Followers

Friday, March 12, 2021

குட்டி வரலாறு - எதுவும் மாறவில்லை.

 குட்டி வரலாறு - எதுவும் மாறவில்லை.


அவாள் எப்போதுமே ஆண்டவர்கள் இல்லை. ஆனால் ஆண்டவர்களை பேசி மயக்கி தன் அடிமையாக வைத்திருந்தார்கள். மிரட்டி அடிமையாக வைத்திருந்தார்கள். இல்லை கொலை செய்துவிட்டு தன் பேச்சை கேட்பவர்களை அவர்கள் வைத்துக்கொண்டார்கள். கரிகால சோழன் ஏன் கொல்லப்பட்டான். இராஜராஜசோழன் ஏன் கொல்லமால் விடப்பட்டான் என்பதற்கு வரலாற்றில் விடை தேடினாலே நமக்கு சில விசயங்கள் பூடகமாய் கிடைக்கும். இன்னொரு வரலாற்றையும் சொல்கிறேன்.

  

மெளரியர்கள் முதலில் ஆரியர்களுக்கு லாவகமாகவே இருந்தார்கள். ஆனால் இடையில் பவுத்தம் நோக்கி நகர்ந்தார்கள். பவுத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தார்கள். முக்கியமாக வர்ணம் என்ற கல்விமுறையை கொண்டுவந்தார்கள். அதாவது யாராக இருந்தாலும் பள்ளி சென்று பயிலவேண்டும். குறிப்பிட்ட சில பயிற்சிகளுக்கு யாருக்கு எது வருகிறது என பார்த்து ஒதுக்குவார்கள். ஆனால் பிறப்பின் அடிப்படையிலே எல்லாம் என்ற பார்ப்பனீய கும்பல் திணறியது. அவாள் குழந்தைகளும் இதில் சிக்கினார்கள். நாட்டைவிட்டு கொஞ்சம் தள்ளியிருந்தார்கள்.  காத்திருந்தார்கள், மெளரியர்கள் ஆட்சி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த காலம்  பரிஹத்ர மெளரியர்  என்பவர் ஆட்சி காலத்தில் ஒரு சாதரண படைப்பிரிவின் தலைவனாக இருந்த புஷ்யங்கமித்ரன் என்பவன் நடுசபையில் வெட்டிகொன்றான். ( காந்தியை நினைவில் கொள்க ). இதை எப்படி வரலாற்றில்  சொல்கிறார்கள் என்றால்  நாட்டில் ஏதோ ஒரு சிறு குழப்பம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் மன்னர் கொல்லப்பட்டார்  என முடித்துகொள்கிறது அவாள் எழுதிய வரலாறு. ஆனால் புவுத்த வரலாறு தெளிவாக சொல்லிவிட்டது. ( ஆதாரம் பெளத்தத்தின் வளர்ச்சி - மெளரியர் காலம். )


மன்னர் கொல்லப்பட்ட காரணம்  சாதியை மறைக்கிறார்கள், வர்ணக்கலப்பை ஏற்படுத்துகிறார்கள் என்ற ஆதங்கமே கொலைக்கான காரணம். வர்ணாசிரமம் என்ற பெயரே அவர்கள் பெளத்தத்தில் இருந்து திருடியது. பெளத்தம் சொன்ன வர்ணம் யாருக்கு எது வருகிறது அது அவர்களின் வர்ணம். ஆனால் பார்ப்பனீயம் எது பிறப்போ அது வர்ணம் என மாற்றியது. அவாளுக்கு தேவையென்றால் சூத்திரனை கொண்டு தன் வரலாறு எழுதுவார்கள், அவர்களுக்கு தேவையில்லையெனில் சூத்திர பார்ப்பனை( சூத்திர பார்ப்பனன் - தன்னை ஆண்டை பரம்பரை, வைசியன் என பெருமையாக சொல்லுக்கொள்ளும் பார்ப்பன அடிமை மூடர்கள் )  கொன்று தன்னைக் காத்துகொள்வார்கள். இதுதான் வரலாறு. சமீபத்தில் குஜராத் வரலாற்று பாடபுத்தகத்தில் காந்தி அக்டோபர் இரண்டு காந்தி தீடிரென அகால மரணமடைந்தார் என சொல்லியிருந்தார்கள். அதனை இரண்டாடுகள் போராடி சுட்டுக்கொல்லப்பட்டார் என மாத்தினார்கள்.  இதுதான் பார்ப்பனீயம்.


