Followers

Thursday, January 27, 2011

இறைவனைப் பற்றி எழும் வினாக்கள்!

இறைவன் இருக்கிறானா? இல்லையா? என்ற கேள்வி ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எழுவது இயல்பே! ஏனெனில் இறைவனை யாரும் பார்த்தது கிடையாது. இறைவனின் பேச்சை நம்மில் யாரும் கேட்டதும் கிடையாது. அப்படி இருக்கையில் இறைவனைப் பற்றிய நம்பிக்கையை நாம் எப்படி வளர்த்துக் கொள்வது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள்.கிறித்தவர்களிலும் கர்த்தரைப் பற்றிய எண்ணத்தில் தெளிவாகவே இருப்பார்கள். சிலர் ஏசுவையும், பரிசுத்த ஆவியையும் வணங்கலாம். இந்து நண்பர்களில் பலர் ஒரு கடவுளை ஒத்துக் கொண்டாலும், தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக கடவுளாக வழிபடுவார்கள்.

கடவுள் மறுப்பில் இருக்கும் நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம். இந்த உலகம் நிலையானது என்று கடவுளை மறுப்பவர்கள் கூறுகின்றனர். இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் வினவினால் 'உலகம் தோன்றவில்லை. அது என்றும் நிரந்தரமாக உள்ளது' என்பார்கள். அதே போல் 'கடவுளும் தோற்றுவிக்கப் படவில்லை. அவன் எக்காலத்திலும் உள்ள நிரந்தரன்' என்று ஆத்திகர்கள் கேட்டால் 'அது எப்படி ஒருவன் தோற்றுவிக்கப்படாமல் இறைவன் தோன்ற முடியும்? என்னால் ஒத்துக் கொள்ள முடியாது' என்பார்கள். உலகம் பற்றிய வாதத்தில் ஒரு நிலை. இறைவன் பற்றிய வாதத்தில் வேறொரு நிலை. மானிடனின் அறிவில் புரிந்து கொள்ள முடியாத எந்த ஒன்றுமே எங்கும் இருக்க முடியாது என்ற தவறான எண்ணமே இதற்க்கெல்லாம் காரணம்.

வார்னர் ஹைசன்பர்க் என்ற அறிவியல் அறிஞர் ஒரு புரட்சிகரமான கோட்பாட்டை 1926-ல் ஒருவாக்கினார். அநிச்சய தத்துவம்(Uncertainity Principle) என்பது அதன் பெயர். அணுவுக்குள் இருக்கும் மின் அணுவான எலக்ட்ரான் எனும் மிகமிக சூட்சுமமான துகள்கள் அணுவின் மையக் கருவைச் சுற்றி ஒளியின் வேகத்தில் சுழல்கின்றன. அத்துகள்களின் ஒரு நேரத்தில் உள்ள வேகம், அந்த நேரத்தில் சுற்றுப் பாதையில் அது இருக்கும் இடம், இவை இரண்டையும் அளக்க முயலும் போது ஏற்படும் விளைவிலிருந்து ஹைசன்பர்க் இக்கோட்பாட்டை உருவாக்கினார்.

இக்கோட்பாட்டிலிருந்து அறிஞர்கள் கண்ட உண்மை என்னவெனில் 'துகளின் இருப்பிடத்தை எவ்வளவு துல்லியமாக நீங்கள் அளக்க முயல்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துல்லியமற்ற நிலையிலேயே துகளின் வேகத்தை உங்களால் அளக்க முடியும்.' என்ற முடிவுக்கு வந்தனர். துகளின் இருப்பிடத்தையும், அத்துகளின் துல்லியமான வேகத்தையும் நம்மால் துல்லியமாக கண்டறிய முடியாது. எனவே இச் சோதனையிலிருந்து ஹைசன்பர்க் அவர்கள் 'மனிதனின் அறியும் ஆற்றலுக்கு மிக நிச்சயமாக ஒரு எல்லை உண்டு' என்பதை நிரூபித்தார்.

அற்பப் பொருளான அணுவைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக மனிதனைப் படைத்துள்ளான் இறைவன். அப்படி இருக்கையில் அந்த அணுவையும் படைத்து கோடானு கோடி கோள்களையும், உயிரினங்களையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவனைப் பற்றியும, அவன் எப்படி உண்டானான் என்பது பற்றிய அறிவும் எனக்கு இருக்க வேண்டும் என்று மனிதன் எப்படி எதிர் பார்க்க முடியும்? இறைவனைப் பற்றி எனக்கு விளங்காதவரை இறைவன் இருக்கிறான் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுவது உயிர் என்றால் என்னவென்று எனக்கு புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுவதற்க்கு ஒப்பாகும்.

'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்.' என்று கூறுவீராக.

-குர்ஆன் 17:85

'ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்'

-குர்ஆன் 12:76

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய செய்திகளுக்கு குர்ஆன் தெளிவாக விளக்கமளிக்கிறது. ஹைசன்பர்க்கும், அறிவியல் அறிஞர் ஹாக்கிம் அவர்களும் எதை உறுதிப் படுத்துகிறார்களோ, அதை குர்ஆன் உண்மைப் படுத்துகிறது. நமக்கு குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளதால் ஒரு குற்ப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் ஆய்வு செய்ய முடியாது என்பதை இதிலிருந்து விளங்குகிறோம்.

சரி. அப்படி என்றால் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை எப்படி நம்புவது? எப்படி உயிர் என்பதை பார்க்காமல் ஒத்துக் கொள்கிறோமோ அது போல் உலகில் உள்ள இறைவனின் அத்தாட்சிகளைப் பார்த்து நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். நம்முடைய பிறப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துளி விந்திலிருந்து ஒரு குழந்தை பிறக்கிறது. தகப்பனின் நிறம்,குரல்,சாயல்,குணம் அனைத்தையும் ஒரு துளி விந்தில் ஜிப் செய்யப்பட்டிருக்கிறதே அதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? 10 நிமிடம் நம்மால் மூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. ஒன்பது மாதம் வயிற்றுக்குள் உணவும் தந்து, சுவாசிக்கவும் தகுந்த ஏற்ப்பாட்டை உண்டாக்கியது யார்? மனிதன் உண்டாக்கும் பல பொருட்களுக்கும் மூலப் பொருட்கள் உண்டு. அந்த மூலப் பொருட்களை உண்டாக்கியது யார்? பேரண்டத்தில் எத்தனையோ கோள்கள் இருக்க பூமியை மட்டும் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்தது யார்? இப்படி ஒவ்வொரு அதிசயங்களுக்கும் சூத்திரதாரி யார் என்பதை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள். விடை தானாக தெரியும்.

தகவல் உதவி:

'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்."

29 comments:

Rajan said...

'உலகம் தோன்றவில்லை. அது என்றும் நிரந்தரமாக உள்ளது' என்பார்கள்.//


எந்த பகுத்தறிவாளன் அல்லது இறை மறுப்பாளன் இந்த அரிய பெரிய தத்துவமுத்த உதிர்த்தது!?

வலையுகம் said...

சகோ. அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

வால்பையன் said...

அண்ணே,

சும்மா இருந்தா கடவுளை நம்புவது கடினமல்ல, ஆனால் சொர்க்கத்தில் கூட்டி கொடுப்பேன் என்று சொல்லும் பொழுது தான் நம்ப கடினமாக இருக்கிறது! கடவுளுக்கு எதுக்கு அந்த வேலையெல்லாம், கடவுளை நம்ப, அதை பின்பற்ற எதோ ஒரு வியாபரி தோற்றுவித்த கற்பனை பாத்திரம் என்ற சந்தேகம் வருவது இயல்பு தானே!?

suvanappiriyan said...

ராஜன்!

//எந்த பகுத்தறிவாளன் அல்லது இறை மறுப்பாளன் இந்த அரிய பெரிய தத்துவமுத்த உதிர்த்தது!?//

நீங்கள் இந்த கருத்துக்கு உடன்படவில்லை என்றால் 'உலகம் எவ்வாறு தோன்றியது?' என்ற கேள்விக்கு பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

suvanappiriyan said...

