Followers

Thursday, February 08, 2007

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்......?

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்......?

Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.

"அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?" .

எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது-
"ஆம்'! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது".

.அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
"எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.......?"

ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
"ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!"

ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது:

"எப்படி சொல்கிறீர்கள்......?"

"புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை"

"இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி(ஸல்) அறிவித்து விட்டதை அறிவீர்களா...?ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் - ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது.(Sahih Muslim) இப்போது சொல்லுங்கள்: 'நபி முஹம்மதுவுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?

பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: "ரோமானியர்களாக இருக்கலாம்"

"நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படி கூற முடிந்தது.?"

உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:

"அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.."மேலும் அவர் சொன்னவை:"ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.'Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்தபார்வையினால் கிடைத்த நிஜம் இது.

"நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?" (அல் குர்-ஆன்: 41:53)

(பி.கு: இக்கட்டுரையை இங்கு பதிவதன் நோக்கம்: 'கோடானுகோடி மக்களால் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் குர்ஆனை 'இஸ்லாமிய எதிரிகளின் துணைக்கொண்டு கொச்சைப்படுத்திப் பார்த்து தன் மனத்தை திருப்திப்படுத்திக்கொள்பவர்கள் இனியேனும் 'வெறுப்புணர்வை' கழற்றி வைத்துவிட்டு 'விஞ்ஞானப் பார்வையோ (அ) குறைந்தபட்சம் நேர்மறை பார்வையோ அணிந்து அதைப் பார்க்கட்டும் என்று தான்).

நண்பர் சுடடு விரலின் பதிவை மறுபதிப்பு செய்கிறேன்.

3 comments:

bala said...

//அரேபியாவில் ஓடுமா ஆறுகள்..?//

சுவனப்பிரியன் அய்யா,
நல்லதுங்கய்யா.ஆனா இப்போ ரத்த ஆறு ஓட விட்டிருக்காங்களே,அரேபியர்கள்.ஷியாக்களும்,சுன்னிகளும் அடிச்சிப்பாங்க,ரத்த ஆறு ஓடும்னு குரானில் சொல்லியிருக்காங்களா,அய்யா?
உலகம் முழுக்க தீவிரவாதம் தீவிரித்தாட அரேபியா காரணகர்த்தாவாக இருக்கும்னு சொல்லியிருக்கா?விளக்கமா சொல்லுங்கய்யா.

பாலா

suvanappiriyan said...

வாங்க பாலா!

//உலகம் முழுக்க தீவிரவாதம் தீவிரித்தாட அரேபியா காரணகர்த்தாவாக இருக்கும்னு சொல்லியிருக்கா?விளக்கமா சொல்லுங்கய்யா//

இப்பொழுது அரேபியாவில் நடக்கும் சண்டைகளுக்கு முக்கிய காரணமே அந்நாடுகளில் உள்ள பெட்ரோலிய வளம் என்பதை எவரும் மறுக்க முடியாது. இன்று ஈராக்கில் பெட்ரோலிய வனம் இல்லாதிருந்தால் அமெரிக்கா தன் மக்களை இவ்வனவு இழந்தும் மேலும் துருப்புகளை அனுப்பத் துணியுமா? எல்லாம் பணம் படுத்தும் பாடு பாலா!

மேலதிக விபரங்களை இங்கு சென்று பார்த்துக் கொள்ளவும்.

www.suvanappiriyan.blogspot.com/2007/01/blog-post_26.html

முகமது நபியைப் பற்றி...

'சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும் நாடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த - பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ!'

-'ஹீரோஸ் அண்ட் ஹீரோ ஒர்ஷிப்'
-தாமஸ் கார்லைல்

A.Anburaj Anantha said...

as an Arabian Mohammed loved his native place very much.such foretellers are available in plenty in India and Israel.