Followers

Saturday, February 24, 2007

ஜோதிட நம்பிக்கையுள்ளவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது!

ஜோதிட நம்பிக்கையுள்ளவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது!

இன்று பெரும்பாலான மக்களுக்கு தங்கள் நட்சத்திரம், ராசி, லக்னம் எல்லாம் தெரிந்திருக்கிறது. அவ்வப்போது ஏதாவது ஒரு ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தை நீட்டி பலன் கேட்டு வருகின்றனர்.

சில பணக்காரர்கள் பேமிலி டாக்டர் போல பேமிலி ஜோதிடர்களையே வைத்துள்ளனர். அவர்களைக் கலந்தாலோசித்தே காரியங்களைச் செய்கின்றனர். பெரும்பான்மை மக்களைத் தன் பிடியில் வைத்திருக்கும் இந்த ஜோதிடம் என்பது உண்மையா? இனி வருபவற்றை ஆழ்ந்து படித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியது நீங்கள்தான்.

உங்கள் ராசி என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது உண்மையில் உங்கள் ராசி இல்லை. எப்படி? உங்கள் பிறப்பின் போது சூுரியன் எந்த ராசி சின்னத்தில் சஞ்சரிக்கிறானோ அந்த சின்னத்தின் இயல்புகளைப் பெறுகிறான் என்பது ஜோதிட நம்பிக்கைக் கொள்கை.

விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து சந்திரனும் இதர கிரகங்களும் சூுரியனைச் சுற்றி வருகின்றன. இந்த விண்வெளிப் பாதையை 'சோடியாக்' என்றழைக்கின்றனர். இந்த பாதையைக் கடக்க சூுரியனுக்கு ஓர் ஆண்டு காலம் பிடிக்கிறது. இதைப் பழங்கால ஜோதிடர்கள் 12 பிரிவுகளாக்கினர். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு மாதமாகும். மார்ச் 21ந்தேதி வசந்த காலம் ஆரம்பம் ஆகும் போது மேஷத்தில் சூுரியன் சஞ்சரிப்பான். இதை மேலை நாட்டில் 'ஏரிஸ்' என்பர். இந்த ஆடு போன்ற சின்னத்தில் சூுரியன் இருக்கும் போது பிறந்த நபர் ஆட்டுக்குரிய குணாதிசியங்களுடன் இருப்பார் என்பதும் ஜோதிடக் கோட்பாடு. இந்த ஆட்டைப் போலவே சூுரியன் சஞ்சரிக்கும் ஒவ்வொரு ராசிக்கும் அந்தந்த நட்சத்திரங்கள் ஏறத்தாழ பிரதிபலிக்கும் ஒரு உருவத்தை சின்னமாக அளித்திருக்கின்றனர். இப்படி அளிக்கப்பட்ட சின்னங்கள்தான் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற ராசிகள்.

இப்படி பல்வேறு சின்னங்களில் சூுரியன் இருக்கப் பிறந்தவர்கள் இன்ன இன்ன குணாதிசியங்களுடன் இருப்பர் என்று வரையறுத்திருக்கின்றனர். இந்த விண்வெளி கிரகங்களுக்கு ஆரம்பத்தில் இருந்த வேகமும் சுறுசுறுப்பும் இப்போது இல்லை. தங்கள் சுழற்ச்சியில் வேகம் குறைந்து சற்று சோம்பேறியாகி விட்டன. புவியின் சுழற்ச்சியில் மந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். சூுரியனும் தன் பழைய வேகத்திலிருந்து 'டல்' லாகவே சுற்றுகிறதாம் இப்போது சூுரியன் தன் சுழற்ச்சியில் ஒரு மாத காலம் பின் தங்கி இருக்கிறதாம். ஆக முந்தய கணக்குப்படி மார்ச் 21 ஆம் தேதி வசந்தகாலம் ஆரம்பிக்கும்போது சுரியன்() இப்போது ஆட்டில்(மேஷத்தில்) இருக்க மாட்டான். அதனுடைய முந்தய ராசியான மீனில்(மீனத்தில்) இருப்பான்.

சிம்மத்தில் பிறந்த ஒருவன் சிங்கம் போன்ற வீரத்துடன் இருப்பான் என்பர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு 'லியோ' என்று சொல்லப்படும் சிம்ம ராசிக்கு அது சரியாக இருக்கலாம். இப்போது 'சிம்மம்' என்று நாம் நினைப்பது உண்மையில் 'நண்டு' என'கிறார் பால் கூடற்க் என்ற பிரபல பிரெஞ்சு வானியல் நிபுணர். 'நண்டு' என்பது சிம்மத்திற்கு முந்தய ராசியான கடகத்தைக் குறிக்கும். எனவே இன்றைய கிரக சஞ்சாரப்படி நமது ராசிகளே அடியோடு மாறி விடுகின்றன.

