20.4.1995
கூரியூர் ஷஹித் முகமது அலி ஜின்னா அவர்கள் RSS
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தினம் இன்று...
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் பிறந்து . காவல்துறையில் பணியாற்றிவர் சிலையன்.
சாதியின் பெயரால் தாமும் தமது சமூகமும் அடைந்த துன்பங்களுக்கு எதிராக வெகுண்டெழுந்து இராமநாதபுரத்தில் சாதி ஒழிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். தம்முடைய காவலர் பணியையும் துறந்துவிட்டு பொதுவாழ்வில் இறங்கினார் கம்யூனிஸம் உட்பட உலகில் எந்த ஒரு தத்துவமும் சாதி ஒழிப்புக்கு உதவவில்லை என்பதை உணர்ந்த சிலையன் இஸ்லாமை கண்டுணர்ந்தார் உச்சிமுகர்ந்தார்..இஸ்லாத்தை ஏற்று ஜின்னாவாக மாறினார்.. அதன் பிறகு அவர் வசிக்கும் கூரியூர் எனும் கிராமம் மொத்தமுமே இஸ்லாத்தை எற்றுக் கொண்து.
இராமநாதபுரம், சிவகங்கை,மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்கள் அணி அணியாக ஜின்னாவை பின்பற்றி இஸ்லாத்தை ஏற்க தொடங்கினர்..
கூரியூர் ஜின்னா சாஹிபு முயற்சியால் சுமார் 40 ஆயிரம் நபர்கள் இறை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
ஆண்டாண்டுகாலமாக தங்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த தலித் மக்கள் இந்தியாவின் தென்கோடி மூலையில் சாரைசாரையாக இஸ்லாத்தை நோக்கி செல்வதை கண்ட பார்ப்பன RSS கும்பல் ஓடோடி வந்து '' ''எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் ,ஆனால் இஸ்லாத்துக்கு போகாதீர்கள் '' என கெஞ்சினார்கள் . ஆரிய சமாஜம், சுத்தி மார்க்கம் மூலமாக ''தாய் மதம் திரும்புங்கள் ''என வீடுவீடாக சென்று அழைத்தார்கள் .ஒருவர் கூட கதவை திறக்கவில்லை .
அப்போது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளோடு நெருக்கமாக இருந்த எம்ஜியார் அரசு அதிகாரிகளை அனுப்பி ''
உங்களுக்கு இலவச கறவை மாடுகள் அரசு நிலம் வீடுகள் தருகிறோம் ''என ஆசைகாட்டிப்பார்த்தார்கள். இவர்கள் மனம் மாறவில்லை கடைசியில் மிரட்டிப்பார்த்தார்கள் .'' உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் ''என்று ஜின்னா சாஹிப் கூறிவிட்டார் .
ஜின்னா சாஹிப் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஜமாத்தே இஸ்லாமி வேலூர் தாவா சென்டர் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் அரசு அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால் அவர்களும் தங்கள் பணியை நிறுத்தி வைத்தனர் துவண்டுவிடவில்லை ஜின்னா சாஹிப் .தன் சமுதாயத்திற்கு நல்வழிகாட்ட* கூரியூரில் ஒரு பள்ளிவாசல் கட்டி அங்கு அந்த மக்களுக்கு அழகிய முறையில் இஸ்லாத்தை அறிமுகம் செய்தார் .
தன் சிறுவயதில் ராமநாதபுரம் அக்ரஹாரத்தின் வழியே நடந்து சென்ற ஒரே காரணத்துக்காக ஓடஓட விரட்டி அடிக்கப்பட்ட சிலையனுக்கு ஆழமான காயம் மனதில் ஏற்பட்டது பின்னாளில் ஜின்னா சாஹிப்பாக மாறியவுடன் எந்த அக்கிரகாரம் ஓடஓட விரட்டியதோ அதே அக்கிரஹாரத்தின் மையப்பகுதியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடியேறினார் .
