Followers

Friday, January 07, 2011

நான் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருக்கிறேன்?-1

நான் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருக்கிறேன்?-1

சமீபத்தில் நண்பர் தருமியின் பதிவிற்கு சென்ற போது 'நான் ஏன் முஸ்லிமாக இல்லை?' என்ற தலைப்பில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அதிகமான குற்றச்சாட்டுகளுக்கு பலரும் பல முறை பதில் அளித்து விட்டார்கள். இன்னும் இவர்கள் அதே பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த குற்றச்சாட்டுகளில் பல முகமது நபியின் பெயரால் புனையப் பட்ட கட்டுக் கதைகளே! இதை ஆதாரத்தோடு பல முறை விளக்கயும் இருக்கிறேன். ஆதாரப் பூர்வமான குற்றச் சாட்டுகள் சிலவற்றையும் அந்தப் பதிவிலே காண முடிந்தது. அவற்றிற்கு மட்டும் என்னால் முடிந்தவரை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதிவுகளாகத் தருகிறேன். இதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை என்றாலும் எனது திருப்திக்காக இந்தப் பதிவுகள்.

//பலதார முறை, விவாகரத்து, அடிமைகள் வைத்திருத்தல் என்பவை சமுதாய தர்மத்தின் வேரினையே ஆட்டியது. தனிமனித வாழ்க்கையையும், சமூகத்தின் ஒழுங்கமைப்பையும் மாற்றியது. ஆனால் பெண்களுக்கான முகத்திரை அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. அறிவுச் சுதந்திரம், தனிமனித முடிவுகள் என்பன எல்லாமே நசுக்கப்பட்டன. (88)//

முகமது நபியின் வருகைக்கு முன்பு அரேபியாவின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். பெண் குழந்தை பிறந்தால் அதை உயிரோடு புதைத்து விடுவார்கள். பெண் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டால் சமூகத்திற்க்குள் வர வெட்கப் பட்டுக் கொண்டு பல நாட்கள் தலைமறைவாகி விடுவானாம் தகப்பன். (ராமநாதபுரம்,சேலம் போன்ற மாவட்டங்களில் இன்றும் கள்ளிப்பால் கொடுத்து குழந்தையை கொல்லும் வழக்கம் இருந்து வருவதை நாம் அறிவோம்.) தமிழகத்தில் பெண் குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் முஸ்லிம்களிடத்தில் இல்லை. எவ்வளவு வறுமையில் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தாலும் குழந்தையை கொல்லும் அளவுக்கு அவர்கள் செல்வதில்லை. அதற்கு காரணம் முஸலிம்கள் மறுமையை நம்புவதும் குர்ஆன் அவர்களுக்கு இடும் கட்டளையும் தான்.

'வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்' - குர்ஆன் 6:151

'என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை விசாரிக்கப்படும் போது'- குர்ஆன் 81:8,9




இஸ்லாம் அரபு நாடுகளுக்கு வந்த பிறகு இங்கு பெண்களின் நிலையே தற்போது மாறி விட்டது. ஆண்களை ஆட்டு விப்பவர்களாக இங்கு பெண்களே இருக்கிறார்கள். சம்பளம் வாங்கிய முதல் நாள் தனது முழு ஊதியத்தையும் கொடுத்து விடும் ஆண்களே இங்கு அதிகம். தற்போது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக விகிதாச்சாரத்தில் படிக்கின்றனர். இவை எல்லாம் அரபு நாடுகளுக்கு இஸ்லாத்தினால் வந்த நன்மைகள்.



அதே நேரம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் பெண்களைப் பற்றிய கண்ணோட்டம் எப்படி இருந்தது என்பதையும் சற்று பார்ப்போம்.

நமது பாரத திரு நாட்டில் ஒரு சமய பெரியவர் பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டு பலரின் கண்டனத்துக்கும் ஆளானதை நாம் மறந்திருக்க முடியாது. கணவன் இறந்தவுடன் மனைவியை அதே தீயில் சில நாட்களுக்கு முன்பு ஏன் தற்போதும் கூட தள்ளி பய பக்தியோடு கொண்டாடி வருகிறோம்.