நமது செல்வம், ஆரோக்கியம், உயர்வு, தாழ்வு ஆகியவற்றை சந்திரன் சூுரியன் உள்ளிட்ட இதர கிரகங்களே நிர்ணயிப்பதாகச் சொல்லப்படுகிறது. கிரகங்களில் குரு, புதன், சுக்கிரன் ஆகியவை நன்மை தரக் கூடிய சுப கிரகங்கள் என்றும் சனி, செவ்வாய் ஆகியன தீமை தரக் கூடிய கிரகங்கள் என்றும் ஜோதிடர்கள் சொல்லி வருகின்றனர். ஜோதிடர்கள் முன்பு வகுத்த கோட்பாடுகள் எல்லாம் இந்தப் பழைய கிரகங்களின் அடிப்படையில்தான்.

ஆனால் 1781-ல் யுரேனஸ், 1946-ல் நெப்டியுன், 1930-ல் புளுட்டோ போன்ற கிரகங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கிரகங்கள் தங்கள் சுப, அசுப பார்வைகளை விசிப் பலன் வழங்குமே! அவற்றை எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்வது?

என்னமோ நீங்களாச்சு உங்கள் ஜோதிட நம்பிக்கையாச்சு!
-நன்றி வாரமலர்

ஜோதிடமும், வாஸ்துவும், இஸ்லாமும்

நம்முடைய முன்னேற்றத்துக்கு இறைவனின் கருணையும், கடுமையான உழைப்பும், திட்டமிடலுமே! அதை விடுத்து படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் மூழ்கி கிடப்பது வேதனையிலும் வேதனை. நம் நாட்டின் ராக்கெட் டை ஏவுவதிலிருந்து, சமீபத்தில் நடந்த திமுக மாநாடு வரை ஜோதிடர்களின் ஆலோசனைப் படி ராகு காலம் பார்த்து நடத்தப்படுகிறது. இப்படி நேரம் காலம் பார்த்து நடத்துபவர்கள் தங்களை பகுத்தறிவாதிகள் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். இந்த ஜோதிடமும் அதைச் சார்ந்த வாஸ்து சாஸ்திரம் முதலானவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? என்றால் அதுவும் இல்லை.

மானசரா, மயாமாதம், மனுஷாவியா(ஏதாவது புரிகிறதா) போன்ற நூல்களின் அடிப்படையில்வாஸ்து சாஸ்திரம் கடை பிடிக்கப் படுவதாக அறிய முடிகிறது. வாஸ்து பற்றி விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தால் ரூ அய்ந்து கோடி வழங்கப்படும் என்று ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் உள்ள ஜன விஞ்ஞான வேதிகா (ஜே.வி.சி) நிறுவனம் அறிவித்துள்ளது. இது பற்றி அதன் அமைப்பாளர் டி.வி.ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால்சிலர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். 'ஆஸ்துமா' மருத்துவத்துக்கு மீன் மருத்துவம் என்பதும் இது போன்ற செயல் ஆகும். ஒரு கட்டிடம் என்பது கட்டிட அமைப்பின் முறைப்படி கட்டப்பட வேண்டுமே தவிர 'வாஸ்து' முறைப்படி அல்ல. வாஸ்து பற்றி விஞ்ஞான ரீதியாக நிரூபித்தால் ரூ5 கோடி வழங்கத் தயார்' என்று கூறினார்.
தினத்தந்தி 20-6-2005

இது ஒரு புறம் இருக்க முஸ்லிம்களிலும் ஒரு சிலர் ஜோதிடத்திலும், சூன்யத்திலும் நம்பிக்கை வைத்து தங்களின் வாழ்நாளை வீணாக்கி வருகின்றனர். தாயத்து தகடுகள் என்று எழுதுபவருக்கே புரியாத மொழியில் எதை எதையோ எழுதி வைத்து, அதை வீடுகளில் தொங்க விடுகிறார்கள். உடம்பில் தாயத்தாக கட்டிக் கொள்கிறார்கள். 786 என்ற எண் புனிதமானது என்று எண்ணுகிறார்கள். (ஒரு சினிமாவில் எதிரி சுடும் போது ரஜினி கழுத்தில் கிடக்கும் 786 என்ற டாலர் அவர் உயிரை காப்பாற்றும்) பத்திரிக்கைகளில் வரும் ராசி பலனில் நம்பிக்கை வைக்கிறார்கள். இப்படியான பல தவறான நம்பிக்கைகளில் முஸ்லிம்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். இது போன்ற நம்பிக்கைகளைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

முகமது நபி கூறுகிறார், 'எவன் ஜோதிடன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முகம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தை நிராகரித்தவன் ஆவான்'ஆதாரம்: அஹமத்