இதனை அவர்கள் காலந்தோறும் செய்கிறார்கள். காலந்தோறும் அவர்களுக்கு அடிமைகள் கிடைத்துவிடுகிறார்கள். என்ன  செய்ய பக்தி என ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருக்குள்ளும் அடிமைத்தனத்தின் பக்தியையும், அதிகார சாதி அடுக்குகளையும் விதைத்திருக்கிறார்கள். அவாளுக்கு அடிமையாக இருந்துகொண்டே அவாள் உருவாக்கி இன்னொரு சாதியின் மீது அதிகாரத்தை செலுத்துகொண்டே வாழ்கிறார்கள். தன் ரத்தத்தை தானே நக்கி சுவைக்கும் நாய் போல...


பா. சரவண காந்த்.

#மீள்

3 comments:

Dr.Anburaj said...

அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதற்கு

முன் உன் கண்ணில் இருக்கும் உத்தரத்தை பாா்.என்றாா் இயேசு.

வேதகாலத்தில் அதாவது 10000 ஆண்டுகளுக்கு முன் சாதி அமைப்பு கிடையாது. காலப்போக்கில் தொழில், நிலத்தின் அமைப்பு வாழும் முறை போன்ற பல காரணங்களால் பல கலாச்சார பிரிவுகள் தோன்றியது. பின் அவைகள் நிலைபெற்றன. இதை சாதி என்று வகுத்தாா்கள். சாதி மாறுதலுக்குட்பட்டது. அதன் காரணமாக புதிய சாதிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும் நாடாரில் முந்தைய காலத்தில் ஒரு தேவா் சாதி பெண்ணை திருமணம் செய்த நாடாரின் வம்சத்தினருக்கு நட்டாத்தி நாடாா் என்று பெயா். இவர்கள் தனி சாதியாக வாழ்கின்றார்கள். சோ்வை என்ற பிரிவும் உள்ளது. தற்சமயம் எல்லோரிடமும் பணம் வந்து விட்டது. இது போன்ற வேறுபாடுகள் வெகுவாக குறைந்து வருகிறது.2021 துவங்கி இரண்டு மாதம் முடிந்து விட்டது.பணம்படைத்த இந்து பறையர்களும் தேவா்களும் சக்கிலிய ஆண்களும் . . . . . . . .இன்று திருமணம் செய்ய பாப்பாத்தி கிடைப்பாளா என்று தேடி அலைகின்றார்கள்.அம்பேத்காா் கூட பாா்பன பெண் மருத்துவரை திருமணம் செய்தாா்.

பார்ப்ன வெறுப்பை கொண்டு இந்து சமூகத்தை பிளந்து இந்த நாட்டில் அரேபிய ஆட்சிமுறையை கொண்டுவந்து பாழாக்க சுவனப்பிரியன் சதி செய்கின்றாா். தோல்விதான் அவருக்கு.

Dr.Anburaj said...