கிறித்தவ அறிஞர் பூன பென்தூரா என்பவர் ' நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதி விடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக சாத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்க்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம்தான்' என்கிறார்.

மேலும் கடந்த 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேய பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாதென சட்டமே இயற்றியது. எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் பைபிளைப் படிக்கக் கூடாது என சட்டம் இயற்றியது. (பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினர் வேதம் ஓதினால் அவர்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னவர்கள்தானே நம் முன்னோர்கள்.?:-()

586 ஆம் ஆண்டு பிரெஞசுக்காரர்கள் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா என ஆய்வு செய்ய ஒரு சபையையும் நிறுவினர். அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் தான் எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்க்காகவே படைக்கப்பட்டவர்கள் என முடிவு செய்தது.

இனி 1400 ஆண்டுகளுக்கு முன்பு குர்ஆனும் முகமது நபியும் பெண்களைப் பற்றி கூறிய கருத்துக்களையும் பார்ப்போம்.

'ஆண்,அல்லது பெண் நம்பிக்கைக் கொண்ட நிலையில் நற்க்கருமங்கள் செய்தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.' - குர்ஆன் 4:124

'மனிதன் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென நாம் அறிவுறித்தியுள்ளோம்'-குர்ஆன் 46:15

முகமது நபியிடம் ஒரு மனிதர் வந்து மனிதர்களில் நான் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டியவர் யார்? எனக் கேட்டார். முகமது நபி அவர்கள் 'உனது தாய்' என்று கூறினார். பின்பு யார்? எனக் கேட்டார். 'உனது தாய்' என்றே கூறினார். பின்பு யார்? எனக் கேட்டார். உனது தந்தை எனக் கூறினார்.
-ஆதாரம் புகாரி, முஸ்லிம்.

இதை எல்லாம் நான் எடுத்து எழுதக் காரணம் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை எடுத்துக் காட்டவே. இது பொன்ற வரலாறுகள் நிறைய உள்ளது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அடிமை வியாபாரத்தைப் பற்றி எடுத்துக் கொண்டால் 'நீங்கள் நோன்பு வைக்க முடியவில்லையா? ஒரு அடிமையை விடுதலை செய்யுங்கள். மனிதன் என்ற முறையில் சில தவறுகள் செய்து விட்டீர்களா? அகற்குப் பகரமாக இத்தனை அடிமைகளை விடுதலை செய்யுங்கள்' என்று கட்டளைகளைப் பிறப்பித்து சில வருடங்களிலேயே அடிமைகளை முழுவதுமாக ஒழித்தது இஸ்லாம். பிலால் என்ற அடிமையை பணம் கொடுத்து விடுதலை வாங்கி பள்ளி வாசலில் முதன்முதலாக தொழுகைக்கு பாங்கு(அழைப்பு) கொடுக்க்ச சொன்னவர்தான் முகமது நபி. இதைப் பிற்காலங்களில் கண்ணீர் மல்க நினைவு கூர்கிறார் பிலால் என்ற அந்த கறுத்த ஆப்ரிக்கர். முகமது நபிக்கு பிரியமான தோழராகவும் கடைசி வரை இருந்தார். இன்று அரபு நாடுகளில் எங்காவது அடிமைகளை பார்க்க முடிகிறதா! ஆனால் நம் நாட்டிலே இன்றும் கொத்தடிமைகள் இருக்கிறார்களா? இல்லையா?

எனவே முகமது நபியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாத்தினால் மனித குலத்துக்கு நன்மை விளைந்ததா? தீமை விளைந்ததா? என்பதையே நாம் இங்கு சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். 'நான் ஒரு முஸ்லிம்' என்று உலகின் எந்த மூலையிலும் சென்று பெருமை பொங்க கூறுவேன். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை எனக்கு தந்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். மற்ற விமரிசனங்களுக்கு அவ்வப்போது பதிலளிக்கிறேன்.

