Followers

Thursday, March 01, 2007

பரம்பரை ஆட்சி பற்றி நேசகுமார்களுக்கு!

பரம்பரை ஆட்சி பற்றி நேசகுமார்களுக்கு!

//ஆனால், இஸ்லாமிய சகோதரத்துவம், இஸ்லாத்தில் ஜாதி- இன பேதம் என்று சொல்கிறீர்களே உங்களின் கலீஃபாக்களில் எத்தனை பேர் கறுப்பர்கள்? கறுப்பர்களை விடுங்கள், இந்திய துணைக்கண்டத்தில்(இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் - இந்நாடுகளிலிருந்து மற்ற நாடுகளுக்கு சென்றவர்கள்) ஏறத்தாழ உலக முஸ்லிம்களில் பாதிப்பேர் இருக்கிறார்கள். இந்த முஸ்லிம்களில் எத்தனை கலீஃபாக்கள் இதுவரை இருந்திருக்கிறார்கள்?//
-Nesa kumar

ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்களில் ஒருவர்தானே ஆட்சித் தலைவராக முடியும்? சவுதி நாட்டின் ஆதி காலத்தவர் வெள்ளை நிறத்தவர். பெரும்பான்மையும் அவர்களே! வெளிநாட்டிலிருந்து அடிமையாகக் கொண்டு வரப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஆப்ரிக்கரை நாட்டின் ஜனாதிபதியாக்க யார்தான் ஒப்புவர். சோனியா காந்தியையே வெளி நாட்டவர் என்று ஏற்றுக் கொள்ளாத நேச குமார் எந்த நியாயத்தின் அடிப்படையில் இக்கேள்வியை எழுப்புகிறார்?

அந்த கஃபாவில் முகமது நபி காலத்தில் முதன் முதலாக அழைப்பொலி எழுப்பியது பிலால் என்ற கறுப்பினத்தவர் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

//கோவிலுக்குள் நுழையவிடவில்லை என்றால், பக்கத்திலேயே சிவன் கோவில் (ஈழவ சிவன் போன்று) ஏற்படுத்திக்கொள்ள முடியும்.//
-Nesa Kumar

ஐயோ பாவம்! இந்துக்கள் என்றும் சொல்லிக் கொள்வார்களாம். கோவிலிலும் நுழைய விட மாட்டார்களாம். அப்படி தடுத்தால் 'இந்தப் பழம் புளிக்கும்' என்ற கதையாக பக்கத்திலேயே சிறிதாக ஒரு கோவிலும் கட்டிக் கொள்வார்களாம். நல்ல தமாஷ்.

//ஆனால், காபாவின் காப்பாளராக உங்களில் யாராவது இருந்திருக்கிறார்களா?//
-Nesa kumar

இது என்ன சுத்த பைத்தியக்காரத்தனம். கஃபா இருப்பது தமிழகத்திலோ அல்லது இற்தியாவிலோ இருந்தால் இவர் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கும். கஃபா இருப்பது சவுதியில் என்றும் அதை நிர்வகிப்பவர் சவுதி நாட்டவராகத்தான் இருக்க முடியும் என்றும் யாராவது அவருக்கு எடுத்துச் சொல்லுங்களேன்.

//அரபிக்களின் கால்களில் விழுந்து கிடக்கின்றீர்கள். எங்களது தலித்துக்களுக்கு உண்மை உறைத்து விட்டது. உங்களுக்கு அரபிக்களின் காலடியில் விழுந்து கிடப்பது கூடத்தெரியாத அளவுக்கு மதம் கண்ணை மறைத்திருக்கின்றது. அதுதான் இங்குமங்கும் உள்ள வித்தியாசம்.//
-Nesakumar

'குலப்பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன். அரபி மொழி பேசுபவர் அம்மொழி பேசாதவரைவிட எவ்விதத்திலும் உயரவும் இல்லை. தாழவும் இல்லை. மனிதர்கள் யாரும் யார் காலிலும் விழக்கூடாது என்றும், முகமமது நபியாகிய தாம் வந்தால் மரியாதை நிமித்தம் யாரும் எழக் கூடாது' என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே முகமது நபி எங்களுக்கு போதித்து விட்டுச் சென்றுள்ளார். எனவே ஒரு முஸ்லிம் குர்ஆனைத் தவிர வேறு எந்த இனத்தவருக்கும் குலத்தவருக்கும் அடிபணிய மாட்டார்கள் என்பதை யாராவது எடுத்துச் சொல்லுங்களேன்.

'நான் முஸ்லிமாகவும் இருந்து கொள்கிறேன். இந்து மதம் சொல்லும் வர்ணாசிரமத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்' என்று இந்திய முஸ்லிம்கள் ஒரு முடிவெடுத்து விட்டால் அன்றோடு இஸ்லாத்தை எதிர்ப்பதை நேசகுமார் வகையறாக்கள் உடன் நிறுத்திக் கொள்வார்கள். இது ஒன்றுதான் அவர்களுக்கு சவாலாக இன்று வரை இருந்து வருகிறது. உலக முடிவு நாள் வரை இருந்தும் வரும். தலித்களுக்கு உண்மை உறைத்ததால்தான் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வருகிறார்களோ? அதுவும் திட்டமிட்ட பிரச்சாரங்கள் எதுவும் இல்லாமலே!

//மரைக்காயரே, நாகூர் தர்காவில் கலீஃபாவாக சையது சாதியைச் சேர்ந்த(சாஹிப்மாரைத் தவிர) வேறு யாராவது கலீஃபாவாக வரமுடியுமா?//
-Nesakumar

இதுவும் அவரது அறியாமையையே காட்டுகிறது. இஸ்லாமிய பார்வையில் தர்காக்கள் என்ற ஒன்றே கிடையாது. அரபு நாடுகளில் நீங்கள் ஒரு தர்காவைக் கூட பார்க்க முடியாது. முகமது நபியின் கல்லறை வெறும் மண்ணால்தான் மூடப்பட்டிருக்கும். இங்குள்ள தர்காக்கள் இந்து மதத்தின் தாக்கத்தினால் வந்தது. பிரச்சாரத்தினால் தற்போது தர்காக்களின் மேல் உள்ள நம்பிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இது தொடர வேண்டும் என்பதே என் பொன்றோரின் விருப்பமும்.

//ஆர்.எஸ்.எஸ் என்ன இந்துக்களின் மசூதியா, சர்ச்சா. ஆர்.எஸ்.எஸ் என்ன எங்களின் பிறப்பிலிருந்து வாழ்விலிருந்து இறப்பிலிருந்து தீர்மானிக்கும் சக்தியாகவா இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ் ஸை கேள்வி கேட்க நாங்கள் தயார். அரபி மேலான்மையை அல்லாஹ் சொன்னார் என்று பொய் சொல்லி ஸ்தாபித்த முகமதைக் கேள்வி கேட்க நீங்கள் தயாரா?//
-Nesa kumar

//அய்யா அரவிந்த நீலகண்டன், சவுதி அரசு வடிவத்துக்கு மாற்றாக நீங்கள் முன் வைக்கும் அரசு எது? அது வர்ணாஸ்ரம தர்மத்தை சமூக அலகாக கொண்டது என்று எமக்கு தெரியும். அது எந்த வகையில் இதனைவிட சிறந்தது என்று விளக்கிக் கூற, ஒரு முதுகெலும்புள்ள பிராணியாக உங்களுக்கு கடமை உள்ளது.சொல்வீர்களா? முதுகெலும்பு உள்ளது என்று நிரூபிப்பீர்களா?//
-Asuran

உங்களின் அறியாமையால் எழும் கேள்விகளுக்கு உங்கள் இனத்தைச் சார்ந்த சகோதரர் அசுரன் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க முயற்ச்சியுங்கள். உங்களின் கேள்விக்கான விடை கிடைக்கும்.

