Followers

Tuesday, November 28, 2017

சைனாவின் நூலகத்தைப் பார்ப்போம வாருங்கள்!

சைனாவின் நூலகத்தைப் பார்ப்போம வாருங்கள்!

1.2 மில்லியன் புத்தகங்களை கொண்ட மிகப் பெரிய நூலகத்தை சைனா சமீபத்தில் திறந்துள்ளது. நூலகம் அனைத்தும் குளிரூட்டப்பட்டுள்ளது. வாசிக்கும் ஆர்வமுடையவர்கள் தங்களின் புத்தகங்களை தேடி அந்த இடத்திலேயே படிக்கும் வசதியையும் செய்து கொடுத்துள்ளனர். வாழ்வில் முன்னேறக் கூடிய ஒரு சமூகம் வாசிப்பில் ஆர்வம் காட்டுகிறது.

ஆனால் நமது நாட்டிலோ சிவாஜிக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் உலகின் மிகப் பெரிய சிலைகளை நிறுவ நமது வரிப்பணத்தை செலவிட்டு வருகிறோம். இதனால் வளரும் இளம் தலைமுறைக்கு என்ன பயனை கொடுக்கும் என்பதை மோடியும் அமீத்ஷாவும்தான் விளக்க வேண்டும்.  முன்னேறும் ஒரு சமூகத்துக்கும், பின்னோக்கி செல்லும் ஒரு சமூகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை இதில் நாம் காணலாம்.











90 வயதை கடந்தும் குரலில் என்ன கம்பீரம்!

90 வயதை கடந்தும் குரலில் என்ன கம்பீரம்!

எகிப்து நாட்டைச் சேர்ந்த இந்த முதியவருக்கு கண்களும் தெரியாது. வயதும் 90 ஐ தாண்டி விட்டது. ஆனாலும் குரலில்தான் எத்தனை இனிமை... தொழுகைக்கான அழைப்பொலியை மிகவும் அழகாக கொடுப்பதை பாருங்கள்.


அங்கு தொழ வருபவர்களில் ஒருவருக்கு கூட தொப்பி இல்லாததையும் கவனியுங்கள். தொழுவதற்கு தொப்பி அவசியம் இல்லை என்பதையும் இந்த காணொளி உணர்த்துகிறது. அலங்காரத்துக்கு வேண்டுமானால் தொப்பி வைத்துக் கொள்ளுங்கள். அதனை கட்டாய கடமை என்று யார் மேலும் திணிக்காதீர்கள்.


Monday, November 27, 2017

ஹதியாவுக்கு ஆதரவு திரட்டும் தமிழக பெண்கள்!

ஹதியாவுக்கு ஆதரவு திரட்டும் தமிழக பெண்கள்!

சகோதரி ஹதியாவுக்கு நீதி கிடைக்க வேண்டி மதங்களை கடந்து அனைத்து மகளிரும் ஆதரவாக களமிறங்கியுள்ளன். வாழ்த்துக்கள் சகோதரிகளே!





பிஜெ மோடியை புகழ்ந்தாரா?

பிஜெ மோடியை புகழ்ந்தாரா?

ஒரு சகோதரர் கேட்கிறார் இந்தியாவில் மொகலாயர்களால் தானே இஸ்லாம் ஊடுருவியது என்கிறார்.

அதற்கு பிஜெ இஸ்லாம் ஊடுருவியதா இல்லை ஏற்றுக்கொள்ளப்பட்டதா என விளக்குகிறார்.

முகலாயர்கள் ஆட்சி செய்யும் முன்பு கேரளா மன்னர் சேரமான் பெருமாள் இஸ்லாத்தை பற்றி கேள்வி பட்டு இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.

முதன் முதலில் ஒரு பள்ளிவாசலும் கேரளாவில் கட்டப்படுகிறது.

மோடி அரபு நாடு சென்ற போது அந்த சான்றுகளை எல்லாம் அரபிகளிடத்தில் காட்டி நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவிலும் பரவியது என அந்த வரலாற்று தகவலை அங்கே பதிய வைத்தார் என்கிறார் பிஜெ.

அதாவது இஸ்லாத்தை எதிர்க்கும் கூட்டத்தில் இருக்கும் ஒருவரே இஸ்லாமியர்கள் வந்தேரிகள் அல்ல, இஸ்லாம் மொகலாயர்களாலோ வாளாலோ பரப்பட்டது அல்ல என அவரே சாட்சியாய் இருக்கிறார் என்பதை கூற வேண்டிய ஊடகம் அந்த செய்தியை அப்படியே திரித்து இஸ்லாத்தின் புகழை மோடி எத்தி வைத்ததாகவும் மோடியை புகழந்ததாகவும் செய்தி வெளியிடுகிறார்கள்.

இது எல்லாம் ஊடகத்தின் தரமற்ற அறங்கள் என பலமுறை நிரூபிக்கப்பட்டு இருக்கு.  ஆனாலும் பிஜெ என்றால் எதை சொன்னாலும் ஏற்ப்போம் என்கிற நிலைப்பாடு  இருக்கும் வரை ஒன்றும் செய்ய இயலாது.







மராட்டிய மன்னன் சிவாஜி இஸ்லாத்துக்கு எதிரியா?

மராட்டிய மன்னன் சிவாஜி இஸ்லாத்துக்கு எதிரியா?

மராட்டிய வீரர் சிவாஜிக்கு அவுரங்கசீப்க்கும் இடையே நடந்த போரில் சிவாஜியின் காலாட் படையில் 1,50,000 வீரர்கள் இருந்தார்.  அதில்
66,000
பேர் முஸ்லிம்கள்.

சிவாஜி கப்பற்படை தளபதியாக தார்யா தரங் எனும் முஸ்லிம் இருந்தார்.

மேலும் சிவாஜியின் தனி செயலாளராக மவுலவி ஹைதர்கான் என்பவர் இருந்தார்.

சித்தி ஹிலால் இப்ராஹீம் , தவுலத்கான் இப்படி ஏராளமான முஸ்லீம்கள் தளபதியாக சிவாஜி படையில்  இருந்தனர் அவுரங்கசீப் படைக்கு எதிராக நடந்த போரில் ……..

ஆதாரம் :
king shivaji and his Muslim warriors/- mahaveer sanglikar
பேராசிரியர் அருணன் அவர்களின்
காலம் தோறும் பிராமணியம் தொகுதி 2

சிவாஜியின் மகன் கூட ஒளரங்கசீப்பின் பொறுப்பிலேயே வளர்க்கப்பட்டதாக படித்துள்ளேன். வரலாறு இவ்வாறு எழுதப்பட்டிருக்க சில இந்துத்வாவாதிகள் சிவாஜியை முஸ்லிம்களுக்கு எதிரானவராக காட்ட முயற்சிக்கின்றனர்.




அரசின் உதவியோடு மேல் படிப்பை தொடரலாம் - நீதிமன்றம்

சகோதரி ஹதியாவுக்கு மேலும் உறுதியை தருவானாக!

விருப்பட்டால் அரசின் உதவியோடு மேல் படிப்பை தொடரலாம் : நீதிமன்றம்

என் கணவர் துணை இருக்க படிப்பிற்க்காக அரசின் துணை தேவையில்லை : ஹாதியா

நாலு பக்கமுமா அணை கட்டி பிளாக் பண்ண தீட்டம் திட்டுறாங்க பாசிசவாதிகள்...

சகோதரி சிக்ஸரா அடிக்குது....

இறைவன் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன்... 

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
(அல்குர்ஆன் : 9:32)




Saturday, November 25, 2017

சகோதரி ஹதியாவுக்கு வெற்றி கிடைக்க பிரார்த்திப்போம்!

சகோதரி ஹதியாவுக்கு வெற்றி கிடைக்க பிரார்த்திப்போம்!

கேரள அரசாங்கம், மத்திய அரசாங்கம் என்று இரு அரசுகளும் சேர்ந்து சகோதரி ஹதியாவுக்கு பல நெருக்கடிகளை இன்று வரை கொடுத்து வருகிறது. அவர் செய்த ஒரே தவறு குர்ஆனை படித்து விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுதான்.