எனவே சமூகத்தில் உள்ள பெண்களின் இந்த இழி நிலையில் உண்மையான அக்கறை தருமி போன்ற நண்பர்களுக்கு இருக்குமானால் ஒரு குழுமமாக சென்று சேலம், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மக்களை திருத்த வழி வகை தேட வேண்டும். அது தான் உண்மையான பகுத்தறிவாதிக்கு அழகு.

22 comments:

Anonymous said...

pengalin saatchi arai satchi entru solvathum ungal matham thaan... maranthu vidathaeeergal...

Anonymous said...

pengalai kallerinthu kollum moodathan ullathum ungal matham...
matha chandangu entra peyaril pengalin antharanga uruppai thondubavargalum ungal mathathavarae...
pengalukku vaakalikka urimai kidayathu...

Anonymous said...

sameebathil naagareegamaga iruntha orae kaaranathal petta magalaiyae konta kayavanum ungala mathathavanae...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அல்ஹம்துலில்லாஹ்...

நீங்கள் மீண்டும் தொடர்ந்து ஃபுல் ஃபார்மில் எழுத பதிவுலகம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. நான் உங்களின் நீண்டநாள் வாசகன்.

//இதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை என்றாலும் எனது திருப்திக்காக இந்தப் பதிவுகள்.//--சகோ.தருமி--பயன் பெறாவிட்டாலும் வேறு யாராவது இன்ஷாஅல்லாஹ் பயன் பெறக்கூடுமே சகோ.

//'நான் ஒரு முஸ்லிம்' என்று உலகின் எந்த மூலையிலும் சென்று பெருமை பொங்க கூறுவேன். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை எனக்கு தந்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.//--நெத்தியடி..! அடியேனும் வழிமொழிக்கிறேன்..!

(நேரம் கிடைத்தால் என் பக்கத்திற்கும் வாருங்கள் என உங்களை அன்போடு அழைக்கிறேன்.
http://pinnoottavaathi.blogspot.com )

Anonymous said...

dharumi is not an athiest. he is a fanatic christian covered in the name of athiest

INAS said...

allahwin THuzai yaralum marukka mudiyazu....

http://inaasinaas.blogspot.com/2011/01/spend-1-minit-for-understand-universe.html

VANJOOR said...

READ the links

1.இந்து மதம் எங்கே போகிறது?


2.பைபிளில் உள்ளவை.


...

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ சுவனப்பிரியன்,

பயனுள்ள,தேவையான பதிவு..ஆனால் இவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் ஏறாதே...

நிறக்கண்ணாடி அணிந்து பார்க்கும் போது எல்லாமே ஒரே நிறம் என்பது போல..
இவர்களின் மத வெறுப்பு,அவர்கள் பிறந்த மதத்தில் இருந்து தோன்றி,பின் தன் மதத்தை மட்டும் மட்டம் தட்டினால் போதுமா,எல்லாமே அது மாதிரிதான்.என்ற தனது கடவுள் மறுப்பு கொள்கைக்காக காரணங்களை தேடி அலைவார்கள்..

அவர்களின் ஆழ்மனதை கிளரிப்பார்த்தால் இதுவே காரணமாவதை அவர்கள் அறிந்து கொள்ள முடியும்,...

செய்வார்களா???

அன்புடன்
ரஜின்

தனியன் said...

நான் ஒரு முஸ்லிம் இல்லை. ஆனால் ஒரு மதத்தின் / மனிதரின் நம்பிக்கையை கேலி செய்பவர்களுக்கு நீங்கள் பாத்தில் சொல்ல வேண்டியதில்லை.அவர்கள் வெறும் புகழுக்காக சொல்லிவிட்டுப் போகிறவர்கள்.

ராமநாதபுரத்தான் said...

ராமநாதபுரம் ஆட்களை காட்டுவாசிகள காட்டுரதுள்ள உள்ள பொது புத்தியை திருத்திக்கோங்க. ஏதாவது ஆதாரம் காமியுங்க, ராமநாதபுரம் ஆட்கள் கள்ளிப்பால் ஊத்தி பெண் குழந்தைகளை கொல்கிறார்கள் என்று.

Unknown said...

உங்கள் மதத்தின் பெருமைகளை கூறுவதை விட மற்ற மதத்தில் இருக்கும் கொடுமைகளைத்தான் அதிகம் கூறுகின்றீர்கள் . மற்ற மதங்களை விட உங்கள் மதத்தில் குறைகள் கம்மியா இருப்பதால்தான் நீங்கள் முஸ்லிமாக இருக்கின்றீர்கள ?. உங்கள் மதத்தில் இருக்கும் குறைகளையும் இல்லாமல் புதுசா இன்னொரு மதம் ஆரம்பிக்கலம்ல.

suvanappiriyan said...

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த வாஞ்சூரார், அப்துல் ரகுமான், அனானி, தனியன்,karthik, ramanathapurathan போன்றோருக்கு நன்றிகள் பல. வாஞ்சூரார் பதிவுக்கும் இரவு வருகிறேன்.

suvanappiriyan said...

ராமநாதபுரத்தான்!

//ராமநாதபுரம் ஆட்களை காட்டுவாசிகள காட்டுரதுள்ள உள்ள பொது புத்தியை திருத்திக்கோங்க. ஏதாவது ஆதாரம் காமியுங்க, ராமநாதபுரம் ஆட்கள் கள்ளிப்பால் ஊத்தி பெண் குழந்தைகளை கொல்கிறார்கள் என்று.//

உசிலம்பட்டி, பாப்பாரப்பட்டி, சேலம் போன்ற பின்தங்கிய கிராமங்களில் கள்ளிப்பால் ஊற்றி கொல்வதற்க்கென்றே சில பெண்கள் இருப்பதாக நான் முன்பு பத்திரிக்கையில் படித்திருக்கிறேன். பாரதிராஜா கூட கருத்தம்மாவில் அழகாக சொல்லியிருப்பார். எங்கள் மாவட்டமான தஞ்சையிலும் ஆங்காங்கு இந்த கொடுமைகள் நடந்துதான் வருகிறது. 'தொட்டில் குழந்தை' திட்டமும் இதனால்தான் ஏற்படுத்தப்பட்டது. இதனால் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் உங்கள் மாவட்டத்தை பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொள்கிறேன். எனது மாநிலத்தில் இந்த கொடுமைகள் குறைந்தால் என்னைவிட சந்தோஷப்படுபவர் யார் இருக்க முடியும்?

suvanappiriyan said...

கார்த்திக்!

//உங்கள் மதத்தில் இருக்கும் குறைகளையும் இல்லாமல் புதுசா இன்னொரு மதம் ஆரம்பிக்கலம்ல.//

மதங்களையும் மார்க்கங்களையும் நாமாக உருவாக்க முடியாது நண்பரே! அது இறைவனால் மனித குலத்துக்கு தரப்படுவது. இந்து மதம், கிறித்தவ மதம், இஸ்லாமிய மார்க்கம் முதற் கொண்டு உலக மார்க்கங்கள் அனைத்தும் இறைவனால் கொடுக்கப் பட்டதே! நாளடைவில் மனிதர்கள் தங்கள் வசதிக்கேற்ப சில மாற்றங்களை வேதங்களில் ஏற்ப்படுத்தி விட்டனர். யஜீர், சாம,அதர்வண வேதங்களின் தமிழ் மொழி பெயர்ப்புகளை வாங்கி படித்துப் பாருங்கள். அங்கும் குர்ஆன் பைபிளை யொத்த கடவுள் கொள்கைகளைக் காண முடியும். தவறு மனிதர்களிடத்தில்தான். முஸ்லிம்கள் ஒரு சிலர் செய்யும் தவறுகள் பெரிது படுத்தப்பட்டு இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த உலகலாவிய முயற்சி நடைபெறுகிறது. இதற்கு நம் தமிழ்க் கூத்தாடிகளும்(விஜயகாந்த், அர்ஜீன், கமல்,ரஜினி) விதிவிலக்கல்ல.