//நாங்கள் மனு நீதியை எப்போதோ தூக்கிக் குப்பையில் போட்டு விட்டோம். "மனு ஒரு பிசாசு" (Manu is a devil) என்று சொன்னார் விவேகானந்தர். குரானை உருவாக்கிய முகமது ஒரு பிசாசு என்று சொல்ல எந்த முஸ்லிம் தலைவருக்காவது தைரியமிருக்கிறதா?//
-Nesa kumar

எப்போது குப்பையில் போட்டீர்கள் என்ற விபரத்தைத் தாருங்கள். இன்று வரை இந்த மனுதானே இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதற்கு பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்பை சமாளிக்க மனுவை எதிர்ப்பது போல் நடிக்கிறீர்கள். மக்கள் இப்பொழுதெல்லாம் விழித்துக் கொண்டு விட்டார்கள் நேசகுமார். பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்க வேண்டாம். எஞ்சியிருக்கும் மீதமுள்ள இந்துக்களையும் இந்து மதத்திலேயே தக்க வைக்க ஆனது என்ன அதை யோசியுங்கள்.

//ஆனால், உங்களால் முஸ்லிமாக இருக்கும் வரையில் முகமதின் புரட்டுக்களை ஒதுக்கிவிட்டு முன்னேற முடியாது. விடிவு காலமும் கிடையாது//

முன்னேற்றமும் விடிவுகாலமும் யாருக்கு என்பதை காலம் தீர்மானிக்கட்டும். ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து விடுதலையான என் முன்னோருக்கு நேரிய வழியைக்காட்டி இன்று நான் உலக முஸ்லிம்களில் ஒருவனாக தலை நிமிர்ந்து நிற்பதற்கு வழிகாட்டிய முகமது நபியை என் உயிரினும் மேலாக மதிக்கிறேன். உலகில் உள்ள கோடானு கோடி முஸ்லிம்களின் எண்ண ஓட்டமும் இதுவே.

இது எதனால் வந்தது. எனக்கும் முகமது நபிக்கும் என்ன உறவு. அவரோ அரபியர். என் நாட்டு மொழி கலாச்சாரம் அனைத்திலும் முற்றிலும் வேறுபட்டவர். நான் இடப்புறமாக எழுதினால் அவர்களோ வலப்புறமாக எழுதக் கூடியவர்கள். இப்படி எதிலுமே மாற்றமான ஒருவரின் மேல் எனக்கு ஏன் இவ்வளவு பிடிப்பு. அவர் எப்படி இறைவனை வணங்கினார். எவ்வாறு திருமணம் முடித்தார். எவ்வாறு வியாபாரம் செய்தார்? தன் தோழர்களிடத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்? என்றெல்லாம் ஒவ்வொன்றையும் பார்த்து அதன்படி எங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோமே? இது எதனால் என்று சற்று அமைதியாக சிந்தித்து பாருங்கள் நேச குமார். பல கேள்விகளுக்கு உங்களுக்கு விடை கிடைக்கும்.

'இறைவனுக்கும் இத்தூதருக்கும கட்டுப்படுங்கள். இதனால் அருள் செய்யப் படுவீர்கள்.'
-குர்ஆன் 3 : 132

' முஸ்லிம்களே! நீங்கள் மற்ற மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதராகிய முஹம்மது உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம்.'
-குர்ஆன் 2 : 143

'இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல் வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை இறைவன் மன்னிக்கிறான். நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்றான்.'
-குர்ஆன் 5 : 3

'இறைவன் அருளியதைப் பின்பற்றுங்கள்' என்று அவர்களிடம்(நேசகுமார் வகையறாக்கள்) கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமல் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?'
-குர்ஆன் 2 : 170

நரகில் வேதனை செய்யப்படும் போது 'எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்' என்றும் கூறுவர்.
-குர்ஆன் 33 : 67