பத்தரிக்கைகளில் வரும் ராசி பலன்களில் நம்பிக்கை வைப்பதும் இந்த வகையை சேர்ந்ததுதான். அதிலுள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் அமைந்த வான சாஸ்திரங்களை ஒருவன் நம்பினால் அவனும் இறை மறுப்பாளன் ஆகிறான். இதைப்பற்றி முகமது நபி கூறும் போது,

'இறைவனின் அருளாலும், அவனுடைய கருணையாலும்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறைவனை நம்பியவர் ஆவார். இன்னின்ன நட்சத்திரங்களால்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறை நிராகரிப்பாளரும், நட்சத்திரத்தையே வணங்கியவராவார்' என்றார்.ஆதாரம்: புகாரி

'யார் தாயத்தைக் கட்டி தொங்க விட்டுக் கொள்கிறாரோ திண்ணமாக அவர் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்' என்பது நபி மொழி.அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்நூல்:அஹ்மத்

'சூன்யக்காரன் எங்கு சென்றாலும் ஒரு போதும் வெற்றி பெற மாட்டான்' அல் குர்ஆன் (20:69)

ஒவ்வொரு ஊரிலும் சூன்யம் எடுக்கிறேன் பேர்வழி என்று சாமியார்கள், மௌலானாக்கள் என்று பல போலிகளிடம் நகைகளையும் பணத்தையும் இழந்த கதைகள் பத்திரிக்கைகளில் ஏராளம். மறைவான விஷயங்கள் இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அப்படி தெரியும் என்று அவன் வாதிட்டால் இறைவனின் வல்லமையோடு அவன் போட்டி போடுகிறான். இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகள்மணலில் கோடு கிழித்துப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கை ரேகை பார்ப்பது,பீங்கானில் நீர் ஊற்றிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்ப்பது போன்ற பல் வேறு வழி முறைகளைக் கையாள்கிறார்கள். இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 தடவை பொய சொல்பவர்களாகவே இருக்கின்றனர்.இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து நாம் தான் நம் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

22 comments:

ஞானவெட்டியான் said...

அன்பு சுவனப்பிரியன் அவர்களே!
//உங்கள் ராசி என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது உண்மையில் உங்கள் ராசி இல்லை. எப்படி? உங்கள் பிறப்பின் போது சூுரியன் எந்த ராசி சின்னத்தில் சஞ்சரிக்கிறானோ அந்த சின்னத்தின் இயல்புகளைப் பெறுகிறான் என்பது ஜோதிட நம்பிக்கைக் கொள்கை.//

சூரியனை வைத்துக் கணிப்பது அல்ல; சந்திரனை வைத்துக்கணிக்க வேண்டும்.

பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்.
நம் கண்ணுக்குத் தெரியும் கிரகங்கள் பிண்டத்திலுள்ளவை. அதன் குணநலன்களுடன் நம் உடலின் உள்ளே அதே போல் 9 மட்டுமின்றி பல அணுக்கள்(கிரகங்கள்) உள்ளன. அவைகள் உடலின் உள்ளே இருக்கும் கிரகங்கள். அவற்றில் 9 மட்டும் தன் உடலில் செய்யும் மாற்றங்களை உணர்ந்து எழுதியவை கணிய(சோதிட) நூல்கள்.

//வானத்துல இருக்கிற கோள்கள், பூமில இருக்கற அனைவர் மேலேயும் ஒரே விதமாகத் தானே தாக்குது. //

அந்த தாக்கத்தின் விளைவு எல்லோருக்கும் ஒன்றுபோலத்தான். ஒவ்வொருவரின் உடலில் உள்ள கிரகங்களின் தாக்கம் உடலில் செய்யும் மாற்றங்களில் வேறுபாடு உண்டு.

//பின்ன எப்படி வெவ்வேறு பிறந்த தேதியில் இருப்பவர்களுக்கு வெவ்வேறான பலன்கள் ?//

வெவ்வேறு பிறந்த தேதியில் இருப்பவர்களுக்கு வெவ்வேறான நேரத்தில் பிறந்தவர்களுக்கு அவரவர்தம் உடலில் உள்ள கிரகங்களின் சக்தி, விசை அளவு வேறுபடும்.வெவ்வேறான பலன்கள் உண்டாகின்றன.

இவை எம் புரிதல் மட்டுமே.

வடுவூர் குமார் said...

என்னதான் பகுத்தறிந்து பார்த்தாலும்,நடப்பதற்கு கொழுகொம்பு அல்லது தேவையில்லாமல்/எதிர்பாராமல் பிரச்சனை வரும் போது,பலர் இதைத்தான் நாடுகிறார்கள்.
மருத்துவருக்கு Sick Ear என்பது போல் சாதரன மனிதர்களுக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது.
பிரச்சனையே, மனிதனால் எதையுமே முழுவதுமாக புரிந்துகொள்ள முடிவதில்லையே!!

