'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, July 10, 2009
தற்கொலைகளின் சதவீதம் நாடு வாரியாக!
இந்தியா---------10.65
குவைத்-----------1.95
பிலிப்பைன்ஸ்-----2.10
தாய்லாந்த்--------7.90
சிங்கப்பூர்-------10.05
ரொமானியா-----12.75
அயர்லாந்த்------9.75
அமெரிக்கா------11.05
போர்ச்சுக்கல்----11.20
மால்டோவா-----17.25
சிலி------------10.46
கனடா---------11.65
நியுசிலாந்த்-----12.00
இஸ்ரேல்--------6.25
ஸ்விட்சர்லாந்த்--17.50
ஆஸ்திரேலியா--10.90
சவுத் கொரியா--23.75
பெல்ஜியம்-----21.30
பிரான்ஸ்-------18.30
ஜப்பான்-------24.20
ரஷ்யா---------36.15
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் 'கால் அப்' என்ற அமைப்பு தற்கொலைகளின் விகிதாச்சாரத்தை நாடுவாரியாக கணக்கெடுத்து வெளியிட்டுள்ளது. தற்கொலைகளின் விகிதாச்சாரம் மத நம்பிக்கை உள்ளவர்களை விட மத நம்பிக்கை அற்றவர்களிடத்தில் அதிகரித்துள்ளது என்றும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது. இந்த நாடுகளில் உள்ள மக்கள் கிறித்தவத்தை பின்பற்றினாலும் 90 சதவீத மக்கள் மத நம்பிக்கை அற்றவர்களாகவே உள்ளனர். நமது இந்தியாவிலும் தற்கொலைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதைப் பார்க்கிறோம். பி.சயினாத் என்பவர் ஹிந்து நாளேட்டில் 'சென்ற பத்தாண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 30000' என்கிறார்.
என் பள்ளி தோழன் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டான். 10 ஆம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்த அவன் படிக்க நினைத்தது மருத்துவம. அவனது தகப்பனார் அவனை சேர்த்ததோ பொறியியல் கல்லூரியில். தற்கொலைக்கு இதுதான் காரணம்.
அடுத்து இலங்கை தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரையும் எடுத்துக் கொள்ளலாம். இலங்கைத் தமிழருக்காக தமிழ் மண்ணில் போராட்டம் நடத்தி இருக்கலாம். அல்லது கள்ள தோணியில் சென்று இலங்கை ராணுவத்தை எதிர்த்து போரிட்டு இறந்திருக்கலாம். அதை விடுத்து தனது குடும்பத்தை கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்காமல் தனது உயிரை மாய்த்து கொண்டதால் எதை சாதித்து விட்டார் முத்துக்குமார்? சில தலைவர்களை சிறையில் தள்ளியதைக் கூட பொறுக்க முடியாமல் தீக்குளித்து சாகும் நமது கழக கண்மணிகளையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.
இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? மன நிம்மதி இழப்பதுதான் முதற்காரணம். ஒரு மனிதனுக்கு துன்பம் ஏற்படும் போது தனக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எங்கு இறக்கி வைப்பது என்ற தடுமாற்றத்தில் விளைவதுதான் அநேக தற் கொலைகள். எந்த மனிதன் இறை நம்பிக்கையில் சற்றும் தளராமல் தனது வாழ்க்கையை செலுத்துகிறானோ அவன் எந்த நிலையிலும் தற்கொலைகளை நாட மாட்டான். பல முஸ்லிம் நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கெல்லாம் தற்கொலைகளின் விகிதாச்சாரம் மிக மிக குறைவாகவே இருப்பதை பார்க்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் அந்த மக்களின் வாழ்க்கையே இஸ்லாமாக இருப்பதுதான்.
இறந்தவர்களுக்காக மற்றவர்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக ஒரு தொழுகை முஸ்லிம்களிடத்தில் உண்டு. இந்த தொழுகையைக் கூட தற்கொலை செய்து கொண்டவருக்காக தொழக் கூடாது என்று முகமது நபி முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறார்.
'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'
-குர்ஆன்: 13:28
'உங்களையே கொன்று விடாதீர்கள். இறைவன் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.'
-குர்ஆன்: 4:29
'யார் ஒரு கூரான ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டே இருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் விஷத்தை கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டே இருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் தள்ளப்பட்டு மேலிருந்து கீழே என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்.' என்று முகமது நபி சொல்லக் கேட்டவர் அபுஹூரைரா.
