Followers

Thursday, March 03, 2022

மாணவர் பேட்டி

 ''மோடி அரசு செய்தது நாங்கள் வந்த பஸ்ஸில் இந்திய கொடியை ஒட்டியது மட்டுமே.

ஏஜென்சி மூலம் பஸ் ஏற்பாடு செய்துகொண்டது நாங்கள்.
அமைச்சர்கள் ஷோ காட்டுகிறார்கள்.

உக்ரைன் உள்ளே மாட்டிக்கொண்டு இருப்பவர்களிடம் மீட்புப் பணியை செய்யச்சொல்லுங்கள். ''

- மாணவர் பேட்டி



ரியாத்தில் இறந்த சகோதரரின் நல்லடக்கம்..

 

ரியாத்தில் இறந்த சகோதரரின் நல்லடக்கம்...

 

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.

 

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச்  சேர்ந்த சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் மாரடைப்பால் கடந்த திங்கட்கிழமையன்று இறந்து விட்டார். இன்று 03-03-2022  அல்ராஜ்ஹி பள்ளியில் தொழ வைக்கப்பட்டு நஸீம் மையவாடியில் அவரது நல்லடக்கம் நடந்தது. இவரைப் போலவே பத்து இறந்த உடல்கள் வரிசையாக கொண்டு வரப்பட்டன. இந்தியன், பாகிஸ்தானி, சவுதி, எகிப்து என்று வரிசையாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பெருமளவு நன்மை இருப்பதால் சவுதிகளும் நம் கூடவே வேலை செய்வது நெகிழ்ச்சியாக இருந்தது. ஏழை, பணக்காரன், கருப்பன், சிகப்பன் அரபியன் அரபியன் அல்லாதவன் என்ற எந்த பாகுபாடும் காட்டப்படாமல் ஒன்றாக தொழுக வைக்கப்பட்டு வரிசையாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இறந்த அந்த உடலோடு நானும் ஆம்புலன்ஸில் மையவாடி வரை பயணித்தேன். இது ஒரு பயம் கலந்த புதிய அனுபவம்..

 

இறந்த சகோதரர் ஹாஜா மைதீன் ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டட்டாக பணி புரிந்து வந்துள்ளார். திருமணத்துக்காக பெண்ணும் நிச்சயம் செய்து வைத்துள்ளார்கள். இறைவனின் அழைப்பு எந்த வயதிலும் வரலாம்: அதற்காக நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இது போன்ற இறப்புகளின் மூலம் நாம் படிப்பினை பெறுவோமாக.... 

 

ஜனாஸா தொழுகை:

யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கிராஅத் நன்மையுண்டு யார் அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கிராஅத்கள் நன்மை உண்டென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராஅத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது அதற்கவர்கள் ”இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள்.


 அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம்)

 


 

 

 

Tuesday, January 25, 2022

சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் தாய்லாந்த் பிரதமரை ரியாத் அரண்மனையில் வைத்து இன்று சந்தித்தபோது

 சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் தாய்லாந்த் பிரதமரை ரியாத் அரண்மனையில் வைத்து இன்று சந்தித்தபோது




Saturday, January 22, 2022

பார்ப்பனியம் - தேவதாசிமுறை

 பார்ப்பனியம் - தேவதாசிமுறை

பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை அடித்து நொருக்கியிருக்கிறது.....

படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்....



Thursday, January 20, 2022

U.Pயில் பசுமாடுகள்

 

U.Pயில் பசுமாடுகள் உணவின்றி இறந்து கிடக்கின்றன அந்த இடமே துர்நாற்றம் வீசுகிறது...!!!

 

கோமாதா எங்கள் தாயை போன்றது பசு கடவுளுக்கு சமம் என்று மனிதனை வேட்டையாடிய பாஜக பயங்கரவாதிகள்...

 

கோசலாவில் அடைத்து வைத்த மாடுகளை உணவின்றி கொடூரமான நிலையில் கொன்றுள்ளனர்...!!!!

 

இவர்களுக்கு பசு

என்பது புனிதம் அல்ல...

 

அது ஓட்டுக்காக மக்களை ஏமாற்றும் செயல் என்பது இப்போதாவது தெரிகிறதா...??? 😪😪