தனக்கு நேர்ந்த இந்த கொடுமைகளை தனது சமுதாயம் தொடர்ந்து அனுபவிக்க கூடாது என்ற உந்துதலில் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்தார் . ஜின்னா சாஹிப்பின் முனைப்பான பிரசாரத்தால் நாளுக்குநாள் கிராமம் கிராமமாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தனர் . இதனால் எம்.ஜி.ஆர் அரசு அவரை மீண்டும் மிசா சட்டத்தின் கீழும் பல்வேறு பொய் வழக்குகளின் கீழும் சிறையில் அடைத்தனர். சுமார் 35 வழக்குகள் அவர் மீது போடப்பட்டும் அவரின் வேகம் அதிகரித்தால் அரசு அதிகாரி தங்கள் முயற்சியை கைவிட்டனர் .
ஜின்னா சாஹிப்பின் இஸ்லாமிய அழைப்பு பணியை எம்ஜியார் அரசு மூலம் சட்டரீதியாக தடுக்கமுயன்ற RSS
கும்பல் தோல்வியை சந்தித்ததால் வேறொரு வழியை கையாண்டது. சாதிரீதியான தங்களின் ஆதிக்கத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் சவப்பெட்டி தயாராவதை கண்ட RSS கும்பல் மார்ச் 18.1995 இல் ராமேஸ்வரத்தில் '' மதமாற்றம் எதிர்ப்பு மாநாடு '' என ஒன்று கூடினர் .அங்கு பேசிய அனைவருமே மதமாற்றங்களுக்கு முக்கிய காரணமே '' கூரியூர் முஹம்மது அலி ஜின்னா '' தான் என குறிப்பிட்டனர் .மாநாடு முடிந்ததும் மதமாற்றங்களுக்கு காரணமாக இருக்கும் தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள் செயல் வீரர்களை அடிப்படையாக வைத்து கொலைப்பட்டியல் தயார் செய்தனர் அதில் முதல் பெயர் '' கூரியூர் ஜின்னா.
''20.4.95 வியாழன் அன்று ராமநாதபுரத்தில் இரவு தொழுகை முடித்துவிட்டு TVS சேம்ப் வண்டியில் கூரியூரிலுள்ள வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார் .இரவு 8.30 மணிக்கு கூரியூர் மசூதிக்கும் அவர் வீட்டுக்கும் இடையில் அடைக்கலம் காத்தான் என்ற பகுதியில் உள்ள கோவிலை நெருங்கியதும் ''அத்தா ! கொஞ்சம் நில்லுங்க .'' என்று பழக்கப்பட்ட குரல் கேட்டதும் கொஞ்சம் வண்டியை நிறுத்திய ஜின்னா சாஹிப்பை மூன்று பேர் சரமாரி வெட்டிவிட்டு ''ஓம் காளி ! ஜெய் காளி ! என ஊளையிட்டுக்கொண்டே ஓடினார்கள். வெட்டுக்காயங்களுடன் தட்டுதடுமாறி தன் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்திவிட்டு ''அல்லாஹு அக்பர் ! '' என சாய்ந்தார் பயோனியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நள்ளிரவு 12.30 மணிக்கு மலர்ந்த முகத்துடன் இறைவனடி சேர்ந்தார் .
இவர் உடலடக்கதிற்கு சாதிமத பேதமின்றி மக்கள் திரண்டதால் ராமநாதபுரத்தில் 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது . தங்கள் அன்பிற்கினிய சகோதரன் RSS பார்ப்பன கும்பலால் கொலை செய்யப்பட்டத்தை கண்டு தாழ்த்தப்பட்ட மக்களும் வெகுண்டெழுந்துள்ளதால் பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக மதுரை இந்து முன்னணி அலுவலகத்தில் வைத்து கொலையாளிகள் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கம் போலவே இந்த கொலையிலும் நீதிமன்றத்தால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை .
ஜின்னா சாஹிப்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி கொலையாளிகளை ஏவிவிட்ட முக்கிய RSS
பிரமுகர்கள் கைது செய்யப்படவே இல்லை. இக்கொலையில் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராமநாதபுரம் RSS தலைவர் வழக்கறிஞர் குப்புராம் என்பவர் அவர் வீட்டில் வைத்து வெட்டப்பட்டார் .
இந்த வழக்கில் இஸ்லாத்தை தழுவிய சகோதரன் அப்துல்லாஹ் மற்றும் ஏர்வாடி காசிம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சுமார் ஏழாண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டனர்
ஜின்னா சாஹிப்பை வெட்டி வீழ்த்திய பார்ப்பன RSS
கும்பலால் அவர் விதைத்து விட்டு போன செய்தியை வீழ்த்த முடியவில்லை .அவர் சிலையனாக இருந்த போது எந்த அக்கிரகாரத்தில்நடந்து சென்றதுக்காக ஓடஓட விரட்டி அடிக்கப்பட்டாரோ அதே அக்கிரகாரத்தில் அவர் ''முஹம்மது அலி ஜின்னா ''வாக மாறிய பின்பு அங்கு ஒரு வீடு வாங்கி குடியேறினார் .அவர் வழியில் அவர் மக்கள் அந்த அக்கிரகாரத்தில் ஒரு மசூதியே கட்டி இஸ்லாமிய அழைப்பு பணி செய்து வருகிறார்கள்.
Anwar Hussain
3 comments:
இந்தியாவில் உள்ள எந்த சமூக சமய பிரச்சனைகளுக்கும்
தீர்வாக அரேபிய மதம் இருக்க முடியாது.
நேற்று கூட ஆப்கானிஸ்தானில் மசுதியில் குண்டு வெடித்து 33 பேர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளாா்கள். இது தலியான்கள் பொறுப்பேற்ற பின் நடக்கும் 4 வது பள்ளி வாசலில் நடக்கும் பயங்கரப் படுகொலை. கொன்றவனும் செத்தவனும் குரானை பின்பறறுபவர்கள்தாம்.
----------------------------------------------------------------------------------------
இந்துக்களுக்கு வெகு ஜென ரீதியில் பல கருத்து தெளிவு அளிக்க முறையான சமய கல்வி அளிக்க வேண்டும். அதற்கு ஆா்எஸஎஸ போன்ற அமைப்புகள்தான் முயன்று வருகின்றது. இந்து சமய அறநிலையத்துறை . . .இந்துக்களை அழிப்பதற்கென்றே செயல்படுகிறது.
எங்கள் நிலைமை. . . .இந்துக்கள் நிலைமை சற்று பரிதாபம்தான்.
கர்நாடகாவைச் சேர்ந்த விஸ்வேஸ்வரய்யரும் தமிழ்நாட்டு ஈரோட்டு ராமசாமியும் சமகாலத்தவர்கள்*
.
இதில் *கன்னட விஸ்வேஸ்வரர் ஒரு அய்யர்*. அக்காலத்திலேயே கட்டட பொறியியல் படித்து மைசூர் சமஸ்தானத்துக்கு திவானாக வந்தவர்.
*மிகச்சிறந்த அறிவாளியும் தீர்க்கமான சிந்தனையும் மிக நீண்டதொலைநோக்கும் கொண்டவர்*. *அவரின் ஆற்றலும் அறிவும் அவரை* *திவான் எனும் நிலைக்கு* *உயர்த்தின*
அன்றைய மைசூர் சமஸ்தானம் பின்தங்கித்தான் இருந்தது. காவேரியின் பிறப்பிடம்
என்றாலும் சொல்லிக்கொள்ளும் அணை அவர்களுக்கு இல்லை.
இது போக *தஞ்சாவூர் பக்கம் காவேரி வெள்ளம் வந்தால் அதற்கு மைசூர் மகாராஜா நஷ்ட ஈடு கொடுக்கும் வினோத தண்டனை எல்லாம் இருந்தது*.
மன்னரும் தலையில் அடித்துக்கொண்டே கட்டிக்கொண்டிருந்தார்.
*விஸ்வேஸ்வரய்யர் அதைத் தடுக்க யோசனை சொன்னார். இந்த நஷ்ட ஈட்டுக்கு பதிலாக அணை கட்டி, நம் பக்கம் காவேரியினை திருப்பினால் விளையும் நன்மைகளைப் பட்டியலிட்டுச் சொன்னார்*.
*அதே நேரம் தமிழக நலன் காக்க மேட்டூர் அணை திட்டம் பற்றியும்* அவர் சொன்னார்.
*காவேரியின் அணைகளில் மேட்டூர் அணைதான் குறிப்பிடத்தக்கது*.
அதுகூட *காமராஜரின் புண்ணியத்தில் உருப்பெற்று இன்று வரை நம்மை ஓரளவு காப்பாற்றுகிறது.*
விஸ்வேரய்யாவின் சிந்தனையினை ஏற்றுக்கொண்ட சமஸ்தானம் செழித்தது. மாபெரும் ஆலைகளும் விவசாய நிலங்களும் செழித்து வளர்ந்தன.
*சிறு கிராமான பெங்களூர், அதாவது 18ஆம் நூற்றாண்டில் சென்னை மதராசப்பட்டினம் எனக் கொண்டாடப்பட்ட காலத்தில், சிறு கிராமமாக இருந்த பெங்களூர் அசுரவளர்ச்சி பெற ஆரம்பித்தது.*
மன்னராட்சி முடிந்து மக்களாட்சி வரும் பொழுதும் கன்னட சட்டசபையான “*விதான சவுதா*” அவரே திட்டமிட்டுக் கொடுத்தார்.
இன்று பெங்களூரும் மற்றும் முழு மாநிலமும் மாபெரும் வளர்ச்சி பெற்றிருக்கின்றது* என்றால்,
*எந்த தஞ்சாவூர் பக்கம் இருந்து வெள்ளத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டினார்களோ, அவர்களையே தண்ணீர் தா என கதறவைத்திருக்கிறது* என்றால் அதற்கு காரணம்…… *விஸ்வேசரய்யர்*.
*பெங்களூர் இன்று உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று என்றால் அதற்கு காரணமும் அவரே*.
*இது கன்னட நிலை.*
*விஸ்வேஸ்வரய்யாவை “அய்யர்” என மதித்து அவரின் அறிவுக்காக கன்னடம் தலைவனாக்கி வளர்ந்த பொழுது*…..
*தமிழகம் ஒரு முட்டாளை தலைவன் எனச் சொல்லிக் கொண்டிருந்தது. அவர் பெயர் ஈரோட்டு ராமசாமி.*
* கன்னடதேசம் படிப்படியாக விவசாயம், தொழிலகம், தேசியம், இந்தி படித்தல், மாநில முன்னேற்றம் என வேகமாக இருந்தபொழுது*
இங்கே
*இந்து எதிர்ப்பு*,
*இந்திய எதிர்ப்பு*,
*மாநிலத்தை நாசமாக்குதல்* என செய்துகொண்டிருந்தார் *ராமசாமி*.
அங்கே *ஒரு பிராமணனை அறிவாளி* எனக் கொண்டாடி அவர்கள் வேகமாக வளர்ந்தபொழுது,
*பார்ப்பானிய எதிர்ப்பு* எனச் சொல்லி *இங்கு அறிவாளிகளை விரட்டிவிட்டு அயோக்கியர்கள் சூழ வலம் வந்தார் ராமசாமி*.
*காவேரியில் அந்தக் கன்னடர்கள் அணைகட்டி, அணைமேல் அணைகட்ட திட்டமும் வைத்திருக்க*,
இங்கே *வெட்டிப் பகுத்தறிவு*, *வேடிக்கை இந்து எதிர்ப்பு* எனச் சொல்லித் *தமிழனை முட்டாளாக்கிக் கொண்டிருந்தார் ராமசாமி*.
*இன்று கர்நாடகம் அந்த அறிவுள்ள ஒரு மனிதன் - பிராமணர் போட்ட பாதையில் செழித்து வளர்ந்து கணிப்பொறி முதல் விவசாயம் வரை முன்னணியில் நிற்கின்றது.*
ஆம். *18ம் நூற்றாண்டில் சிறு கிராமமாக இருந்த பெங்களூர் இன்று உலக நகராயிற்று*,
ஆனால் அன்றே உலகப் பெருநகராக இருந்த *சென்னை இன்று கூவம் ஓடும் அளவு நாசமாயிற்று*.
*அந்த அய்யரைக் கொண்டாடிய மாநிலம் இன்று நீரில் செழித்து முப்போகம் விளைவிக்கின்றது*.
*பிராமணனை விரட்டி அடித்த தஞ்சை டெல்டா இன்று நீருக்கு கதறிக் கொண்டிருக்கிறது*.
*ஒரு அறிவாளியினை அவன்* *சாதி தாண்டி மதம் தாண்டி*
*இந்தியன்* எனக் கொண்டாடிய மாநிலம் முன்னணியில் இருப்பதும்,
*பார்ப்பான், இந்து எதிர்ப்பு* எனக் *காட்டுமிராண்டித்தனம் செய்த ஒரு கயவனை பெரியான்* என கொண்டாடி, அவனுக்கு ஜால்ரா அடித்தவனை *பேரறிஞன்* எனக் கொண்டாடிய மாநிலம் நாசமாகிக் கொண்டிருக்கின்றது.
*இப்பொழுது பெங்களூர் ரயில் நிலையம் இந்தியாவின் முதல்*
*குளிரூட்டப்பட்ட ரயில் நிலையமாய்* இன்று திறக்கப்படுகின்றது.
ஆனால் *ராமசாமியின் தமிழகம் பழைய வெள்ளையன் கால கட்டடத்துக்குப் புரட்சி தலைவன் பெயரை வைத்துப் பல்லிளித்துக் கொண்டிருகின்றது*.
*விஸ்வேஸ்ரய்யர் எங்கள் தந்தை எனச் சொன்ன கன்னடன், இன்று பல துறையில் முன்னேறி நாட்டுக்கு வழிகாட்டுகின்றான்*.
*ராமசாமி பகுத்தறிவுக்குத் தகப்பன் எனச் சொன்ன தமிழகக் கோஷ்டி ஒரு குவாட்டருக்கும், பிரியாணிக்கும் சில நூறு ரூபாய் பணத்துக்கும் ஏங்கி கோஷம் போட்டு அலைகின்றது*.
*தன்னலமற்ற அறிவாளியினைக் கொண்டாடும் இனம் செழிக்கும் என்பதற்கும், அரைக்கிறுக்கு காட்டுமிராண்டிக் கிழவன் ஒருவனைக் கொண்டாடும் சமூகம் உருப்படாது என்பதற்கும் கன்னடமும் தமிழகமும் மிகச் சிறந்த உதாரணங்கள்*.
*அந்த பிராமணன் எவ்வளவோ கட்டடமும், தொழிற்சாலையும், பெரும் அணைகளும் கட்டினான்*.
*ஈரோட்டு ராமசாமி வளர்ப்பு மகளான மணியம்மையினைக் கட்டினான்..*.
*அந்தம்மையை வைத்து வீரமணி என்பவன் பல கல்லூரிகளையும் மாளிகைகளையும் கட்டினான்*.
*அவன் வாரிசுகள் மட்டும் இன்று நோகாமல் அவற்றை அனுபவிக்கின்றனர்.*
பெரியாா் தமிழ் என்று மக்களை ஏமாற்றியவ கூட்டம் பணத்திலும் அரசியல் அதிகாரத்திலும் செழித்து வாழ்கிறது. சாராயக்கடை வருமானம் 35000 கோடி. அப்படியானால் தமிழன் சாராயத்திற்கு செலவு செய்யும் தொகை என்ன ?
இதுதான் தமிழகத்தின் தீரா சாபத்திற்குக் காரணம்.
Post a Comment