போலீஸ் காவலில் தனக்கு கிடைத்த சொற்ப நேரத்தை மிக அழகாக பயன்படுத்திக் கொண்டார். 'யாருடைய நிர்பந்தமும் எனக்கு இல்லை. நான் குர்ஆனை படித்து விளங்கியே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன். எனக்கு எனது கணவர் வேண்டும். என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்' என்று அத்தனை கூட்டத்திலும் உரத்து கூறுகிறார். யாராலும் நிர்பந்திக்கப்படவில்லை என்பதற்கு அவரது வாக்கு மூலமே சாட்சியாக உள்ளது.

மோடிக்களும் அமீத்ஷாக்ளும் இனியாவது ஒரு உண்மையை உணர வேண்டும். இந்து மதத்தில் உள்ள குறைகளை களைய பாடுபடுங்கள். அதை விடுத்து இஸ்லாத்தை ஏற்பவர்களை சட்டம் கொண்டு தடுத்தால் அது இன்னும் பலரை போய் சென்றடையும். இன்று உலகம் முழுவதும் ஹதியாவின் வாக்கு மூலத்தை நேரலையாக பார்த்துக் கொண்டுள்ளனர். மோடி, அமீத்ஷாக்களின் எதிர்ப்புக்கு கிடைத்த பரிசுகளே இவை.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8




சகோதரி ஹதியாவின் மலைக்க வைத்த உறுதி!



சகோதரி ஹதியாவின் மலைக்க வைத்த உறுதி!

நான் ஒரு முஸ்லிம். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் என் கணவருடன் செல்ல வேண்டும்” 

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹதியா இன்று கொச்சி விமான நிலையத்தில் டெல்லிக்கு பயணமாகிறார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் சொன்ன வார்த்தைகளே இவை. இறை நம்பிக்கை என்பது இதுதான்.  அவரது விருப்பத்தைப் போலவே இஸ்லாமிய வாழ்வு கிடைக்க நாமும் பிரார்த்திப்போம்.







ஆச்சரியப்பட வைத்த ராகுல் காந்தி!



ஆச்சரியப்பட வைத்த ராகுல் காந்தி!

சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகிக் கொண்டிருக்கும் படம். நேற்று, குஜராத்தில், ஆசிரியர்கள் கூட்டம் ஒன்றிற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்தின் நடுவே இருந்து வந்த ஒருவருடைய பேச்சு எல்லோரையும் கண்கலங்க வைத்தது. அவர் பெயர் ரஞ்சனா அவஸ்தி. சமஸ்கிரகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் கடந்த 22 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியராக உள்ளார். அனைத்து் தகுதிகளும் இருந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. சம்பளம் 12,000 ரூபாய் மட்டுமே. இவர் போல பலரும் குஜராத்தில் இருப்பதாக தழுதழுத்த குரலில் தன் ஆதங்கத்தை பதிவு செய்த ரஞ்சனா அவஸ்தி, தங்களுக்கு பிரசவ விடுமுறை கூட கிடையாது என்றும், ஒய்விற்கு பிறகு பென்ஷனும் வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.

ஒரு கவுரவமான ஒய்வு வாழ்க்கையை வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் கூறிய போது, உணர்ச்சிவசப்பட்ட ராகுல் காந்தி, "சில நேரங்களில் சில கேள்விகளுக்கு பதிலளிக்க நம்மிடம் வார்த்தைகள் இருக்காது" என்று கூறி தன் மைக்கை மேடையில் வைத்து விட்டு, சடாரென அந்த பெண்மணி இருந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார். யாருமே இதனை எதிர்பார்க்காததால் அரங்கத்தில் சலசலப்பு நிலவியது. ரஞ்சனா அவஸ்தியிடம் சென்ற ராகுல் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை அரவணைத்துக் கொண்ட போது எல்லோரிடமும் ஆச்சர்யம் தொற்றிக்கொண்டது. "அவர் என்னை தழுவிய போது, கஷ்டங்களை முழுமையாக புரிந்துக்கொண்ட ஒரு இளைய சகோதரனை போல நான் உணர்ந்தேன்" என்று கூறியிருக்கிறார் அவஸ்தி. இத்தகைய செய்கை மூலம் பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறார் ராகுல். தங்கள் மனதை இந்த சம்பவம் நெகிழ செய்துவிட்டதாக பலரும் தங்கள் கருத்தை பதித்து வருகின்றனர்.

