Followers

Saturday, March 10, 2007

மக்காவை நோக்கி கொண்டு வரப்படும் கனி வர்க்கம்!

8 comments:

suvanappiriyan said...

மக்காவை நோக்கி கொண்டு வரப்படும் கனி வர்க்கம்!

'முஹம்மதே! 'நாங்கள் உம்முடன் சேர்ந்து உன் மார்க்கமாகிய இஸ்லாத்தைப் பின்பற்றினால் எங்களின் வசிப்பிடத்திலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயமளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கி கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'
-குர்ஆன் 28 : 57

முகமது நபிக் காலத்தில் அந்த மக்கள் இஸ்லாத்தைப் பற்றி கொண்டிருந்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமாக மேற்சொன்ன வசனங்கள் அருளப்பட்டன.

அபயமளிக்கும் புனிதத் தலம்!

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் மக்காவிலுள்ள கஃபா. இந்த ஆலயம் மக்களின் அபயத் தலமாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

கஅபா அபயத்தலம் என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயத் தலமாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்த தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது.

சதாம் முன்பு சவுதியை தாக்க ஏவுகணைகளை வீசிய பொழுது என் முதலாளியும் அவரது உறவினர்களும் சவுதியின் பாதுகாப்பான இடமாக தேர்ந்தெடுத்தது குர்ஆன் கூறும் அபயத் தலமான மக்காவைத்தான்.

இந்த அபயத் தலம் என்ற வார்த்தை இதுவரை காக்கப் படுவதால் குர்ஆன் இறைவேதம்தான் என்பது நிரூபிக்கப்படுகிறது.

பாலைவனத்தில் கிடைக்கும் கனிகள்!

இன்றைய மக்கா நகரம் முகமது நபி காலத்திலும் அதற்கு முன்னரும் எவ்விதக் கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது.

இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் கனி வர்க்கம் கொண்டு வரப்படும் எனத் திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்கிறது.

இந்தியாவில் இந்த வசனம் இறங்கியிருந்தால் இது ஒரு ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்காது. நம் நாடு நில வளத்திலும், நீர் வளத்திலும் அன்று முதல் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆனால் பாலைவனப் பிரதேசமான மக்காவை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மண் வளமும் கிடையாது. தண்ணீர் வசதிக்கும் வாய்ப்பில்லை. இருந்தும் 'ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக மக்காவை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது' என்ற வாசகத்தைக் கவனிக்க வேண்டும்.

பாலைவனம் சோலைவனம் ஆக வேண்டுமாயின் அரபு நாடுகளுக்கு செல்வம் குவிய வேண்டும். கறுப்புத் தங்கமான பெட்ரோலை கணக்கில்லாமல் அந்நாடுகளுக்கு இறைவன் கொடுத்து இன்று அரபு நாடுகள் சோலைவனமான காட்சியைப் பார்க்கிறோம்.

நம் நாட்டிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் கப்பல்களில் தரமான மண்ணை விலைக்கு வாங்கி பாலை மணலை களிமண்ணாக மாற்றி இன்று விவசாயம் அமோகமாக உள்ளது அரபு நாடுகளில். கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது சவுதி அரேபியா. நம் நாட்டில் கிடைக்காத கனி வர்க்கம் இன்று சவுதியில் குறைந்த விலைக்கு கிடைப்பதையும் பார்க்கிறோம். இது எப்படி சாத்தியமானது என்று வியக்கிறோம்.

நாமோ சோலை வனமான இந்தியாவை மரங்களை வெட்டி பாலைவனமாக்கி வருகிறோம். மரங்களையே வெட்டி தன் கட்சியை வளர்த்தவரின் வாரிசுதான் இன்று சுகாதார அமைச்சராம். வேடிக்கையாய் இருக்கிறதல்லவா!

Anonymous said...

//மரங்களையே வெட்டி தன் கட்சியை வளர்த்தவரின் வாரிசுதான் இன்று சுகாதார அமைச்சராம். வேடிக்கையாய் இருக்கிறதல்லவா!
//

இடையில் உங்களுக்கு அரசியல் நக்கல் வேறு. வாழ்த்துக்கள்.

ஆமாம் அது ஏன் இந்த தலைப்பை கமெண்ட்டில் இட்டிருக்கிறீர்கள்.

எழில் said...

