'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
'200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திப்பு சுல்தானின் வரலாற்றை நாம் படிக்க வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டவன் அவன். ஆங்கிலேயருக்கு அடிமையாகி இருந்தால் தென்னகப் பகுதிகளுக்கே அவன் பெரிய மன்னராக ஆகியிருப்பான். 1782 - ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான் மன்னர்களிடமிருந்து தானமாக நிலங்களை பெற்று வைத்திருந்த ஜமீன்தார்களிடமிருந்து நிலங்களை மீட்டு அதை ஏழை தலித் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்து 200 ஆண்டுகளுக்கு முன்பே நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தியவன்.
அதனால்தான் பிராமணர்களும் ஆங்கிலேயர்களும் திப்பு சுல்தானை துரோகியைப் போன்று திரித்து தவறான வரலாற்றை எழுதியுள்ளனர். உண்மையான வரலாற்றை நாம்தான் வெளிக் கொணர வேண்டும்.
1782 முதல் 1799 வரை ஆட்சி புரிந்த திப்பு தான் அரசன் இல்லை: மக்கள் பிரதிநிதி என்று கூறிக் கொண்டவன்.
தவறு செய்பவர்களை சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு மாற்றுப் பணிகளை வழங்கி அதை வருமானமாக மாற்றியவன் திப்பு.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட திப்பு மற்றவர்களைப் போல ஆடம்பரத்தை விரும்பாமல் மக்கள் நலனையும் ஆங்கிலேயரை விரட்டி அடிப்பதையும் தன் கடமையாகக் கொண்டிருந்தான்.
மேலும் கடைசி 6 மணி நேரத்துக்கு முன் எதிரிகள் படையெடுத்து வருவதையறிந்து அவர்களை எதிர் கொள்ள தன் படைகளை தயார் படுத்தினான் திப்பு. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு வசதிகளையும் அவன் வைத்திருந்தான்.
திப்பு சுல்தான் இறந்த பின் அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் முதலில் திப்புவின் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரசீக மற்றும் சமஸ்கிரத மொழி நூல்களை லண்டனுக்கு எடுத்துச் சென்றனர். பின் அந்த நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டன.
அதன் பின்னரே விலை உயர்ந்த நகைகள் ஆபரணங்களை அவர்கள் அள்ளிச் சென்றனர்.
திப்புவின் அறிவும் செல்வமுமே இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்கு காரணம்.
ஆங்கிலேயர்களை எதிர்க்க ஹைதரபாத் நிஜாம், மராட்டிய மன்னர்களை ஒன்றிணைக்க திப்பு மேற்கொண்ட முயற்ச்சிக்கு இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த இணைப்பு நடைபெற்றிருந்தால் 1799- ஆம் ஆண்டே நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கும்.
நம்நாடு முன்னேற கணிணி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை மட்டும் துணை புரியாது. ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும்.
அமெரிக்கர்கள் நம் நாட்டில் விஞ்ஞானிகள் உருவாவதை விரும்பவில்லை. மென்பொருள் பொறியாளர்கள்தான் உருவாக வேண்டுமென விரும்புகின்றனர். நம் இளைஞர்கள் விஞ்ஞானிகளாக உருவாக அடிப்படை அறிவியலை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
திப்புவின் அறிவுத் திறன், தொழில் நுட்பம், நிர்வாகத் திறன் ஆகியவற்றை நாம் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.'
-தலகாடு சிக்கே ரங்க கௌட திப்பு சுல்தான் பிரசார சமிதி தலைவர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழாவில் பேசிய பேச்சைத்தான் நாம் மேலே படித்தது.
ஆதாரம் தினமணி 25-2-2007
இது போன்ற தலைவர்களின் உண்மை வரலாற்றை மறைப்பதன் மூலம் நம் நாட்டுக்கு நாமே தீங்கிழைக்கிறோம். இவ்வளவு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நாயகனின் சரித்திரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது 'இது ஒரு கற்பனைக் கதை. இதில் வரும் சம்பவங்கள் எவரையும் குறிப்பிடுபவை அல்ல' என்ற செய்தியோடு வெளியிட்டார்கள்.
அதே சமயம் ராமாயணமும் மகாபாரதமும் ஒளிபரப்பும் போது வரலாற்று காவியம் என்ற அடை மொழியோடு ஒளிபரப்புவார்கள். என்ன ஒரு நடுநிலைமை!
நல்ல பதிவு. திப்புவி என் முப்பாட்டனின் பெருமையை குலைக்க இந்துத்துவ பன்றிகள் கர்நாடகாவில் பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றன.
