உம்ரா பயணம் நல்ல முறையில் முடிந்தது....
அல்ஹம்துலில்லாஹ் - எல்லா புகழும் இறைவனுக்கே!
மதியம் 2.30 க்கு ரியாத்திலிருந்து புறப்பட்டு இரவு
ஒரு மணிக்கு மதினா சென்றடைந்தோம். கிப்லதேன்(இரண்டு கிப்லா) பள்ளிசென்று தொழுது விட்டு பிறகு கூபா பள்ளிக்குச் சென்றோம். அதன் பிறகு
பத்ர் போர் நடந்த இடம் மற்றும் அங்கு அடக்கப்பட்டுள்ள நபித் தோழர்களின் அடக்கத் தலத்தையும்
பார்வையிட்டு அவர்களுக்காக பிரார்த்தித்தோம். அங்கு ஒரு அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார்கள்.
இறந்த அந்த நபித் தோழர்களிடம் எதையும் கோரிக்கை வைக்கலாகாது. கோரிக்கை பிரார்த்தனை
செய்வது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே என்ற அறிவிப்பு பலகை. ஆனால் நமது ஊர்களில் பல சமாதிகளை
இன்றும் வழிபட்டுக் கொண்டிருக்கும் அப்பாவிகளை நினைத்துப் பார்த்தேன்.
அதன் பிறகு மஸ்துந் நபவிக்கு சென்றோம். அங்கு இரண்டு
ரக்அத் தொழுது விட்டு குர்ஆன் ஓதிக் கொண்டு பிரார்த்தனை புரிந்து கொண்டு அமர்ந்திருந்தோம்.
அதன் பிறகு பஜ்ருடைய நேரம் வரவே தொழுது விட்டு
மெக்கா நோக்கி பயணித்தோம். நபிகள் நாயகம் அவர்களுக்கு சலாம் சொல்லி விட்டு கிளம்பினோம்.
அடக்கத் தளத்தை பார்வையிட தனி ஆப்பில் சென்று அனுமதி வாங்க வேண்டும். கூட்ட நெரிசலை
தவிர்க்க இந்த ஏற்பாடு. இங்கும் நபிகள் நாயகத்தை நோக்கி
யாரும் பிராரத்தித்தால் அவர்களை இறைவனிடம் சென்று பிரார்த்திக்குமாறு காவலர்கள் அறிவுரை
வழங்குவர். அந்த அளவு இறைவனின் தனித்துவம் கெட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.
இங்கு நமது ஊரையும் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம். காலை உணவு பொங்கல் சாம்பார் சட்னி
பேரூந்துக்கு வந்தது. அதை சாப்பிட்டு விட்டு மெக்கா நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.
அடுத்து ஜூம்ஆ தொழுகை கஃபாவில் கிடைக்க வேண்டும்
என்பதற்காக சிரிய நாட்டு ஓட்டுநர் மிக திறமையாக பேருந்தை உரிய நேரத்தில் ஹோட்டலில் கொண்டு சேர்ப்பித்தார். அங்கிருந்து உடன் கிளம்பிச்
சென்று கஃபா சென்று அடைந்தோம். ஷேக் சுதைஸ் குத்பா ஓதி தொழுகை நடத்தினார். அதன் பிறகு
உடன் உம்ராவை முடித்தோம். சரியான பசி. அதோடு சென்று தலை முடி இறக்கி விட்டு ஹோட்டலுக்கு
வந்து குளித்து விட்டு அமர்ந்தோம். கோழி பிரியாணி தயாராக ஹோட்டலில் இருந்தது. அதனை
சாப்பிட்டு விட்டு நல்ல உறக்கத்தை போட்டோம்.
எங்கள் ரூமில் ஒரு சூடானியும் தங்கினார். மொழி, நாடு, இனம், நிறம் அனைத்தும் வேறுபட்ட
சூடானியும் மதராஸியும் இஸ்லாத்தால் இணைகிறோம். நான் செய்யும் அனைத்து காரியங்களையும்
உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சூடானியும் செய்கிறான் என்றால் இங்கு தான் நபிகள் நாயகத்தின் வழி காட்டுதலிலன் வீரியம் புரியும்.
ஒரே மதம் என்று சொல்லும் நமதூர் இந்து மதத்தில்
உள்ள சாதிக்கொரு வழிபாடு, சாதிக்கொரு பண்பாடு என்ற நிலை இங்கிருக்கவில்லை. இஸ்லாத்தினால்
கிடைத்த மிகப் பெரும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.
பேரூந்தில் பயணிக்கும் போது உம்ரா எவ்வாறு செய்ய
வேண்டும்: வணக்க வழிபாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற செய்திகளை சகோதரர் நூஹ் அல்தாஃபி
அவர்கள் அழகிய முறையில் தமிழில்விளக்கி வந்தார். சனிக்கிழமை காலை தொழுகையை கஃபாவில்
முடித்து விட்டு இட்லி சட்னி சாம்பார் ரூமில்
சாப்பிட்டு விட்டு பேரூந்தில் அமர்ந்து ரியாத் நோக்கி பயணித்தோம்.