மாவீரன் மங்கள் பாண்டே மற்றும் பல பிராமண ராணுவ வீரர்கள் முதல் சுதந்திர போரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடங்கிய பிறகு, பிராமணர்களின் சதவீதத்தை ராணுவத்தில் குறைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் மிகச்சிறந்த போர் வீரர்களாகவும், மதிநுட்பம் கொண்டர்களாகவும் இருந்த பிராமணர்களை அவர்களால் தவிர்க்க இயலவில்லை. பஞ்சாபின் 'மொஹ்யால்' பிராமணர்கள், ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்டின் 'பஹடி' பிராமணர்கள், உத்தரபிரதேஷ் மற்றும் பீகாரை சேர்ந்த 'கன்யகுப்ஜா' மற்றும் 'பூமீஹார்' பிராமணர்கள். மேலும் பஞ்சாப் மற்றும் ஜம்முவின் பூஞ்ச் பகுதிகளை சேர்ந்த பிராமணர்கள். 'தியாகி' மற்றும் 'கொங்கனஸ்தா' பிராமணர்கள் என பல பிராமண சமூகங்கள் மிகச்சிறந்த போர் வீரர்களாக திகழ்ந்தார்கள். மிகச் சிறந்த போர் வீரர்களான இவர்களை உலகப் போரில் பங்கேற்க செய்தது ஆங்கிலேய அரசு. உலகப் போரில் கலந்து கொண்டு, அற்புதமான அனுபவங்களை பெற்று திரும்பிய இந்த பிராமண வீரர்கள், இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில், 1947ல் நடந்த 'இந்திய-பாக்' பிரிவினை போரிலும், இரும்பு மனிதர் வல்லபாய் படேல் தேசத்தின் பல ராஜ்ஜியங்களை ஒருங்கினைத்த போதும் பெரும் பங்காற்றினார்கள். அவ்வளவு ஏன் இந்தியாவின் முதல் 'பரம் வீர் சக்ரா' விருதை பெற்ற பெருமை, பிராமணரான மேஜர் சோம்னாத் ஷர்மா அவர்களையே சேரும்.
யார் இந்த சோம்நாத் ஷர்மா ?
1923ல் பிறந்த சோம்நாத் ஷர்மா அவர்கள், 1942ல் ராணுவத்தில் சேர்ந்தார். 1947ல் பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி இந்திய-பாக் போர் தொடங்கியிருந்த‌து. 1947 நவம்பர் மூன்றாம் தேதி மேஜர் சோம்நாத் ஷர்மா தன்னுடைய 'டி கம்பெனி' எனும் சிறு ராணுவ குழுவோடு, பாகிஸ்தானில் இருந்து ஏதேனும் ஊடுறுவல் வருகிறதா என்பதை கண்கானித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில், மதியம் 2:35 மணிக்கு 'லக்ஷர்' எனப்படும் பாகிஸ்தானிய பழங்குடி வீரர்கள் எழுநூறு பேர் காஷ்மீரின் பல்காம் பகுதியில் ஊடுறுவ தொடங்கினார்கள். வெறும் நூறு வீரர்களையே கொண்டிருந்த‌ ஷர்மாவின் டி கம்பெனி நாலா புறங்களிலும் சூழப்பட்டது. மூன்று புறங்களில் இருந்தும் குண்டு மழை பொழிய தொடங்க, பெரும் சேதம் ஏற்படதொடங்கியது. இந்த பகுதியை தக்க வைத்துக் கொண்டால்தான் ஸ்ரீநகரை பாக்கிஸ்தானியர்கள் கைப்பற்றாமல் தடுக்க இயலும் என்பது ஷர்மாவுக்கு நன்கு தெரியும். பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு படைகள் வருவது எளிது. ஆனால் தில்லி அல்லது பஞ்சாபில் இருந்து காஷ்மீருக்கு வருவது பெரும் மலைகளை கடந்து வர வேண்டும் என்பதால் கடினமானது.
இந்திய உதவிப் படைகள் வர எப்படியும் ஆறு மணி நேரம் ஆகிவிடும், எதிரிகள் வேறு தங்களை விட ஏழு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள், ஆகையால் கடைசி ராணுவ வீரன் இருக்கும் வரை உயிரை கொடுத்து போராட வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். வீரர்களை சிறு சிறு குழுக்களாக யுக்தி ரிதியாக பிரித்து, ஷர்மா இங்குமங்குமாக சுற்றியவாறு கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டும் துணிகளை கிழித்து அதனை இந்திய விமானப் படைக்கு புலப்படும் வகையில் வீரித்தும், கடுமையாக பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் டி கம்பெனி பெரும் சேதத்தை எதிர்கொள்ளத் தொடங்க, அதன் எதிர்த்து சுடும் திறன் மிகவும் குறைந்தது. ஷர்மா தன் கைகளாலேயே ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பல குழுக்களுக்கு இங்குமங்குமாக ஓடி பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் எதிரிகள் வீசிய ஒரு வெடிகுண்டு அவரின் உடலை சின்னாபின்னம் ஆக்கியது.
இறப்பதற்கு முன் அவர் தலைமையகத்துக்கு அனுப்பிய‌ கடைசி தகவல் இதுதான். "எதிரிகள் வெறும் 150 அடி அருகே நெருங்கி விட்டார்கள். எங்களை விட எண்ணிகையில் மிக அதிகமாக இருக்கிறார்கள். நாங்கள் மிகப்பெரும் வெடிகுண்டு தாக்குதலுக்கு நடுவே உள்ளோம். நான் கடைசி ராணுவ வீரன் மற்றும் கடைசி துப்பாக்கி குண்டு உள்ளவரை பின் வாங்க மாட்டேன்"
...

