்ச தூரம். இதற்கும் கீழே மனிதன் சென்றால் பூமியின் வெப்பத்தை மனிதனால் தாங்க முடியாது. எரிமலையிலிருந்து உருகி வரும் லார்வாக்களை நாம் தினமும் செய்திகளில் பார்க்கிறோமே! எனவே இனி வரும் காலங்களிலும் மனிதனால் செல்ல முடியாது என்பதே அறிவியல் நமக்கு தரும் பாடம். இதைத்தான் குர்ஆனும் சொல்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
இந்த சோதனை சம்பந்தமாக நண்பர் அனுப்பிய மெயிலை கீழே தருகிறேன்.
By ALEXANDER G. HIGGINS, Associated Press Writer 2 minutes ago
GENEVA - The world's largest particle collider successfully completed its first major test by firing a beam of protons all the way around a 17-mile (27-kilometer) tunnel Wednesday in what scientists hope is the next great step to understanding the makeup of the universe.
After a series of trial runs, two white dots flashed on a computer screen indicating that the protons had traveled the full length of the US$3.8 billion Large Hadron Collider.
There it is," project leader Lyn Evans said when the beam completed its lap.
The startup was eagerly awaited by 9,000 physicists around the world who now have much greater power than ever before to smash the components of atoms together in attempts to see how they are made.
"Well done everybody," said Robert Aymar, director-general of the European Organization for Nuclear Research, said after the protons were fired into the accelerator below the Swiss-French border at 9:32 a.m. (0732 GMT).
The organization, known by its French acronym CERN, fired the protons — a type of subatomic particle — around the tunnel in stages, several kilometers (miles) at a time.
Now that the beam has been successfully tested in clockwise direction, CERN plans to send it counterclockwise. Eventually the two beams will be fired in opposite directions with the aim of smashing together protons to see how they are made.
The startup — eagerly awaited by 9,000 physicists around the world who will conduct experiments here — comes over the objections of some skeptics who fear the collisions of protons could eventually imperil the earth.
The skeptics theorized that a byproduct of the collisions could be micro black holes, subatomic versions of collapsed stars whose gravity is so strong they can suck in planets and other stars.
"It's nonsense," said James Gillies, chief spokesman for CERN, before Wednesday's start.
CERN is backed by leading scientists like Britain's Stephen Hawking in dismissing the fears and declaring the experiments to be absolutely safe.
Gillies told the AP that the most dangerous thing that could happen would be if a beam at full power were to go out of control, and that would only damage the accelerator itself and burrow into the rock around the tunnel..
And full power is probably a year away.
"On Wednesday we start small," said Gillies. "A really good result would be to have the other beam going around, too, because once you've got a beam around once in both directions you know that there is no show-stopper."
The LHC, as the collider is known, will take scientists to within a split second of a laboratory recreation of the big bang, which they theorize was the massive explosion that created the universe.
The project organized by the 20 European member nations of CERN has attracted researchers from 80 nations. Some 1,200 are from the United States, an observer country which contributed $531 million. Japan, another observer, also is a major contributor.
The collider is designed to push the proton beam close to the speed of light, whizzing 11,000 times a second around the tunnel.
Smaller colliders have been used for decades to study the makeup of the atom. Less than 100 years ago scientists thought protons and neutrons were the smallest components of an atom's nucleus, but in stages since then experiments have shown they were made of still smaller quarks and gluons and that there were other forces and particles.
The CERN experiments could reveal more about "dark matter," antimatter and possibly hidden dimensions of space and time. It could also find evidence of the hypothetical particle — the Higgs boson — believed to give mass to all other particles, and thus to matter that makes up the universe.
Some scientists have been waiting for 20 years to use the LHC.
___
On the Net:
CERN: http://www.cern.ch
The U.S. at the LHC: http://www.uslhc.us/
Large Hadron Rap http://www.youtube.com/watch?vf6aU-wFSqt0
நண்பரின் மெயிலுக்கு மற்றொரு நண்பர் அளித்த பதில்.
Brothers and sisters please understand that these scientist are Eithiest and they don’t believe in God
They are spending Billions on these projects to prove what ??
