கடந்த வெள்ளி காலை 10 மணியளவில் எங்களது ரூமில் 'இறைவனின் படைப்புகள்' என்ற தலைப்பில் குர்ஆனின் 'தேனீக்கள்' என்ற அத்தியாயத்திலிருந்து சிறந்த சொற்பொழிவை சகோதரர் அன்சாரி அவர்கள் நிகழ்த்தினார். போன கூட்டத்திற்கு 4 பேர் மட்டுமே வந்திருந்தனர். இந்த மாத கூட்டத்துக்கு 11 பேர் வந்திருந்தனர். அடுத்த மாதம் இடப் பற்றாக் குறையால் ஹாலில்தான் கூட்டத்தை நடத்த வேண்டும் போல் இருக்கிறது. விடுமுறை நாளில் சுகமான காலை தூக்கத்தை தியாகம் செய்து இறைவனின் மார்க்கத்தை அறிந்து கொள்வதற்க்காக வருகை புரிந்த நண்பர்களை சகோதரர் நிஜாம் வரவேற்றார்.
'கால் நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரை தடுக்கும் கம்பளி போன்ற பயனும் உண்டு: அவற்றிலிருந்து உணவாக சாப்பிடுகிறீர்கள்.'
'மாலையில் ஓட்டிச் செல்லும் போதும் காலையில் ஓட்டிச் செல்லும் போதும் அதில் உங்களுக்கு அந்தஸ்து இருக்கிறது.'
'பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்: இரக்கமுள்ளவன்'
'குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள், ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்.
-குர்ஆன் 16:5,6,7,8 (தேனீக்கள்)
மனிதப் படைப்பான நமக்கு இறைவன் எத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். அன்றைய கால மக்கள் அறியாத எத்தனையோ புதிய வசதிகளையும் இன்று நாம் அனுபவித்து வருகிறோம். அதற்காக இறைவனை நாம் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அவனது அருட்கொடைகளை எண்ணி நன்றி செலுத்தியிருக்கிறோமா என்றால் பெரும்பாலோரிடமிருந்து இல்லை என்ற பதிலே வரும்.
அந்த இறைவன் நாடி விட்டால் ஒரு நிமிடத்தில் நம்முடைய வாழ்வை இருக்கும் இடத்திலிருந்தே பறித்து விட முடியும். கருணையாளனான அந்த இறைவன் தன்னை எதிர்ப்பவர்கள், தன்னை தூற்றுபவர்கள், மனிதர்களுக்கு துரோகம் செய்பவர்கள் அனைவரையும் விட்டு வைத்திருக்கிறான். வரும் காலங்களிலாவது நேர்வழியைப் பெற மாட்டார்களா! என்ற நல்ல எண்ணத்திலேயே இன்றுவரை அவர்கள் அனைவரையும் விட்டு வைத்திருக்கிறான். இந்த கருணையை பலர் கையாலாகததனம் என்று நினைத்து வாழ்க்கையை வீணிலும் விளையாட்டிலும் கழித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த கூட்டத்தில் எல்லாம் நம்மை சேர்க்காமல் இறை வசனங்களை கேட்க ஆர்வமுடன் வந்திருக்கும் நம் அனைவரின் இம்மை மறுமை வாழ்வு சிறப்பாக அமைய பிரார்த்தித்தவனாக எனது இந்த சிற்றுரையை முடிக்கிறேன்.'
என்று தனது சிற்றுரையை முடித்தார் சகோதரர் அன்சாரி.
அதன் பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தையொட்டியுள்ள கிராமத்திலிருந்து தமிழ்ச் செல்வன் என்ற இளைஞன் போன வருடம் டிரைவர் பணிக்காக வந்துள்ளார். அவர் தனது பேச்சில்.
'நான் சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழகத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்துருக்கேங்கண்ணா! பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கேங்கண்ணா! போன வாரம் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேங்கண்ணா! என் குடும்பத்தவர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். என் தம்பி ரொம்பவும் எதிர்த்தாங்கண்ணா! ஏக இறைவனை நம்ம பழைய மதத்திலேயே இருந்துக்கிட்டு கும்பிடலாமே என்று எங்க அம்மா கேட்டாங்கண்ணா! எந்த கோவிலுக்கு போனாலும் ஏதாவது ஒரு சாமி சிலைதானே இருக்கு. ஏக இறைவனை நான் எப்படி அங்கு வணங்க முடியும்? எந்த முறையிலே நான் வணங்குறது. எந்த சாமியை நான் வணங்குறதுண்டு கேட்டங்கண்ணா. அதற்கு எங்க அம்மா எந்த பதிலும் சொல்லாமல் 'உன் விருப்பப்படி இருந்து கொள்' என்று சொல்லிட்டாங்கண்ணா. முதலில் எதிர்த்துக்கிட்டு இருந்த என் தம்பியும் இப்ப தன் முடிவை மாத்திக்கிட்டாண்ணா. அவனையும் இஸ்லாத்துல சேர்த்துருவங்கண்ணா!
