'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, March 25, 2009
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது? -2
"அவனே இறைவன். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்." - திருக்குர்ஆன்: 59:24.
________________________________________
ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !
இதற்கு முன் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதற்காக ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் அதனுடைய உண்மையான அளவை விட விரிந்து இடமளித்து அதிக நீரை தேக்கிக் கொள்வதற்காக மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட ஒட்டகத்திற்கு இரத்தத்தின் சிகப்பணுக்களை பெரிய அளவில் இறைவன் வடிவமைத்தான்.
அதேப்போன்று அதனுடைய தாகத்திற்காகவும், பசிக்காகவும் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்வதற்காக அதனுடைய முதுகில் மிகப்பெரிய அளவிலான திமிலை இறைவன் வடிவமைதான்.
இன்னும் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமான முறையில் ஒட்டகத்தின் உட்புற, வெளிப்புற அமைப்புகளை வடிவமைத்து ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யும்படி இறைவன் கூறுகிறான்.
பாலைவன மக்களுடைய வெளிஉலகப் பயணத்திற்காக பிரத்தியேகமாக உயிரிணத்தில் வடிவமைக்கப்பட்ட 680 kg வரை எடையுள்ள ஓட்டக(வாகன)ம், 450 kg வரை உள்ள சுமையை சுமந்து கொண்டு சீரமைக்காத சாலைகளில் பயணிக்கும் போது சிறு சிறு கற்கள் அதனுடைய கால்களில் குத்தி வலித் தாங்க இயலாமல் விழுந்து விட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ?
அதேப்போன்று அதனுடைய காலும் சதைப்பகுதி என்பதால் ஒரு குறிப்பிட்ட தூரமே நடக்க இயலும் அதன் பிறகு காலின் சதைப்பகுதித் தேய்ந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டால் அதில் பயணிப்பவருடைய நிலை என்னாவது ?
இதனால் தான் பாரம் சுமக்கும் நமது ஊர் மாடுகளின் கால்களின் குளம்புகளில் லாடம் அடித்து விடுவார்கள். அதற்கென்று நமது ஊர் நெடுஞ்சாலைகளில் ஆலமர, அரச மரத்தடியில் லாடம் அடிப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள் லாடம் தேய்ந்து மாடுப் படுத்துவிட்டால் மீண்டும் லாடம் அடித்தப்பின்னரே சுமைகளை சுமந்து செல்லும்.
ஆனால் அன்றைய பாலை வெளிப் பிரதேசத்தின் நெடுந்தூரப்பயண வழிகளின் நிலை அவ்வாறில்லை. கரடு முரடான பாதைகள், ஒதுங்குவதற்கு அறவே நிழலில்லாத வனாந்திரம் ( எங்காவது பலநூறு மைல்களுக்கப்பால் மட்டுமே கிராமங்கள் தென்படலாம் ) ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு செல்லும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒட்டகத்தின் முதுகில் அமர்நதிருப்பார்கள் ஒட்டகம் வழியில் எங்காவது மக்கார் பண்ணி விட்டால் அவர்களுடைய நிலை அந்தோப் பரிதாபமே !
இதனால் தான் ஒவ்வொருவரும் தனது இல்லத்தை விட்டு வெளி ஊர் கிளம்புவதற்கு முன் இறைவனிடம் பாதுகாப்புக் கோரும் விதமாக இரண்டு அமர்வுகள் பயணத் தொழுகை தொழுது விட்டு வாகனத்தில் அமர்ந்து கொண்டு மீண்டும் பயண துஆவை ஓதிக் கொண்டு செல்வார்கள்,
அதேப்போன்று பயணத்திலிருந்து திரும்பியதும் இறைவனுக்கு நன்றிக் கூறி துஆ ஓதி இரண்டு அமர்வுகள் தொழவும் செய்வார்கள்.
இதை எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதனுடைய தட்ப வெட்ப நிலைக்கொப்பவே ஒட்டகத்தை வடிவமைத்தான்.
ஒட்டகம் பயணிக்கும் வழிகள் சீரமைக்காத சாலைகள் என்பதால் ஒட்டகம் இலகுவாக ஓடுவதற்கு அதனுடைய கால்களில் மூன்று மடக்குகளை வைத்துப் படைத்தான்.
குட்டிப் போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Ankle Joint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்ல முடிகின்றது.
மனிதன் கண்டுப்பிடித்த மோட்டார் வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கியர்கள் இருக்கும் ஒன்றிலிருந்து அடுத்த கியர் மாற்றும் பொழுது வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் அதேப் போன்று வேகத்தைக் குறைப்பதற்கும் டாப் கியரிலிருந்து அடுத்த கீழ் கியருக்கு மாற்றுகிறோம்.
பாரங்களை சுமந்து கொண்டு ஓட்டகம் மேடானப் பகுதிகளில் இலகுவாக ஏறுவதற்கும், அதிலிருந்து பள்ளாமானப் பகுதிக்கு மெதுவாக இறங்குவதற்கும் அதனுடைய கால்களில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மடக்குகளே உதவுகின்றன. சுப்ஹானல்லாஹ் அவனே சிறந்த படைப்பாளன். …அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலிரியாவான். 23:14
அதேப்போன்று கற்கள் நிறைந்தப் பகுதிகளில் சிறு சிறு கற்கள் காலில் குத்தி கிழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மற்ற மிருகங்களுக்கு இருப்பதைப் போல் வெடித்த இருக் குளம்புகளாக அல்லாமல் அவற்றை இணைத்து ஒரேக் குளம்பாக மாற்றி அதனுடைய உயரத்தையும் அதிகப்படுத்தினான்.
