Followers

Monday, March 15, 2021

பறவைகள் டேக் ஆஃப் எடுக்கும் அரிய காட்சிகள்!

 

பறவைகள் டேக் ஆஃப் எடுக்கும் அரிய காட்சிகள்!

 

இவ்வளவு சிறிய பூச்சிகள், ஈக்களுக்கு இறைவன் எந்த அளவு சக்தியைக் கொடுத்துள்ளான் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

 

தேனீக்கள் பற்றி இணையத்தில் படித்த கட்டுரையையும் இங்கு பதிகிறேன்.

 

உம் இறைவன் தேனீக்கு இவ்வாறு வஹி அறிவித்தான். மலைகளிலும் மரங்களிலும், அவர்கள் (மனிதர்கள்) உயரமாக கட்டியிருப்பவற்றிலும் நீ கூடுகளைக் கட்டிக்கொள். மேலும், பலதரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக்கொள்! உன் இறைவன் சீராக அமைத்துத்தந்த வழியில் சென்று கொண்டிரு‘.

 

 

அந்த தேனீக்களின் உள்ளே இருந்து பலவிதமான நிறமுடைய ஒரு பானம் வெளிப்படுகின்றது. அதில் மக்களுக்கு நிவாரணம் இருக்கிறது. திண்ணமாக சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது.

 

குர்ஆன் (16:68-69)

 

 

நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள்: ‘எவன் கைவசம் என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக ஒரு இறை நம்பிக்கையாளன்  தேனீ போலாவான்’.

 

(அறிவப்பாளர்: அபூருஸான் (ரலி) நூல்: இப்னு ஹிப்பான், இப்னு மாஜா, தபரானி)

 

அல்லாஹ் தேனீயிடம் பேசுகின்றான். நபியவர்களோ ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு உதாரணம் தேனீ போன்றதாகும். எனவே, இறை நம்பிக்கையாளனே! தேனீ போல் இருக்க வேண்டும், தேனீயாக வாழ வேண்டும் என்று நமக்குச் சொல்கிறார்கள்!

தேனீ ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு என்ன பாடம் நடத்த முடியும்? அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு ஒரு இறை நம்பிக்கையாளன் தேனீக்கு சமம் என்கிறார்களே! நபியவர்கள். அப்படியென்றால் நம் கவனத்தை தேனீ ஈர்த்துக்கொண்டிருக்கிறது என்பதுதானே பொருள்?

நபியவர்கள் மேலும் சொன்னார்கள்: தேனீ நல்லவற்றையும் தூய்மையானதை மட்டுமே புசிக்கிறதுஎன்று.

 

எல்லா மலர்களிலும், பழங்களிலும் தேனீ சென்று அமர்வதில்லை. உதிர்ந்த மலர் மீதோ, தூய்மையற்ற மலர் மீதோ, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மலர் மீதோ, முதிராத மலர் மீதோ அது அமர்வதில்லை! மிகச் சிறந்த மலர் மீது மட்டும் தான் தேனீ அமரும்.

 

 

ஒரு இறை நம்பிக்கையாளன் நேர்மையான வழியில் பொருளீட்டி ஹலாலான தூய்மையான உணவைத்தான் உட்கொள்ளவேண்டும் என தேனீ முதல் பாடத்தை நமக்குச் சொல்லித் தருகிறதே!

 

 

நபியவர்கள் இன்னும் சொன்னார்கள்: ‘தேனீ அழகாக, மிக நுட்பமாக மலரை கசக்காமல் முறிக்காமல், வினை தராமல் அதன் மீது அமர்கிறதுஎன்று.

தேனீயின் எடையைவிட மலர் இதழ் எடை குறைவானது. இதழ் மீது தேனீ அமரும்போது தன் முழு எடையால் அமர்வதில்லை. அப்படி அமர்ந்தால் இதழ் தாங்காது. எனவே பறந்துக்கொண்டே தேனீ அந்த இதழ்மீது அமர்கிறது.

 

மலரிலிருந்து உறிஞ்சப்படும் (எடுப்பதை) தேனைவிட தேனீ மிக அதிகமாக மலருக்கு கொடுக்கிறது. அதாவது மலரின் மகரந்த தூள்- விதைகளை தன் கால்களில் எடுத்துக் கொள்வதின் மூலம் மலரின் இன விருத்திக்கு தேனீ உதவுகிறது. எடுப்பது குறைவு. ஆனால் கொடுப்பது அதிகம் என்ற வகையில் தேனீயின் செயல்பாடு உள்ளது.

 

 

மலருக்கும் தேனீக்கும் உள்ள உறவு போன்று நமக்கும் பல உறவுகள் உண்டு. பெற்றோர் பிள்ளைகள், கணவன் மனைவி, முதலாளி தொழிலாளி, ஆசிரியர் மாணவன், ஆட்சியாளர் குடிமக்கள், உடன்பிறப்புகள் இப்படி பல உறவுகள்.

ஆனால் தேனீ கற்றுத்தரும் இந்த இரண்டாவது பாடமான – மலரை காயப்படுத்தாத, சிரமப்படுத்தாத, முறிக்காமல், மலருக்கு சிறந்ததைக் கொடுத்து அதை மகிழ்வித்து தான் குறைவாக பெறும் – ‘கொடுப்பது அதிகம் எடுப்புது குறைவுஎன்ற செயல் நம் செயல்பாடுகளில் பிரதிபலிக்கின்றனவா?

 

 

பெறுவதில் காட்டும் ஆர்வம் கொடுப்பதில் இருப்பதில்லை. உரிமைகள் பற்றி பேசும் அளவு கடமைகள் பற்றி நாம் பேசுவதில்லை. சில நேரங்களில் கடமைகளில் தவறி விடுவதால் உறவுகள் முறிந்து விடுகின்றன.



 

 

 


2 comments:

Dr.Anburaj said...

மேலும், பலதரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக்கொள்!

உன் இறைவன் சீராக அமைத்துத்தந்த வழியில் சென்று கொண்டிரு‘.
-------------------------------------------------------------------------------
தேனீக்கம் பற்வைகளுக்கு என்று தனி நபி என்று யாரையும் அனுப்பியிருக்கின்றாரா அரேபிய கடவுள் அலலா?
தேனிக்களுக்கு என்று தனியான குரான் ஏதும் கொடுத்துள்ளாரா அரேபிய கடவுள் அல்லா.?
தேனீக்கள் மற்ற உயிரினங்கள் அனைத்தும் தனித்தன்மை உடையவை. அந்த தனித்தன்மைக்கு இணங்க அவைகள் வாழும்.
இதில் ”உன் இறைவன் சீராக அமைத்துத்தந்த வழியில் சென்று கொண்டிரு” என்ற உபதேசத்திற்கு என்ன அா்த்தம்.

சரியான உளறல்.‘.

Dr.Anburaj said...


எதற்கெடுத்தாலும் இறைவன் மீது ச்த்தியம் செய்வது கேவலமான பழக்கம்.

அரேபிய மத புத்தககங்களில் எங்கு பார்த்தாலும் இந்த வாக்கியம் காணப்படுகிறது.

படிப்பதற்கே அசிங்கமாக உள்ளது.