Dr.Anburaj said...

2
குமாவோன் ரெஜிமண்டிலிருந்து இந்திய மீட்பு படைகள் அங்கே வரும் வேளையில், ஷர்மாவின் படைகள் முழுவதுமாக எதிரிகளால் சிதைக்கப் பட்டிருந்தது. ஆனால் எதிரிகள் 200 பேர் உயிரிழந்திருந்த நிலையில், ஷர்மாவின் டி கம்பெனியின் கடுமையான எதிர் தாக்குதலால் அவர்கள் ஸ்ரீநகர் நோக்கி முன்னேறும் எண்ணத்தை கைவிட்டிருந்தார்கள். இது .இந்திய விமானப்படைக்கு தடையில்லாமல் ஸ்ரீநகர் விமான நிலயத்தில் தரையிறங்கவும், ஸ்ரீநகருக்கு வரும் அனைத்து வழிகளையும் அடைப்பதற்கான‌ போதிய கால அவகாசத்தையும் தந்திருந்தது. ஷர்மாவோடு ஒரு இளைய அதிகாரியும், இருபதுக்கு மேற்பட்ட‌ டி கம்பெனி வீரர்களும் உயிர் தியாகம் செய்திருந்தார்கள். மேஜர் சோம்நாத் ஷர்மாவின் உருதெரியாத அளவிற்கு சிதைந்திருந்த உடல் மூன்று நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. அவர் தோல் பையிலிருந்த 'பிஸ்டல்' மற்றும் அவரின் சீருடை உள்ளே நெஞ்சு பக்கத்தில் இருந்த பகவத் கீதை தாள்க‌ள் அவரை அடையாளம் காட்டின. இந்தியாவின் முதல் மிக உயரிய ராணுவ விருதான 'பரம் வீர் சக்ரா' விருது 1950ல் மேஜர் சோம்நாத் ஷர்மாவிற்கு வழங்கப்பட்டது. அவர் நினைவாக தபால் தலையும் இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
இன்று ஸ்ரீநகர் இந்தியாவோடு இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் மேஜர் சோம்நாத் ஷர்மா. அவருக்கு நம் வீர வணக்கங்களை செலுத்தி மேலும் தொடர்வோம்...
நல்லோர்க்கு மட்டுமின்றி மக்களைப் பிரிக்கும் சில தீயவர்களுக்கும் இவற்றை நிறைய பகிருங்கள்‌
------------------------------------------------------------------------
மீண்டும் பதிவிடுகின்றேன் மேஜர் சோம்நாத் ஷர்மா ஒரு பாா்ப்பனா் அதாவது பிறாமணா். போதுமா.!