Followers

Wednesday, November 05, 2008

பராக் ஒபாமா - என் பார்வையில்



பராக் ஒபாமா - என் பார்வையில்

எல்லோரும் எதிர்பார்த்தபடி பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகி விட்டார். ஆப்ரிக்க நாட்டைச் சார்ந்த ஒருவர் அதிபராக முதன் முறையாக வெள்ளை மாளிகையை தொடுவது பலராலும் நம்ப முடியவில்லை. பல நீக்ரோ இனத்தவர் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுத காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. கென்ய மக்கள் குழுவினராக ஆனந்த நடனமாடியது கண் கொள்ளாக் காட்சி.

நம் இந்தியாவில் எப்படி ஒரு இனம் இன்று வரை பலராலும் ஒடுக்கப்பட்டு வருகிறதோ அதே போன்ற நிலைதான் அமெரிக்காவிலும். இடமும் பெயரும் மட்டுமே மாற்றம். ஒபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றவர்களை நிற வெறி பிடித்த வெள்ளையர்கள் அவமானப்படுத்திய நிகழ்ச்சி பல இடங்களிலும் நிகழ்ந்துள்ளது. அரசாள்வதற்கு மன்னருக்கு மகனாக பிறக்க வேண்டும்: மக்களாட்சிக்கு தலைவராக வர இன்ன இனத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்ற கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து இன்று அமோக வெற்றி பெற்றுள்ளார் ஒபாமா.

அதிலும் அமெரிக்காவில் கணிசமான மக்கள் தொகையை கொண்ட யூதர்களும் ஒபாமாவை ஆதரித்ததுதான் பலருக்கும் ஆச்சரியம். இஸ்லாமிய பாரம்பரியத்தில் வந்தவர்: மதரஸாவில் கல்வி பயின்றவர்: இஸ்லாமிய தீவிரவாதி: முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்: என்றெல்லாம் ஒபாமாவுக்கு எதிரான பிரச்சாரம். வாக்குச் சீட்டில் ஒபாமா என்பதற்கு பதில் ஒஸாமா என்று அச்சடித்த ஒரு சிலரின் குள்ள நரித்தனம். தேர்தலுக்கு முன் 'அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமாவை வைப்பதும், ஒஸாமாவை வைப்பதும் ஒன்றுதான்' என்று கூறிய ஆஸ்திரேலிய பிரதமரின் திமிர்த்தனம். அமெரிக்க தேவாலயங்கள் முழுவதும் பாதிரிகளால் ஒஸாமாவின் இஸ்லாமிய பின்னணியை வைத்து எதிர்ப் பிரச்சாரம். இதை எல்லாம் முறியடித்து 'மாற்றம் தேவை' என்ற ஒரே முழக்கத்துடன் இன்று அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா அமரப் போகிறார்.

பொருளாதார பின்னடைவு, ஆப்கன் பிரச்னை, ஈராக் பிரச்னை, பாலஸ்தீன பிரச்னை, என்று பல சிக்கல்களை ஜார்ஜ் புஷ் என்ற கிறுக்கனால் மேலும் சிக்கலாக்கப் பட்டுள்ளது. இந்த பிரச்னைகளை எல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பதில்தான் ஒபாமாவின் உண்மையான வெற்றி அமைந்துள்ளது.

நிறவெறி, மொழிவெறி, மதவெறி அனைத்தையும் கடந்து சிறந்த உலக தலைவராக மிளிருகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

6 comments:

rapp said...

அவர் நல்ல தொடக்கம் பெற்று வெற்றியடைய வாழ்த்துக்கள்:):):)

suvanappiriyan said...

Mr rapp!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது?

- முகம்மது அன்சாரி, தஞ்சை.

இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்காலத்தில் வரப் போவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ள ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் "ஹூசேன்''.

அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார்.

"ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?'' அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் "இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்''.

இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே?

இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும்.

arasu.

http://www.kumudam.com/magazine/Kumudam/2008-11-05/pg19.php

வல்லிசிம்ஹன் said...

ஒரு நல்ல எதிர்காலம் அவருக்கும்,அவரது ஆட்சிக்கும் கிடைக்கட்டும்.

நன்றி.

அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.

suvanappiriyan said...

வல்லி சிம்ஹன்!

//ஒரு நல்ல எதிர்காலம் அவருக்கும்,அவரது ஆட்சிக்கும் கிடைக்கட்டும்.//

உங்கள் வாக்கு பலித்து உலகில் அமைதி நிலவட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

நியூயார்க்: "புதிய அதிபராக பொறுப் பேற்க உள்ள பராக் ஒபாமாவால், அமெரிக்காவில் பெரும் மாற்றங்கள் ஏற்படப்போவது உறுதி; இந்தியாவை பொறுத்தவரை, பயங்கரவாதம் ஒழிப்பு உட்பட பல விஷயங்களில் பலன்களை எதிர்பார்க்கலாம்!'