//சகோ. அருமையான பதிவு
வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஹைதர் அலி!

suvanappiriyan said...

வால் பையன்!

//கடவுளுக்கு எதுக்கு அந்த வேலையெல்லாம், கடவுளை நம்ப, அதை பின்பற்ற எதோ ஒரு வியாபரி தோற்றுவித்த கற்பனை பாத்திரம் என்ற சந்தேகம் வருவது இயல்பு தானே!?//

திருடுவது, வட்டித் தொழில் செய்வது, விபச்சாரம் செய்வது, மது மருந்துவது போன்ற அனைத்து தீய காரியங்களை விட்டும் நான் ஏன் தவிர்ந்து கொள்கிறேன்? என் செயல்களை என் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். எனது இறப்புக்குப் பிறகு என்னைக் கேள்வி கேட்பான். இவ்வுலகத்தில் எனது மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு நான் வாழ்ந்தால் மறுமையில் அதற்கு பரிசு தருவதாக இறைவன் வாக்களிக்கிறான். இதில் தவறு இருப்பதாக எதைச் சொல்கிறீர்கள்.

மேலும் இணைய தளத்தில் எந்த அளவு இறைவனை நிந்திக்க வேண்டுமோ அந்த அளவு நிந்திக்கிறீர்கள். இருந்தும் உங்களை நலமாக வைத்திருப்பதிலிருந்தே அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன் என்பதை விளங்குகிறீர்கள் அல்லவா!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம்,ரஹ்மத்&பரக்கத் உண்டாவதாக.

மிக நுணுக்கமான கேள்விகளுடன் அருமையான பதிவு, சகோ.சுவனப்பிரியன்.

//மேலும் இணைய தளத்தில் எந்த அளவு இறைவனை நிந்திக்க வேண்டுமோ அந்த அளவு நிந்திக்கிறீர்கள். இருந்தும் உங்களை நலமாக வைத்திருப்பதிலிருந்தே அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன் என்பதை விளங்குகிறீர்கள் அல்லவா!//---மறக்கமுடியாது இனி இவ்வரிகளை..!

shanawazkhan said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

shanawazkhan said...
சகோதரர் சுவனப்ரியன் அவர்களுக்கு !அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் தளத்தை எதேச்சையாக கடந்த பொழுது புதிய பதிவுகளை கண்டேன். அல்ஹம்துலில்லாஹ்!தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். தங்களுக்கு சகோதரர் ஆஷிக் அஹமத் அவர்களுடைய வலைதளத்தை http://ethirkkural.blogspot.com/ அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறேன். அப்புறம் இன்னொரு வேண்டுகோள். வால்பையன் என்ற ...... பின்னூட்டங்களை பற்றி பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.
6:40 AM

வருகைக்கு நன்றி சாநவாஸ்கான். அவர்கள் எழுத்தில் கண்ணியத்தை கடைபிடிக்கவில்லை என்றாலும் நாம் கண்ணியமாக எழுதுவோம். எனவே சிறிய திருத்தத்துடன் உங்களின் பின்னூட்டம்.

suvanappiriyan said...

சார்வாகன்!
//சூரியன்,சந்திரன்,பிராணிகள் வணங்குவதை நான் பார்த்தது இல்லை.நீங்கள் யாராவது பார்த்தது உண்டா?//

மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறோம். உதாரணத்திற்க்கு விண்ணில் ஏவும் ராக்கெட்டுகளை நாம் எடுத்துக் கொள்வோம். அது எந்த கோளில் இறங்க வேண்டும், என்ன என்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதை நாம் பூமியில் இருந்தே கட்டளைகளை ஏவுகிறோம். அவைகளும் நம் கட்டளைகளை திறம்பட செயல்படுத்துகிறது. இது எப்படி சாத்தியமாகிறது? அந்த இயந்திரத்துக்கு புரியும் வகையில் மின் அணு மொழியில் நாம் பேசுவதால் அவை நமது கட்டளைகளை செயல்படுத்துகின்றன. அது போல் ஒவ்வொரு படைப்புக்கும்அதன் மொழியில் நீங்கள் பேசினால் கண்டிப்பாக உங்களுக்கும் விளங்கும். அந்த மொழி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அனைத்தையும் படைத்த இறைவனுக்கு தெரியுமல்லவா?