நூல்: முஸ்லிம் 157
என்றெல்லாம் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுவதாலும், முஸ்லிம்கள் தங்களின் மன அழுத்தத்தை ஒரு நாளைக்கு ஐந்து வேளை இறைவன் முன்னால் இறக்கி வைத்து விடுவதாலும் முஸ்லிம்களிடத்தில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. இந்துக்களில் கூட மதப்பற்று உடையவர்கள் தற்கொலைகளை நாடுவது இல்லை என்பதையும் பார்க்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//முஸ்லிம்களிடத்தில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. இந்துக்களில் கூட மதப்பற்று உடையவர்கள் தற்கொலைகளை நாடுவது இல்லை என்பதையும் பார்க்கிறோம்.//
மதப்பற்று, மதவெறி உடையவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள், பிறரைத் தான் இரக்கமில்லாமல் கழுத்தை அறுத்து கொலை செய்வார்கள். இதுல அல்லாஹூ அக்பரும் என்று முழங்கிக் கொண்டு செய்தாலும், ஜெய் ஹிந்து என்று கூறிக் கொண்டு செய்தாலும் ஒன்றுதான்.
இதில தற்கொலைபடைகாளைப் பற்றி குறிப்பிடவே இல்லையே. அல்கொய்தா, எல்டிடியி இவங்களெல்லாம் அந்த வகையில் வராதா, இவங்களெல்லாம் எந்த நாட்டின் குடிமகன்கள் இல்லையா ?
கோவி கண்ணன்!
//மதப்பற்று, மதவெறி உடையவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள், பிறரைத் தான் இரக்கமில்லாமல் கழுத்தை அறுத்து கொலை செய்வார்கள். இதுல அல்லாஹூ அக்பரும் என்று முழங்கிக் கொண்டு செய்தாலும், ஜெய் ஹிந்து என்று கூறிக் கொண்டு செய்தாலும் ஒன்றுதான்.//
ஆயிரக்கணக்கில் பொது மக்களை ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும், கோசோவோவிலும், பாலஸ்தீனத்திலும் கொன்றொழித்தது எந்த இசம். இலங்கை காத்தான்குடியில் இறை வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்றது எந்த இசம். இவர்களில் அதிகமானோர் நாத்திகவாதிகள் என்றே அறியப்படுகிறேன்.
'கொலைக்கு பதிலாகவோ பூமியில் செய்யும் குழப்பத்திற்கு பதிலாகவோ இல்லாமல் ஒருவர் மற்றொருவரை கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இதன் காரணமாகவே இஸ்ராயீலின் மக்களுக்கு விதியாக்கினோம்.
-குர்ஆன் 5:32
என்று குர்ஆன் முஸ்லிம்களுக்கு உபதேசிக்க அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கியின் தவறான செயலை இஸ்லாத்தோடு எப்படி இணைத்துப் பார்க்கிறீர்கள்?
முதலாம் உலகப் போர் 1914 ஆம் ஆண்டு தொடங்கி 1918 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இந்த போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
ஜெர்மனி-2000000, ரஷ்யா-1700000, பிரான்ஸ்-1360000, ஆஸ்திரியா,ஹங்கேரி-1200000, பிரிட்டன்-760000, இத்தாலி-650000, துருக்கி-375000, பிரிட்டிஷ் சாமராஜ்ய நாடுகள்-250000, ஐக்கிய அமெரிக்கா-126000
இதில் காணாமல் போனவர்கள், கை,கால் இழந்து முடமானவர்களை எல்லாம் சேர்க்கவில்லை. இதை இங்கு நான் குறிப்பிட காரணம் முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் எந்த முஸ்லிமும் அல்லது முஸ்லிம் நாடுகளும் காரணம் இல்லை என்பதை சுட்டிக் காட்டவே!
//'கொலைக்கு பதிலாகவோ பூமியில் செய்யும் குழப்பத்திற்கு பதிலாகவோ இல்லாமல் ஒருவர் மற்றொருவரை கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இதன் காரணமாகவே இஸ்ராயீலின் மக்களுக்கு விதியாக்கினோம்.
-குர்ஆன் 5:32//
//என்று குர்ஆன் முஸ்லிம்களுக்கு உபதேசிக்க அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கியின் தவறான செயலை இஸ்லாத்தோடு எப்படி இணைத்துப் பார்க்கிறீர்கள்?
//
அப்ப அல்கொய்தா கொலையாளிகள் அல்குரானை ஏட்டுச் சுரைக்காயாகத்தான் பார்க்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா ?
