மகனின் உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்துக் கொடுத்த காவல் துறை!
பீஹார் பாகல்பூருக்கு அருகில் உள்ள டின்டங்கா கிராமத்தைச் சேர்ந்த தேஜ் யாதவ் தனது 13 வயது மகன் ஹரி ஓம்மோடு கங்கை ஆற்றை படகில் கடந்துள்ளார். படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகனை பிப்ரவரி 26 அன்று பறி கொடுத்தார் தந்தை. தீயணைப்பு துறையும் காவல் துறையும் தேடியதில் மார்ச் 3 அன்று அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்படுகிறது. காவல்துறை தந்தையிடம் மகனின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று போஸ்ட் மார்டம் பண்ணச் சொல்லியுள்ளது. ஆம்புலன்ஸ் உதவி கேட்டுள்ளார் தந்தை. அதற்கு ஏற்பாடு செய்யாத காவல்துறை மகனின் உடலை ஒரு கோணிப் பையில் வைத்து தந்தையிடம் கொடுத்துள்ளது. தந்தையும் ஏதும் சொல்லாமல் நடந்தே மருத்துவ மனைக்கு வந்துள்ளார். வழி நெடுக துர் நாற்றம் வரவே அக்கம் பக்கத்தவர் பையில் என்ன என்று விசாரித்துள்ளனர். தந்தையும் அப்பாவித்தனமாக 'மகனின் உடல்' என்று சொல்லியுள்ளார். அதனை படம் பிடித்து வலை தளங்களில் பதிவேற்றியுள்ளனர் சிலர். இது பீஹார் எங்கும் பெரும் பிரச்னையை உண்டு பண்ணியுள்ளது.
மோடி கூறும் டிஜிட்டல் இந்தியா இதுதானோ!
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
08-03-2021
1 comment:
சில மாநிலங்களில் பொது நிா்வாகம் சற்று மேம்படுத்த வேண்டிய நிலையில்தான்
உள்ளது.மக்கள் வாழ்க்கை நிலை ..?????இதில்மத பாகுபாடு கிடையாது.
Post a Comment