Followers

Tuesday, November 16, 2021

ஆணும் பெண்ணும் சமமல்ல....


 


ஆணும் பெண்ணும் சமமல்ல.... ஒவ்வொருவருக்கும் தனித் தனி சிறப்புண்டு. சுதந்திரம் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆன் இடும் கட்டளையை உறுதிப் படுத்தும் அறிவியல் ஆய்வுகள்.


மொழி செயல்பாடுகள் –language function

காட்சி இடம் சார் செயல்பாடுகள்- visual –spatial function

சமூக அறிவாற்றல் திறன்- social cognition skills

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் முறை- empathy

உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல்-emotion and perception

தேடுதல் மற்றும் பரபப்பு- seeking and sensation

இவ்வாறு அனைத்து செயல்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.

ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும் பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வேறு வேறாக உள்ளது.

 

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.

-
குர்ஆன் 4:32

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பத்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-
குர்ஆன் 4:34


குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.(4:7)

ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-
குர்ஆன் 4:124


1 comment:

Dr.Anburaj said...

இன்று ஒரு கிறிஸ்தவ மற்றும் இந்து குடும்ப திருமணத்தில் கலந்து கொண்டேன். மிகவும் வருத்தப்பட்ட விசயம் இளம் பெண்கள் ரவிக்கை அணிவது மிகவும் ஆபாசமாக உள்ளது. முக்கால் வாசி முதுகை காட்டிக் கொண்டு நிறைய பெண்கள் உடை அணிந்திருந்தார்கள். அனைவருக்கும் கவர்ச்சி கன்னியாக தங்களைக் காட்டிக் கொள்ள துடிப்பதுதெரிகிறது. கைகேயியை தசரதன் பார்க்க வந்தபோது தலைவிரிஅ கோலமாக இருந்ததைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தான் என்று இராமாயாணத்தில் உள்ளது.ஆனால் இன்று அதுதான் நாகரீகமாக உள்ளது. இன்றைய இந்து வாலிப பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் இராமாயாணமும் தெரியாது. விவேகானந்தரையும் தெரியாது. கற்றுக்கொடுக்க நாதியில்லை.மதச்சார்பற்ற கொள்கை ஹிந்து அழிப்பு கொள்கையாக உள்ளது. ஆனால் குடும்ப வாழ்வை சீரழித்து மனிதனை மிருகம் ஆக்கி விடும். அண்மை காலத்தில் செக்ஸ்குற்றங்கள் . . .அது தொடா்ந்து விவாகரத்து . . .கொலைகள் . . .குழந்தைகள் அநாதையாதல் . . . . . சிறுகுழந்தைகள் பாலியல் வக்கிரங்களுக்கு உட்படுத்தப்படுதல் . . .பள்ளிகளில் கல்லூரிகளில் பாலியில் சீ்ண்டலில் ஈடுபடும் ஆசிரியர்கள் . . .என்று கடுமையான பண்பாட்டு சீரழிகளை நாம் காண்கிறோம். ஆனால் அரசு மட்டும் தண்டனை சட்டங்களை மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறது.ஏராளமாக இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் ஆகி 10 ஆண்டுகள் சிறைவாச தண்டனை பெற்று தன்னையும் , குடும்பத்தையும் ..பாழாக்கி வருகின்றனா். இதற்கு காரணம் திரைப்படங்கள்தாம். சினிமா பைத்தியம் என்று ஒரு படம்இருக்கிறதாம். அதில் சில காட்சிகள் நல்லமுறையி் அமைக்கப்பட்டுள்ளதாக கேள்ளிப்பட்டேன். அரசே . . ...ஆதீனங்களே . . .மடாதிபதிகளே. . .சமூக ஆர்வலா்களே. . . . . .இளைஞர்கள் கற்புநெறியோடு வாழ பயிற்சி கொடுங்கள். . . .
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீற பிற எனன்றகுறள் படிப்பதற்கு மட்டும் அல்ல. . .. இளைஞர்களை காப்பாற்றுங்கள்.

மாண்புமிகு சேகா் பாபு அவர்களே ஹிந்து இளைஞர்களை கால்பங்கு ரவிக்கை பெண்களிடமிருந்து காப்பாற்றுங்கள்.