Followers

Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Friday, November 24, 2017

தாயைப் போல பூமியின் அரவணைப்பு! - -குர்ஆன்

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?'
-
குர்ஆன் 77:25,26

பூமிக்கு உள்ள ஈர்ப்பு விசையை இந்த குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது. இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். கடைத் தெருவில் ஒரு தாய் தன் குழந்தையை கைகளைப் பிடித்தவாறு நடந்து அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை ஒரு கடையைப் பார்த்து விட்டு அங்கு செல்ல எத்தனிக்கும். உடனே தாயானவள் அந்த குழந்தையை தன் பக்கம் தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்பொழுதுதான் அந்த குழந்தை தான் தனது தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதையே உணருகிறது.

அதே போல் தாயின் மார்போடு ஒரு குழந்தை அமர்ந்திருக்கும்போது தலையை அங்கும் இங்கும் அசைக்கும். அதை ஒரு பொருட்டாக அந்தத் தாய் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயம் தாயின் அரவணைப்பிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க முயற்ச்சிக்கும் போது அந்த தாயின் பிடி மேலும் இறுகி தன் குழந்தையை அவளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். இது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண ஒரு நிகழ்வு.

இதையே நாம் பூமிக்கும் பூமிக்கு மேல் வசிக்கும் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்வில் பூமி நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணருவதில்லை. எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பை உணருவதில்லையோ அதைப் போல. அதே குழந்தை சில வருடங்களில் பெரிதானவுடன், அதே தாய் அந்த குழந்தையை தனியே வெளியில் சென்று விளையாட அனுமதிக்கிறாள். இனி குழந்தைக்கு தனது பாதுகாப்பு தேவையில்லை என்று தாய் உணருவதால் குழந்தையை தனியே விட்டு விடுகிறாள்.

அதே போன்றுதான் ஓரளவு அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன் பூமியின் ஈர்ப்பாற்றலுக்கு மேலே அதாவது ராக்கெட்டில் சென்றால், இனி தனது ஈர்ப்பாற்றல் மனிதனுக்கு தேவையில்லை என்று கருதி ராக்கெட்டின் பிடிப்பை பூமி தளர்த்தி விடுவதையும் பார்க்கிறோம்.

இந்த இடத்தில் குர்ஆனின் 'அணைத்தல்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் இலக்கியத்துடனும், அறிவியல் சார்ந்தும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம்.

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் சிதறடிக்கப்படாமல் அவைகளை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும்.


மேலும் இந்த பூமி நாம் வாழ்வதற்க்கென்றே விஷேசமாக படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக்கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படுகிறது. இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாக தென்பட்டால் நம்மால் இதன்மீது ஒரு போதும் வாழ இயலாது.


பூமியும் அசுர வேகத்தில் சுற்றுகிறது. அது சுற்றுவதோடு அல்லாமல் சூரியனையும் குற்றி வருகிறது. அதோடல்லாமல் மொத்த கேலக்ஸியுமே ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு காரியங்கள் நடந்தும் நம்மால் அதை உணர முடிகிறதா?

ஒரு பொருள் பூமியில் நிலையாக நிற்க வேண்டுமானால் நான்கு கால்கள் அல்லது குறைந்த பட்சம் மூன்று கால்களாவது தேவைப்படும். ஆனால் மனிதர்களாகிய நாம் இரண்டு கால்களைக் கொண்டு எவ்வாறு நிற்கிறோம்? நாம் கீழே விழ வேண்டிய தருணத்தில் நம் உடல் சமன் செய்து புவி ஈர்ப்பு விசைக்கு தோதாக கனத்தை சமன் செய்வதாலேயே நாம் நிலையாக பூமியில் நிற்க முடிகிறது. இதுவும் இறைவனின் விந்தைகளில் ஒன்றல்லவா?


ஆஹா... இறைவன் நம் மீது பொழிந்த கருணைக்கு அளவு உண்டோ?

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26


Friday, October 06, 2017

இத்தனை நட்சத்திரங்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்?

இத்தனை நட்சத்திரங்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்?



'தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழியை அறிந்து கொள்வதற்காக உங்களுக்காக நட்சத்திரங்களை அவனே ஏற்படுத்தினான். அறிகிற சமுதாயத்துக்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்'
-
குர்ஆன் 6:97

இந்த வசனத்தின்படி தரையிலும் வானத்தில் பறந்தும் திரிகிற உயிரினங்களுக்கு வழிகளை அறிந்து கொள்வதற்காகவே நட்சத்திரங்களை படைத்துள்ளதாக இறைவன் கூறுகிறான். கண்டம் விட்டு கண்டம் செல்லும் பல பறவைகள் சரியாக புறப்பட்ட இடத்துக்கே வந்து விடுவதை நாம் ஆச்சரியத்தோடு பார்த்திருப்போம். இவை எப்படி வந்து தனது இருப்பிடத்தை சரியாக அடைகின்றன என்று என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? இறைவன் படைத்து வைத்துள்ள நட்சத்திரங்களே இந்த பறவைகளுக்கு வழி காட்டுகின்றன. படகுகளில், கடலில் செல்லும் மனிதனுக்கும் நட்சத்திரங்களே வழிகாட்டிகளாக இருக்கின்றன.

'
ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழிகாட்டியவனே எங்கள் இறைவன்' என்று அவர் கூறினார்.
-
குர்ஆன் 20:50

உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி அது இன்ன காரியம் செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் அதற்கு தந்துள்ளான் இறைவன். அதன்படி நட்சத்திரமானது உலக உயிரினங்கள் அனைத்துக்கும் வழி காட்டியாக இன்று வரை செயல்பட்டுக் கொண்டுள்ளது. வானத்தில் இத்தனை நட்சத்திரங்கள் ஏன் என்று பலமுறை நாமே கேட்டிருப்போம். எந்த ஒன்றையும் வீணுக்காக படைக்கவில்லை என்று இறைவன் சொன்னது எந்த அளவு உறுதியாகிறது பார்த்தீர்களா?

'
வானத்தையும் பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை'
-
குர்ஆன் 21:16

இனி பிபிசியில் வந்த ஒரு கட்டுரையின் சுருக்கத்தைப் பார்ப்போம்:

'
மண் உருண்டைகளை உருட்டிச் செல்லும் பல வண்டுகளை நாம் பார்த்திருப்போம். அவ்வாறு உருட்டிச் செல்லும் போது அந்த வண்டுகளின் கண்கள் சாய்ந்து அதன் பார்வை நட்சத்திரங்களை நோக்கி இருந்ததை கண்ணுற்று ஆச்சரியப்பட்டேன். உருட்டிச் செல்லப்படும் அந்த மண் உருண்டையானது எந்த திசையில் சென்றாலும் அந்த வண்டின் கண் பார்வை மட்டும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை நோக்கியே நகர்கிறது. அந்த நட்சத்திரத்தை இலக்காக வைத்து அந்த வண்டானது தனது இருப்பிடத்தை மிக இலகுவாக அறிந்து கொள்கிறது. இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் கூட தங்களின் பாதையை அறிந்து கொள்ள அவை நட்சத்திரங்களின் உதவியையே நாடுகின்றன. மனிதனும், பறவையினங்களும் வழி அறிவதற்கு நட்சந்திரங்களின் உதவியை நாடுவதை நாம் அறிந்திருப்போம். ஆனால் வண்டுகளும் கூட வழி அறிவதற்கு அதே நட்சத்திரங்களையே தங்கள் வழிகாட்டிகளாக கொள்கின்றன என்பது தற்போதய கண்டுபிடிப்பாகும்.' என்று ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் டேக்கி பிபிசியிடம் தெரிவித்தார். அதற்கான ஆய்வு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்.

Scientists have shown how the insects will use the Milky Way to orientate themselves as they roll their balls of muck along the ground.

Humans, birds and seals are all known to navigate by the stars. But this could be the first example of an insect doing so.

The study by Marie Dacke is reported in the journal Current Biology.

"The dung beetles are not necessarily rolling with the Milky Way or 90 degrees to it; they can go at any angle to this band of light in the sky. They use it as a reference," the Lund University, Sweden, researcher told BBC News.

"I think night-flying moths and night-flying locusts could benefit from using a star compass similar to the one that the dung beetles are using," she said.

http://www.bbc.com/news/science-environment-21150721

பிபிசிக்கு அளிக்கப்பட்ட மேற்கண்ட ஆய்வின் முடிவானது மனிதனும், பறவையினமும், கடல் வாழ் உயிரினங்களும், நிலத்தில் வாழும் உயிரினங்களும் தங்களின் வழியை பகலிலும் இரவிலும் அறிந்து கொள்ள நட்சத்திரங்களின் உதவியையே நாடுகின்றன என்று கூறுகிறது.