மற்ற மிருகங்கள் வெடித்த இருக் குழம்புகளைக் கொண்டு நடக்கும், ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது. (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் Snow Shoes ஆகும்).
மிருகங்களின் கால் குளம்புகளைப் பார்த்தே வாக்கிங், ரன்னிங் சூ உருவாக்கப்பட்டிருக்குமோ ?
மேல்படி ரன்னிங் சூ வில் மட்டும் மற்ற சூ வில் இல்லாத அளவுக்கு அதனுடைய அடிப் பாகத்தில் அரை அல்லது ஒரு இஞ்ச் அளவுக்கு தடித்த ரப்பரால் உயரம் அமைக்கப் பட்டிருக்கும் காரணம் அதனுடைய தடித்த ரப்பர் போன்ற அடிப் பாகங்கள் அதை அணிந்து ஓடுபவர்களுடைய கால்களை எவ்விக் கொடுக்கும் அதனால் அதிக களைப்பில்லாமல் ஓடுவதற்கு, வாக்கிங் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.
இன்று மனிதன் கண்டுப்பிடிக்கும் அதி நவீன கண்டுப் பிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது பெரும்பாலும் இறைவனின் படைப்புகளேயாகும்.
உதாரணத்திற்கு விண்ணில் பறக்கும் பறவைகளின் இடைவெளி இல்லாத இறக்கைகளின் அசைவுகளே உயரேப் பறப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த ரைட் சகோதரர்களுக்கு விமானம் உருவாக்குவதற்கு தூண்டுதலாக இருந்தது.
கள்ளும், முள்ளும் காலுக்கு மெத்தை என்றுப் பாடியதைக் கேட்டிருக்கிறோம் அது யாருக்குப் பொறுந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக ஒட்டகத்திறகுப் பொருந்தும்.
அந்தளவுக்கு 680 kg வரை எடையுள்ள ஒட்டகம், 450 kg வரை சுமையை சுமந்துக் கொண்டு கற்கள் நிறைந்த பகுதிகளில் ஓடும் பொழுது கற்கள் அதனுடைய கால்களில் குத்துவதால் எந்த பாதிப்பும் தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதற்கு அதனுடைய இணைக்கப்பட்ட கால்களின் குளம்பும், ரப்பர் போன்ற உயரமான அமைப்புமேயாகும். சுப்ஹானல்லாஹ் அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். 23:14
சுட்டெரிக்கும் வெயில்
ஒட்டகத்தின் முதுகின் மீது பயணிப்பவர் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் கண்களை துணியைக் கொண்டு மறைத்துக் கொள்வார். அதேப் போன்று திடீரென அடிக்கின்ற சுழல் காற்றினால் கடுமையான தூசு விண்ணை முட்டும் அளவுக்கு மேல்நோக்கி கிளம்பிவிடும் அது மாதிரி நேரத்தில் யாரும் ரோட்டில் நடக்கவே முடியாது கண்களைத் திறந்தும் பார்க்க முடியாது, மூச்சு விடக் கூட முடியாது அன்றும் இதே நிலை தான் இன்றும் இதே நிலை தான். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அவைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது மாதிரி நேரத்திலும் கூட எதுவும் நடக்காதது போல் ஒட்டகம் ஓடிக் கொண்டே இருக்கும்.
அதற்கு காரணம்.
• மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு.
•
• அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் அடர்த்தியான முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது.
•
• அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
•
• அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது ( sun glass)
•
• கண்ணிற்கு கீழே உள்ள இமைப்போன்ற அமைப்பு, கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை.
•
• அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்.
•
• பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.
•
• ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளும் ஆற்றலை அதற்கு இறைவன் வழங்கினான்.
Mjhu E}y;fs;:
The Deserts – A. Starker Leopold – Page 98 – 99
Desert – Susan Arritt Page – 125
The Desert Realm, National Geography Society – Page – 289
Deserts a Miracle of Life - Jim Flegg, Page 62
The Guiness Encyclopedia, Page 159
The World Book Encyclopedia Ref: Camel
Encyclopedia Americana , Vol -5 Page 262
Chambers Encyclopedia, Vol 2 Page 795
Camel – Caroline Amold, Page 30 / 34
Mammals of the southern Gulf – Christangross – Page 11
Amazing Animals – The life Book, Page 22
Life Sense – John Downer – BBC- Page 100 – 103
அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். திருக்குர்ஆன்: 59:24.
இறை நம்பிக்கையை விதைப்பது மட்டுமே நமது நோக்கமன்றி வேறில்லை.இனம், மொழிக் கடந்தும் இறை நம்பிக்கையைப பரப்புவோம்.இனவெறி, மொழி வெறி கடவுள் அருளிய மாரக்கத்தில் இல்லை.
'அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன'.
'ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை,
நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்' என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி இனவெறி, மொழி வெறியை தடை செய்தார்கள். –நபிமொழி
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
நன்றி அதிரை ஃபாரூக்!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.//
நல்ல விளக்கங்களுடன் பதிவு. எடுத்திட்டமைக்கு நன்றி. சிந்திப்போருக்கு பயனுள்ளதாய் அமையும்.
வல்ல ரஹ்மானே! வெற்றி பெற்ற அக்கூட்டத்தினரோடு எங்களையும் இணைப்பாயாக!
திரு சுல்தான்!
//வல்ல ரஹ்மானே! வெற்றி பெற்ற அக்கூட்டத்தினரோடு எங்களையும் இணைப்பாயாக!//
ஆமீன்!(அப்படியே ஆகட்டுமாக!)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment