Followers

Monday, November 29, 2021

நாங்கள் காவல்துறையை காட்டி கொடுக்கவில்லை''

 ''கோவை குண்டு வெடிப்பு கலவரங்களை நடத்தியது காவல்துறை நாங்கள் காவல்துறையை காட்டி கொடுக்கவில்லை''

-சி.பி ராதாகிருஷ்ணன் பகிரங்க வாக்குமூலம்
காவலர் செல்வராஜை கொன்ற அந்த மூன்று நாய்களையும் முஸ்லிம் என்று பாராமல் காவல் துறையிடம் நாங்கள் ஒப்படைத்தோமே.... அதன் பிறகும் அப்பாவி முஸ்லிம்கள்கள் 19 பேரை ஏன் கொன்றது காவல் துறையும் இந்துத்வாவும். பதிலிருக்கிறதா ராதா கிருஷ்ணன்.



'நபிகள் நாயகத்துக்கு நன்றி சொல்ல வந்தேன்'

 'நபிகள் நாயகத்துக்கு நன்றி சொல்ல வந்தேன்'

- சாதியின் கோரப் பிடியை உணர்ந்த ஒரு மாற்று மத சகோதரின் உள்ளக் குமுறல்.



பத்திரிக்கையாளர் மணி

 பத்திரிக்கையாளர் மணி போன்ற நல்ல உள்ளங்களால்தான் நமது நாடு இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. முஸ்லிம்களும் பொறுமை காக்கிறார்கள்.




இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா? என்று கேட்பவர்களுக்கு....

 இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா? என்று கேட்பவர்களுக்கு....


தேசிய மாநில அளவில் சாதித்த இளைஞர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பரிசுகளை தூக்கி எறிந்த பாஜக அமைச்சர். சாதிப் பெருமை இந்த அளவு கீழ்த்தரமாக நடக்கச் சொல்கிறது. இந்த ஆட்சி தமிழகத்துக்கு வந்தால் தமிழர்களின் கதி....




Thursday, November 25, 2021

குழந்தையின் வாயில் ஆண் உறுப்பை செலுத்துவது

 *குழந்தையின் வாயில் ஆண் உறுப்பை செலுத்துவது*

சாதாரண பாலியல் குற்றம் தான். கடுமையான பாலியல் துன்புறுத்தல் அல்ல- அலகாபாத் உயர்நீதிமன்றம்.
*அப்படியே மனுதர்ம கொடூரம் தான் இது.*
*மனு தர்மம்* *அத்தியாயம் 11* *சுலோகம் 61* *இதைத்தான்* *சொல்கிறது!!



Tuesday, November 23, 2021

உம்ரா பயணம் நல்ல முறையில் முடிந்தது

 

உம்ரா பயணம் நல்ல முறையில்  முடிந்தது....

 

அல்ஹம்துலில்லாஹ் - எல்லா புகழும் இறைவனுக்கே!

 

மதியம் 2.30 க்கு ரியாத்திலிருந்து புறப்பட்டு இரவு ஒரு மணிக்கு மதினா சென்றடைந்தோம். கிப்லதேன்(இரண்டு கிப்லா) பள்ளிசென்று தொழுது விட்டு பிறகு கூபா பள்ளிக்குச் சென்றோம். அதன் பிறகு பத்ர் போர் நடந்த இடம் மற்றும் அங்கு அடக்கப்பட்டுள்ள நபித் தோழர்களின் அடக்கத் தலத்தையும் பார்வையிட்டு அவர்களுக்காக பிரார்த்தித்தோம். அங்கு ஒரு அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார்கள். இறந்த அந்த நபித் தோழர்களிடம் எதையும் கோரிக்கை வைக்கலாகாது. கோரிக்கை பிரார்த்தனை செய்வது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே என்ற அறிவிப்பு பலகை. ஆனால் நமது ஊர்களில் பல சமாதிகளை இன்றும் வழிபட்டுக் கொண்டிருக்கும் அப்பாவிகளை நினைத்துப் பார்த்தேன்.

 

அதன் பிறகு மஸ்துந் நபவிக்கு சென்றோம். அங்கு இரண்டு ரக்அத் தொழுது விட்டு குர்ஆன் ஓதிக் கொண்டு பிரார்த்தனை புரிந்து கொண்டு அமர்ந்திருந்தோம். அதன்  பிறகு பஜ்ருடைய நேரம் வரவே தொழுது விட்டு மெக்கா நோக்கி பயணித்தோம். நபிகள் நாயகம் அவர்களுக்கு சலாம் சொல்லி விட்டு கிளம்பினோம். அடக்கத் தளத்தை பார்வையிட தனி ஆப்பில் சென்று அனுமதி வாங்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த ஏற்பாடு. இங்கும் நபிகள் நாயகத்தை நோக்கி யாரும் பிராரத்தித்தால் அவர்களை இறைவனிடம் சென்று பிரார்த்திக்குமாறு காவலர்கள் அறிவுரை வழங்குவர். அந்த அளவு இறைவனின் தனித்துவம் கெட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். இங்கு நமது ஊரையும் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம். காலை உணவு பொங்கல் சாம்பார் சட்னி பேரூந்துக்கு வந்தது. அதை சாப்பிட்டு விட்டு மெக்கா நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.

 

அடுத்து ஜூம்ஆ தொழுகை கஃபாவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிரிய நாட்டு ஓட்டுநர் மிக திறமையாக பேருந்தை உரிய நேரத்தில் ஹோட்டலில்  கொண்டு சேர்ப்பித்தார். அங்கிருந்து உடன் கிளம்பிச் சென்று கஃபா சென்று அடைந்தோம். ஷேக் சுதைஸ் குத்பா ஓதி தொழுகை நடத்தினார். அதன் பிறகு உடன் உம்ராவை முடித்தோம். சரியான பசி. அதோடு சென்று தலை முடி இறக்கி விட்டு ஹோட்டலுக்கு வந்து குளித்து விட்டு அமர்ந்தோம். கோழி பிரியாணி தயாராக ஹோட்டலில் இருந்தது. அதனை சாப்பிட்டு விட்டு நல்ல உறக்கத்தை போட்டோம்.

 

எங்கள் ரூமில் ஒரு சூடானியும் தங்கினார். மொழி, நாடு, இனம், நிறம் அனைத்தும் வேறுபட்ட சூடானியும் மதராஸியும் இஸ்லாத்தால் இணைகிறோம். நான் செய்யும் அனைத்து காரியங்களையும் உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சூடானியும் செய்கிறான் என்றால் இங்கு தான் நபிகள்  நாயகத்தின் வழி காட்டுதலிலன் வீரியம் புரியும்.

 

ஒரே மதம் என்று சொல்லும் நமதூர் இந்து மதத்தில் உள்ள சாதிக்கொரு வழிபாடு, சாதிக்கொரு பண்பாடு என்ற நிலை இங்கிருக்கவில்லை. இஸ்லாத்தினால் கிடைத்த மிகப் பெரும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.

 

பேரூந்தில் பயணிக்கும் போது உம்ரா எவ்வாறு செய்ய வேண்டும்: வணக்க வழிபாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற செய்திகளை சகோதரர் நூஹ் அல்தாஃபி அவர்கள் அழகிய முறையில் தமிழில்விளக்கி வந்தார். சனிக்கிழமை காலை தொழுகையை கஃபாவில் முடித்து விட்டு இட்லி சட்னி சாம்பார்  ரூமில் சாப்பிட்டு விட்டு பேரூந்தில் அமர்ந்து ரியாத் நோக்கி பயணித்தோம்.

 

முக நூலில் கோரிக்கை வைத்த அனைவரின் பிரார்த்தனைகளையும் எனது பிரார்த்தனையோடு சேர்த்துக் கொண்டேன்.  உம்ரா மற்றும் ஹஜ் பாக்கியம் கிடைக்காத மற்ற சகோதர சகோதரிகளுக்கும் வருங்காலங்களில் தக்க  வசதிகளை இறைவன் ஏற்படுத்திக் கொடுப்பானாக!



 

.

Tuesday, November 16, 2021

மாட்டு சாணம் தினமும் சாப்பிடுகிறேன்

 'மாட்டு சாணம் தினமும் சாப்பிடுகிறேன். உடலில் சென்று உடலை சுத்தப்படுத்துகிறது'

ஆர்எஸ்எஸ் தனது ஆட்களை எவ்வாறு மூளை சலவை செய்து வைக்கிறது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்.



ஆணும் பெண்ணும் சமமல்ல....


 


ஆணும் பெண்ணும் சமமல்ல.... ஒவ்வொருவருக்கும் தனித் தனி சிறப்புண்டு. சுதந்திரம் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆன் இடும் கட்டளையை உறுதிப் படுத்தும் அறிவியல் ஆய்வுகள்.


மொழி செயல்பாடுகள் –language function

காட்சி இடம் சார் செயல்பாடுகள்- visual –spatial function

சமூக அறிவாற்றல் திறன்- social cognition skills

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் முறை- empathy

உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல்-emotion and perception

தேடுதல் மற்றும் பரபப்பு- seeking and sensation

இவ்வாறு அனைத்து செயல்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.

ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும் பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வேறு வேறாக உள்ளது.

 

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.