முக நூலில் கோரிக்கை வைத்த அனைவரின் பிரார்த்தனைகளையும்
எனது பிரார்த்தனையோடு சேர்த்துக் கொண்டேன்.
உம்ரா மற்றும் ஹஜ் பாக்கியம் கிடைக்காத மற்ற சகோதர சகோதரிகளுக்கும் வருங்காலங்களில்
தக்க வசதிகளை இறைவன் ஏற்படுத்திக் கொடுப்பானாக!
.
4 comments:
ஒரே மதம் என்று சொல்லும் நமதூர் இந்து மதத்தில் உள்ள சாதிக்கொரு வழிபாடு, சாதிக்கொரு பண்பாடு என்ற நிலை இங்கிருக்கவில்லை. இஸ்லாத்தினால் கிடைத்த மிகப் பெரும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.
-----------------------------------------------------------------------------
அரேபிய ஆதிவாசிகளின் மதம் இசுலாம் இது உலகிற்கு பேரழிவைத்தான் தந்துள்ளது.
உமா். . . .உதுமான் . . . அலி. . . . அனைவரும் நபி தோழா்கள் . . .நபியின் மாமனாா் . . . மருமகன்கள் . . . அனைவரும் . . . சக முஸ்லீம்களால் கொல்லப்பட்டனா்.. . .இன்றும் 100 மேற்பட்ட பிரிவினா் ஒருவரை ஒருவா் அழிக்க. . .காத்திருக்கின்றனா். காபீர்களை அழிக்க நபி வந்தாா் என்றும் பிரச்சாரம் செய்து இலங்கையில் தேவாலயங்களில் குண்டு வைத்து பயங்கர நாசம் செய்தார்களே . . .அனைவரும் அரேபிய ஆதிவாசிகள் மதத்தைச் சோ்ந்தவர்கள்தானே.
சம்மா பொய்களை பதிவிட வேண்டாம்.
முஸ்லீம்கள் மடடும் வாழும் நாடுகள் தங்களுக்கென்று பொது வேதம் பொது நபி . . .பொது வழிபாட்டு முறை . .பொது சட்டமுறைகள் . . .இருப்பதை சிலாகிக்கும் சுவனப்ிரியன் அவர்களை அனைவரும் பொது பிரதமரை. . ..ஜனாதிபதியை . .பொது அரசை தோ்வு செய்து அமைக்க முடியவில்லையே ? இந்தியாவில் ஹிந்து இந்தியர்கள் ஆயிரம் வேறுபாடுகளைத்தாண்டி ஒரு அரசியல் தலைமையில் வாழ்கின்றோமே.யாா் சிறந்தவா்கள் ?யாா் பண்பாடு மிக்கவர்கள் ?
ஹிந்து இந்தியர்கள்தாம்.
ஹிந்து இந்தியர்கள்தாம்
ஹிந்து இந்தியர்கள்தாம்
ஹிந்து இந்தியர்கள்தாம்
ஹிந்து இந்தியர்கள்தாம்
ஹிந்து இந்தியர்கள்தாம்
ஹிந்து இந்தியர்கள்தாம்
ஹிந்து இந்தியர்கள்தாம்
ஹிந்து இந்தியர்கள்தாம்
வட இந்தியாவில் இரண்டு முக்கியமான இஸ்லாமியப் பிரிவுகள் இருக்கின்றன. முதலாவது பிரிவு அஷ்ரஃபிக்கள். இரண்டாவது பிரிவு பாஷ்மெந்தாக்கள்.இந்த அஷ்ரஃபிக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுடன் இந்தியாவிற்கு வந்தவர்களின் சந்ததிகள். பெரும்பாலும் ஈரான், ஆப்கானிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறிவர்கள். இதன் காரணமாகவே இந்திய முஸ்லிம்களை விடத் தங்களை உயர்ந்தவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள். பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் அஷ்ரஃபிக்கள்தான். ஒவைசியின் முன்னோர் இரானிலிருந்து வந்தவர்கள். முகலாயர்கள், பாமினி சுல்தான்கள், ஹைதரலி, திப்புசுல்தான் இன்னபிறர் அனைவருமே வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறிவர்களின் வாரிசுகள்தான்.
அரசியல் கட்சிகளில் இருக்கும் அஷ்ரஃபிக்களுக்குக் கணக்கே இல்லை. குறிப்பாக காங்கிரஸ் போன்ற கட்சிகளில் அவர்கள் முக்கியமான இடங்களை வகிக்கிறார்கள். சினிமாத்துறையிலும் அவர்களின் ஆதிக்கமே அதிகம். ஜாவேத் அக்தர், சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் என ஒரு பெரும் அஷ்ரஃபி பட்டாளமே இருக்கிறது. எல்லா முக்கியப் பதவி வகிப்பவர்களும் அஷ்ரஃபிக்கள்தான். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மட்டுமே "ஆளப் பிறந்த முஸ்லிம்கள்".
அஷ்ரஃபி அல்லாத ஒரு முஸ்லிம் எவ்வளவு பெரிய ஆளாக இந்தியாவில் உயர்ந்தாலும் அவரை மேற்படி அஷ்ரஃபிக்கள் மதிக்கவே மாட்டார்கள். உதாரணம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம். அஷ்ரஃபிக்களைப் பொறுத்தவரையில் கலாம் ஒரு அடிமை, பாஷ்மெந்தா இந்திய முஸ்லிம் மட்டும்தான்.
வட இந்தியாவில் பெரிய அரசியல் தலைவராக இருக்கும் பாஷ்மெந்தா முஸ்லிமை நீங்கள் அனேகமாகப் பார்க்கவே முடியாது. அப்படி எவனாவது இருந்தால் அவனை அஷ்ரஃபிக்கள் ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள். அவர்களின் முன்னோர்கள் ஹிந்துக்களை அடிமைப்படுத்தி அவர்களை வாள்முனையில் முஸ்லிமாக மதம் மாற்றியதால் இந்திய முஸ்லிம்கள் அவர்களுக்கு அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் அவர்கள்.
மறுபக்கம் பாஷ்மெந்தா முஸ்லிம்கள் வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்ட முன்னால் ஹிந்துக்கள். இன்றுவரை அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் என்பது எதுவுமில்லை. கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் அவர்கள்தான். அவர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, வேண்டும்போது கலவரம் ஏற்படுத்தி சுகவாழ்வு வாழ்கிறவர்கள் அஷரஃபிக்கள்.
இதுதான் அடிப்படை வித்தியாசம். இதனை ஹிந்துக்கள் அறிந்து கொள்ளுவது அவசியம்.
பிஹார், வங்காளம் போன்ற பகுதிகளில் வாழும் பாஷ்மெந்தாக்களில் பெரும்பாலோர் முன்னாள் பவுத்தர்கள். அவர்களில் ஹிந்துக்களும் உண்டு. உத்திரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் வசிக்கிற பாஷ்மெந்தாக்கள் முகலாயர்களால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் ஹிந்துக்கள்தான். பாஷ்மெந்தாக்களில் கடுமையான ஜாதி வேற்றுமைகளும் உண்டு. ஷியா, சுன்னி, போரா எனப் பல இஸ்லாமியப் பிரிவுகளும் உண்டு. அவர்களுக்குள்ளேயே கலவரங்களும் உண்டு. அதனையெல்லாம் தூண்டிவிடுபவர்கள் அவர்களின் ஆண்டைகளான அஷ்ரஃபிக்கள்தான்.
தமிழக, கேரள முஸ்லிம்கள் வேறுவகையானவர்கள் என்றாலும் அஷ்ரஃபிக்களைப் பொறுத்தவரையில் அவர்களும் அடிமை பாஷ்மெந்தாக்கள் மட்டும்தான்.......2
2
தமிழக, கேரள முஸ்லிம்களிடையேயும் சாதி வேறுபாடுகள் உண்டு. மரைகாயர், ராவுத்தர் போன்ற பிரிவுகளும் உண்டு.
ராவுத்தர்கள் அடிப்படையில் தமிழர்களில்லை. ராஜஸ்தானிலிருந்து முகலாயப் படைகளுடன் தமிழகத்திற்கு வந்த "ராவுத்" சாதியினர் பின்னர் ராவுத்தர்களானார்கள் (ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தில் பிறந்திருந்தால் பிபின் ராவுத்தராகியிருப்பார்!). மரக்கலம் ஓட்டியவன் மரைக்காயன் இன்னபிற.
கேரள மலபார் முஸ்லிம்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் இலங்கைத் தமிழர்கள் என்பது பலருக்குத் தெரியாத செய்தியாக இருக்கலாம். இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த மீனவ "முக்குவர்" இனத்தவர்கள் தங்களின் முத்துக்குளித்தல் தொழிலுக்கு போர்ச்சுக்கீசியர்களினால் உண்டாகிய அச்சுருத்தலின் காரணமாக இன்றைய மலபார் பகுதியில் சென்று குடியேறினார்கள். முக்குவர்களின் முக்கியத் தொழில் கடலில் மூழ்கி முத்தெடுப்பது. அவர்கள் பலர் பின்னர் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள்.
மலப்புறம் முஸ்லிம்களில் இன்னொரு பகுதி முன்னாள் ஹிந்து நாயர்கள். திப்புசுல்தானினால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். மீதியுள்ளவர்கள் அரேபிய நாடுகளில் இருந்து குடியேறி, உள்ளூர்ப் பெண்களை மணந்த "மாப்பிள்ளைகள் அல்லது மாப்ளாக்கள்". அவர்களே இன்றைக்கும் கேரள அஷ்ரஃபிக்கள். அவர்கள் சொல்லே இன்றைக்கும் உள்ளூர் அடிமைகளான பாஷ்மெந்தாக்களின் வேதம்.
Post a Comment