மு. மயூரன் said...

சுவனப்பிரியன்,

சோதிடம் என்பது ஒரு பழங்கால விஞ்ஞானம். கணிப்பு முறை. அதற்கு சூனியத்துக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சூனியம் என்பது கூட பழங்கால விஞ்ஞானம்தான்.

பழங்கால விஞ்ஞானம், தனக்குள்ளே அதீத நம்பிக்கைகளையும் புனிதத்தன்மையதும் கட்டமைத்து வைத்துக்கொண்டிருக்கும். அக்கால அறிவியலின் இயல்பு அதுதான்.

நாம் காலனித்துவ மனனிலையில் சிந்திக்கத்தொடங்கியபிறகு எம்மை ஏதோ வெள்ளைக்காரர்கள் என பாவனை பண்ணிக்கொண்டு எமது விஞ்ஞான முன்னெடுப்புக்களை எல்லாம் ஒரேயடியாக நிராகரித்து ஏளனம் செய்யத்தொடங்கினோம்.


ஆனால் இந்த பெயர்களை பயன்படுத்தி பலர் ஏமாற்றுகிறார்கள்.


சில விஷயங்களை தற்கால தர்க்கவியல் அறிவியலூடாக நிரூபிக்க முடியாது.

அல்லாவையும் கூடத்தான் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கமுடியாது.

குர் ஆனை எழுதியவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக, அதில் நல்ல நோக்கங்களும் இருக்கக்கூடும் இப்[படியான விஷயங்களை தவிர்க்குமாறு பயமுறித்தி இருக்கிறார்கள்.

குர் ஆன் மட்டுமே உலகம் என்றில்லை. அதற்கு வெளியே பெரிய உலகம் இருக்கிறது.

எழுந்தமானமாக பழைய அறிவியல் முனைப்புக்களை போட்டுத்தாக்க முடியாது. அது நாம் பிறந்துவளர்ந்த பின்னணிக்கு செய்யும் அநீதி.

திறந்த மனதோடு இவற்றை அணுகு குற்றங்களை குறைகளை துணிந்து சொல்லி விமர்சிக்கவேண்டும்.
குர் ஆன் போன்ற ஒரு புத்தகத்துக்குள் புதைந்து நின்றுகொண்டு ஒரேயடியாக தூக்கி எறிய முடியாது.

மனத்தொழிநுட்பக்கருவிகள் குறித்தும், மனதை இயக்கி மனதை ஆண்டு செய்யக்கூடிய காரியங்கள் குறித்தும், மனம் சார்ந்த தேடல்கள் குறித்தும் குர் ஆன் எதுவும் பேசவில்லை. ஆனால் கீழைத்தேய மதங்களும் தத்துவங்களும் மனதையும் உடலையும் அவற்றை கட்டுப்படுத்தி ஆள்வதையும் பற்றி மிக ஆழமான தேடல்களை செய்துள்ளன.

இந்துமதம், சைவம், பவுத்தம், தாவோவிசம் எல்லாம் மிக ஆழமாக இதனை செய்துள்ளன.

இந்த தேடல்களை எல்லாம் மேற்கின் ஆபிரகாமிய மதங்கள் பெரிதாக செய்திருப்பதாக அறிய முடியவில்லை. ஆபிரகாமிய மதங்களுள் ஒன்றாகிய இஸ்லாத்தையும் சேர்த்துத்தான்.

நீங்கள் சோதிடத்தை மதத்தோடு இணைத்துப்பார்க்கிறீர்கள். அந்தப்பார்வை தவறானது.

Unknown said...

All are ok. I am in Gulf country. Invariablly all the news paper and magazine carries Astoliogical prediction page. Though religon says some thing dut individual behaves differently.

suvanappiriyan said...

அன்பு ஞானவெட்டியான்!

//சூரியனை வைத்துக் கணிப்பது அல்ல; சந்திரனை வைத்துக்கணிக்க வேண்டும்.//

சூரியன் சந்திரன் இரண்டின் நிலைகளை வைத்தும் இன்னபிற கோள்களின் நிலைகளை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுவதாக நான் படித்துள்ளேன்.

//பல அணுக்கள்(கிரகங்கள்) உள்ளன. அவைகள் உடலின் உள்ளே இருக்கும் கிரகங்கள். அவற்றில் 9 மட்டும் தன் உடலில் செய்யும் மாற்றங்களை உணர்ந்து எழுதியவை கணிய(சோதிட) நூல்கள்.//

அவரவரின் உடலின் தன்மையைப் பொறுத்தே உடற்கூறுகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றுக்கும் கோள்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும்.

//இவை எம் புரிதல் மட்டுமே.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

மு.மயூரன்!

