ஆச்சரியப்பட வைத்த ராகுல் காந்தி!
சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகிக் கொண்டிருக்கும் படம்.
நேற்று, குஜராத்தில், ஆசிரியர்கள்
கூட்டம் ஒன்றிற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்தின் நடுவே இருந்து
வந்த ஒருவருடைய பேச்சு எல்லோரையும் கண்கலங்க வைத்தது. அவர் பெயர் ரஞ்சனா அவஸ்தி.
சமஸ்கிரகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் கடந்த 22 ஆண்டுகளாக
பகுதி நேர ஆசிரியராக உள்ளார். அனைத்து் தகுதிகளும் இருந்தும் பணி நிரந்தரம்
செய்யப்படவில்லை. சம்பளம் 12,000 ரூபாய் மட்டுமே. இவர் போல பலரும்
குஜராத்தில் இருப்பதாக தழுதழுத்த குரலில்
தன் ஆதங்கத்தை பதிவு செய்த ரஞ்சனா அவஸ்தி, தங்களுக்கு
பிரசவ விடுமுறை கூட கிடையாது என்றும், ஒய்விற்கு பிறகு பென்ஷனும் வழங்கப்படாது என்றும்
தெரிவித்தார்.
ஒரு கவுரவமான ஒய்வு வாழ்க்கையை வாழ எங்களுக்கு உதவி
செய்யுங்கள் என்று அவர் கூறிய போது, உணர்ச்சிவசப்பட்ட
ராகுல் காந்தி, "சில நேரங்களில் சில கேள்விகளுக்கு
பதிலளிக்க நம்மிடம் வார்த்தைகள் இருக்காது" என்று கூறி தன் மைக்கை மேடையில்
வைத்து விட்டு, சடாரென அந்த பெண்மணி இருந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்து
விட்டார். யாருமே இதனை எதிர்பார்க்காததால் அரங்கத்தில் சலசலப்பு நிலவியது. ரஞ்சனா
அவஸ்தியிடம் சென்ற ராகுல் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை
அரவணைத்துக் கொண்ட போது எல்லோரிடமும் ஆச்சர்யம் தொற்றிக்கொண்டது. "அவர் என்னை
தழுவிய போது, கஷ்டங்களை முழுமையாக புரிந்துக்கொண்ட ஒரு இளைய சகோதரனை போல
நான் உணர்ந்தேன்" என்று கூறியிருக்கிறார் அவஸ்தி. இத்தகைய செய்கை மூலம்
பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறார் ராகுல். தங்கள் மனதை இந்த சம்பவம் நெகிழ
செய்துவிட்டதாக பலரும் தங்கள் கருத்தை பதித்து வருகின்றனர்.
நன்றி சகோ ஆஷிக்!
No comments:
Post a Comment