-
குர்ஆன் 4:32

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பத்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-
குர்ஆன் 4:34


குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.(4:7)

ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-
குர்ஆன் 4:124


Sunday, November 07, 2021

தோழர் துரை குணா எழுதியது...

 


தோழர் துரை குணா எழுதியது...

 

*

இந்த சினிமாவை நான் பார்த்த பிறகு அம்மா அப்பாவையும் பார்க்க வைக்க வேண்டுமென்று விரும்பினேன்..ஏனென்றால் இந்தப் படத்திற்கும் அம்மா அப்பாவிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

 

1976-ம்ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் காவல் நிலைய காவல் துறை அப்பாவை கைது செய்தது.காவல் நிலைய லாக்கப்பில் அப்பாவின் இரண்டு கைகளையும் மேலே தூக்கி கட்டி இரண்டுகால் தொடையிலும் இரண்டு காவலர்கள் ஒவ்வொரு பக்கமும் ஏறி நின்று கொண்டு உள்ளங்காலில் அடிக்கத் தொடங்கி உடல் முழுவதும் ரத்தம் தெறித்து நின்றது.இரவு 7 மணிக்கு அடிக்கத் துவங்கி நடுரவு சுமார் மூன்று மணிக்கு பல லத்திகம்புகள் முறிய நின்றது.

 

அப்பா மீது காவலர்கள் சொன்ன குற்றச்சாட்டுகள் மணிக்கிரான்விடுதி ஆகாச வீரப்பையா கோவில் அருகில் 10 வண்டி நெல் மூட்டைகளை வழிமறித்து திருடியதாக புகார்.இந்தப் புகாரைக் கொடுத்தவர் சிவவிடுதி கிராமத்தை சார்ந்த முத்துச்சாமி மணியார்.இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள சொல்லியே காவல்துறை அப்பாவை சித்திரவதை செய்தது.

 

காடுவெட்டிவிடுதி கிராமத்தில் செட்டியார் டீக்கடையில் எல்லா சாதியினருக்கும் சில்வர் டம்ளரில் டீ, பறையர்களுக்கு மட்டும் ஈயக்குவளை,கொட்டாங்குச்சியில் டீ, இந்தப்பாகுபாடு இந்தத் தீண்டாமையை கண்டித்து அப்பா அன்றைய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புகார் மனு அளித்திருந்தார். அதற்கு எதிர்வினையாற்றவே..

பத்து கிராமத்து கள்ளர்களும் திருவோணம் மாரியம்மன் கோவில் ஆசாரத்தில் கூட்டம் போட்டு சிவவிடுதி முத்துச்சாமி மணியார் மூலமாக

திருட்டு புகார் கொடுக்க வைத்தார்கள்.பின்னாளில் அந்த வழக்கு பொய்யானது என அப்பா நிரூபித்து நிலைய எழுத்தர், ஏட்டு, எஸ்ஐ மூன்று பேரும் மூன்று மாதம் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்கள்.

 

இடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் பெயர்கள் அப்பாவுக்கு ஞாபகத்தில் இல்லை என்றாலும் அவர்கள் வடுவூர் அம்மாபேட்டை அதிராம்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்.

 

நேற்று இரவு அக்கா வீட்டில் ஜெய்பீம் பார்த்துவிட்டு வந்த அப்பா மிகவும் அமைதியாக இருந்தார் நான் எதுவும் கேட்கவில்லை அவரும் எதுவும் சொல்லவில்லை.

 

குறிப்பு-

இந்த வழக்கில் அப்பாவிற்கு உதவியாக இருந்தவர்கள்.

1 தோப்பவிடுதி முத்துசாமி ஊராட்சி மன்ற உறுப்பினர் (இறந்துவிட்டார்)

2 பத்துபுளிவிடுதி சிதம்பரம் CPI (நலமுடன் இருக்கிறார்)

3 பத்துபுளிவிடுதி பால்ராஜ் CPI

(நலமுடன் இருக்கிறார் )

4 பத்துபுளிவிடுதி குழந்தைவேல் CPI

(நலமுடன் இருக்கிறார்)

5 வெள்ளதேவன்விடுதி முத்து CPI

(நலமுடன் இருக்கிறார்)

6 நம்பிவயல் சிவக்கொல்லை

ஆறுமுகம் CPI (நலமுடன் இருக்கிறார்)

7 பில்லுவெட்டிவிடுதி குழந்தைவேல் CPI

(நலமுடன் இருக்கிறார்)

 

- துரை குணா

 

'பசு பாதுகாப்பு'

 'பசு பாதுகாப்பு' என்ற போர்வையில் எவனாவது வம்பிழுத்தால் தெரிந்து கொள்ளுங்கள் அவன்தான் முதல்தர திருடன் என்பதை...