அவன் அக்னி குஞ்சு... பொட்டலம் கட்ட முடியுமா? ஏகாதிபத்தியத்திற்க்கெதிராக தனது வெஞ்சினத்தை வெளிப்படுத்தியவன். இந்திய முதலாளித்துவத்தின் விடி வெள்ளி அவன். அவன் மட்டும் வெற்றிய்டைந்திருந்தால் இந்தியாவின் போக்கு, உலகின் போக்கு என்பது வேறு விதமாகவே இருந்திருக்கும்....
வரலாற்றில் நடந்த முடிந்தவைகளில் நடக்க சாத்தியமானவை குறித்து பேசுவதில் பிரயோசனமில்லை ஆயினும் நாம் நமது முன்னோர்களின் வாழ்விலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
//அவன் அக்னி குஞ்சு... பொட்டலம் கட்ட முடியுமா? ஏகாதிபத்தியத்திற்க்கெதிராக தனது வெஞ்சினத்தை வெளிப்படுத்தியவன். இந்திய முதலாளித்துவத்தின் விடி வெள்ளி அவன். அவன் மட்டும் வெற்றிய்டைந்திருந்தால் இந்தியாவின் போக்கு, உலகின் போக்கு என்பது வேறு விதமாகவே இருந்திருக்கும்....//
திப்புவை மிக அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். போன மாதம் குடும்பத்தோடு சுற்றுலா சென்றபோது திப்புவின் சமாதியையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திப்புவின் அரண்மனை பிரிட்டிஷாரால் இடிக்கப்பட்டு சிதிலமடைந்திருந்தது. அதை இன்று வரை நம் அரசும் கவனிக்காமல் விட்டு வைத்துள்ளது. திப்புவின் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக் கொணர்வது காலத்தின் கட்டாயமாகும்.
அசுரன்! மாற்றாரை விமர்சிக்கும் போது கடுஞ்சொற்களை தவிர்த்துக் கொள்ளுங்களேன்.
4 comments:
தலித்களுக்கு நில பகிர்வு செய்த திப்பு சுல்தான்!

-தலகாடு சிக்கே ரங்க கௌட
திப்பு சுல்தான் பிரசார சமிதி தலைவர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழாவில் பேசிய பேச்சைத்தான் நாம் மேலே படித்தது.
ஆதாரம்
தினமணி
25-2-2007
இது போன்ற தலைவர்களின் உண்மை வரலாற்றை மறைப்பதன் மூலம் நம் நாட்டுக்கு நாமே தீங்கிழைக்கிறோம். இவ்வளவு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நாயகனின் சரித்திரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது 'இது ஒரு கற்பனைக் கதை. இதில் வரும் சம்பவங்கள் எவரையும் குறிப்பிடுபவை அல்ல' என்ற செய்தியோடு வெளியிட்டார்கள்.
அதே சமயம் ராமாயணமும் மகாபாரதமும் ஒளிபரப்பும் போது வரலாற்று காவியம் என்ற அடை மொழியோடு ஒளிபரப்புவார்கள். என்ன ஒரு நடுநிலைமை!
நல்ல பதிவு. திப்புவி என் முப்பாட்டனின் பெருமையை குலைக்க இந்துத்துவ பன்றிகள் கர்நாடகாவில் பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றன.
அவன் அக்னி குஞ்சு... பொட்டலம் கட்ட முடியுமா? ஏகாதிபத்தியத்திற்க்கெதிராக தனது வெஞ்சினத்தை வெளிப்படுத்தியவன். இந்திய முதலாளித்துவத்தின் விடி வெள்ளி அவன். அவன் மட்டும் வெற்றிய்டைந்திருந்தால் இந்தியாவின் போக்கு, உலகின் போக்கு என்பது வேறு விதமாகவே இருந்திருக்கும்....
வரலாற்றில் நடந்த முடிந்தவைகளில் நடக்க சாத்தியமானவை குறித்து பேசுவதில் பிரயோசனமில்லை ஆயினும் நாம் நமது முன்னோர்களின் வாழ்விலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அசுரன்
அசலமோன்!
//நாம் இருக்கும் இந்தியாவின் அதிகாரிகள் மட்டம் பிராமணர்களின் கூடாரம் தானே இப்பமும். இறைவன் கிருபையால் மாறும் என்று நம்பி இருக்க வேண்டியதுதான்.//
நம்பிக்கையில்தானே வாழ்க்கையே ஓடுகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அசுரன்!

Post a Comment