Followers

Saturday, November 07, 2020

கடவுள் படம் போட்ட வெடிகளை விற்கக் கூடாது

 'கடவுள் படம் போட்ட வெடிகளை விற்கக் கூடாது. நபிகளின் கேலிச் சித்திரத்திற்கு நீங்கள் எல்லாம் எந்த அளவு எதிர்த்தீர்கள். எங்களுக்கும் அந்த உணர்வு இருக்கிறது'

'சரி தம்பிகளா! நான் விற்கவில்லை. உங்கள் உணர்வை மதிக்கிறேன்... கை கொடுங்கள்'
'கை எல்லாம் கொடுக்கத் தேவையில்லை. மீறி விற்றால் அதன் விளைவுகளை உங்கள் கடை சந்திக்க நேரிடும். இது ஆரம்பம்தான். பிறகு வருகிறோம்'
அட கிறுக்கன்களா? லட்சுமி படம் போட்ட வெடிகளை தயாரிப்பது இந்து முதலாளிகளல்லவா? அவர்களைப் போய் மிரட்ட வேண்டியதுதானே? இந்த வெடிகளை விற்க அனுமதி கொடுக்கும் அரசாங்கத்தை எதிர்த்து போராட வேண்டியதுதானே? இதே போல் 80 சதவீத இந்து கடைகளில் சாமி படம் போட்ட வெடிகள் விற்கப்படுகிறதே. அங்கு ஏன் சென்று மிரட்டவில்லை. இவர்களின் நோக்கம் பக்தி அல்ல. பக்தியின் பெயரால் அடாவடி செய்து மிரட்டி வியாபாரிகளிடம் பணம் பிடுங்குவதே இவர்களின் நோக்கம். அமித்ஷாவும் மோடியும் விதைத்த விதை இன்று இந்து இளைஞர்களை மாமூல் வசூலிக்கும் கூலிப் பட்டாளமாக மாற்றியுள்ளது. வட நாடுகளில் இது தற்போது தொடர்கதையாகிறது. இனி இவர்களின் விருப்பம் படிப்பிலோ தொழிலிலோ செல்லாது. மிரட்டி பணம் பறித்து வாழ்க்கையை நகர்த்துவார்கள். மோடியினால் அதிகம் பாதிக்கப் போவது இந்து சமூகம்தான். அதனை விரைவில் இந்துக்கள் உணர்வார்கள்.



No comments: