Followers

Sunday, July 12, 2026

"கீழடிக்குச் சவுக்கடி"

 




"கீழடிக்குச் சவுக்கடி"

 

கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிறுவிடும் கீழடியின் தொல்லியல் ஆய்வறிக்கையை, இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை.

அவ்வறிக்கை "முழுமையற்றது" என்று தொல்லியல் துறையின் 'மதிப்பீட்டுக் குழு' கருத்துக் கூறியதை அடுத்து, அதில் திருத்தம் செய்யுமாறு, கீழடி, தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றியத் தொல்லியல் துறை வற்புறுத்தி வந்தது.

 

அதற்குப் பதிலளித்த திரு அமர்நாத், "மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையில், ஏற்புடைய காரணங்களும் இல்லை; தகுந்த நியாயமும் இல்லை" என்று கூறியிருந்தார். இதனை அடுத்து இந்தியத் தொல்லியல் துறையின் ஐவர் கொண்ட உள்நிலைக் குழு, கீழடிக் களத்திற்கே சென்று மறு ஆய்வு செய்யும் முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர், ஒன்றிய அரசின் கருத்துப் படி, அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய அரசாங்கம் அமைந்த 50 நாட்களில், ஆர் எஸ் எஸ் இன் முக்கியமான ஐந்து திட்டங்கள், தற்போது நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட உள்ளன. அவையாவன:

 

1.மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு இனி கிடையாது.

 

2.திருப்பரங்குன்றத்தில் இணை அளவைக் கணக்கீடு செய்வதற்கும், அதற்கான கால அவகாசத்திற்கும் அனுமதி.

 

3.கோவையில் சைவ, வைணவக் கோயில்களுக்கு அருகில் கிறிஸ்துவ சர்ச் கட்டுவதற்கு அனுமதி மறுப்பு.

 

4.சிறுபான்மையினரின் நிறுவனத் திட்டங்களுக்கு வெளிநாட்டு நிதி உதவி மறுப்பு.

 

5.பக்ரீத் அன்றோ அல்லது வேறு நாட்களிலோ பசுவதை செய்யக்கூடாது. பசு மாமிசக் கடைகள் திறக்கப்படக்கூடாது.

 

 

தமிழ்நாட்டில், திமுக அரசாங்கம் இருந்த வரை, மேற்கண்ட பாசிச வெறிச்செயல்கள், செயல்படுத்த முடியாமல் இருந்தன. அரசாங்கம், அரசியல் இவையெல்லாம் என்னவென்றே தெரியாதவர்களின் அரசாங்கம் அமைந்தவுடன் அவர்கள் துணையோடு ஒன்றிய அரசும், ஆர்எஸ்எஸும் தாங்கள் நினைத்த "ஒரே நாடு ஒரே மொழித்" திட்டத்தை நிறைவேற்றத் துடித்துக் கொண்டுள்ளனர்.

இனி, கீழடி நாகரீகத்தின் காலம் 2000 க்குக் கீழே இறக்கப்படும். தமிழ் மொழி, தமிழ் எழுத்துருவின் (தமிழி) காலமும் 2600 லிருந்து குறைக்கப்பட்டு விடும். இதை ஏற்காமல் நீதிமன்றம் சென்றால், அங்கே சாம்பு மவன்களும், அரசு வழக்குரைஞர்களும் இதற்காகவே காத்துக் கொண்டிருப்பார்கள்....!..

 

தமிழர்களுக்குச் சாதி, மதச் சண்டைகளுக்கே நேரம் போதவில்லையே............

 

என் செய்வது?

 

தமிழன் என்று சொல்லடா!

தலை குனிந்து நில்லடா!

 

முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

 

No comments: