நான் இந்துவாக மாறத்தான் வேண்டுமா!
//சுவனப்பிரியன் அவர்களும் ஒருநாள் உண்மை உணர்ந்து இறைவழியாம் அன்புவழியில் இந்துமதத்தில் இணைவார் என்றே விரும்புவோம்.//
www.ezhila.blogspot.com/2007/01/blog-post_26.html
நண்பர் எழில் என்னை இந்து மதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதில் தவறேதும் இல்லை. அழைப்புப் பணி என்பது யாரும் யாரையும் அழைக்கலாம். ஒரு தவறான இடத்தில் இருக்கும் ஒருவரை நேர்வழியின்பால் அழைப்பது அழைப்புப்பணி எனப்படும். நண்பர் எழிலின் விருப்பத்திற்கினங்க நான் திரும்பவும் இந்து மதத்துக்கு வந்தால் நான் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை வரிசையாக பட்டியலிடுகிறேன்.
1.சாதி ஒரு பிரச்னை.
நான் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினால் எழில் என்னை எந்த சாதியில் சேர்த்துக் கொள்ளுவார்? என் ஊரைச்சுற்றி செட்டியார்களும் மூப்பனார்களும் அதிகமிருப்பதால் என் முன்னோர்கள் இந்த சாதிகளில் ஏதோ ஒன்றில் பிறந்திருக்கலாம். என் பழைய சாதி எது என்பதையே இஸ்லாமிய வரவால் மறக்கடிக்ப்பட்டிருக்கிறேன். உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் 'நீ ஒரு முஸ்லிமா?' என்ற ஒரு கேள்வியோடு முடிந்து விடும். ஆனால் நம் இந்தியாவிலேயே நீங்கள் ஒரு இந்து என்றால் அடுத்தாக 'நீ எந்த சாதி?' என்ற கேள்வியும் அடுத்து வருமல்லவா?
2.வழிபாட்டு முறையில் உள்ள வித்தியாசம்.
இன்று நான் சவுதியில் பல முறை தலைவராக நின்று பள்ளிவாயில்களில் தொழுகை நடத்தி இருக்கிறேன். என்னைப் பின்பற்றி சவுதி நாட்டவரும் எகிப்து ஆப்ரிக்கா பாகிஸ்தான் நாட்டவரும் தொழுதிருக்கிறார்கள். அவர்கள் என்னை ஒரு இந்தியன் என்று பார்க்கவில்லை. ஒரு முஸ்லிமாகத்தான் பார்த்தார்கள். நிற வெறி, குல வெறி போன்றவற்றை மறந்து உலக நாட்டவர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி அல்லவா? மெக்காவில் உள்ள கஃபா ஆலயத்துக்கு முதல் ஆளாக நீங்கள் சென்றால் மிக நெருக்கத்தில் இருந்து உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றலாம்.
அதே சமயம் நான் இந்து மார்க்கத்திற்கு மாறினால் 'ஸ்ரீரங்கம் கோவிலில் அனைத்து சாதியினரையும் கருவரை சமீபம் வழிபட அனுமதிக்க வேண்டும்' என்று எழிலோடு சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டி வரும். 'அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு' என்று நண்பர் எழிலோடு சேர்ந்து கோஷம் போட வேண்டி வரும். இவற்றை எல்லாம் நண்பர் எழில் மறந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
3.இறைக் கோட்பாடு
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் மந்திரத்தின்படி இன்று ஏக இறைவனை வணங்கி இறைக் கோட்பாட்டில் எந்த குழப்பமும் இல்லாமல் இருக்கிறேன்.
நண்பர் எழிலின் கோரிக்கையை ஏற்று நான் இந்துவானால் எந்த தெய்வத்தை வணங்குவது? முருகனையா? பிள்ளையாரையா? ஐயப்பனையா?பிரம்மாவையா? விஷ்ணுவையா? நண்பர் எழில் விளக்க வேண்டும்.
இந்து மதத்தை விடுத்து நான் கிறித்தவனாக மாறினாலும் அங்கும் பிரச்னையே! நான் ஏசுவை வணங்குவதா? மேரியை வணங்குவதா? பரிசுத்த ஆவியை வணங்குவதா? பரலோக ராஜ்ஜியத்தில் இருக்கும் பிதாவை வணங்குவதா?
4.புரோகிதத்தை ஒழித்தது!
இந்து மத கோட்பாடுகளின் படி புரோகிதர் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது. இறைவனை வணங்குவதிலிருந்து, கல்யாணம், இறப்பு, பிறப்பு அனைத்திலும் புரோகிதர்கள் மூலமாகவே உங்களின் அனைத்து தேவைகளையும் இறைவனிடமிருந்து பெற முடியும்.
ஆனால் இஸ்லாத்தில் இத்தகைய நிலை இல்லை.
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. யுக முடிவு நாளில் இறைவன் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களை நேர்வழிப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'
-குர்ஆன் 2 : 174
நான் இறைவனிடம் பிரார்த்திக்க எந்த இடைத்தரகரையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என் தாய் மொழியிலேயே என்னைப் படைத்த இறைவனிடம் என் தேவைகளையும் கோரிக்கைகளையும் வைக்க முடியும்.
நான் மேலே சுட்டிக்காட்டிய இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அனைத்தும் முன்பு இந்து மதத்தில் இருந்தவைகளே! கலாசார மாற்றத்தினால் ஒரு தெய்வக் கொள்கையிலிருந்து பல தெய்வக் கொள்ளைக்கு இன்று நம் நாடு சென்று விட்டது. மனிதர்களிலும் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளை இந்திய சமூகம் சுவீகரித்துக் கொண்டது. திரு மூலரும், சித்தர்களும் மேலும் நமது முன்னோர்களும் எத்தகயை கொள்கையை ஆதியில் கொண்டிருந்தார்களோ அந்த கொள்கைக்கு திரும்பி வாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் பின் பற்றிய ஓரிறைக் கொள்கையை ஏற்று இவ்வுலகிலும் மறு உலகிலும் சுவனத்தை அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திவனாக இப்பதிவை முடிக்கிறேன்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
20 comments:
கண்ணக் கட்டுது சுவனப்பிரியன்...
//உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் 'நீ ஒரு முஸ்லிமா?' என்ற ஒரு கேள்வியோடு முடிந்து விடும். ஆனால் நம் இந்தியாவிலேயே நீங்கள் ஒரு இந்து என்றால் அடுத்தாக 'நீ எந்த சாதி?' என்ற கேள்வியும் அடுத்து வருமல்லவா?
//
//மெக்காவில் உள்ள கஃபா ஆலயத்துக்கு முதல் ஆளாக நீங்கள் சென்றால் மிக நெருக்கத்தில் இருந்து உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றலாம்.
அதே சமயம் நான் இந்து மார்க்கத்திற்கு மாறினால் 'ஸ்ரீரங்கம் கோவிலில் அனைத்து சாதியினரையும் கருவரை சமீபம் வழிபட அனுமதிக்க வேண்டும்' என்று எழிலோடு சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டி வரும். 'அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு' என்று நண்பர் எழிலோடு சேர்ந்து கோஷம் போட வேண்டி வரும். இவற்றை எல்லாம் நண்பர் எழில் மறந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
//
//இறைவனை வணங்குவதிலிருந்து, கல்யாணம், இறப்பு, பிறப்பு அனைத்திலும் புரோகிதர்கள் மூலமாகவே உங்களின் அனைத்து தேவைகளையும் இறைவனிடமிருந்து பெற முடியும்
//
நியாயமான கேள்விகள்!
ஆனால் நோ கமெண்ட்ஸ்!
நியாயமான கேள்விகள்....
முழுவதும் படித்தும்...
உங்கள் எழுத்தின் மேல் கோபம் வரவில்லை.
வெகு சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
நாமக்கல் சிபி!
//நியாயமான கேள்விகள்!
ஆனால் நோ கமெண்ட்ஸ்!//
உங்களின் பல ஆக்கங்களைப் படித்துள்ளேன். வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி!
சீனு!
//கண்ணக் கட்டுது சுவனப்பிரியன்...//
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. வருகை புரிந்து கருத்தை பதிந்தமைக்கு நன்றி!
பங்காளி!
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!
நல்ல கேள்விகள் சுவனப் பிரியன் அவர்களே, கிட்டத்தட்ட இதே போன்ற கேள்விகளை நானும் சகோதரர் எழில் அவர்களிடம் கேட்டிருக்கிறேன்.
எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?
இறைத்தூதருக்கு கேஜி பிள்ளைகளும் புரிந்து கொள்ளும்படி ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்று உங்களிடம் விதண்டாவாதம் செய்த சகோ.எழில் அவர்களுக்கு உங்கள் கேள்விகளுக்கு அதே போன்ற அடையாளங்கள் ஆதாரங்களோடு மழுப்பல்கள் நழுவல்கள் இல்லாமல் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. அவருடைய பதில்களுக்காக உங்களுடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்.
வடுவூர் குமார்
//முழுவதும் படித்தும்...
உங்கள் எழுத்தின் மேல் கோபம் வரவில்லை.
வெகு சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!
பரமபிதா!
//that aprt, I think you have your own definition of religion and god (like one god, worshipping methods, etc).//
'நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்குத் தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அந்த இறைவனிடம் உறுதியாக இருங்கள். அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். இணை கற்ப்பிப்போருக்கு கேடுதான் இருக்கிறது' என்று முஹம்மதே கூறுவீராக!
-குர்ஆன் 41 : 6
எனவே ஒரே இறைவனை வணங்குதல் என்பது என் சொந்தக் கருத்தல்ல அன்பரே!
//'Hindu Dharma' doesnt restrict the theological concept within a set of standards, rules and principles. It is organic, ever evolving, all encompassing and kind. You must come out of your perception of God and start to realise the God from its true sense//
அதர்வண வேதத்திலும் ரிக் வேதத்திலும் நன்மை செய்தவருக்கு சொர்க்கம் என்றும் தீய கருமங்கள் செய்பவருக்கு நரகம் என்றும் வந்துள்ளதற்கு உங்களின் பதில் என்ன? ஆதாரம் கேட்டீர்கள் என்றால் வசன எண் முதற்கொண்டு தருகிறேன்.
அன்பு சுவனப்பிரியன்,
நாளுக்கு நாள் உங்கள் எழுத்து மெருகேறிவருகிறது. மகிழ்ச்சி!
முன்பு ஒருமுறை, மயிலாடுதுறை சிவா என்பவரின் ஒரு பதிவில்
"முஸ்லிம் பெண்கள் ஏன் பள்ளியில் சென்று தொழ முடியவில்லை?"
"இந்திய முஸ்லிம்கள் ஏன் அரேபியாவில் தொழுகையை வழிநடத்துவதில்லை?" என்று நேச குமார் என்பவர் கேட்டிருந்தார்.
இரண்டுகேள்விகளுக்கும், "சிறப்பாகச் செய்கிறோமே!" என்று தெளிவாக இருமுறை பதிலளித்திருந்தேன். அவர் கண்டுக்கொள்ளவேயில்லை.
அப்புறம் தான் தெரிந்தது, நேச குமார் என்பவர் இஸ்லாத்தின் மீது மறைவில் நின்றுக்கொண்டு கல்லெறிய
'உருவாக்கப்பட்ட கேரக்டர்' என்பது!
நீங்கள் சொல்லும் 'எழில்' என்பவரும் அப்படிப்பட்ட ஒரு க்ரியேட்டட் "கேரக்டர்" தான்.
உங்களைப்போன்றவர்களை வெளிக்கொண்டு வர இறைவனின் சித்தம் அது என்று நினைக்கிறேன்.
மரைக்காயர்!
//அவருடைய பதில்களுக்காக உங்களுடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்.//
நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
அபு முஹம்மது!
//அருமையான வாதம்//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி.
யாருடைய மனமும் நோகாமல் அருமையாக பதிலளித்துள்ளீர்கள் சுவன்ப்ரியன்...பாராட்டுக்கள்.
அருமையான வாதம்..
எழில் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றுப் பார்ப்போம் :))
பாபு!
//நாளுக்கு நாள் உங்கள் எழுத்து மெருகேறிவருகிறது. மகிழ்ச்சி!//
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'
-குர்ஆன் 103 : 1,2,3
அசலமோன்!
//தாங்களின் அமைதியான அழைப்பில் , சகோதரர் எழில் இஸ்லாம் மார்க்கத்தை இனியும் ஒரு
முறை படித்து பார்த்து அழகிய முறையில் கேள்விகளை கொண்டு வரட்டும்.//
நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை புரிந்திருக்கும் அசலமோனுக்கு வாழ்த்துக்கள். பஹ்ரைனில் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.
'இந்தக் குர்ஆன் இறைவன் அல்லாதோரிடமிருந்து இட்டுக்கட்டப் பட்டதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும் தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.'
-குர்ஆன் 10 : 37
ஜி!
//அருமையான வாதம்..//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
'அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களn? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
-குர்ஆன் 4 : 82
நிலவு நண்பன்!
//யாருடைய மனமும் நோகாமல் அருமையாக பதிலளித்துள்ளீர்கள் சுவன்ப்ரியன்...பாராட்டுக்கள்//
நன்றி நிலவு நண்பன் அவர்களே!
'விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன். நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.'
-குர்ஆன் 16 : 125
கோவிலுக்கே போகாமலும் கூட இந்துவாக இருக்க முடியும். இறை வழிபாட்டுக்கு என்று இடம் கோவில் அவ்வளவே. அதை வீட்டிலும் செய்யலாம்.
புரோகிதம் ஒரு சம்பிரதாயம். அது வேண்டாம் என்பவர்கள் மேல் யாரும் அதை வந்து திணிக்க மாட்டார்கள். கோவிலுக்கு செல்லாமல் ப்ரோகிதர் வைத்துக் கொள்ளாமல் இந்து மதத்தில் நீ இருக்க முடியாது இன்று முதல் நீ மதத்தில் இருக்கமுடியாது என்று யாரும் வந்து தடுக்க முடியாது.
ஆனால் உங்கள் அமைப்பில் என்தனைக் கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் அதை மீறினால் அமைப்பில் இருக்க முடியாது என்பதையும் உங்களால் மறுக்க முடியுமா ? அப்போ ஒரு சாதியக் கட்டுப்பாட்டுக்கு இணை இல்லையா?
எந்த இறைவனை வணங்குவது? எந்த இறைத் தன்மை தன மனசுக்கு உகந்ததாக இருக்கிறதோ அதை. எங்கும் நிறை இறை. அவ்வளவே.
சாதி. இதை இன்று விலக்கி விடுதல் சுலபம்.
விலக்க முடியாதது மதங்கள் தாண்டி எல்லா மட்டத்திலும் இருப்பது ஏற்றத் தாழ்வு.
ஒரே மதத்தை சேர்ந்த நீங்கள் ஒரு குடையில் வருவதாகப் பெருமை கொள்ளும் நீங்கள் உங்கள் நாட்டுக்கு வெளியே மணம்
செய்து கொள்ளுதல், ஏற்ற தாழ்வு (வசதி) தாண்டி உறவு பாராட்டுதல் செய்வது உண்டா?
உங்கள் மதத்திலும் நான் சாதிகள் கேள்விபடுவதுண்டு. சாதி களைந்து விட்டதாகச் சொல்லுவது முழு உண்மையாக இருக்க முடியாது.
இந்தியத் தன்மையை உதற எடுக்கப்படும் முயற்சிகள் அன்றி வேறு உபயோகங்கள் இருப்பதாகத் தெரியவில்
Post a Comment