'மனிதர்களாகிய நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' -குர்ஆன் 17:85

suvanappiriyan said...

தருமி!

//, ”அது” தன்னை, தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். என்ன இப்படி ஒரு “தேவை” அந்தக் கடவுளுக்கு?//

'நீங்களும், பூமியில் உள்ள அனைவரும் ஏக இறைவனை மறுத்தால் இறைவன் தேவையற்றவன்: புகழுக்குரியவன்' என்று மோஸே கூறினார்.' -குர்ஆன் 14:8

இறைவனுக்கு நாம் பணிய மறுத்தால் அதனால் அந்த இறைவனுக்கு எந்த இழப்பும் இல்லை. ஏனெனில் அவன் தேவையற்றவன்.

//தன்னை வணங்க படைத்தவைகள் இன்னொரு “கடவுளை” வணங்கினால் கெட்ட மனுஷனுக்கு வரும் கோபம் அதற்கும்!//

'எதையும் படைக்காதவற்றையா அவர்கள் இறைவனுக்கு இணை கற்ப்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர்' -குர்ஆன் 7:191

ஒரு சிலை மனிதர்களாலேயே படைக்கப்பட்டு அந்த சிலையையே கடவுளாக வணங்குவதை ஏற்க உங்கள் அறிவு ஒத்துக் கொள்கிறதா? இந்து மதத்தில் உள்ள எந்த சிலைகளும் தங்களை வணங்கும்படி சொல்லவில்லை. இந்து மத வேதங்களிலும் சிலைகளை வணங்கச் சொல்லி எங்கும் சொல்லப்படவில்லை. இந்து மத வேதங்களில் இருந்து இதற்கு ஆதாரமும் என்னால் தர முடியும். கிறித்தவத்திலும் தன்னை வணங்கும்படி ஏசு எங்குமே சொல்லவில்லை.

எனவே அவைகள் கடவுள்கள் அல்ல. மனிதர்களால் உண்டாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள். அதை இந்த வசனங்களின் மூலம் இறைவன் மனிதர்களுக்கு உணர்த்துகிறான்.

//“ஆதங்கத்திலும், கோபத்திலும், நரகத்திலும் சுவனத்திலும் எங்கேங்க இருக்கு நீங்க சொல்ற இரக்கம்.//

'உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன்'-குர்ஆன் 6:54

எனவே தவறு செய்த மனிதர்கள் திருந்தி மன்னிப்புக் கேட்டால் இறைவன் அவர்களை மன்னித்து தனது அன்பை அவர்கள் மேல் செலுத்துகிறான். மனிதர்கள் நேர்வழி பெற வேண்டும் அனைவரும் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமும். அதற்க்குத்தான் இத்தனை வேதங்களும்: இத்தனை தூதர்களும். இத்தனை விவாதங்களும்:

suvanappiriyan said...

யாசிர்!

//சிலைகளை வணங்கினால் படைத்த இறைவனுக்கு கோபம் வருமா?வராதா?//-Suvanappiriyan

//ஆம்! ஏன் வரவேண்டும்?மற்றும் ஏன் வணங்க வேண்டும்? நம்மை படைத்ததால் வணங்க வேண்டும் எனில் அவரவர்களின் பெற்றோர்களைத்தான் வணங்க வேண்டும்.//

தற்போது வணங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து சிலைகளும் இந்து மதத்தில் கூறப்படாதவைகள். அதேதான் கிறித்தவ மதத்திலும். அதர்வண வேதம்,சாம, யஜீர் வேதங்களின் மொழி பெயர்ப்புகளை படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.

அடுத்து பெற்றோருக்கு மரியாதை செய்யலாம் நன்றி செலுத்தலாம். வணக்கம் இறைவனுக்குத்தான் இருக்க வேண்டும்.

'இறைவனாகிய எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு'- குர்ஆன் 31:14

suvanappiriyan said...

//மிக நுணுக்கமான கேள்விகளுடன் அருமையான பதிவு, சகோ.சுவனப்பிரியன்.//


வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி திரு ஆசிக்!

வால்பையன் said...

//நீங்கள் இந்த கருத்துக்கு உடன்படவில்லை என்றால் 'உலகம் எவ்வாறு தோன்றியது?' என்ற கேள்விக்கு பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.//

எனக்கு ஐன்ஸ்டீனின் தியரி தெரியாது என்பதற்காக அப்படி ஒன்று இல்லை என்று சொல்லிவிட முடியாது!
உலகம் எப்படி தோன்றியது என்று பல பல ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன! பிக்பாங் தியரியை அப்பவே குரானில் சொல்லியாச்சுன்னு பல்டி அடிக்கும் மதவாதிகள் மற்ற கேள்விகளுக்கு ஜகா வாங்குவாங்க!

லாவகமாக நான் கேட்ட கேள்வியில் பாதியை விட்டது ஏன்!?

நான் கேட்டது தவறான தகவலென்றால் நான் மலப்புழு, சரி என்றால் யார் மலப்புழு!?

suvanappiriyan said...

//லாவகமாக நான் கேட்ட கேள்வியில் பாதியை விட்டது ஏன்!?

நான் கேட்டது தவறான தகவலென்றால் நான் மலப்புழு, சரி என்றால் யார் மலப்புழு!?//

ஒரு தகப்பன் தன் மகனையும் மகளையும் திருமண வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு ஒரு ஆணையோ பெண்ணையோ திருமணம் முடித்துக் கொடுக்கிறார். தனது பிள்ளைகளின் மீது ஒரு தகப்பனுக்கு உள்ள கடமையை அவர் செய்கிறார். அதற்கு உங்கள் அகராதியில் 'கூட்டிக் கொடுப்பது' என்று பொருள் கொண்டால் அது யார் தவறு,

'இறைவன் தனது அடியார்கள் மீது அருளையும் அன்பையும் பொழிவதை தன் மீது கடமையாக்கிக் கொண்டான்.' - குர்ஆன் 6:54, 6:12

ஒரு தகப்பனை விட உலக மக்களின் மீது அருள் புரிவதை இறைவன் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். அந்த மக்கள் இறைவனின் சொல்படி வாழ்க்கையை உலகில் சீராக அமைத்துக் கொண்டால் அதற்க்காக சொர்க்கத்தில் பரிசளிப்பதாக வாக்களிக்கிறான். உங்கள் அகராதியில் அதை 'கூட்டிக் கொடுப்பது' என்று சொன்னீர்கள் என்றால் அதனால் இறைவனுக்கு எந்த இழுக்கும் ஏற்ப்படப் பொவதில்லை.உங்களின் புரிதலில் உள்ள குறைபாடாகத்தான் நான் பார்க்கிறேன்.

'வால் பையனாக' காலம் பூராவும் இருந்து விடலாம் என்று உத்தேசமா! இறைவனை விளங்கி 'நல்ல பையனாக' அழகாகவும் பண்போடும் எப்பொழுது பின்னூட்டம் இடப் போகிறீர்கள். :-(

வால்பையன் said...

சொர்க்கத்தில் உங்களுக்காக நித்தியகன்னி”கைகள்”(கவனிக்க, தந்தை கூட்டமா கொடுக்கிறார், அப்போ அது கட்டி கொடுப்பதா இல்லை கூட்டி கொடுப்பதா!?) கிடைக்கும் என்பதை நியாயபடுத்தும் நீங்கள் சொல்லி நான் மாறினால் பகுத்தறிவிற்கே வெட்ககேடு அண்ணே!

கண் மறைக்கப்பட்ட சவாரி குதிரைக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்!?

suvanappiriyan said...

//நீங்கள் சொல்லி நான் மாறினால் பகுத்தறிவிற்கே வெட்ககேடு அண்ணே!//

பகுத்தறிவுன்னா என்ன? கொஞ்சம் விளக்குங்களேன். உலகம் எப்படி தோன்றியது என்பதற்க்கு பகுத்தறிவு பூர்வமான பதில் இதுவரை ராஜனும் கொடுக்கவில்லை.நீங்களும் கொடுக்கவில்லை.

அடுத்து ஒருவருக்கு பிறந்த நாள் ஒருமுறை வந்தால் அந்த நாள் திரும்பவும் வருவதில்லை. ஆனால் பகுத்தறிவாதியான நீங்களெல்லாம் பெரியார் பிறந்த நாளை வருடா வருடம் கொண்டாடுகிறீர்கள். இதற்கு பகுத்தறிவாக பதில் கூறுவீர்களா? அடுத்து அவருக்கு சிலையையும் ஏற்படுத்தி அந்த சிலைக்கு முன்னால் மரியாதையோடு நின்று மாலை வேறு போடுகிறீர்கள். இதெல்லாம் பகுத்தறிவான செயல்தானா? அந்த சிலைக்கு இதெல்லாம் விளங்குமா? கொஞ்சம் விளக்கினீர்கள் என்றால் நானும் தெரிந்து கொள்வேன்.

வால்பையன் said...

பெரியாரிஸ்டுகளை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை என்னை பார்த்து கேட்கிறீர்கள்!

பகுத்தறிவு என்ற வார்த்தைக்கு பெரியார் பேடண்ட் வாங்கி வச்சிருக்காரா!?

ஆங்கில அறிவு குறைவு என்பதால் உலகம் தோன்றிய தகவல்களை படிக்க சேகரிக்க நிறைய நேரம் எடுத்து கொள்கிறது, தொகுத்தபின் அதிகபட்ச சாத்தியகூறுகள் எதற்கு உண்டு என பதிவிடுகிறேன்!

எனது பரிணாமம் பதிவை படித்ததுண்டா!?

suvanappiriyan said...

பரிணாமம் பற்றி நான் முன்பு இட்ட பதிவு இங்கே . உங்களின் பதிவின் சுட்டியைத் தாருங்கள். பார்க்கிறேன்.

வலையுகம் said...
This comment has been removed by a blog administrator.
வலையுகம் said...
This comment has been removed by a blog administrator.
anony said...

இது கடவுள் பற்றிய பொது பதிவா, இல்லை உங்கள் கடவுள் பற்றிய பதிவா?
குர்ஆனில் இருந்து விளக்கம் வேண்டாம்.
தருமி சொன்னது போல உங்கள் பதில் போதும்.

suvanappiriyan said...

நண்பர் ஹைதரின் பின்னூட்டம் சில திருத்தங்களுடன்.

வால்பையா

///ஆனால் சொர்க்கத்தில் கூட்டி கொடுப்பேன் என்று சொல்லும் பொழுது தான் நம்ப கடினமாக இருக்கிறது//

.........................

வேட்டி மட்ட நீயும் தேய்ந்த ரிக்காடு மாதிரி இதையே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு இருக்க

உன்னை விட அநாகரிமாக என்னையே பேச வைக்காதே

நீ வரம்பு மீறினால் நானும் வரம்பு மீறுவேன்
--------------------

வால்பையா

//வால்பையன், on மே10, 2010 at 3:40 மாலை said:
சொர்க்கத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்ல துணையை கடவுள் கொடுப்பாராம்! நல்லா மாமா வேலை பார்க்குறாரையா கடவுள்!
ஆண்களுக்கு சொல்லி பெண்களுக்கும் அதேன்னு சொன்னாங்களாம், யார் கிட்ட காது குத்துறிங்க, பெண்களை அடிமையாக வச்சிபுட்டு சலுகைகள் கொடுக்குறாங்களாம்!//

இப்படி செங்கொடி நீ பின்னூட்டம் இடும்போதே நான் பதிலுக்கு ஒனக்கு ஈகோல பதில் கொடுத்து இருக்கிறேன்

ஆனா நீ எவ்வளவு அடிச்சாலும் தங்குறப்பா

suvanappiriyan said...

அனானி!

//இது கடவுள் பற்றிய பொது பதிவா, இல்லை உங்கள் கடவுள் பற்றிய பதிவா?
குர்ஆனில் இருந்து விளக்கம் வேண்டாம்.
தருமி சொன்னது போல உங்கள் பதில் போதும்.//

இஸ்லாம்,இந்து, கிறித்தவம்,புத்தம் என்று ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி கடவுள் இல்லை நண்பரே! உங்களையும் என்னையும் இந்த உலகத்தையும் படைத்தது எல்லாம் வல்ல ஒரு இறைவன்தான். அந்த இறைவனை எப்படி விளங்குவது? என்பதுதான் இந்த பதிவின் சாரமே! இதற்க்கு மாற்று கருத்து உடையவர்கள் அறிவியல் பூர்வமாக இதற்கு பதில் அளி;க வேண்டும். பார்ப்போம் ராஜனும்,வால் பையனும், தருமியும், சார்வாகனும் இதற்கு பதில் அளிக்கிறார்களா என்று.

suvanappiriyan said...

திரு ஹைதர் அலி!

முகமது நபியிடம் இதைவிடக் கடுமையாக அன்றைய அரபிகள் கிண்டலடித்து இருக்கிறார்கள். அவரின் உறவினரான அபூ ஜஹீலின் வரலாறுகளை நீங்கள் நன்கு அறிவீர்கள். முகமது நபியை கொலை செய்வதற்க்காக வாலை உருவிக் கொண்டு சென்றவர்தான் உமர். பிறகு அவருடைய வாழ்க்கை எப்படி மாறியது. எனவே கடுஞ் சொற்க்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வால் பையன் அளவுக்கு வார்த்தைகளில் நாம் கீழிறங்கிச் செல்ல வேண்டாமே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

முகமது நமியை கிழித்து தூரம் கட்டிக்கிட்டு இருக்காங்க .இறைவனுக்கு உருவம் இல்லைன்னு சொல்லுறீங்க சரி அப்புறம் ஏன் மசுதில தொளுகனும் .பெண்கள் மாதிரி வீட்டில் தொளுகலாமே .அப்புறம் ஏன் மக்காவை பார்த்து தொலனும் ?

இப்படி இஸ்லாம் பற்றி நிறைய இருக்குங்க வருசையா கேட்ட கதை மட்டும் சொல்லுறீங்க .

வால்பையன் said...

@ ஹைதர் அலி அண்ணே!

நான் தெளிவா சொல்லிட்டேன், ஒரு பொண்ணு கட்டி கொடுத்த்தா அப்பா!
”கள்” பன்மையில கட்டி கொடுத்தா அது எப்படியண்ணே அப்பாவாகும், அப்படி செய்வது அப்பாவா இருந்தாலும் அது மாமா வேலை தானே!

அப்ப நீங்களே ஒத்துகிறிங்களா!

என்னை விட் அநாகரிகமா பேசுவது உங்களுக்கு என்ன புதுசாண்ணே!

நான் இல்லாத ஒன்றை திட்டுவேன், நீங்க என்னையும் என் குடும்பத்தையும் அநாகரிகமா பேசுவிங்க.

எங்கண்ணனுக்கு சிந்திக்கும் திறன் இல்லைங்கிறதுக்காக ஒதுக்கி வச்சிருவிங்கன்னு நினைச்சிங்களே!

எனக்கு மதம் தேவையில்லைண்ணே, மனிதம் தான் தேவை!

Unknown said...

கடவுள் இல்லை என்பதை அறிவியலால் 100% நிரூபிக்க முடியும் உங்களால் கடவுள் இருக்கிறார் என்பதை உங்கள் குரானால் 0.1% கூட நிரூபிக்க முடியாது.

Unknown said...

உங்கள் கடவுள் அல்லா இல்லை என்பதை அறிவியலால் 100% நிரூபிக்க முடியும் ஆனால் உங்கள் குரானால் அல்லா இருக்கிறார் என்று 0.1% கூட நிரூபிக்க முடியும்