நோபல் விருது பெற்ற இந்திய பொருளாதார தத்துவ நிபுணர் அமர்த்தியா சென், அமெரிக்காவில் உள்ள ஹார் வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார். பாஸ்டன் நகரில் வசிக்கும் அவர், ஒபாமாவின் பெரும் விசிறி. அவர் எதிர்பார்த்தபடியே ஒபாமா, அதிபராக பொறுப் பேற்க உள்ளது பற்றி அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள் ளார். ஒபாமா நிர்வாகம் எப்படியிருக்கும் என்று அமர்த்தியா சென் கூறியதாவது: ஓட்டு எண்ணிக்கை நடக்க ஆரம்பித்ததில் இருந்து எனக்கு மனம் நிலை கொள்ளவில்லை. நான் இன்னும் முழுமையான இந்திய குடியுரிமை பெற்றவன் தான். அதனால், நான் ஓட்டு போட முடியவில்லை. ஆனால், ஒபாமா வெற்றி பேற வேண்டும் என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன்.

அமெரிக்கா, உலக நாடுகளுக்கு தலைமை நிலையில் இருந்தாலும், அதற்கேற்ப நடந்து கொள்வதில் ஒபாமாவுக்கு தீர்க்கமான கருத்துக்கள் உண்டு. தன்னிச்சையாக முடிவெடுப் பதில் அவருக்கு சிறிதும் விருப்பமில்லை. மூன்று முக்கிய விஷயங்களில் பெரும் மாற்றத்தை கொண்டு வரப்போகிறார் ஒபாமா. இதுவரை இல்லாத வகையில் ஆப்ரிக்க- அமெரிக்கர்களை ஜனநாயக சுதந்திரத்துடன் வாழ வகை செய்யும் வகையில், அமெரிக்க ஜனநாயகத்தில் புதிய புரட்சியை நிறைவேற்றுவார்.

சமீப காலம் வரை கூட, அமெரிக்காவில் இனவெறி ஆதிக்கம் இருந்தது. கறுப்பர் இனத்தவரை பெரிய பதவிகளில் வர விடாமல் தடுக்கும் சக்திகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதையெல்லாம் மீறி, ஒபாமா இன்று சாதித்துள்ளார். கறுப்பர் இன ஜனநாயகத்துக்கு பெரும் ஆரம்பம் இது. இரண்டாவது விஷயம், எந்த ஒரு விஷயத்திலும் எல்லா நாடுகளுக்கும் ஒரு கருத்து இருக்கும் போது, அமெரிக்கா தன்னிச்சையான முடிவை எடுக்கும் நிலை இதுவரை இருந்தது. குறிப்பாக, ஈராக் விஷயத்தில் புஷ் நிர்வாகம் எடுத்த முடிவு, உள்நாட்டிலும், பல நாடுகளிலும் பெரும் அதிருப்தியை தந்தது.

இத்தனைக்கும், 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் ஈராக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாக்குதல் நடத்திய அல்- குவைதா அமைப்பினரை, ஈராக்கில் செயல்பட ஈராக் நிர்வாகம் விட் டதே இல்லை. அப்படியிருக்க, ஈராக் மீது திட்டமிடாமல் தாக்குதல் நடத்த முடிவெடுத்தது பெரும் தவறு என்பதை ஒபாமா, தன் பிரசாரத் தில் கூட திட்டவட்டமாகக் கூறினார். அதனால், சர்வதேச அளவில் முடிவெடுப்பதில், ஒருமித்த நிலையை ஒபாமா பின்பற்றுவார் என்பது உறுதி.

மூன்றாவது விஷயம், அமெரிக்க கொள்கைகள் விஷயத்திலும் தன்னிச் சையாக எடுக்கும் பழக்கத்தை ஒபாமா மாற்றுவார். வலுவான நாடு அமெரிக்கா என்று உலகம் அங்கீகரித்துள்ளதை தக்க வைக்கவும், பெருமையை நிலைநாட்டவும் ஒருமித்த கொள்கைகளை எடுக்க முயற்சிப்பார்.

அமெரிக்காவில் நிதி நெருக்கடிக்கு காரணம், முறையற்ற, கட்டுப்பாடு இல்லாத நிர்வாகம் தான். அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை தான் இதற்கெல்லாம் காரணம். முறைப்படுத்தும் ஒழுங்குமுறை சட்டங்கள், நடைமுறைகள் கொண்டு வந்தால் போதும்; நிதி நிலை சீராகி விடும்; அச்சப் படத் தேவையே இல்லை. இந்தியாவை பொறுத்தவரை, புஷ் நிர்வாகத்தில் அமெரிக்கா எப்போதும் பகை காட்டியதே இல்லை தான். அதற்காக, இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை, முடிவுகளை எடுத்ததே இல்லை என்று சொல்ல முடியாது. இந்த வகையில், ஒபாமா வந்த பின், இந்தியாவுக்கு எதிரான கொள்கைகள் மிதமாகுமா என்று சொல்ல முடியாது.

ஆனால், எல்லா நாடுகளின் நலனை கருத்தில் கொண்டு, கொள்கைகளை வகுக்கும் போது, அதில் இந்தியாவுக்கு அதிக பலன்கள் இருக்கும் என்பது உறுதி. குறிப்பாக, பயங்கரவாதத்தை எதிர்த்து எடுக்கப்படும் நடவடிக்கைகளில், அமெரிக்க புதிய அதிபர் ஒபாமா எடுக்கும் கொள்கை முடிவுகளால் இந்தியாவுக்கு சாதகங்கள் அதிகம் இருக் கும் என்பது மட்டும் நிச்சயம்.

-இவ்வாறு அமர்த்தியா சென் கூறியுள்ளார்.