//அப்ப அல்கொய்தா கொலையாளிகள் அல்குரானை ஏட்டுச் சுரைக்காயாகத்தான் பார்க்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா ?//
'ஈராக்கில் சதாம் மிகப் பெரும் ஆயுதக் குவியலை வைத்துள்ளார். விட்டால் அனைவருக்கும் ஆபத்து' என்ற ஒரு பொய்யான காரணத்தை உற்பத்தி செய்து அமெரிக்கரும் பிரிட்டிஷாரும் கொன்ற ஈராக்கிய பொது மக்கள் எத்தனை லட்சம் பேர்? தங்களது நாட்டை ஷரியத் சட்டத்தின்படி ஆண்டு கொண்டிருந்த தாலிபான்களை உலக வர்த்தக மையத்தின் தகர்ப்பை காரணம் காட்டி தாலிபான்களை வீழ்த்தியது இதே அமெரிக்கா அல்லவா? இந்த அமெரிக்கர்களை அழிப்பதற்கு அல்கொய்தா ஆயுதம் ஏந்துவதை எப்படி தவறாக கருத முடியும்?
'கொலைக்கு பதிலாகவோ பூமியில் செய்யும் குழப்பத்திற்கு பதிலாகவோ இல்லாமல்”
என்ற குர்ஆன் வசனத்திற்கு அமெரிக்கா சரியாக பொருந்தி வருகிறது. எனவே அல்கொய்தாவினர் குர்ஆனை ஏட்டுச் சுரைக்காயாக பயன்படுத்தவில்லை என்று அறியலாம். அதே சமயம் அமெரிக்க ராணுவத்தை இலக்காக ஆக்காமல் அப்பாவி பொது மக்களை அழிப்பதும், கடத்துவதும் கண்டிக்கத்தக்கது. இதை அல்கொய்தாவோ அல்லது தாலிபானோ யார் செய்தாலும் நீதிக்கு முன்னால் குற்றவாளிகளாக நிறுத்தப்படக் கூடியவர்களே! அல்கொய்தா, தாலிபான்களின் பெயரை கெடுப்பதற்க்காக அமெரிக்காவே சில கொலைகளை செய்து பழியை அல்கொய்தாவின் மேல் போட்ட நிகழ்வுகளும் உண்டு.
//'ஈராக்கில் சதாம் மிகப் பெரும் ஆயுதக் குவியலை வைத்துள்ளார். விட்டால் அனைவருக்கும் ஆபத்து' என்ற ஒரு பொய்யான காரணத்தை உற்பத்தி செய்து அமெரிக்கரும் பிரிட்டிஷாரும் கொன்ற ஈராக்கிய பொது மக்கள் எத்தனை லட்சம் பேர்?//
அமெரிக்கா அல்குரான் படிக்காதவங்க அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கொள்லலாமா ?
***
பதிவுகளில் தீவிரவாதத்திற்கான காரணம் சொல்கிறீர்கள். தீவிரவாதம் தவறு என்று கண்டிக்கும் போக்கு இல்லையே. 'அல்'கொய்தா - இதில் கெட்டுப் போவது அந்த தனிப்பட்ட குழுக்களா 'அல்லா' வின் பெயரா ?
//அல்கொய்தா, தாலிபான்களின் பெயரை கெடுப்பதற்க்காக அமெரிக்காவே சில கொலைகளை செய்து பழியை அல்கொய்தாவின் மேல் போட்ட நிகழ்வுகளும் உண்டு.//
அவங்க 'பெயர்' பெற்றவர்களா ?
:)
////'ஈராக்கில் சதாம் மிகப் பெரும் ஆயுதக் குவியலை வைத்துள்ளார். விட்டால் அனைவருக்கும் ஆபத்து' என்ற ஒரு பொய்யான காரணத்தை உற்பத்தி செய்து அமெரிக்கரும் பிரிட்டிஷாரும் கொன்ற ஈராக்கிய பொது மக்கள் எத்தனை லட்சம் பேர்?//
அமெரிக்கா அல்குரான் படிக்காதவங்க அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கொள்லலாமா ?//
அவர்களுக்கு குர்ஆனுக்கு முன் வந்த ஏசு நாதருக்கு அருளிய இன்ஜீல்(பழைய ஏற்பாடு) வேதம் கிடைக்காததாலும் அந்த வேதத்தின் படி நடக்காததாலும் வந்த விளைவுகள் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
//பதிவுகளில் தீவிரவாதத்திற்கான காரணம் சொல்கிறீர்கள். தீவிரவாதம் தவறு என்று கண்டிக்கும் போக்கு இல்லையே.//
தீவிரவாதம் அது எந்த மதத்திலிருந்து வந்தாலும் அதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. அந்த தீவிரவாதம் எப்படி வந்தது என்று ஆராய்ந்து அதை களையாமல் ராணுவத்தை விட்டு அப்பாவி மக்களை குண்டு போட்டு கொல்வதைத்தான் கண்டிக்கிறேன்.
//அவங்க 'பெயர்' பெற்றவர்களா ?