Anonymous said...

M. Johnson
From kanyakumari


//VANJOOR said...READ the links

1.இந்து மதம் எங்கே போகிறது?


2.பைபிளில் உள்ளவை.//

திரு வாஞ்சூர்
இந்த பதிவுக்கும் உங்களின் இந்த பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கூற முடியுமா?
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்

suvanappiriyan said...

தருமி!

//எங்கேயாவது ஒரு சாமி ‘சண்டை போடு’ என்று சொன்னாலே அது எனக்கு மிக வேடிக்கையாகவும் நகை முரணாகவும் தோன்றுகிறது. இப்படியெல்லாம் ஒரு ”எல்லாம் வல்ல நல்ல கடவுள்” “போதிக்கலாமா”? - இக்கேள்விக்கு உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.//

'இறைவன் நாடியிருந்தால் எதிரிகளை போர்க்களத்தில் அவனே தண்டித்திருப்பான்.மாறாக உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான். இறைவனின் பாதையில் கொல்லப்பட்டோரின் செயல்களை அவன் வீணாக்கவே மாட்டான்.'- குர்ஆன் 47:4

உங்கள் கேள்விக்கு இறைவனே அழகாக பதிலளிக்கிளான். போர்க்களத்தில் இஸ்லாத்தின் எதிரிகளை இறைவனாலேயே நிர்மூலமாக்க முடியும். ஆனாலும் மனிதர்களில் உண்மையான நம்பிக்கையாளர் யார் என்பது போர்க் களத்தில்தான் தெரிய வரும். தன் உயிரையே துச்சமாக மதித்து போரிடும் ஒருவனுக்கு இதனாலேயே சொர்க்கமும் தருவதாக வாக்களிக்கிறான். அவர்கள் அன்று பட்ட அந்த துயரத்தினால்தான் எங்கோ தமிழகத்தில் இருக்கும் என்னால் இன இழிவு நீங்கி விடுதலையை சுவைக்க முடிகிறது. இல்லை என்றால் இன்றும் கூட எங்களையும் அர்ச்சகராக்கு, கருவறை வரை செல்ல எங்களுக்கும் அனுமதி கொடு, என்னறெல்லாம் நானும் போராட வேண்டியிருந்திருக்கும்.

suvanappiriyan said...

தருமி!

//இந்த வஹிகளை ஏன் கடவுள் காப்பாற்ற முடியாது போயிற்று. மக்களால் மாற்றப்பட்டதை ஏன் கடவுள் தடுக்க முடியாது போயிற்று.//

சாத்தான் இறைவனைப் பார்த்து
'என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் தீமைகளை அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன்' என்று கூறினான். -குர்ஆன் 15:36,40

மனிதர்களை நேர்வழியில் இருந்து பிறழச் செய்வதே சைத்தானின் வேலை. சாத்தானுக்கு அத்தகைய ஆற்றலை இறைவனே கொடுக்கிறான். பரீட்சையில் பாஸ் செய்பவர்களுக்கு சொர்க்கம். பெயில் ஆகிறவர்களுக்கு நரகம். சாத்தானின் மாயையில் வீழ்ந்த ஒரு சிலர் வேதங்களை மாற்றுகின்றனர்.

'மா சிதன்யதிவி சன்சதா' -'தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்.'
-ரிக் வேதம் 8:1:1-10

'இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே!'
-மாற்கு 12:29

'நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.'
-யோவான் 14:24

இவ்வளவு தெளிவாக இறை வசனங்கள் இருக்க இந்து கிறித்தவ மதங்களில் இத்தனை தெய்வங்கள் எப்படி வந்தது? இது யாருடைய வேலை? கண்டிப்பாக சாத்தானின் வேலை.

Anonymous said...

தருமி,

உலகம் மாறிக்கொண்டேயிருக்கிறது தருமி. முகம்மதிற்கு முன்பிருந்தந்த பெண்ணடிமைத்தனங்களையும், மூடநம்பிக்கைகளையும் முகம்மது சீர்படுத்தியிருக்கிறார் என்கிறீர்கள். நல்லது. ஆனால் அன்றைய சமூக நிலையை விடவும் இன்றைய சமூகமும் முன்னேற்றமடைந்திருக்கின்றது அல்லவா? இல்லையென மறுக்கிறீர்களா?. முகம்மதிற்கு பின்னான சமூகத்தைவிடவும் முகம்மதிற்கு முன்பிருந்த சமூக நிலைமை மூடநம்பிகைகளால் நிரம்பியிருந்தன் என்று நீங்கள் கூறுவதைப் போன்றே முகம்மதின் காலகட்டம் இன்றைய சமூக காலகட்டத்தைவிடவும் பிற்போக்குத்தனமானதாகத்தானே இருந்திருக்கும்?(இருக்கும்). என்பதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?

Anonymous said...

மன்னிக்கவும். தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன். தருமி என்ற இடத்தில் சுவனப்பிரியன் என்று திருத்திப் படிக்கவும்.

Feroz said...

தருமிக்கு சகோதரர் நல்லடியார் போன்றவர்கள் அழகான முறையில் பதில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அறிவு விசயத்தில் அவர் கருமி அதனால் தான் அப்படி இருக்கிறார். இடை இடையில் நானும் இருக்கிறேன் என்று இந்த மாதிரி தமிழ்மனத்தில் பதிவிட்டு தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தி கொள்வார் அவ்வளவே. தோழமையுடன்

suvanappiriyan said...

கலை!

//முகம்மதின் காலகட்டம் இன்றைய சமூக காலகட்டத்தைவிடவும் பிற்போக்குத்தனமானதாகத்தானே இருந்திருக்கும்?(இருக்கும்). என்பதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?//

நேற்று கூட தஞ்சையில் பிறந்த பெண் குழந்தை பெற்றோர்களால் தெருவில் வீசப்பட்டுக் கிடந்ததை செய்தியில் பார்த்தேன். அமெரிக்காவில் ஒரு தகப்பன் தனது மகளையே வன்புணர்வு செய்து நான்கைந்து பிள்ளைகளையும் பெற்றுள்ளான். தனது தந்தைதான் தாத்தாவும் என்று தெரிந்து கொண்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதுவும் ராஜ் நியூஸில் வந்த செய்தி. லஞசம் வாங்காமல் இன்று எந்த காரியமாவது நடக்கிறதா? சமீபத்தில் ஒரு இடத்தை ரிஜிஸ்டர் செய்ய ரிஜிஸ்டர் ஆபிஸ் போயிருந்த போது லஞ்சத்தின் கோர தாண்டவத்தை நேரிலேயே பார்த்தேன். இவை எல்லாம் உண்மையான இறை பக்தி குறைந்ததால் ஏற்படுவது. முகமது நபி காலத்தை விட எந்த வகையில் சிறந்து விட்டோம்? அறிவியல் வளர்ச்சியில் வேண்டுமானால் பெருமை பட்டுக் கொள்ளலாம். மனிதத் தன்மை முன்பை விடக் குறைந்து விட்டது என்பதே நிதர்சனமான உண்மை.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பெரோஸ்!

அவர்கள் விளங்கிக் கொள்கிறார்களோ இல்லையோ நடுநிலையாளர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணம் இறைவன் நாடினால் அகலும். மற்றபடி தருமி அவர்களின் அறிவு விஷயத்தில் உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்.