"கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும் இயல்பிலேயே இரக்க குணம் கொண்டவர்களாகவும், ஜனநாயக குணமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.” - பிரதமர் நரேந்திர மோதியின் இந்த கருத்தை ஏற்கிறீர்களா?
-பிபிசி நியூஸ் தமிழ்
இதற்கு இந்துக்கள் அளித்த பின்னூட்டத்தைப் பாருங்கள்.
அருணா இராமச்சந்திரன்
•
Replying to
@bbctamil
கருமத்தே, பல ஆயிரம் கிலோமீட்டர் மக்கள் நடந்தே சென்றார்களே அப்போ கீதையின் இரக்கம் எங்கே போனது? இந்த சட்டம் எங்கள் விவசாயத்தை அழிக்கிறது என்று 100 நாட்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் மீதான இரக்கம் எங்கே போனது? 150 க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தும்?
இரத்தினவேலு வசந்தா.
•
Replying to
@bbctamil
கோத்ரா ரயிலை எரித்த போது இந்த இரக்கம் இல்லையா குஜராத்தை கலவர பூமியாக்கியது மோடிதானே.குழந்தை குடும்பமே நடந்து கால்கள் வெந்த போது இரக்கம் இலாலையே.இப்போது மாதக்கணக்கில் கொட்டும் பனியில் போராடி இறந்து போகும் விவசாயிகள் மீது இரக்கம் இல்லையே .மோடி ஒரு இரக்கமற்றவர்.சாடிஸ்ட்.
கார்த்திகேயன் | KARTHIKEYAN
•
Replying to
@bbctamil
அதே கீதைதான் மதத்தை பின்பற்றாத பெண்களை ஒழுக்கமற்றவள், அவளின் குடும்பமும் ஒழுக்கமற்றது அவளுக்கு பிறக்கும் குழந்தையும் தேவையற்றது என்று சொல்கிறது எப்படி ஏற்க்கிறது கீதையை? ஆனால் நம் திருக்குறளோ “பிறப்பிற்க்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உலக தத்துவத்தை கற்பிக்கிறது
Gabu
•
1h
Replying to
@bbctamil
அப்புறம் ஏண்டா கோத்ராவில் ரெயில் எரித்தாய்,அவன் ஏண்டா,போலி என்கவுண்டர் நடத்தினான்,ஏண்டா,சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஐ கொன்றீர்கள்,CAA போராட்டத்தில் வன்முறை ஆக்கி,எத்தனை முஸ்லிம் மக்கள் ஐ கொன்றீர்க ள்,விவசாயிகள், போராட்டத்தில் வன்முறை ஆக்கி காவலர்களை வைத்து அடித்து நொறுக்கி னீர்கள்.
சீனி.சுப்பிரமணியன்
3 comments:
சீரழிந்து கிடக்கும் இந்துக்களின் ஆண்மையையும் சத்திரிய வீரத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்கிற கருத்தை ஒரு கோட்பாடாக முன்வைத்ததில் விவேகாநந்தர், அரவிந்தர் ஆகியோரின் பங்கு முக்கியமானது.
நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்” (யங் இந்தியா, 6-8-1925, p274. )
விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்” ( The Essence of Hinduism – By M. K. Gandhi p. 205)
“மாறாத சத்தியத்திற்கான உண்மையான தேடல் இந்துமதத்தில் தான் உள்ளது, ஏனெனில் ‘சத்தியமே கடவுள்’ என்று அது முரசறைகிறது. இன்று நாம் தேக்கநிலையிலும், ஊக்கமின்றியும், வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் போலவும் இருக்கிறோமென்றால், அதற்குக் காரணம் நாம் களைத்திருக்கிறோம், அயர்ந்திருக்கிறோம். இந்த அயற்சி நீங்கியவுடனேயே முன் எப்போதும் கண்டிராத உத்வேகத்துடன் இந்துமதம் விழிப்புற்று உலகெங்கும் பரவும்” (Young India, 24/11/1924 p. 390-396)
“இந்துமதம் கங்கை நதியைப் போன்றது. மூலத்தில் எந்த மாசுகளும் அற்று
தூய்மையாகவும், செல்லும் வழியில் வந்து சேரும் சில கசடுகளையும் தன்னகத்தே கொண்டும் அது விளங்குகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அன்னை கங்கையைப் போன்றே, அது உலகிற்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருக்கிறது. கங்கையும் சரி, இந்துமதமும் சரி, ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தோன்றினாலும், இந்த எல்லா இடங்களிலும் சாரமான உட்பொருள் அப்படியே தான் இருக்கிறது” (Young India 8-4-1926)
“கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (“கீதை என் அன்னை” முன்னுரை)
“ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்” (source: The Upanishads Translated for the Modern Reader By Eknath Easwaran. Nilgiri Press. 1987. pg 205)
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவம் ஸ்தாபகா் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தா் ஆங்கிலத்தில் எழுதிய பகவத்கீதையை மின் வடிவில் பாரத பிரதமா் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டாா்கள். அப்போது பேசியதுதான் மேற்படி கருத்துக்கள்.
பகவத்கீதையை எதிா்த்து குரல் கொடுப்பவர்கள் சற்று ஒங்கிக் கொடுங்கள். உலக அறிஞர்களின் மனதை கீதைகவா்ந்து கொண்டேயிருக்கிறது. மௌனமாக அது வென்று கொண்டிருக்கிறது. பாருங்கள். அனைத்து நாட்டில் உள்ள ஞானிகள் விஞ்ஞானிகள் தலைமை நிா்வாகிகள் தங்களுக்கு வழிகாட்டி பகவத்கீதை என்று சொல்லும் நாள் வெகு விரைவில் வரும்.
பிற மக்களை முட்டாள்களாக வைத்திருக்க வேண்டும் என்பது சு..ன் போன்றவர்களுக்கு விருப்பம். போதிய தகுதியின்றி கருத்துக்களை பேசுபவர்களை மேற்கோள் காட்டுவது சுவனப்பிரியன் வழக்கம்.
பகவத்கீதை தேசப்பிதா காந்திக்கு அன்னையாக இருந்தது
அரவிந்தருக்கு வழிகாட்டியாக இருந்தது
சுவாமி விவேகானந்தருக்கு செயல்பட தூண்டியது.
தேசத்தை அடிமைதளையில் இருந்து மீட்க பாடுபட்டவர்களுக்கு வழிகாட்டியாக உந்து சக்தியாக இருந்தது.
Post a Comment