//சூனியம் என்பது கூட பழங்கால விஞ்ஞானம்தான்.//

இந்த மூடப் பழக்கத்தை விஞ்ஞானத்தோடு எதை வைத்து ஒப்பிடுகிறீர்கள். விஞ்ஞானிகள் எங்காவது ஆராய்ச்சி செய்து இதனை நிரூபித்திருக்கிறார்களா?

//சில விஷயங்களை தற்கால தர்க்கவியல் அறிவியலூடாக நிரூபிக்க முடியாது.

அல்லாவையும் கூடத்தான் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கமுடியாது.//

அப்படியானால் நீங்களும் நானும் இந்த அண்ட சராசரம் அனைத்தும் ஒழுங்கமைப்போடு நடைபெற்று வருகிறதே இவை எல்லாம் எந்த சக்தியால் என்று கூற வருகிறீர்கள்? இவை எல்லாம் தனக்குத் தானே தன்னை உருவாக்கிக் கொள்கின்றன என்று சொல்ல வருகிறீர்களா?

//குர் ஆன் மட்டுமே உலகம் என்றில்லை. அதற்கு வெளியே பெரிய உலகம் இருக்கிறது.//

குர்ஆன் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக் கூடாது என்று சொல்ல வந்த ஒரு வழிகாட்டும் வாழ்க்கை நெறி. இந்த காலத்துக்கு அல்லது இந்த நாட்டு மக்களுக்கு இந்த வசனம் பொருந்தவில்லை என்று ஒரு வசனத்தை எடுத்துக் காட்டுங்கள். உங்கள் வாதத்தில் ஓரளவு நியாயம் இருக்கும்.

//எழுந்தமானமாக பழைய அறிவியல் முனைப்புக்களை போட்டுத்தாக்க முடியாது. அது நாம் பிறந்துவளர்ந்த பின்னணிக்கு செய்யும் அநீதி.//

நம் முன்னோர்கள் நமக்கு செய்து விட்டுப் போன நல்ல பழக்கங்களை நாம் பின் பற்றுவோம். அதே நேரம் நமது மூதாதையர்கள் அறியாமையில் எதையேனும் செய்து விட்டு சென்றால் அதையே பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லையே! உதாரணமாக நம் முன்னோர்கள் ஒரே மதமான இந்து மதத்துக்குள்ளேயே ஆயிரம் ஜாதிகளை உருவாக்கி பிரித்து வைத்திருந்தனர். அது இன்று வரை தொடரவும் செய்கிறது. இன்று இது தவறு என்று தெரிந்த நாம் ஜாதீய கோட்பாடுகளை உடைக்க அணி திரள்கிறோமே இதையும் உங்கள் பார்வையில் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம் என்று சொல்வீர்களா!

//இந்த தேடல்களை எல்லாம் மேற்கின் ஆபிரகாமிய மதங்கள் பெரிதாக செய்திருப்பதாக அறிய முடியவில்லை. ஆபிரகாமிய மதங்களுள் ஒன்றாகிய இஸ்லாத்தையும் சேர்த்துத்தான்//

ஆப்ரஹாமுக்கு முன்பு ஆதாமிலிருந்தே மனித குலத்துக்கு இறைச் செய்தி வர ஆரம்பித்து விட்டது. அவ்வாறு வந்த இறைச் செய்திகளில் ஒன்றிரண்டைத்தான் சில மாறுதல்களுடன் நம் இந்திய வேதங்களும், காப்பியங்களும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இது பற்றி முன்பே நான் பல பதிவுகளில் ஆதாரத்தோடு விளக்கியுமிருக்கிறேன்.

suvanappiriyan said...

வடுவூர் குமார் !

//சாதரன மனிதர்களுக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது.
பிரச்சனையே, மனிதனால் எதையுமே முழுவதுமாக புரிந்துகொள்ள முடிவதில்லையே!!//

சாதாரண மனிதன் தனக்கு சிரமம் ஏற்படும்போது இது போன்ற ஜோதிடர்களை நாடிச் செல்வது இயற்கையே! ஆனால் அந்த ஜோதிடர் கொடுக்கும் ஆலோசனைகளால் நிம்மதி மேலும் இழந்து குடும்பத்தவரையே சந்தேகம் கொண்டு தற்கொலையை நாடியவர் எத்தனை பேர். உங்கள் நல் வாழ்வுக்கு ஆலோசனை கூறும் ஜோதிடர் நீங்கள் தட்சணையாகக் கொடுக்கும் 200க்கும 300க்கும் உங்கள் கையை எதிர்பார்ப்பது ஏன்? தன் வாழ்வையே வளப்படுத்திக் கொள்ளத் தெரியாத ஜோதிடர் உங்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்?

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஸ்வேம்!

