'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
மகாத்மா காந்தியின் இறுதி நாட்கள் குறித்தும் படுகொலை குறித்தும் இதுவரை வெளிவராத பல தகவல்களுடன் 'லெட்அஸ் கில் காந்தி' (காந்தியைப் படுகொலை செய்வோம்) என்ற புத்தகம் வெளி வந்துள்ளது. நான்கு வருட நீண்ட ஆய்வுக்குப்பின் காந்திஜியின் பேரன் துஷார் காந்தி இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
காந்தி கொலை வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்த 88 வயது பால் சந்திர ஹல்திபுரி காந்தியின் குடும்பத்தினர் முன்னிலையில் தெற்கு மும்பையில் உள்ள ஆக்ஸ்போர்ட்புக் ஸ்டோர்ஸில் இது வெளியிடப்பட்டது.
காந்தியின் படுகொலை குறித்த நீதிபதி கபுர் கமிஷனின் அறிக்கையில் உள்ள திடுக்கிடச் செய்யும் உண்மைகளை இப்புத்தகம் திறந்து காட்டுகிறது. 1948 ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்சே காந்தியைக் கொல்வதற்கு முன்பாகவே காந்தியின் மரணம் விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது. அன்று மாலை 5.17 மணிக்கு தில்லியில் காந்திஜி சுடப்பட்டார். ஆனால் அன்று மதியம் 2.30 மணிக்கே புனேயில் காந்திஜி கொல்லப்பட்டார் என்ற செய்தி துண்டுப் பிரசுரங்களின் மூலம் வெளியிடப்பட்டது என்ற நீதிபதி கபுர் கமிஷனின் அறிக்கையை ஆதாரமாக்கி துஷார் காந்தி சுட்டிக் காட்டுகிறார். இந்தப் படுகொலைக்குப் பின்னணியில் நாதுராம் கோட்ஷேயின் தனிப்பட்ட கோபம் மட்டும் அல்ல மிகப் பெரும் சதித் திட்டம் இருந்தது என்பதை இது விளக்குகிறது.
தில்லி மும்பை காவல் துறையினருக்கும் பிற ஏஜென்ஸிகளுக்கும் காந்தி படுகொலை குறித்த சதித் திட்டங்கள் பத்து நாட்களுக்கு முன்பே தெரிந்திருந்தும அவர்கள் எதுவும் செய்யவில்லை என்கிறார் துஷார் காந்தி
1 comment:
காந்திஜியின் கொலை! மர்ம முடிச்சுகள்....

நன்றி சமரசம்
1-15, மார்ச், 2007
Post a Comment