ஒரு சின்ன சிக்கல். உங்களை மாதிரி அரபியில் குர்ஆனை சரளமாக ஓத சிரமமாக இருக்கிறது. அதுக்கு மட்டும் கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க. பல பேரோட சொற்பொழிவு எனக்கு சரியா புரிய மாட்டேங்குது. ஆனா அண்ணன் பிஜே பேசினா எனக்கு தெளிவா விளங்குது. அவரோட சிடிக்களை பார்த்துதான் இந்த முடிவையே எடுத்தேன். அவருக்கு ரொம்ப நன்றிங்கண்ணா! எனக்கு மெக்கா போய் கஃபாவை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அதற்கும் ஏற்பாடு பண்ணுங்கண்ணா!'
என்று மிக இயல்பாக வெள்ளாத்தியாக கொச்சைத் தமிழில் பேசி முடித்தார். ஒரு வாரத்தில் அவருக்குள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எண்ணி வியந்தோம். இறைவன் ஒருவனுக்கு நேர்வழியை காட்ட எண்ணி விட்டால் அதற்கு திரை ஏது? தமிழ்ச் செல்வன் என்ற பழைய பெயரிலேயே அவர் இஸ்லாத்தில் இருக்கலாம். ஆனால் இந்த பெயரில் இருந்தால் 'இவர் என்ன சாதி? படையாச்சியா, செட்டியாரா, தலித்தா' என்ற கேள்வி வரும். தற்போது தனது பெயரை முஹம்மது என்று மாற்றியுள்ளார். இனி உலக முஸ்லிம்களில் ஒருவராக ஐக்கியமாகி விட்டார். சாதியும் ஒழிந்தது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற 2000 வருடத்திய மூதாதையரின் திராவிட பாரம்பரியத்துக்கு மீண்டு வந்துள்ளார் தமிழ்ச் செல்வன்.
இனி உலகின் எந்த பள்ளியிலும் முதலில் சென்றால் முன் வரிசையில் அமரலாம். கஃபாவுக்குள் சென்றாலும் முதல் ஆளாக சென்று நிற்கலாம். வழிபடுவதற்கு கட்டணம் ஏதும் இல்லை. இனி கூனி குருகி உயர் சாதியினர் முன்னால் செல்ல வேண்டியதில்லை. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு செல்லலாம்.
"தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி
வாடித் துன்ப மிக வுழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"
என்று இறுமாப்போடு வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிப்பவர்களைப் பார்த்துக் கேட்கலாம்.
----------------------------------------------
தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் சார்பாக உம்ரா பயணம் ஏற்பாடு செய்துள்ளனர். உம்ரா முடித்து விட்டு அங்கிருந்து ஜெத்தா சென்று ஒரு நாள் கப்பல் பயணமும் ஏற்பாடு செய்துள்ளனர். குடும்பத்தோடு வருபவர்களுக்கும் ஏற்பாடு ஆகியுள்ளது. வரும் மார்ச் 28,29,30 புதன்கிழமை கிளம்பி வெள்ளிக்கிழமை ரியாத் திரும்புகின்றனர். இறைவன் நாடினால் இதில் சகோதரர் முஹம்மதும்(தமிழ்ச் செல்வன்) பயணிப்பார்.
“விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக ! மேலும் மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக !”
-குர்ஆன் 16:125
“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.”
-குர்ஆன் 4:1
“மார்க்க விஷயத்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும், அல்லாஹ் விலக்கவில்லை. நிச்சயம் அல்லாஹ் நீதி செய்கிறவர்களை நேசிக்கிறான்.”
-குர்ஆன் 60:8
18 comments:
அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல பதிவு...
ரியாத் மண்டலத்தின் உம்ரா & கப்பல் பயணம் இந்த வாரம் அல்ல; மார்ச் 28, 29 & 30 - 2012...
திருத்தி விடவும்...
வஅலைக்கும் சலாம்! சகோ!
