'ஐந்து மாத கர்ப்பிணியான எனது மனைவியை அடித்தே கொன்று விட்டனர். நான் செய்த தவறு வயல்வெளியில் உள்ள மோட்டார் பம்பில் குளிக்கச் சென்றதுதூன்.'
'உன் அப்பன் வீட்டு இடமா? இங்கு எதற்கு வந்தாய்? என்று கேட்டனர். நான் பதில் ஏதும் சொல்லாமல் வீடு திரும்பினேன். திடீரென்று வீட்டுக்குள் புகுந்து அடிக்க ஆரம்பித்தனர். ஐந்து மாத கர்பிணியான எனது மனைவியை அடித்தே கொன்றனர். சுனில் மிஸ்ரா, அனில் மிஸ்ரா, சுஷில் மிஸ்ரா என்ற மேல் சாதி இளைஞர்கள் தான் இதனை செய்தது. ஆதாரங்களை கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சாதி வெறியினால் ஏற்பட்ட நிகழ்வு.'
‘உத்தர பிரதேசம் முழுக்க இதே நிலைதான். மேல் சாதியனரான இவர்களுக்கு நாங்கள் படித்தால், நல்ல துணி மணிகள் உடுத்தினால், சந்தோஷமாக இருந்தால் பிடிப்பதில்லை. மற்ற கீழ் சாதியினரையும் இவர்கள் வீண் வம்பு வளர்த்து பிரச்னை பண்ணுகிறார்கள். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது'.
சக மனிதனை ஏன் இவ்வாறு வெறுப்புடன் பார்க்கிறார்கள்? அவர்கள் சந்தோஷமாக இருந்தால் இவர்களுக்கு பிடிப்பதில்லை ஏன்? காரணம் வர்ணாசிர கோட்பாடு. கடவுளின் பெயரால் இவர்கள் அனைத்தையும் நியாயப்படுத்துகிறார்கள். சிறு வயதிலிருந்தே இந்த வெறுப்பு வளர்த்து விடப்படுகிறது. வளர்ந்தவுடன் தாங்கள் படித்து வளர்ந்ததை செயல்படுத்துகிறார்கள்.
இந்து மதத்தில் கீழ் சாதியில்
பிறந்த ஒன்றைத் தவிர இந்த அப்பாவிகள் செய்த தவறுதான் என்ன? ராம ராஜ்யம் கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லும் மோடிக்களே!
அமித்ஷாக்களே! இது பொன்ற லட்சோப லட்ச ஏழைகளின் கண்ணீர் உங்களை ஒரு நாள் பழி தீர்க்கும்.
அது வரை ஆடும் ஆட்டத்தை எல்லாம் ஆடிக் கொள்ளுங்கள்.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
No comments:
Post a Comment