இது போன்ற எந்த ஆய்வும் இல்லாமல் அறிவியல் உண்மைகளை எந்த சலனமும் இல்லாமல் மிக அலட்சியமாக குர்ஆனானது சொல்லிச் செல்கிறது. குர்ஆனை ஆய்வு செய்ய புகுந்தால் ஒவ்வொரு நாளும் புதுப்புது உண்மைகளாக மனிதகுலத்துக்கு பல உண்மைகளை தந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த குர்ஆனை ஆய்வு செய்ய ஏனோ பல மனித மனங்கள் மறுத்து வருகின்றன.

'
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'

-
குர்ஆன் 4 : 82

'
அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுளளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப் படுத்துகிறது.

-
குர்ஆன் 17 : 41

Posted by nazeer ahamed at 11:23 PM 


Thursday, September 28, 2017

எறும்புகள் பேசுமா? புரிந்து கொள்ளுமா? - குர்ஆனின் அறிவியல்

எறும்புகள் பேசுமா? புரிந்து கொள்ளுமா? - குர்ஆனின் அறிவியல்

 அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது.  குர்ஆன் -  27:18
 அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரம் மிகப் பெரும் பூகம்பத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தது. அந்த பூகம்பம் ஏற்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக எறும்புகள் கூட்டமாக ஒரு அரண் அமைத்து தண்ணீரில் மிதந்து தங்களை காத்துக் கொண்டது. இயற்கை பேரிடம் நிகழ்வதை இது போன்ற உயிரினங்கள் முன்பே அறிந்து கொள்ளும் கச்தியை இறைவன் அவைகளுக்கு வழங்கியுள்ளான். இவைகள் பெரும் சமுதாயமாக வாழ்கின்றன. ஒவ்வொரு எறும்புக்கும் குறிப்பிட்ட பணி கொடுக்கப்பட்டு அனைத்தும் தங்கள் பணியை செவ்வனே செய்கின்றன.
 நியூயார்க்: பூகம்பம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூகம்பத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக, உயிர் அறிவியல் துறை ஆய்வாளர், கேப்ரியல் பார்பெரிக், தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து ஆய்வு செய்தார். இதற்காக, பிரத்யேக மென்பொருளில் உருவான, வீடியோ காமிரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கும். ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலை ஏற்பட்டதும் திரும்பி விடுகின்றன. பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள் வெளியேறுகின்றன. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வை அப்படியே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வதாக இருந்தால் அது படைத்த இறைவனால் தான் இயலும். ஒரு படை வருவதை பொதுவாக அறிந்து கொள்வது சரிதான். ஸுலைமான் நபியையும், அவரது படைகளையும் எறும்புகள் எப்படி அறிய முடியும்? என்ற சந்தேகம் வரலாம். எறும்புகளால் மனிதர்களை அவர்களது பெயர்களுடன் அறிந்து கொள்ள முடியாது. வேறு எந்த உயிரினத்தினாலும் இதை அறிந்து கொள்ள இயலாது. ஆனால் ஸுலைமான் நபியவர்களுக்கு மாபெரும் ஆட்சியை அல்லாஹ் வழங்கினான். ஷைத்தான்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தனர். பறவைகள் மற்றும் ஜீவராசிகளின் மொழிகள் அவருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு இருந்தன என 27:16 வசனம் கூறுகின்றது. ஹுத் ஹுத் பறவையுடன் ஸுலைமான் நபி அதன் மொழியில் பேசியதாக 27:20 வசனம் கூறுகிறது. அவரது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த ஜீவராசிகளுடன் ஸுலைமான் நபி அவர்கள் அந்த ஜீவராசிகளின் மொழியில் பேசுவார். அப்படி பேசியதன் அடிப்படையில் எறும்புகளுக்கு தன்னைப் பற்றி ஸுலைமான் நபி தெரிவித்து இருந்தால் ஸுலைமான் நபியை அந்த எறும்புகள் அறிந்து கொண்டதில் வியப்பு இல்லை. பெரும் படையுடன் ஒரு கூட்டம் வருவதை எறும்புகள் உணர்ந்தவுடன் இந்தப் பகுதியில் இப்படி ஒரு படை வருவதாக இருந்தால் அது ஸுலைமான் நபியின் படையாகத்தான் இருக்க முடியும் என்று எறும்புகள் அறிந்து கொண்டதில் வியப்பில்லை.
 இறைவனின் படைப்பில்தான் எத்தனை விநோதங்கள்.