//ரியாத் மண்டலத்தின் உம்ரா & கப்பல் பயணம் இந்த வாரம் அல்ல; மார்ச் 28, 29 & 30 - 2012...
திருத்தி விடவும்...//
திருத்தி விட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ சுவனப்பிரியன்,
சகோதரர் முஹம்மத் என்ற செல்வம் அவர்களின் பேச்சை படித்ததும் கண்கள் பனித்தன. உங்கள் அனைவரின் சேவையையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.
வரும் காலங்களில் சொற்ப்பொழிவை கேட்க இன்ஷா அல்லாஹ் நிறைய வருவார்கள். உங்கள் பணி தொடரட்டும் சகோ.
salam Nazeer,
I have given the request in gmail to you . did not receive any reply.
Regards,
yesa
(+973 39282876)
சலாம் சகோ ஈஸா!
//salam Nazeer,
I have given the request in gmail to you . did not receive any reply.
Regards,//
உங்கள் மெயில் எனக்கு கிடைக்கவில்லை. அலை பேசியில் நான் சொல்லும் போது தவறுதலாக குறித்திருக்கலாம். Nazeer65@gmail.com. இது எனது ஈமெயில் ஐடி. இதற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!
சலாம் சகோ சிராஜ்!
//சகோதரர் முஹம்மத் என்ற செல்வம் அவர்களின் பேச்சை படித்ததும் கண்கள் பனித்தன. உங்கள் அனைவரின் சேவையையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.
வரும் காலங்களில் சொற்ப்பொழிவை கேட்க இன்ஷா அல்லாஹ் நிறைய வருவார்கள். உங்கள் பணி தொடரட்டும் சகோ.//
ஏற்கெனவே அவர் தயார் செய்து வரவில்லை. எனவே மனதில் உள்ளதை அப்படியே வெளிக் கொணர்ந்தார். மேலும் சில சிடிக்களும் கொடுத்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் சிறந்த ஒரு வாழ்க்கையை இனி பெற்றுக் கொள்வார்.
அடுத்து டீக்கடையை எப்போது ஓபன் பண்ணுவதாக உத்தேசம். பஜ்ஜி வடை எல்லாம் சாப்பிட்டு ரொம்ப நாட்களாகிறது. :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அழகான நிறைவான பதிவு சகோதரர்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாஷா அல்லாஹ்
உங்களின் இறைப்பணி மேலும் அதிகரிக்க அல்லாஹ் அருள் புரிவானாக!
சலாம் சகோ ஆஷிக்
//அஸ்ஸலாமு அலைக்கும்
அழகான நிறைவான பதிவு சகோதரர்.//.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ குலாம்!
//மாஷா அல்லாஹ்
உங்களின் இறைப்பணி மேலும் அதிகரிக்க அல்லாஹ் அருள் புரிவானாக!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
/* அடுத்து டீக்கடையை எப்போது ஓபன் பண்ணுவதாக உத்தேசம். பஜ்ஜி வடை எல்லாம் சாப்பிட்டு ரொம்ப நாட்களாகிறது. :-) */
எங்க சகோ??? யாவாரம் சரி இல்ல. அதனால கடைய தற்காலிகமா மூடி இருக்கேன். அதனால தான் கூட்டம் மொய்க்கிற உங்க ஏரியா பக்கம் வந்து பின்னூட்டம் வழியா பஜ்ஜி
யாவாரம் பாத்துகிட்டு இருக்கேன். ஹ..ஹ..ஹா...
இன்ஷா அல்லாஹ், பதிவு போட முயற்சி பண்றேன் சகோ. சோம்பேறி தானமா இருக்கு.
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
மகிழ்ச்சியான பதிவு. சகோ.முஹம்மதுக்கு என் சலாமை தெரிவியுங்கள். நிறைய ஆக்கப்பூர்வமான செயல்களை மறுமைக்காக செய்து வருகிறீர்கள். தங்கள் அனைவருக்கும் இறையருள் கிட்ட பிரார்த்திக்கிறேன்.
அடுத்து இந்த பதிவில் மிக முக்கிய விஷயம்...
///பல பேரோட சொற்பொழிவு எனக்கு சரியா புரிய மாட்டேங்குது. ஆனா அண்ணன் பிஜே பேசினா எனக்கு தெளிவா விளங்குது. அவரோட சிடிக்களை பார்த்துதான் இந்த முடிவையே எடுத்தேன். அவருக்கு ரொம்ப நன்றிங்கண்ணா! ///---(மாஷாஅல்லாஹ்)
பொதுவாக, மவ்லவி சகோ.பிஜே அவர்களின் பயானில் அரபி வார்த்தைகள் உபயோகிக்க வேண்டிய இடங்களில் தமிழ் வார்த்தைகள் நிறைய இருக்கும். அதிலும், குறிப்பாக 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' கேள்வி பதிலில், முடிந்த வரை தமிழ் வார்த்தைகள் அமைத்து அவர் பேசுவதால், நாம்... நமது 'மஸ்ஜித் ஜும்மா குத்பா பயான்கள்'... இல்லை... இல்லை...(தமிழில் english கலந்து பேசினால் "தமிலிஷ்" என்பது போல)..."தமிரபி"-யில் நடைபெறும் 'வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்பு சொற்பொழிவுகளையே'நாம் கேட்டு வளர்ந்து வந்ததால்... சகோ.பிஜெவின் உரை முஸ்லிம்களுக்கு கேட்க சற்று விநோதமாகவே இருக்கும்.
ஆனால்,
அதன் பலன்... அல்ஹம்துலில்லாஹ்... இன்று சகோ.முஹம்மத் (தமிழ்ச்செல்வன்) ஆக... பலன்பெற்று நிற்பது கவனிக்கத்தக்கது. இஸ்லாமிய பிரச்சாரகர்கள் உணர வேண்டிய விஷயம் இது..!
சலாம் சகோ ஆஷிக்!
//ஆனால்,
அதன் பலன்... அல்ஹம்துலில்லாஹ்... இன்று சகோ.முஹம்மத் (தமிழ்ச்செல்வன்) ஆக... பலன்பெற்று நிற்பது கவனிக்கத்தக்கது. இஸ்லாமிய பிரச்சாரகர்கள் உணர வேண்டிய விஷயம் இது..!//
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. பிஜே மாற்று மதத்தவர்களிடத்தில் வெற்றி பெற்றதற்கு மூல காரணம் அரபு கலக்காத தமிழை அவர் உபயோகப்படுத்தியதுதான். தமிழகத்தில் அதிகமான மார்க்க அறிஞர்கள் அரபு கலந்தே சொற்பொழிவு ஆற்றுவதால் நம்மவர்களிலேயே பலர் கவனித்துக் கேட்பதில்லை. வெள்ளிக் கிழமை பயானகளும் இதே போல்தான் வீணாக்கப்படுகின்றன. இதே போல் எழுத்திலும் நாம் கூடிய வரை அரபு வார்த்தைகளை தவிர்த்துக் கொள்வது நமது எழுத்து மாற்றாரை சென்றடைய ஏதுவாக இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
//உங்களை மாதிரி அரபியில் குர்ஆனை சரளமாக ஓத சிரமமாக இருக்கிறது. அதுக்கு மட்டும் கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க. பல பேரோட சொற்பொழிவு எனக்கு சரியா புரிய மாட்டேங்குது. ஆனா அண்ணன் பிஜே பேசினா எனக்கு தெளிவா விளங்குது. அவரோட சிடிக்களை பார்த்துதான் இந்த முடிவையே எடுத்தேன். அவருக்கு ரொம்ப நன்றிங்கண்ணா! எனக்கு மெக்கா போய் கஃபாவை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அதற்கும் ஏற்பாடு பண்ணுங்கண்ணா!'
என்று மிக இயல்பாக வெள்ளாத்தியாக கொச்சைத் தமிழில் பேசி முடித்தார். ஒரு வாரத்தில் அவருக்குள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எண்ணி வியந்தோம். இறைவன் ஒருவனுக்கு நேர்வழியை காட்ட எண்ணி விட்டால் அதற்கு திரை ஏது? தமிழ்ச் செல்வன் என்ற பழைய பெயரிலேயே அவர் இஸ்லாத்தில் இருக்கலாம். ஆனால் இந்த பெயரில் இருந்தால் 'இவர் என்ன சாதி? படையாச்சியா, செட்டியாரா, தலித்தா' என்ற கேள்வி வரும். தற்போது தனது பெயரை முஹம்மது என்று மாற்றியுள்ளார். இனி உலக முஸ்லிம்களில் ஒருவராக ஐக்கியமாகி விட்டார். சாதியும் ஒழிந்தது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற 2000 வருடத்திய மூதாதையரின் திராவிட பாரம்பரியத்துக்கு மீண்டு வந்துள்ளார் தமிழ்ச் செல்வன்.
இனி உலகின் எந்த பள்ளியிலும் முதலில் சென்றால் முன் வரிசையில் அமரலாம். கஃபாவுக்குள் சென்றாலும் முதல் ஆளாக சென்று நிற்கலாம். வழிபடுவதற்கு கட்டணம் ஏதும் இல்லை. இனி கூனி குருகி உயர் சாதியினர் முன்னால் செல்ல வேண்டியதில்லை. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு செல்லலாம்.//
அப்படியே சிரமம் பாக்காம ஒரு சவூதிப் பொண்ண கல்யாணம் செஞ்சு வைச்சுட்டீங்கண்ணா புண்ணியமாப் போகுங்ண்ணா.
சகோ கொண்டி முத்து!
//அப்படியே சிரமம் பாக்காம ஒரு சவூதிப் பொண்ண கல்யாணம் செஞ்சு வைச்சுட்டீங்கண்ணா புண்ணியமாப் போகுங்ண்ணா.//
என்ன கொடுமைங்கண்ணா இது. நம்ம நாட்டுல வரதட்சணை கொடுக்க முடியாமல் எத்தனையோ குடும்பங்களில் திருமணம் ஆகாமல் சகோதரிகள் முதிர் கன்னிகளாக அமர்ந்துள்ளார்கள். அவர்களில் ஒருவரை கண்டிப்பாக திருமணம் செய்து வைத்து விடலாம். கவலைப்படாதீர்கள்.
மேலும் சவுதி பெண்ணை திருமணம் செய்து கொள்ள மஹராக 40 லட்சம் 50 லட்சம் ரூபாய் திருமணத்துக்கு முன்பு கொடுக்க வேண்டும். இவ்வளவு பணத்தக்கு அந்த இளைஞர் என்ன பண்ணுவார். நீங்கள் தர தயாராக இருந்தால் சொல்லுங்கள். நான் அந்த சகோதரருக்கு சவுதி பெண்ணை முடித்து வைக்க ஏற்பாடு செய்கிறேன்.
சவூதியில மணமாகாத ஏழைப் பெண்கள் யாருமே இல்லையா? இல்ல கொஞ்சமே மஹர் கேட்கும் பெண்களே இல்லையா? இல்ல சவூதி பெண்களுக்கு இந்தியர்கள் யார் மீதும் காதலே வாராதோ?
சவூதிப் பெண்களுக்கு மஹர் கொடுக்க முடியாமல்தான் பல ஏழை அரபிகள் ஹைதராபாத் வந்து இளம் பெண்களை மணமுடித்துச் செல்கிறார்களா?
அது ஒரு புறம் இருக்கட்டும்.
//நம்ம நாட்டுல வரதட்சணை கொடுக்க முடியாமல் எத்தனையோ குடும்பங்களில் திருமணம் ஆகாமல் சகோதரிகள் முதிர் கன்னிகளாக அமர்ந்துள்ளார்கள். அவர்களில் ஒருவரை கண்டிப்பாக திருமணம் செய்து வைத்து விடலாம். கவலைப்படாதீர்கள்.//
'முதிர் கன்னிகள்' அப்படின்னு யாரைக் குறிப்பாச் சொல்கிறீர்கள்? வரதட்சணைப் பிரச்சனைதான் இஸ்லாமில் கிடையாதே. ஒரு வேளை இந்திய முஸ்லிம்கள் மார்க்க நெறிகளுக்கு எதிராகப் பெண்களிடம் வரதட்சனை கேட்கிறார்களா?
சகோதரர் கொண்டிமுத்து அவர்களுக்கு,இஸ்லாத்திலும் இருக்கிறார்கள்
முதிர்கன்னிகள்.திருமணத்திற்கான அடிப்படை செலவு செய்ய வழியில்லாத
ஏழைகள் மற்றும் வரதட்சினை கேட்கும் இஸ்லாத்தை தவறாக புரிந்துகொண்ட
பெயரளவு முஸ்லீம்கள் என்று காரணங்கள் நீளுகின்றன.ஆனால் கண்டிப்பாக
செவ்வாய் தோஷமோ,நாகதோஷமோ காரணமாக இருக்க வழியில்லை.
//வரதட்சினை கேட்கும் இஸ்லாத்தை தவறாக புரிந்துகொண்ட
பெயரளவு முஸ்லீம்கள் என்று காரணங்கள்//
தமிழ்செல்வனை முகம்மதுவா மாற்றுவதற்கு முன்னால் தம் வீட்டை சுத்தம் செய்வது முக்கியமல்லவா?
Post a Comment