:)//
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு உயரிய நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. முன்பு அதனை இந்தியாவும் தமிழகமும் எந்த அளவு ஆதரித்தனர் என்பது நமக்கு தெரியும். அதே புலிகள் அமைப்பு தடம் புரண்டு வன்முறை இயக்கமாக மாறி தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் போட்டுத் தள்ள ஆரம்பித்தவுடன் இந்தியாவும் தமிழகமும் விலகிக் கொண்டதை நாம் பார்த்தோம். இதே அளவு கோல்தான் அல்கொய்தாவுக்கும் தாலிபான்களுக்கும் பொருந்தும்.
ஈராக்கில் போராளியின் உடையில் ஷியாக்களின் பகுதியில் பாம் வைக்க வந்த மூவரை பொது மக்கள் வசமாக பிடித்து விட்டனர். அவர்களின் முகமூடியை கழட்டியவுடன் அவர்கள் ஈராக்கியர்களே அல்ல. தீர விசாரித்தவுடன்தான் அவர்கள் பிரிட்டிஷ் படை வீரர்கள் என்ற உண்மை தெரிய வந்தது. போராளிகளின் உடையில் இரண்டு மக்களையும் மோத விட்டு குளிர் காய்கின்றனர் அமெரிக்க பிரிட்டிஷ் கூலிப் படையினர். இதைத்தான் நான் இங்கு சுட்டி காட்டினேன்.
சுவனப்பிரியன்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மதங்கள் யாவும் திவிரவாதத்தை ஆதாரிக்கவில்லை இருபினும் மதங்கலின் பெயரால் சிலர் ஏற்படுதும் வன்முறையே மதங்களின் தூயதன்மையை கெடுக்கிறது
தாலிபான்களை கையில் வைய்துக்கொண்டுதான் அமெரிக்கா ரஸ்யாவிடம் போர்தொடுத்தது. இன்று அவர்களை கட்டுபடுத்த நினைகிறது அது. நம் இந்தியாவிலும் மாகத்மாவை சுட்டு கொன்றதே முதல் திவிரவாத செயல்தான் ,பணத்தசையாலும்,பதவி ஆசையலும் சிலர் செய்யும் அட்டுழியங்களுக்கு மத சாயம் பூசப்படுகிறது.இஸ்லாம் சொல்லும் போதனைகள் அரியார்கள் வருகையே இந்த்தியவின் இருன்ட காலமாகி போனாது போல இன்றும் மேற்க்கத்திய நாடுகளின் சூழ்ச்சியே மதஙகளின் மீது ஏற்படுத்த்ப்படும் கறையாக மாரிவருகிறது.பாவம் கோவி.கண்ணன் தழிழன் வரலாறு அல்லது இந்தியாவின் விடுதலை வரலாறு அல்லது யூதர்களின் வரலாறு முலுமயாக தெறிந்துகொண்டால் அவ்ருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும்
எழிலி!
//மதங்கள் யாவும் திவிரவாதத்தை ஆதாரிக்கவில்லை இருபினும் மதங்கலின் பெயரால் சிலர் ஏற்படுதும் வன்முறையே மதங்களின் தூயதன்மையை கெடுக்கிறது//
உண்மை! பள்ளிவாசலில் இறை வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களை ஈராக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு குண்டு வைத்து கொன்றதும் ஒரு முஸ்லிம் அமைப்புதான். இவை எல்லாம் அவர்கள் இஸ்லாத்தை முறையாக படிக்காததால் வந்த விளைவு.
//பாவம் கோவி.கண்ணன் தழிழன் வரலாறு அல்லது இந்தியாவின் விடுதலை வரலாறு அல்லது யூதர்களின் வரலாறு முலுமயாக தெறிந்துகொண்டால் அவ்ருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும்//
இதற்கு நண்பர் கோவிக் கண்ணன்தான் பதில் சொல்ல வேண்டும்.
hello friends..... ennudaiya oru chinna vendugol... thayavu seithu yarum inimel MATHATHAI patri pesatheergal.... neengal ezhuthiyathai neengale oru tharam padithu parungal ....Nam anaivarum otrumaiyaga (SAKOTHARA SAKOTHARIGALAGA ) irukkave anaithu mathamum virumbugirathu... nam otrumaiyaga irupathe namathu mathathin mel nam vaithullathu unmaiyana patragum.... enave nam payanulla sinthanaigalai patri uraiyaduvom.... P L E A S E . . . . . P L E A S E FRIENDS....
En iniya sakothara , Sakotharigalukku vanakkam.... nam mathangalai patri pesavendam endru ninaikiren ... enave nalla payanulla karuthukkalai patri vivathippom... mudintha alavu namathu arivai peruki kolvem .....
Post a Comment