நன்றி சகோ ஆஷிக்!


Friday, November 24, 2017

தாயைப் போல பூமியின் அரவணைப்பு! - -குர்ஆன்

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?'
-
குர்ஆன் 77:25,26

பூமிக்கு உள்ள ஈர்ப்பு விசையை இந்த குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது. இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். கடைத் தெருவில் ஒரு தாய் தன் குழந்தையை கைகளைப் பிடித்தவாறு நடந்து அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை ஒரு கடையைப் பார்த்து விட்டு அங்கு செல்ல எத்தனிக்கும். உடனே தாயானவள் அந்த குழந்தையை தன் பக்கம் தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்பொழுதுதான் அந்த குழந்தை தான் தனது தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதையே உணருகிறது.

அதே போல் தாயின் மார்போடு ஒரு குழந்தை அமர்ந்திருக்கும்போது தலையை அங்கும் இங்கும் அசைக்கும். அதை ஒரு பொருட்டாக அந்தத் தாய் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயம் தாயின் அரவணைப்பிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க முயற்ச்சிக்கும் போது அந்த தாயின் பிடி மேலும் இறுகி தன் குழந்தையை அவளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். இது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண ஒரு நிகழ்வு.

இதையே நாம் பூமிக்கும் பூமிக்கு மேல் வசிக்கும் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்வில் பூமி நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணருவதில்லை. எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பை உணருவதில்லையோ அதைப் போல. அதே குழந்தை சில வருடங்களில் பெரிதானவுடன், அதே தாய் அந்த குழந்தையை தனியே வெளியில் சென்று விளையாட அனுமதிக்கிறாள். இனி குழந்தைக்கு தனது பாதுகாப்பு தேவையில்லை என்று தாய் உணருவதால் குழந்தையை தனியே விட்டு விடுகிறாள்.

அதே போன்றுதான் ஓரளவு அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன் பூமியின் ஈர்ப்பாற்றலுக்கு மேலே அதாவது ராக்கெட்டில் சென்றால், இனி தனது ஈர்ப்பாற்றல் மனிதனுக்கு தேவையில்லை என்று கருதி ராக்கெட்டின் பிடிப்பை பூமி தளர்த்தி விடுவதையும் பார்க்கிறோம்.

இந்த இடத்தில் குர்ஆனின் 'அணைத்தல்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் இலக்கியத்துடனும், அறிவியல் சார்ந்தும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம்.

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் சிதறடிக்கப்படாமல் அவைகளை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும்.


மேலும் இந்த பூமி நாம் வாழ்வதற்க்கென்றே விஷேசமாக படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக்கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படுகிறது. இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாக தென்பட்டால் நம்மால் இதன்மீது ஒரு போதும் வாழ இயலாது.


பூமியும் அசுர வேகத்தில் சுற்றுகிறது. அது சுற்றுவதோடு அல்லாமல் சூரியனையும் குற்றி வருகிறது. அதோடல்லாமல் மொத்த கேலக்ஸியுமே ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு காரியங்கள் நடந்தும் நம்மால் அதை உணர முடிகிறதா?

ஒரு பொருள் பூமியில் நிலையாக நிற்க வேண்டுமானால் நான்கு கால்கள் அல்லது குறைந்த பட்சம் மூன்று கால்களாவது தேவைப்படும். ஆனால் மனிதர்களாகிய நாம் இரண்டு கால்களைக் கொண்டு எவ்வாறு நிற்கிறோம்? நாம் கீழே விழ வேண்டிய தருணத்தில் நம் உடல் சமன் செய்து புவி ஈர்ப்பு விசைக்கு தோதாக கனத்தை சமன் செய்வதாலேயே நாம் நிலையாக பூமியில் நிற்க முடிகிறது. இதுவும் இறைவனின் விந்தைகளில் ஒன்றல்லவா?


ஆஹா... இறைவன் நம் மீது பொழிந்த கருணைக்கு அளவு உண்டோ?

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26