//Invariablly all the news paper and magazine carries Astoliogical prediction page.//

அனைத்து பத்திரிக்கைகளும் என்பது தவறான தகவல். நான் வேலை செய்யும் சவுதியிலிருந்து வெளியாகும் 'அரப் நியுஸ்', 'சவுதி கெஜட்' போன்ற பத்திரிக்கைகளில் இது போன்ற ஒரு பக்கத்தை நான் பார்த்ததில்லை. எந்த பத்திரிக்கை என்று நீங்கள் பெயர் குறிப்பிடவில்லையே! சவுதி சட்டப்படி கைரேகைப் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது போன்றவை தண்டனைக்குரிய செயல்கள். ஏதோ ஒரு மூலையில் ஒன்றிரண்டு பேர் ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் அரபுகளில் இருந்தால் அந்த நம்பிக்கையை அரசுக்கு தெரியாமல்தான் அவர் செயல்படுத்த முடியும். நான் பழகிய அரபுகள் அனைவருமே ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களாகவே உள்ளனர். எது நடந்தாலும் இறைவன் நாட்டப்படி நடக்கும் என்ற நம்பிக்கையால் அரபுகள் ஜோதிடர்களை நாடுவதில்லை.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

தின மலர். அறிவியல் ஆயிரம்!

கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?
-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார?தினமலர்க் காரருக்கு வேண்டுமானால் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கலாம். சுவனப் பிரியனான எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது தான் அல்லாஹ், இறைவன், கர்த்தர், கடவுள் என்ற பெயர்களுடைய அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய ஒருவன்.

suvanappiriyan said...

'இறைவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் மூலம் இதற்கு உயிரூட்டினான்.செவியுறும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.'

குர்ஆன் : 16 : 65

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது.அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப் பட்ட உணவுக்கும், இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.அருந்துவோருக்கு அது இனிமையானது.'

குர்ஆன் 16 :66 - உண்மையில் இரத்தம் பாலாக மாறுவதில்லை.அறைக்கப் பட்ட உணவுக் கூழுக்கும்,இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்துதான் பால் உற்பத்தியாகிறது என்ற இன்றைய அறிவியல் உண்மையை அன்றே குர்ஆன் சொல்லியிருக்கிறது.

'தேனிக்களின் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயதத்திற்கு இதில் சான்று உள்ளது.'

குர்ஆன் 16 : 69 - பெரும்பான்மையானோர் பூக்களிலிருந்து தேனை எடுத்து தனது கூட்டில் தேனிக்கள் வாய் வழியாக சேமிக்கின்றன.என்று தான் பலரும் நம்பியிருந்தோம். ஆனால் தேனை உறிஞ்சிய தேனீக்கள் அவற்றை உட்கொண்டு ஜீரணித்து பிறக வெளியாக்கும் கழிவுதான் நாம் ருசித்து சாப்பிடும் தேன் என்று இன்றைய விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பை அன்றே இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை இறைவனே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான்.

குர்அன் 13 :3

அவனே பூமியை விரித்தான். மலைகளையும் நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவை பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

குர்ஆன் 13 :3

நான் எடுத்து எழுதியிருக்கும் அறிவியல் உண்மைகள் மிகச் சிலவே! இது போல் பல நூற்றுக் கணக்கான அறிவியல் உண்மைகளை குர்ஆனிலிருந்து எடுக்க முடியும். எவ்வளவு தான் முகமது நபி திறமையாக தன் சொந்த கற்பனையில் இந்த குர்அனை சொல்லியிருந்தாலும் மனிதன் என்ற நிலையில் ஒரு சில இடங்களிலாவது கண்டிப்பாக தவறுகள் வந்திருக்கும்.

G.Ragavan said...

சோதிடம் என்பதும் சூனியம் என்பதும் இரண்டு வெவ்வேறு விதங்கள். இரண்டையும் நாம் நம்பக் கூடாது. ஏ.ஆர்.ரகுமான் கூட தனது தந்தைக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக நம்புகிறார். என்னதான் செய்வது?

தமிழில் சைவ நூல்களை எடுத்துக் கொண்டால் ஆண்டவனை நம்பும்படித்தான் சொல்கின்றன. துன்பம் வருகையில் நாளும் கோளும் என்ன செய்யும்? முருகன் திருவடி துணையிருக்கையில் என்று அருணகிரி சொல்லியிருக்கிறார். நாளாவது கோளாவது. எல்லாம் இறைவனடியவர்களூக்கு நல்லதுதான் என்று சொல்லியிருக்கிறார் திருஞானசம்பந்தப் பெருமான். ஆகையால் மக்கள் இறைவனைச் சரண்புகுதலே மிகச் சிறப்பு.

சமயத்தில் ஏதேனும் கெடுதல் உண்டானால் இப்படி எதையாவது நாடுவது வழக்கமாக இருக்கிறது. அதையெலாம் விடுத்து இறைவன் திருவடியில் ஒப்படைப்பதே சரியென்பது ஆன்றோர் பலர் கருத்து. நான் ஆன்றோன் இல்லையென்றாலும் என் கருத்தும் அதுதான்.

suvanappiriyan said...

