Followers

Wednesday, November 19, 2008

ஹாஜிகளே! வருக!! வருக!!!




ஹாஜிகளே! வருக!! வருக!!!

25000 ஹாஜிகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா கண்டங்களில் இருந்து இந்த வருடம் ஹஜ்ஜீக் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியா வருகிறார்கள். மேற்கண்ட நாட்டு ஹாஜிகளின் பொறுப்பாளர் அலாவுதீன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார். இவர்களை கவனிக்கும் பொருட்டு 24 மணி நேரமும் மூன்று ஷிஃப்ட்களாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அலாவுதீன் கூறுகிறார்.

மேலும் சவுதியில் பணிபுரிவோர் தக்க அனுமதி இல்லாமல் ஹஜ்ஜீ செய்ய வந்தால் காவலர்களால் பிடிக்கப் பட்டு தண்டனையும் வழங்கப்படும் என்றும் அவர்களின் நாட்டுக்கும் திரும்ப அனுப்பப் படுவார்கள் என்றும் சவூதி அரசு எச்சரித்துள்ளது. எனவே நிர்வாக வசதிக்காக சவூதி அரசு எடுக்கும் இந்நடவடிக்கைக்கு நாமும் ஒத்துழைப்பு கொடுத்து நமது நண்பர்களுக்கும் அறிவுறுத்துவோம்.

ஹஜ்ஜீக் கடமை என்பது கடன்கள் இல்லாமல் உடல் ஆரோக்கியமும் இருந்து மெக்கா செல்வதற்கான முழு ஆவணங்களும் இருந்தால்தான் கடமையாகும். ஆர்வக் கோளாரில் சிலர் வெளியாட்களின் மூலமாக பயண ஏற்ப்பாட்டை செய்து கொண்டு பல சிரமங்களுக்கும் ஆளாகிறார்கள். இந்த வருடம் சவூதி அரசும் மிகவும் கண்டிப்புடன் இருப்பதால் முறையான அனுமதி கிடைக்காதவர்கள் பொறுமையுடன் இருந்து அடுத்த வருடம் முயற்ச்சி செய்வார்களாக!

இறைவன் நமது உள்ளத்தைத்தான் பார்க்கிறான்.

'ஹஜ்ஜுக்குத் தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்: திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் இறை அச்சமே மிகச் சிறந்தது.'

-குர்ஆன் 2:197





2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நேற்று இங்கு தொலைக்காட்சியில் ஒரு ஆவணப்படம்...மெக்கா பற்றிக் காட்டினார்கள். அந்தப் பக்த வெள்ளம் எனக்குப் பிரமிப்பைத் தந்தது.

ஆகாயத்தில் இருந்து படப்பிடிப்பு...அப்பப்பா....
கவ்வாவை பக்தர்கள் சுற்றும் போது( அந்தக் காட்சி அழகும் பிரமிப்பும் மிக்கது) வலப்பக்கமாக சுற்றி வந்தார்கள். அதற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா?? ஏனைய மதங்களில் இடப்பக்கமாக சுற்றுவதேயே வழக்கமாக உள்ளதை அவதானித்துள்ளேன்.

அதில் பல ஐரோப்பிய; அமெரிக்கர்களையும் கண்டேன்.

பிரான்சில் வாழும் ஓர் அல்யீரிய இஸ்லாமியர் வைத்தியர்...அவரைத் தொடர்ந்தே இவ்வாவணப் படம் உருவாக்கியுள்ளார்கள்.

மெக்காவில் வேலைசெய்யும் வெளிநாட்டவர் எல்லோரும் இந்தக் கடமை செய்ய முடியாதென்பது எனக்குப் புதிய தகவல்.
ஒரு சந்தேகம்.

நான் இந்து...கவ்வா இருக்கும் இடத்துக்குச் செல்ல எனக்கு அனுமதியுண்டா??
இந்த காலம் தவிர ஏனைய காலங்களில்; இந்த கவ்வாவை தரிசிக்கக் கூடாதா???

நான் இந்து ஆனாலும்...யெருசலேம்;கபிலவஸ்து; மெக்கா தரிசிக்க ஆசையுள்ளவன்..
தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

suvanappiriyan said...

திரு யோகன் பாரிஸ்!

//வலப்பக்கமாக சுற்றி வந்தார்கள். அதற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா?? ஏனைய மதங்களில் இடப்பக்கமாக சுற்றுவதேயே வழக்கமாக உள்ளதை அவதானித்துள்ளேன்.//

எந்த காரியம் செய்தாலும் வலப்புறத்திலிருந்து ஆரம்பிக்குமாறு பல கட்டளைகளைப் பார்க்கிறோம். இதுவே கஃபாவை வலப்புறத்திலிருந்து வலம் வரும் காரணமாகப் படுகிறது.

//கவ்வா//

சரியான உச்சரிப்பு 'கஃ(b)பா' Kaaba என்பது.

//நான் இந்து...கவ்வா இருக்கும் இடத்துக்குச் செல்ல எனக்கு அனுமதியுண்டா??
இந்த காலம் தவிர ஏனைய காலங்களில்; இந்த கவ்வாவை தரிசிக்கக் கூடாதா???//

முகமது நபி மக்காவை வெற்றி கொள்வதற்கு முன் கஃபாவை சுற்றி 365 சிலைகள் (நாளொன்றுக்கு ஒரு கடவுள் வீதம்) இருந்தனவாம். அது போன்று சிலை வணக்கம் ஏற்படாமல் தடுக்க இஸ்லாம் அல்லாதவர்களை மக்காவிற்குள் அனுமதிப்பதில்லை. மேலும் புனித பூமியில் தாவரங்களை பிடுங்கி எறியக் கூடாது: பறவைகளை வேட்டையாடக் கூடாது: போன்ற விதி முறைகளை மாற்று மதத்தவர் மீறி விடக் கூடும் என்ற காரணத்தினால்தான் இந்த தடை இருக்கிறது.

எனவே முஸ்லிம்களைத் தவிர ஏனையவர்களை மக்கா வளாகத்துக்குள் அனுமதிப்பதில்லை நண்பரே! கஃபாவை காண வேண்டும் என்ற உங்கள் எண்ணம் நிறை வேற என்னால் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும்.

மேலும் இந்த கஃபாவை கட்டியது நம் அனைவரின் மூல தந்தையான ஆதம் நபி என்று இஸ்லாமும் கிறித்தவமும் சொல்கிறது. உலகின் மையத்தில் கஃபா அமைந்திருப்பது இதன் மற்றோர் சிறப்பு.

'இலயாஸ்த பதே வாயம் நபா ப்ரதிவியா ஆதி' - ரிக் வேதம் 3:29:4

'இறைவனின் இல்லமானது பூமியின் மையத்திலுள்ளது' -ரிக் வேதம்

அடுத்து இந்த ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 'ஜம் ஜம்' நீர் ஊற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மலையடிவாரத்திலிருந்து இந்த நீரூற்று 4000 வருடத்திற்கு முன்பிலிருந்து இன்று வரை வற்றாமல் பொங்கி வருவது இறைவனின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!