//மரங்களையே வெட்டி தன் கட்சியை வளர்த்தவரின் வாரிசுதான் இன்று சுகாதார அமைச்சராம். வேடிக்கையாய் இருக்கிறதல்லவா!
//
வன்மையாக கன்டிக்கிறேன்.
மரம் வெட்டியது, மரம் வெட்ட வெண்டும் என்பதற்காக அல்ல.
கட்சி வளர்ந்தது பல கோடி மரம் நட்டதால்தான். இது இந்த பதிவுக்கு பொருததமில்லாமல் நிற்கும் விஷயம்.

suvanappiriyan said...

வாங்க எழில்!

//வன்மையாக கன்டிக்கிறேன்.
மரம் வெட்டியது, மரம் வெட்ட வெண்டும் என்பதற்காக அல்ல.//

நீங்க என்ன சொல்ல வர்றீங்க. எனக்கு புரியலீங்களே!

//இது இந்த பதிவுக்கு பொருததமில்லாமல் நிற்கும் விஷயம்.//

ஒரு நாடு தன் இயற்கை வளத்தை பெருக்கிக் கொள்ள நம் நாட்டிலிருந்து மண்ணை விலைக்கு வாங்கி உபயொகப்படுத்திக் கொன்கிறார்கள். நம் நாட்டில் அனைத்து வளங்கள் இருந்தும் அதைப் பாதுகாக்க தவறி விட்டோம். நம் அரசியல் தலைவர்கள் எந்த அனவு இதை உணர்ந்திருக்கிறார்கள் என்று விளக்குவதற்க்காகவே அதையும் எடுத்து எழுதினேன்.

suvanappiriyan said...

அனானி!

//இடையில் உங்களுக்கு அரசியல் நக்கல் வேறு. வாழ்த்துக்கள்.//

மதம் என்பது சமூகத்தை சார்ந்ததாகத்தான் இருக்கிறது. சமூகக் கொடுமைகளுக்கும் இறைவன் வாக்குக்கும் உள்ள தொடர்பை நாம் சிந்திக்க வேண்டியே அந்த செய்தியையும் இணைத்தேன்.

//ஆமாம் அது ஏன் இந்த தலைப்பை கமெண்ட்டில் இட்டிருக்கிறீர்கள்.//


புதிய பிளாக்கருக்கு மாறிய உடன் செட்டிங்ஸில் ஏற்பட்ட கோளாறுகளால் தற்போது கமெண்ட் பகுதியிலேயே பதிவையும் இடுகிறேன். இரண்டொரு நானில் அக்குறை நீக்கப்படும்.

கரு.மூர்த்தி said...

அப்போ இனி பெரு முலை க்னிகள் சொர்கத்தில் மட்டுமல்லாது மக்காவிலும் கிடைக்குமா?

suvanappiriyan said...

KaruMoorthy!

'நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன.' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் எதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் 'இதற்கு முன் இதுதானே நமக்கு வழங்கப்பட்டது.' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையதுதான் முன்னரும் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
-குர்ஆன் 2 : 25

ஒரே இறைவனை வணங்கி நல்லறங்களும் செய்து வாருங்கள். கரு மூர்த்தியான உங்களுக்கும் சுவனத்தில் அழகிய நங்கைகள் காத்திருக்கிறார்கள்.

suvanappiriyan said...

//முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும்.//

-ஆதி சேஷன்!

ஆதி சேஷன் அழகிய பதிவை இட்டுள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஷியாக்கள் குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளில் இருந்தோ ஆதாரம் காட்ட முடியாது. அன்றைய பாரசீகர்கள் நெருப்பு வணங்கிகளாக இருந்தனர். நம் இந்திய கலாச்சாரத்தையும் ஒத்தவர்களாக இருந்தனர். தம் மூதாதையரின் பழக்க வழக்கத்தில் பற்று கொண்ட ஈரானிய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் ஏற்றிய புதிய பழக்கங்களே ஆதி சேஷன் சுட்டிக்காட்டிய பிரச்னைகள். இந்த பழக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

'இறைவனையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து அந்த இறைவனை வணங்குவது போல் மற்ற தெய்வங்களை வணங்குவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கைக் கொண்டோர் அவர்களை விட இறைவனை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் இறைவனுக்கே என்பதையும் இறைவன் கடுமையாக தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.'
-குர்ஆன் 2 : 165

'இறைவன் அருளியதைப் பின் பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின் பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
-குரஆன் 2 : 170

'அவர்களே நேர்வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது?'
-குர்ஆன் 2 : 175

ஏக இறைவனை நோக்கியே திரும்புங்கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள். தங்களது மார்க்கத்தைப் பிரிந்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்ப்பித்தோரில் ஆகி விடாதீர்கள். ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
-குர்ஆன் 30 : 31,32