'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, July 25, 2009
ஸ்ருதி ஹாஸனுக்கு என்ன நேர்ந்தது?
நேற்று தற்செயலாக சஹாரா சேனலில்(ஹிந்தி) நடந்த கலந்துரையாடலை கவனித்தேன். அங்கு நமது நடிகர் கமலஹாஸன் மகளின் சினி அரங்கேற்றத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்த படத்தில் ஸ்ருதிஹாஸன் ஆடிய சில பாடல் காட்சிகளை போட்டு காட்டினார்கள். அம்மணி முதல் படத்திலேயே தன்னால் எந்த அளவு உடைகளை குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்து இந்திய மக்களுக்கு கலைச் சேவை :-) செய்திருக்கிறார்.
என் சிறு வயதில் சலங்கை ஒலி, கைதியின் டைரி, வாழ்வே மாயம், ஏக் துஜே கேலியே போன்ற படங்களை எல்லாம் திரை அரங்குகளில் பல முறை பார்த்தவன். சமூகத்தில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்த வேண்டும், மூடப்பழக்கங்களை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதை எல்லாம் தனது படத்தின் மூலம் தைரியமாக சொல்லக் கூடியவர் கமலஹாஸன். மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் ஓரளவு பொது அறிவு நிரம்பப் பெற்றவர். தனது ரசிகர் மன்றங்களை பொது சேவையில் ஈடுபடுத்தி பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கக் கூடியவர் நம் கமலஹாஸன். இப்படிப் பட்ட பின்புலம் உள்ள ஒரு பிரபலத்தின் மகள் சில்க் சுமிதா ரேஞ்சுக்கும் கீழிறங்கி அமீர்கானின் அண்ணன் மகனோடு (ஹீரோவின் பெயர் மறந்து விட்டது) குத்தாட்டம் போடுவதை பார்க்க சகிக்கவில்லை.
கமலஹாஸனிடம் கோடிகள் கொட்டிக் கிடக்கிறது. புகழுக்கும் குறைவில்லை. இப்படிப்பட்ட பின்புலத்தில் உள்ள ஸ்ருதிஹாஸன் எதற்காக இப்படி ஒரு துறையை தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவு, டைரக்சன், இசை என்று திறமையை வெளிக்காட்டும் துறைகளை தேர்ந்தெடுத்திருந்தால் கமலின் பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கும்.
எது எப்படியோ! கலந்துரையாடலின் முடிவில் "முதல் படத்திலேயே கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப் போன்ற நடிகைகளை எல்லாம் ஆடை அவிழ்ப்பில் பின்னுக்கு தள்ளி விட்டார் ஸ்ருதி ஹாஸன்" என்று சொன்னபோது கமலஹாஸனை நினைத்து பரிதாபப் பட்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
mutpagal seyyin pitpagal..
அண்ணா!
நீங்க ரொம்ப அப்பாவியாக இருக்கிறீர்கள்.
பெயரிலி!
மாதா பிதா செய்த வினை, மக்களுக்கு மக்களுக்கே என்கிறீர்களா??
Hi
வருந்ததக்க விஷயம் தான் இது.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
அனானி!
//mutpagal seyyin pitpagal..//
கமல்ஹாஸன் தன் படத்தின் தரத்தில் காட்டிய சிரத்தையை தனது சொந்த வாழ்க்கையிலும் காட்டியிருந்தால் இது போன்ற நிகழ்வுகளை தடுத்திருக்கலாம்.
யோகன் பாரிஸ்!
//அண்ணா!
நீங்க ரொம்ப அப்பாவியாக இருக்கிறீர்கள்.//
என்ன செய்வது. கமலஹாஸன் மேல் வைத்திருந்த மதிப்பு என்னை அவ்வாறு எழுத சொன்னது.
செய்தி வளையம்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! என் பதிவுகளையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றிகள்.
மாடனாக வளர்ந்த பெண் , நீச்சல் உடை அவருக்கு பிரச்சனையாக தெரிந்திருக்காது
அதுவும் இந்தி பட உலகில் இது பெரிதல்ல
ஆளவந்தான் படத்தில் கமல் கிட்டதட்ட நிர்வாணமாகவே வருவார்
16 வயதினிலே படத்தில் அந்த காலத்ல்யே கோவனம் மட்டும் கட்டி நடிதார்
அவர் செய்தால் சரி மகளுக்கு மட்டும் தவறா?
பிரபு!
//ஆளவந்தான் படத்தில் கமல் கிட்டதட்ட நிர்வாணமாகவே வருவார்
16 வயதினிலே படத்தில் அந்த காலத்ல்யே கோவனம் மட்டும் கட்டி நடிதார்
அவர் செய்தால் சரி மகளுக்கு மட்டும் தவறா?//
ஆண் பெண் சரிநிகர் சமானம் என்று வாயளவில் சொல்லிக் கொள்ளலாம். சினி உலகைப் பொறுத்தவரை ஆண்கள் எப்படி நடித்தாலும் அவர்களின் குடும்பத்தை பாதிப்பதில்லை. ஹீரோக்கள் அனைவரும் தங்களது குடும்பம் சகிதம் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக இருப்பதைப் பார்க்கிறோம். அதே நேரம் ஹீரோயின்களின் சொந்த வாழ்க்கை 70 சதவீதம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. எனவே பெண்கள் சினிமாவில் ஆடை அவிழ்ப்பது தங்களின் சுகமான வாழ்க்கையை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்பதாலேயே இதை பதிவாக்கினேன். இதை படிக்கும் யாராவது ஒருவர் கமலுக்கு இந்த செய்தியை எடுத்துச் செல்வாரல்லவா!
ஐயா!!! இங்கு மும்பைஇல நீங்கள் திரையில் பார்த்த உடையை போல் அணிந்துகொண்டு தான் அலுவலகத்திற்கே வருகிறார்கள் சில பேர்......அப்போது என்ன சொல்வீர்கள்?
அவரவர் வளர்ந்த விதம் அப்படி.....ஸ்ருதிஹாசன் இயல்பிலேயே மார்டர்ன் பெண்ணாகத்தான் இருக்கிறார், அவர் விழாகளுக்கு வரும் போதும மாடேர்ன் உடைகளைத்தான் அணிந்து வருகிறார்......இதில் தவறேதும் இல்லை... அவர் சரியாய் நடிக்கவில்லை என்றால்தான் கமல்ஹாசன் பெயர் பாதிக்கப்படுமே தவிர அவர் நீச்சல் உடையணிந்து நடிப்பதால் அல்ல.
Post a Comment