அருமையான புரிதல்.
இந்த சாமியார் கூறுகிறார்....
குர்ஆனில்(10:99),
உம்முடைய இறைவன் நாடி இருந்தால்
பூமியில் உள்ளவர்கள் ஓரிறை நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.
அனைவரும் நம்பிக்கை கொள்ள
வேண்டும் என்று நீங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.
என்று உள்ளது.
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சனம் செய்பவர்கள்
முதலில் குர்ஆனில் என்ன சொல்லப்பட்டுள்ளது
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நிருபர்: தீவிரவாதிகளாக முஸ்லிம்கள்
ஏன் ஆகிறார்கள்?
சாமியார்: எந்த மத தர்மமும்
தீவிரவாதத்தை போதிப்பதில்லை.
இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறது
என்று குர்ஆனில் எங்கேயாவது
உங்களால் காட்ட முடியுமா?
குர்ஆனை படித்து பார்த்து
பிறகு விமர்சனம் செய்யுங்கள்.
ஒரு மனிதரை கொலை செய்வது,
மொத்த மனிதர்களை கொலை செய்வது போன்றது என்று இஸ்லாம்
கூறுகிறது.
அப்படி இருக்க தீவிரவாதம்
போதிக்கப்படுகிறது என்று எப்படி கூறுவீர்கள்.
நிருபர்: நீங்கள் ஒரு சாமியார்
குர்ஆன் ஓதுகிறீர்களா?
சாமியார்: ஆமாம் இன்னும் நோன்பு
கூட வைப்பேன்
ஒன்றும் தவறில்லையே.
நிருபர்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது
என்று சொல்கிறார்களே?
சாமியார்: இஸ்லாம் வாளால்
பரப்பப்பட்டது என்றால் முஹம்மது நபி அவர்கள், கல்லால் தாக்கப்பட்டு கால் வரை ரத்தம் வடிய தாக்குதல் நடத்திய
மக்கள் மீது,
ஆட்சியை கைப்பற்றிய அன்றைய
காலமே மெக்கா,மதினா நகரத்தை வாளால் காலி
செய்திருப்பார்கள், அல்லது வாளால் இஸ்லாத்தை ஏற்க
சொல்லி இருப்பார்கள்.
அப்படி செய்யவில்லை,
இஸ்லாத்தை ஏற்காத மக்கள் அப்போதே இருக்கத்தான் செய்தார்கள்.
இஸ்லாம் வளர்ந்தது குர்ஆனின்
போதனைகள் மற்றும் முஹம்மது நபி அவர்களின் நற்குணங்கள் காரணமாக.
மைக்கை கொண்டு வந்து கேள்விகள்
கேட்பதை விட
குர்ஆனை படித்து விட்டு வாருங்கள்.
என்று அழகான பதிலை தருகிறார்
இந்த சாமியார்.
No comments:
Post a Comment