வாங்க ராகவன் சார்!


//சமயத்தில் ஏதேனும் கெடுதல் உண்டானால் இப்படி எதையாவது நாடுவது வழக்கமாக இருக்கிறது. அதையெலாம் விடுத்து இறைவன் திருவடியில் ஒப்படைப்பதே சரியென்பது ஆன்றோர் பலர் கருத்து. நான் ஆன்றோன் இல்லையென்றாலும் என் கருத்தும் அதுதான்.//

உங்கள் கருத்தை முற்றிலும் ஒத்துக் கொள்கிறேன். நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் இத்தகைய மூடப்பழக்கங்களை ஒழிக்க பிரச்சாரம் ஒன்றுதான் வழி.

இருபது வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு மத்தியில் இது போன்று பல அனாச்சாரங்கள் தலைவிரித்தாடின. ஏக இறைவனை வணங்கும் ஒரு கூட்டம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம முஸ்லிம்களுக்கு மத்தியில் செய்த பிரச்சாரத்தின் பலனாக இன்று தமிழக முஸ்லிம்களிடையே மிகப்பெரும் மாற்றத்தை கண்கூடாகக் காண்கிறோம். வரதட்சணை இல்லா திருமணம், தர்காக்களுக்கு சென்ற கூட்டம் இன்று பள்ளிவாசலை நோக்கி செல்வது, பெண்களும் பள்ளிக்கு வருவது, தாயத்து,தகடு,தடடு, பில்லி சூனியம் போன்றவற்றை ஒழித்தது, வட்டியில்லா கடனுதவி அளிப்பது என்று மாற்றங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இது போன்ற மாற்றங்கள் எல்லா சமூகங்களிலும் ஏற்பட வேண்டும் என்பதே நம் அவா.

வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி.

dondu(#11168674346665545885) said...

அருமை நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,

பாக்கிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் என்னும் ஆங்கிலப் பத்திரிகையின் இந்தச் சுட்டியைப் பாருங்கள்.

http://dawn.com/2007/03/20/horo.htm

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

padikkarathu kuran... idikkarathu pallivasal :)),, oorukku than aiyaa ungalOda ubadhesam ellaam.

kattumirandi thanama kalladicchu kolai panna sollum koottam inRaiya samuthayaththukku uganthathaa

zahir nayak sonnathu pol islam vittu veliyerinal maraNathandanai uganthathaa ?

first you should understand :) in india Astrology is based ONLY on Moon. thats why it is called moonsign. in WEST they calculate using sun. so there is sunsign.

ad=thellam sari.... aadham time la irunthu bit notica mathiri message vuttuttu iruntha iRaivan 1400 varushama En sir message udarathillai ? tired aayittaara enna?

kadavul undu enbathum illai enbathum.. kavaikku uthavaatha veRumpEchchu..

suvanappiriyan said...

டோண்டு ராகவன் அவர்களே!

நலமா!

நீங்கள் கொடுத்த லிங்க்கையும் பார்த்தேன். ஜோதிட நம்பிக்கையுள்ளவர்கள் எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள எல்லோருமே ஆவலாய் இருப்பர். ஜோதிடத்தினால் விளையக் கூடிய நன்மைகளை விட தீமைகளே அதிகம். ஜோதிடம் உண்மையாகி அது பலிக்கவும் ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம், ஒரு மாதத்துக்கு முன்பே ஒருவன் இறந்து போவது தெரிய வந்தால் அவனுக்கு மன உளைச்சல் ஏற்படுமா இல்லையா?

நம் நாட்டில் ஜோதிடத் துறை மிக வேகமாக வளர்ந்துள்ளது. அதே சமயம் ஜோதிடத்தைக் இஸ்லாம் கண்டிப்பதால் பெரும்பாலான அரபு நாடுகளில் ஜோதிடத்துக்கு தடை இருக்கிறது. இதனால் அரபு நாட்டு மக்களின் வாழ்க்கை முறையில் ஜோதிடத்துக்கு கொஞ்சம் கூட இடமில்லை.

வருகைக்கு நன்றி.

கருப்பு said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

டோண்டு ராகவன் என்கிற .......கழுவி ஜலம் குடித்த கேடுகெட்ட இஸ்லாமியனான சுவனப்ரியனா இந்த பதிவை இட்டது?

6:58 PM

-Vidhadu Karuppu

suvanappiriyan said...

கருப்பு சார்!

//கேடுகெட்ட இஸ்லாமியனான சுவனப்ரியனா இந்த பதிவை இட்டது?//

உங்களின் முழு பின்னூட்டத்தையும் வெளியிடவில்லை. என்னைப் போட்டு இந்த தாக்கு தாக்குகிறீர்கள்!

காரணம் தெரிந்து கொள்ளலாமா?

suvanappiriyan said...

அனானி!

//zahir nayak sonnathu pol islam vittu veliyerinal maraNathandanai uganthathaa ?//

ஜாகிர் நாயக் இதுபோல் சொன்னதாக எங்கும் பார்க்கவில்லை. அப்படியே அவர் சொல்லியிருந்தாலும் அவரது சொந்த கருத்தே ஆகும். முகமது நபி காலத்திலேயே ஒரு சிலர் மதம் மாறினர். அவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்பதே வரலாறு.

'இஸ்லாம் மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். இறைவன் செவியுறுபவன்: அறிந்தவன்.'
-குர்ஆன் 2 : 256

Unknown said...

ஜோதிடத்தை நீ நம்புகிறாயோ..இல்லையோயோ.. 2000வருடத்திற்க்கு மேல் தொடர்ந்து வரும் பஞ்சாங்த்தில் அம்மாவாசை , பௌர்ணமி, சூரிய கிரகணம் , சந்திர கிரகணம் இன்றும் சரியாக முன்கூட்டியே குறிக்கப்பட்டு அவை இந்திய காலண்டரில் துல்லியமாக அச்சிடப் படுகிறது என்பதே முதல் நிலை ஆச்சரியம்..
சூரிய குடும்பத்தை பற்றி 2000 வருடங்களுக்கு முன்பே ஹிந்துக்கள் தெரிந்து வைத்துள்ளனர்.. இதில் கூத்து என்னவென்றால் அப்போது மின்சாரம் கண்டுபிடிக்காத மேற்க்கத்திய நாகரீகம், சூரியன் மையத்தில் உள்ளதா இல்லை பூமி மையத்தில் உள்ளதா என்று அறிந்திராது கோபர்னிக்கசும், கலிலியோவும் 400 ஆண்டுகளுக்கு முன் புலம்பிக் கொண்டிரிந்த போது.. பஞ்சாங்கத்தில் சனி சூரியனை சுற்ற 30ஆண்டுகள் ஆகும் என்பதையும், குரு என்னும் ஜுபிடெர் சூரியனை சுற்ற 12 ஆண்டுகள் ஆகும் என்பதையும் கணக்கிட்டுவிட்டனர்... ஹிந்துக்களின் கட்டடக்கலை, நடனம், ஓவியம் , இசை, போன்று ஜோதிடம் என்பது 64 கலைகளில் ஒன்று..
The movement of stars which was calculated by Hindus 4,500 years ago, does not differ even by a minute from the tables which we are using today. The Hindu systems of astronomy are much more ancient than those of the Egyptians - even the Jews derived from the Hindus their knowledge.Jean-Sylvain Baily, World as Seen Under the Lens of a Scientist, page 460

Unknown said...

ஜோதிடத்தை நீ நம்புகிறாயோ..இல்லையோயோ.. 2000வருடத்திற்க்கு மேல் தொடர்ந்து வரும் பஞ்சாங்த்தில் அம்மாவாசை , பௌர்ணமி, சூரிய கிரகணம் , சந்திர கிரகணம் இன்றும் சரியாக முன்கூட்டியே குறிக்கப்பட்டு அவை இந்திய காலண்டரில் துல்லியமாக அச்சிடப் படுகிறது என்பதே முதல் நிலை ஆச்சரியம்..
சூரிய குடும்பத்தை பற்றி 2000 வருடங்களுக்கு முன்பே ஹிந்துக்கள் தெரிந்து வைத்துள்ளனர்.. இதில் கூத்து என்னவென்றால் அப்போது மின்சாரம் கண்டுபிடிக்காத மேற்க்கத்திய நாகரீகம், சூரியன் மையத்தில் உள்ளதா இல்லை பூமி மையத்தில் உள்ளதா என்று அறிந்திராது கோபர்னிக்கசும், கலிலியோவும் 400 ஆண்டுகளுக்கு முன் புலம்பிக் கொண்டிரிந்த போது.. பஞ்சாங்கத்தில் சனி சூரியனை சுற்ற 30ஆண்டுகள் ஆகும் என்பதையும், குரு என்னும் ஜுபிடெர் சூரியனை சுற்ற 12 ஆண்டுகள் ஆகும் என்பதையும் கணக்கிட்டுவிட்டனர்... ஹிந்துக்களின் கட்டடக்கலை, நடனம், ஓவியம் , இசை, போன்று ஜோதிடம் என்பது 64 கலைகளில் ஒன்று..
The movement of stars which was calculated by Hindus 4,500 years ago, does not differ even by a minute from the tables which we are using today. The Hindu systems of astronomy are much more ancient than those of the Egyptians - even the Jews derived from the Hindus their knowledge.Jean-Sylvain Baily, World as Seen Under the Lens of a Scientist, page 460