கேரள மாநிலத்தை சேர்ந்த தாமஸ் (வயது 63) ஒரு பொறியிலாளர். துபாயில் பணியின் போது நடந்த அசம்பாவிதத்தில் நடக்க முடியாமல் சிரமப்படுகிறார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஹம்மது ஆஸாத் தாமஸூக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
சாப்பாடு செய்து கொடுப்பது. மல ஜலம் கழிக்க உதவுவது மருத்துவமனை அழைத்துச் செல்வது என்று அனைத்து உதவிகளையும் கடந்த 18 மாதங்களாக செய்து வருகிறார். வெறுப்பை விதைத்து அதில் சுகமாக வாழும் அரசியல்வாதிகளே இந்த மனித நேயத்தை எப்படி பார்க்கிறீர்கள். மதம், இனம், நாடு தாண்டிய மனித நேயமல்லவா இது?
60 வருடங்களுக்கு முன்பு இரண்டு தேசங்களும் ஒன்றாகத்தானே இருந்தது? எங்கிருந்து வந்தது இந்த வெறுப்பு? இந்த வெறுப்பினால் அரசியல்வாதிகளான நீங்களும் உங்கள் குடும்பமும் சுகமாக வாழ்கிறீர்கள். ஆனால் எல்லைக் கோட்டுக்கருகில் தினமும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்வை நகர்த்தி வரும் ராணுவ வீரர்களை சற்று நினைத்துப் பாருங்கள். இனியாவது வெறுப்பு அரசியலை தூரமாக்கி இரு நாடுகளும் நெருங்கி வரட்டும். சகோதரத்துவம் தழைக்கட்டும்.
No comments:
Post a Comment