
'இறைவன் வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்க்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்: எடையைக் குறைத்து விடாதீர்கள்'
-குர்ஆன் 55:7-9
'அவன் வானத்தை உயர்த்தினான்' என்ற வாசகம் 'பெரு வெடிப்பு' கொள்கையை மெய்ப்பிக்கிறது. விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள்? வானம் பூமி நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்து மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வானம் மேலே உயர்த்தப்பட்டது என்று கூறுகின்றனர். அதையேதான் குர்ஆனும் கூறுகிறது. இது பற்றி நான் முன்பே ஒரு பதிவு இட்டுள்ளதால் அதற்கு அடுத்து வரும் 'தராசை நிலை நாட்டினான்' என்ற வசனத்தின் விளக்கத்தை சற்று விரிவாகப் பார்ப்போம்.
உதாரணத்திற்கு 600 கிராம் உள்ள இரும்பு துண்டை நாம் வாழும் பூமியில் தராசில் வைத்து நிறுத்தோம் என்றால் 600 கிராமைக் காட்டும். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. அதே சமயம் அதே தராசில் அதே 600 கிராம் இரும்புத் துண்டை நீங்கள் நிலவில் வைத்து நிறுத்தீர்கள் என்றால் அதன் எடை வெறும் நூறு கிராமைத்தான் காட்டும். இதற்கு காரணம் நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட ஆறு மடங்கு குறைவாகும்.
இதிலிருந்து நாம் விளங்குவது பூமியில் ஒரு பொருளை எடை போடும் போது அப் பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையையே நாம் எடையாக காண்கிறோம் என்பது தெளிவாகிறது.
அந்த கால அரபிகளுக்கு புவி ஈர்ப்பு விசையைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் 'வானம் உயர்த்தப்பட்டு தராசு நிறுவப்பட்டது' என்று எளிமையான மொழி நடையில் மிகப் பெரும் அறிவியலை குர்ஆன் மனிதர்களுக்குப் போதிக்கிறது. இந்த வாக்கியத்தை இன்றைய அறிவியல் யுகத்தில் படிக்க வேண்டுமாயின் 'வானத்தை உயர்த்தினான்: புவி ஈர்ப்பு விசையால் நிலை நாட்டினான்' என்று படித்தால் இன்னும் அறிவியலோடு நெருங்கி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.
3 comments:
Good Article. Keep it up.
-Raja
அருமை.
Thanks for your comments Mr Raja and Mr Peer.
Post a Comment