They are trying to prove the big bang theory ! meaning they believe that life started by a fusion of atoms ! causing a big bang
So don’t be fascinated by this mere waste of money! There are millions of people worldwide starving and suffering
How is a meaningless experiment going to benefit mankind ?????????????
Fayeez Sirkoth
மனித ரூபத்தில் உலவி வரும் மிருகங்கள் இன்று டெல்லியில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து 20 க்கு மேற்பட்டோரின் உயிரைக் குடித்துள்ளார்கள். அரசு தக்க நடவடிக்கை எடுத்து இந்த மிருகங்களை மக்கள் மத்தியில் சுட்டுத்தள்ள வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்கள் குறையும்.
உயிரிழந்த குடும்பத்தவர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பார்ந்த சுவனப்பிரியன்
சர்வதேச அரசியல்வாதிகளும், போலி விஞ்ஞானிகளும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ஏதோ சப்பை கட்டு கட்டுகிறார்கள் என்றால், நீங்கள் அதற்கு இஸ்லாமியமும் அதை பற்றி சொல்கிறது என ஒருபடி மேலே போய்யுள்ளீர்களே.
திருக்குரானை திரும்ப திரும்ப படியுங்கள், ஆய்வு செய்யுங்கள் நிச்சயமாக சல்லி காசு செலவு இல்லாமல் பிரபஞ்சம் தோற்றம் குறித்து உண்மைகள் புரியும்.
அதை விட்டுவிட்டு விஞ்ஞானிகளின் பிங்பேங் பித்தலாட்டத்தோடு குரானையும் ஒப்பிட்டு குரான் தத்துவங்களையெ மாற்றி அமைக்க முயற்சிக்காதீர்கள்.
நான் ஒரு இந்து. குரானை புரிந்து கொண்ட அளவுக்கு நீங்கள் புரிந்துகொள்ளாதது ஆச்சரியம்.
விஞ்ஞானிகள் சொல்வது எல்லாம் வேதவாக்கு என ஒவ்வொரு மதத்தவரும் அவருக்கு துணையாக கொடி பிடித்தால் அப்புறம் மதம் மட்டுமல்ல மனிதகுலமே அழிந்துபோகும்.
அறிவியல் தேவை தான். அதற்காக ஒட்டுசொத்த மனித உயிரையே பணையம் வைக்கும் ஆராய்ச்சிகள் தேவையா?
அறிவியலுக்கு ஆன்மீகம் சொன்ன கட்டுப்பாடுகள் தான் மதங்கள். இப்போது மதங்களே ஆமாம் ஆமாம் பிங்பேங் குறித்து தான் எங்கள் வேதமும் சொல்கிறது என போலி ஆராய்ச்சிகளுக்கு வரிந்து கட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.
நன்றி.
நண்பர் அறிவகம்!
//சர்வதேச அரசியல்வாதிகளும், போலி விஞ்ஞானிகளும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ஏதோ சப்பை கட்டு கட்டுகிறார்கள் என்றால், நீங்கள் அதற்கு இஸ்லாமியமும் அதை பற்றி சொல்கிறது என ஒருபடி மேலே போய்யுள்ளீர்களே.//
மனிதனை குர்ஆன் சிந்திக்கச் சொல்கிறது. அந்த விஞ்ஞானிகள் சோதனையின் முடிவில் தோல்வியை அடைந்தால் அதன் பிறகாவது இறைவனை நம்புவார்கள் அல்லவா!
'உங்களைப் படைத்திருப்பதிலும் ஏனைய உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
'இரவு பகல் மாறி மாறி வருவதிலும் வானிலிருந்து இறைவன் மழைச் செல்வத்தை இறக்கியதிலும் பூமி வரண்ட பின் அதன் மூலம் உயிரூட்டுவதிலும் காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 45:4,5
//இப்போது மதங்களே ஆமாம் ஆமாம் பிங்பேங் குறித்து தான் எங்கள் வேதமும் சொல்கிறது//
பிங்பேங் குறித்துத்தான் எங்கள் வேதமும் சொல்கிறது என்று எங்கும் நான் குறிப்பிடவில்லையே! பூமி சம்பந்தமாக குர்ஆன் எடுத்து வைக்கும் உண்மைகளைத்தான் பட்டியலிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment