Followers

Friday, January 13, 2012

சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்!
‘யோகா உங்கள் உடலை எவ்வாறு நாசமாக்குகிறது?’ என்ற தலைப்பில் வில்லியம் பிராட் எழுதிய புத்தகத்தின் பகுதிகளை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. யோகாசனம் செய்தவர்கள் கழுத்து, இடுப்பெலும்பு, முதுகெலும்பு நொறுங்குவது, மூளை நரம்பு வெடிப்பது, ரத்த நாளங்கள் தெறிப்பது, பார்வை இழப்பது போன்ற பயங்கர பாதிப்புகளுக்கு ஆளானதாக வில்லியம் பிராட் விவரிக்கிறார். தலைகீழாக நிற்பது, மொத்த உடலையும் கைகளில் தாங்கி நிற்பது போன்ற கடினமான ஆசனங்களை செய்தபோது பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரிகிறது.

இந்த யோகாசனத்தில் வரக் கூடிய ஒரு நிலையான சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தை செய்ய மத்திய பிரதேச பா.ஜ.க அரசு சுமார் 50 லட்சம் குழந்தைகளைக் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்திக் காட்டியுள்ளது. மாநில முதல்வரும் கலந்து கொண்டுள்ளார். மற்ற மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் இந்த வழிபாடு நடத்தப் பட்டுள்ளது.கின்னஸ் புத்தகத்தில் இதை சாதனையாக்க முயற்ச்சிக்கப் போகிறார்களாம். முயற்ச்சிக்கட்டும்.

ஆனால் இதற்கு முஸ்லிம் சமய தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸூம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சூரியனை கடவுளாக வணங்குபவர்கள் சூரிய நமஸ்காரம் பண்ணிக் கொள்ளட்டும். அதை யாரும் தடை சொல்லவில்லை. இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்காத முஸ்லிம்களை இங்கு கல்வி அமைச்சகம் சூரிய நமஸ்காரத்தில் ஈடுபடுத்துவதுதான் பிரச்னையே!

(எனது தாத்தா காலையில் எழுந்து பள்ளிக்கு சென்று தொழுவதும் அல்லாமல் தினமும் வீட்டிலேயே யோகா பயிற்சியை எடுப்பார். என் பாட்டி என்னிடம் “உன் தாத்தாவுக்கு இந்த வயசுல தலைகீழாக நின்று கொண்டு ஆசனம் செய்வது தேவையா?' என்று நான் சிறுவனாக இருக்கும் போது கேட்டுள்ளார்கள். ஆரோக்கியமாக இருந்தவர் திடீரென்று ஒருநாள் தண்ணீரில் வழுக்கி விழுந்தவர் பிறகு எழும்பவே இல்லை. இரண்டு நாளில் மரணமடைந்து விட்டார். நன்றாக இருந்தவர் ஒரு சிறிய விபத்தில் இறந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒருக்கால் அவர் தினமும் செய்த யோகா அவரது மரணத்தை சிக்கிரமே கொண்டு வந்திருக்கலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன்.) :-(

_______________________________________________________________

http://www.bmj.com/highwire/filestream/223144/field_highwire_article_pdf/0/685.2.full.pdf

யோகாவினால் உடலுக்கு எற்படும் தீமைகளை பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடியைச் சேர்ந்த அறிஞர் ரிட்சி ருஷல் விவரிக்கிறார்.


_______________________________________________________________

http://books.simonandschuster.com/Science-of-Yoga/William-J-Broad/9781451641424

மற்றுமொரு சுட்டியையும் பார்த்து விடுங்கள்

வாஷிங்டன் போஸ்டில் வந்த யோகாவைப் பற்றிய புரிதலும் , யோகா எவ்வாறு உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதை கட்டுரையாளர் அழகாக விளக்குகிறார்.
______________________________________________________________

http://www.skincancer.org/skin-cancer-information/videos/skin-cancer-video

காலையில் சூரிய நமஸ்காரம் பண்ணினால் தோல் வியாதிகள், கண் கெடுதல் பொன்றவை எவ்வாறு ஏற்படுகிறது என்பதை இந்த காணொளி விளக்குகிறது.

---------------------------------------------------

கண்களை சூரிய ஒளி எந்த அளவு பாதிக்கிறது தோல் புற்று நோயை எவ்வாறு உண்டாக்குகிறது என்பதை இந்த காணொளிகள் விளக்குகின்றன. ஆனால் நம் நாட்டில் சூரிய நமஸ்காரத்தை வழக்கமாக கொண்டுள்ள பலரும் அறியாமல் நோயை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். நம் நாட்டில் கண்பார்வை மங்கியவர்களின் விகிதாச்சாரமும் தோல் வியாதியின் விகிதாச்சாரமும் அதிகமாக இருப்பதற்கு இந்த சூரிய நமஸ்காரமும் காரணமாக இருக்கலாம்.

இது பற்றிய விழிப்பணர்வை அரசு உடனடியாக துவக்க வேண்டும். நம் நாட்டு இளைஞர்களின் கண்பார்வையும் உடல் நலனையும் கருத்தில் கொண்டு மிக துரிதமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை இது. அரசு கவனிக்குமா?பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.

- குர்ஆன் 6:78


டிஸ்கி:பாபா ராம்தேவ் மீது சாயம் வீச்சு:

//டில்லியில் நிருபர்கள் சந்திப்பின் போது வந்த ஒருவர் கையில் தயாராக வைத்திருந்த கறுப்பு மையை அவரது முகம் மற்றும் மார்பு பகுதியில் தெளித்தார். இந்த நபரை உடனடியாக அங்கு சூழ்ந்திருந்த அவரது ஆதரவாளர்கள் அடித்து துவைத்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் யார் என்ன காரணத்திற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.//
பத்திரிக்கை செய்தி
14-01-2011

கருப்பு மையை பாபாராம்தேவ் மீது ஊற்றியவர் ஒருகால் யோக கலையின் முலம் பாதிப்படைந்தவராகக் கூட இருக்கலாம். :-)

48 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
செமை விழிப்புணர்வூட்டும் பதிவு.

அதோடு, யோகா என்பதே இப்போது நல்ல பிசினெஸ். அதில் உள்ள நல்லவை என்ன கெட்டவை என்ன என்று எவரும் ஆராய்வது இல்லை. உங்கள் சுட்டிகள் அதில் உள்ள அதீத தீமைகளை படம் பிடித்து காண்பிக்கின்றன.

அப்புறம்...

இந்த மத்திய பிரதேச காலி(வி) மண்டை அரசுக்கு இதே வேலையா போச்சு. சென்ற வாரம் தான் "பசுவைக்கொன்றால்... பசு இறைச்சி விற்றால்... பசுவை கசாப்புக்கு எடுத்துச்செல்லும் வாகன ஒட்டிக்கும் சேர்த்து... எல்லாருக்கும் 7 வருஷம் சிறை தண்டனையை சட்டம் ஆக்கினார்கள்.

பாவம் ம.பி. மாநில ஏழை பால்க்காரர்கள்... விவசாயிகள்...
இனி பசு மாட்டை வாங்கவே மாட்டார்கள்... பின்பு ஒருநாள் அது பால் தராமல் போகும் நிலை வந்தாலும்... அது தானாக சாகும் வரை தீவன & வைத்திய செலவு செய்து பராமரிக்க வேண்டும்... அது ஒரு நாள் இயற்கையாக செத்தால் கூட, அந்த ஏழை குடியானவனுக்கு எதிரி எவனாவது இருந்தால்... "கொன்று விட்டான் பசுவை" என்று போலீசில் கேஸ் கொடுத்து விடுவான்... அப்புறம் ஏழு வருஷம் ஜெயில்.... அந்தோ பரிதாபம்... மத்திய பிரதேச மறை கழண்ட அரசின் மாநிலத்தவர்..!

அடுத்து இப்போது...

இந்த சூரிய நமஸ்கார கூத்து..!

சூரியனை பார்த்து, அதனால் எல்லா பச்சிளம் மாணவர்களுக்கும் கண்கள் குருடாகாமல் இருந்தால்.... அதுவே போதும்..!

'ஒளிமயமான இந்தியா'வுக்கு...!

இதிலே... incredible india... வாம்..!

ignorant india... என்று வெளியே சொல்கிறார்கள் இவர்களை பார்ப்பவர்கள்..!

வெட்கக்கேடு.....

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//இதிலே... incredible india... வாம்..!

ignorant india... என்று வெளியே சொல்கிறார்கள் இவர்களை பார்ப்பவர்கள்..!

வெட்கக்கேடு.....//

இந்த யோகாவை வைத்தக் கொண்டு ரவிசங்கரும், பாபா ராம்தேவும் பண்ணும் ரவுசும் தாங்க முடியவில்லை. இருக்கும் நபர்களின் கண்களை காக்காவாவது அரசு சில அறிஞர்களையும் மருத்தவர்களையும் கொண்டு உண்மை நிலையை அறிய முற்பட வெண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Raja said...

friend, your post reveals how far your infected with religion. u r just spitting venom against yoga because you don,t like hindu religion. if i dont like non-veg i can show u thousands of proofs and videos against non-veg and if you like non-veg u can provide the same no of proof for your staement.

any excersise has to be learnt from right master and should practise to make it perfect (be it yoga,aerobic etc).

pls dont blabber just because have a blog
note: i myself benefited from yoga and i neither support nor against any religion.

thanks
Raja

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன் ,
நல்ல பதிவு. வாழ்த்துக்கள். யோகா நல்ல உடற்பயிற்சி என்றே இன்றுவரை நினைத்திருந்தேன். இதிலும் பிரச்சனைகள் உள்ளனவா????
ஹ்ம்ம்....

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//இங்கு தமிழ்நாட்டில் அவ்வாறு நடைபெறுவது மிக மிக அரிதே. தமிழிலும் ஏராளமான பொது பெயர்கள் உண்டு ஆனால் அதை இந்துக்கள் தவிர்த்து வைப்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவே.//

அதற்கு காரணம் இங்குள்ள சாதி ஏற்றத் தாழ்வும், சாதிப்பிடிப்பும்தான காரணம். ஒருவர் ராகவன் என்ற பெயரில் இஸ்லாத்தை தழுவுவதாக வைத்துக் கொள்வோம். இவரை பார்க்கும் ஒருவர் அடுத்து இவரது ஜாதி என்ன என்பதை நோட்டம் விடுவார். சாதி ஒழிய வேண்டும் என்றுதான் அவர் வேறு மார்க்கத்தையே தேர்ந்தெடுக்கிறார். அங்கும் சாதி வந்து நின்றால் அவர் மாறியதில் அர்த்ததே இல்லாமல் போய் விடும்.

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் எந்த சாதி என்பது எவராலும் பார்க்கப் படுவதில்லை. அதே நேரம் திலிபன் என்ற பெயரிலேயே இருந்திருந்தால் வெகு இலகுவாக அவரது சாதி தமிழகத்தில் பிரபல்யப் பட்டிருக்கும்.

அரபு அல்லாத பெயர்களில் முஸ்லிம்கள் பெயர் வைப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. இறைத் தூதர் ஆப்ரஹாம் அரபியரல்ல. அந்த பெயரும் அரபியல்ல. ஆனால் முஸலிம்கள் பெரும்பாலும் வைக்கின்றனர்.

தமிழகத்தில் சாதி பாகுபாடு சாதி வெறி மறையும் பொழுது அன்று முஸ்லிம்களும் தமிழ்ப் பெயரை சூட்டிக் கொள்வார்கள்.

//பொங்கல் இந்து அடையாளத்துடன் சூரியனுக்கு படைத்து கொண்டாடப்படுவது தான் பொதுப் பண்டிகையாகக் கொண்டாடத் தடை என்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் போன்று மதம் சார்ந்து கொண்டாடலாமே ?//

இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரில் ஒரு புதிய பண்டிகையை நாமாக உண்டாக்கிக் கொள்ள முடியாது. அதற்கு குர்ஆன் தடை விதிக்கிறது. உலகம் முழுவதும் ஒரு முறையாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய ஏற்பாடு.

சூரியனுக்கோ மற்ற எந்த கற்சிலைகளுக்கோ படைக்காமல் அங்கு வழிபாடு நடக்காமல் தமிழர்களுக்கென்று பொங்கலை கொண்டாடினால் அதற்கு இஸ்லாம் தடையில்லை. எனவே சூரியனுக்கு படைப்பதை நிறுத்திக் கொண்டால் அந்த விழாவில் முஸ்லிமகளும் கலந்து கொள்வார்கள்.

எனது இம்மை மறுமை வாழ்வு செம்மையாக இருக்க இஸ்லாத்தை நான் ஏற்றிருந்தாலும் இனத்தினால் நான் தமிழனாகவும் மேலும் திராவிடனாகவும் இருக்கிறேன். அது என்றுமே அழியப் போவதில்லை.

Unknown said...

அருமையான இடுகை சகோதரரே! பல விபரங்களைத் தெரிந்து கொண்டேன்.

Anonymous said...

Best Article. Keep it Dosth.

shaik ahmed

suvanappiriyan said...

திரு ராஜா!

//friend, your post reveals how far your infected with religion. u r just spitting venom against yoga because you don,t like hindu religion.//

இங்கு இந்து மதத்தை நான் விமரிசிக்கவில்லை. யோகா என்ற உடல் ஆரோக்கியத்துக்காக நடத்தப்படும் ஒரு பயிற்சி எதிர் மறை விளைவுகளை தருவதை எடுத்துக் காட்டுவதே இந்த பதிவின் சாராம்சம்.

//if i dont like non-veg i can show u thousands of proofs and videos against non-veg and if you like non-veg u can provide the same no of proof for your staement.//

நான் எந்த காலத்திலும் சைவப் பிரியர்களை அவசியம் நீங்கள் மாட்டுக் கறி சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்த மாட்டேன். மாமிசம் சாப்பிடாதவர்களை ஜெயிலில் அடைக்கச் சொல்லி சட்டம் கொண்டு வர போராட மாட்டேன். சாப்பாட்டை தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் விருப்பம்.
//pls dont blabber just because have a blog
note: i myself benefited from yoga and i neither support nor against any religion.//
அதுபோல் யோக கலை உங்கள் அளவில் சிறப்பாக இருந்தால் அதனை நீங்கள்தான் பின்பற்ற வேண்டும். என்னையும் அவசியம் யோகக் கலை பயின்று சூரிய நமஸ்காரமும் செய்ய வேண்டும் என்று நிர்பந்திததால் தான் அதில் உள்ள சாதக பாதகங்களை நான் விளக்க வேண்டியதாகி விட்டது. மத்திய பிரதேச முதல்வரிடம் நீங்கள் இந்த கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளை கட்டாயமாக சூரிய நமஸ்காரம் பண்ணச் சொல்லி நிர்பந்தித்து இருக்கிறார்கள். மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளின் கண் பார்வைக்கு யார் பொறுப்பேற்பது?

நானும் எந்த மதத்தையும் வெறுப்பது இல்லை. உங்கள் அளவில் யோகாவினால் பெரும் பலனை பெற்றிருந்தால் சந்தோஷமே! அதே சமயம் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் பணம் பண்ணுவதற்காகவும், தங்களின் மத நம்பிக்கையை மற்றவர்களிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதற்காகவும் இந்த கலை பூதாகரப்படுத்தப்பட்டு மீடியாக்களால் பிரலப் படுத்தப்பட்டால் அதில் உள்ள சாதக பாதகங்களையும் அலசும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம்.

நான் தினமும் தண்டால் எடுக்கிறேன். இன்னபிற உடற்பயிற்சியையும் எடுக்கிறேன். நான் ஐந்து வேளை தொழுவது கூட உடலுக்கு மிகச் சிறந்த உடற்பயிற்சியே. எனவே உடலை ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமலும் வைத்துக் கொள்ளவே நாம் அனைவரும் விரும்புகிறோம். அந்த ஈடுபாட்டால் எழுந்ததே இந்த பதிவு.

suvanappiriyan said...

சலாம்! சகோ சிராஜ்!

//நல்ல பதிவு. வாழ்த்துக்கள். யோகா நல்ல உடற்பயிற்சி என்றே இன்றுவரை நினைத்திருந்தேன். இதிலும் பிரச்சனைகள் உள்ளனவா????//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஆஷிக் அன்வர்!

//அருமையான இடுகை சகோதரரே! பல விபரங்களைத் தெரிந்து கொண்டேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//Best Article. Keep it Dosth.

shaik ahmed//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஷேக் அஹமத்!

Anonymous said...

The Science of Yoga - The Risks and the Rewards என்பது தானே புத்தகத்தின் முழுத் தலைப்பு! யோகா தரும் நன்மைகளைப் பற்றியும் தானே புத்தகம் பேசுகிறது. "நமஸ்காரம்" என்கிற சொல் இல்லாமல் "சூரிய வணக்கம்" அல்லது "சூரியனைப் பார்த்தவாறு செய்யும் எக்சர்சைஸ்" என்று சொன்னால் ஒருவேளை ஒத்துக்குவீங்களோ?

மதத்தினாலோ அல்லது வேறு காரணங்களால் உடன்பாடு இல்லையென்றால் ஒரு துளி கூட கட்டாயப்படுத்தக் கூடாது என்பதில் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால், அதற்காக யோகாவைப் பழிக்க வேண்டிய தேவை இல்லை.

Anonymous said...

Good logic. If you had applied same kinds of logic to Islam also, you would have been a lot more wiser. What to say to a hater who looks at world through dark glasses? "Ayyo paavam"

suvanappiriyan said...

திரு தருமி!

//ஓ! இது ஒரு 'பொங்கல் சீரியலா'? எத்தனையோ வருஷமா இதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோமோ ...//

இத்தனை வருடங்கள் எழுதியும் ஏதும் மாற்றங்கள் வந்த பாடில்லை. ஏனெனில் இரு தரப்பும் தங்கள் கொள்கையில் பிடிவாதமாக இருக்கின்றனர்.

ஒன்று சூரிய நமஸகாரத்தை விட்டால் இனம் என்ற முறையில் மற்ற மதத்தவர் குறிப்பாக இஸ்லாமியர் கலந்து கொள்ள வாய்ப்புண்டு. அது நடக்காத பட்சத்தில் பதிவுகளாக எழுதித் தள்ளிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

குடுகுடுப்பை!

//பொங்கலை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம், ஆனால் அதனை மதம் கடந்த பண்டிகையாக்க அதன் அடிப்படை நோக்கமான சூரியனுக்கு நன்றி செலுத்துதல் வணங்குதலை நீக்க முயற்சிப்பது, கிறிஸ்துமஸூக்கும் ஏசு பிறந்த நாளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போன்றது.//

உண்மையை ஒததுக் கொண்டதற்கு நன்றி! சூரிய நமஸ்காரம் இல்லாமல் பொங்கல் இல்லை என்கிறீர்கள். அதுதான் முஸ்லிம்களுக்கு பிரச்னையே!

அடுத்து சூரியனுக்கு நீங்கள் வைக்கும் பொங்கலை என்றாவது ஏற்றுக் கொண்டுள்ளதா? இப்படி தனக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையாவது வைத்ததா? தெரிந்து கொள்வதற்காகவே இதனை கேட்டேன்.

மற்றபடி இந்த பொங்கல் நன்னாளில் சாதி மத வேறுபாடுகளை களைந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வு மேலோங்கி மனிதம் தழைக்க எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறையை பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்தக்கள்.

ராஜ நடராஜன் said...

சுவனப்பிரியன்!இது என்னங்க பேரு:)ரொம்ப நாளா நீங்களும் கோவி கண்ணனும் மல்லுக்கட்டுவதை வேடிக்கை பார்ப்பதோடு சரி.இப்ப நட்பாக ஒரு பின்னூட்டம்.

வளைகுடா நாடுகளில் ஐந்து முறை தொழுகைக்கு செல்பவர்களைப் பார்த்து நான் வியப்பதுண்டு.யோகாவுக்கு மாற்று தொழுகையென்றும் கூட நினைத்ததுண்டு.இப்ப உங்க வாதத்தைப் பார்த்தால் தொழுவது கூட தவறு மாதிரியே தெரிகிறது.ஒரு நாளைக்கு 5 முறை என வார,மாதம்,வருடக் கணக்கில் தொழுவது தவறா?

அப்படியில்லை சகோ!பயிற்சிகள்(தொழுகை உட்பட)உடலையும்,மனதையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றன.சிலருக்கு யோகா உடலுக்கு மாற்று விளைவுகளைக் கொண்டு வரலாம்.அதுபோலவே தொழுகையும் என்பேன்.எனவே அவரவர் உடல் மனம் சார்ந்தது பயிற்சிகள்.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா என்பதில் உங்கள் வாதம் கூட ஒளிந்து கொண்டிருக்கலாம்.

மதம் கடந்து சிந்திப்பதே பொதுவெளிக்கு உகந்தது.நன்றி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///கிறிஸ்துமஸூக்கும் ஏசு பிறந்த நாளுக்கும் சம்பந்தம் இல்லை///---100% correct..!

But, from this truth... does he accept that, there is no relation between Pongal and Sun..? Wow..!

ha...ha...ha...

suvanappiriyan said...

ராஜ நடராஜன்!

//சுவனப்பிரியன்!இது என்னங்க பேரு:)//

சுவனம்...அதாவது சொர்க்கம்! சொர்க்கத்தை விரும்பக் கூடியவன். சொர்க்கத்துக்கு செல்வதற்கு என்னென்ன வழிகள் உண்டு என்று குர்ஆன் எதை எல்லாம் பட்டியலிடுகிறதோ அதனை எல்லாம் முடிந்த வரையில் எனது வாழக்கையில் கடைபிடிக்க முயற்ச்சிப்பவன். எனவேதான் சுவனப்பிரியன் என்ற பெயர்.

//வளைகுடா நாடுகளில் ஐந்து முறை தொழுகைக்கு செல்பவர்களைப் பார்த்து நான் வியப்பதுண்டு.யோகாவுக்கு மாற்று தொழுகையென்றும் கூட நினைத்ததுண்டு.இப்ப உங்க வாதத்தைப் பார்த்தால் தொழுவது கூட தவறு மாதிரியே தெரிகிறது.ஒரு நாளைக்கு 5 முறை என வார,மாதம்,வருடக் கணக்கில் தொழுவது தவறா?//

யோகாவில் நல்ல விஷயங்களும் உண்டு. சூரிய நமஸ்காரம் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல ஆசனங்களும் இதில் உள்ளது. காணொளிகளும் அதைத்தான் சொல்கின்றன. அதற்குரிய முறையான வழிகாட்டுதல் இல்லாத பயிற்சி உடலுக்கு எதிர் மறையான பிரச்னைகளையே தோற்றுவிக்கிறது. இத போன்று உடலுக்கு கேடு விளைவிக்கும் பயிற்சியைத் தவிர்த்து நல்லவற்றை எடுத்துக் கொள்வோம் என்பதுதான் எனது வாதம்.

அதே போல் தொழுகையும் சிறந்த ஆசன முறைகளை கொண்டது. நிலையிலிருந்து இருப்புக்கு செல்லுமுன் நாம் நமது முதுகையும் காலையும் எல் வடிவில் உள்ளது போல் வைக்க வேண்டும் என்பது கட்டளை. இவை எல்லாம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருபவையே! இதனால் இந்த இஸ்லாமியரின் தொழுகையில் நம்பிக்கையில்லாத வேறு நம்பிக்கையுடையவரை கட்டாயம் தொழ வேண்டும் என்று நிர்பந்தித்தால் அதனை நீங்கள் அங்கீகரிப்பீர்களா? அதைத்தான் இந்த பதிவும் சுட்டிக் காட்டுகிறது.

//மதம் கடந்து சிந்திப்பதே பொதுவெளிக்கு உகந்தது.நன்றி.//

மதம் அதாவது மார்க்கம் இல்லாமல் ஒரு மனிதனால் இந்த உலகில் வாழ்வது சிரமம். இப்படித்தான் ஒருவனின் வாழ்வு இருக்க வேண்டும் என்பது நம்மை படைத்தவனின் கட்டளைகள் இருக்க அதை எப்படி புறம் தள்ள முடியும். இந்து மதத்துக்கும் கிறித்தவ மதத்துக்கும் இறைவன் கொடுத்த கட்டளைகளை அந்த மதத்தின் முன்னோர்கள் மாற்றியதால் வந்த வினைதான் இன்று பெருகியிருக்கும் நாத்திகம்.

என்னதான் எங்களுக்கு மதம் இல்லை என்று கலைஞரும் வீரமணியும் சாதித்தாலும் இந்திய சட்டத்தின்படி அவர்களும் இந்துக்களே!

மார்க்கத்தோடு கூடிய மனித நேயத்தை வளர்ப்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

குடுகுடுப்பை said...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
///கிறிஸ்துமஸூக்கும் ஏசு பிறந்த நாளுக்கும் சம்பந்தம் இல்லை///---100% correct..!

But, from this truth... does he accept that, there is no relation between Pongal and Sun..? Wow..!

ha...ha...ha...//
பொங்கல் விழா என்பது உழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்.மற்றவர்கள் பொங்கலை அவர்கள் விருப்பபடி கொண்டாடலாம், ஆனால் பொங்கல் பண்டிகையில் சூரியனுக்கு வணக்கம் செலுத்துவதை மற்றவர்கள் கொண்டாடுவதற்கா நீக்க சொல்ல முடியாது. நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் சிரிக்கலாம் அது உங்கள் உரிமை.

சூரியனை அல்லா படைத்தான் என்பது உங்கள் கருத்து, அல்லாவை மனிதன் படைத்தான் என்பது என் கருத்து, உங்கள் கருத்தில் நான் சிரிக்கலாம் என் கருத்தில் நீங்கள் சிரிக்கலாம்
:))))))

suvanappiriyan said...

குடுகுடுப்பை!

//பொங்கல் விழா என்பது உழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்.மற்றவர்கள் பொங்கலை அவர்கள் விருப்பபடி கொண்டாடலாம், ஆனால் பொங்கல் பண்டிகையில் சூரியனுக்கு வணக்கம் செலுத்துவதை மற்றவர்கள் கொண்டாடுவதற்கா நீக்க சொல்ல முடியாது.//

எப்படி கிறிஸ்துமஸ்ஸூக்கும் ஏசுவின் பிறப்புக்கும் சம்பந்தம் இல்லையோ அது போலவே உழவர் திருநாளுக்கும் சூரியனுக்கு செய்யும் படையலுக்கும் வணக்கத்துக்கும் உள்ள தொடர்பு. மழை இல்லை என்றால் விவசாயம் செய்ய முடியாது. புயல் காற்று அடித்தால் கதிர்கள் எல்லாம் படுத்து விடும். நமது பயிர்களை தாக்கும் பூச்சிகளாலும் நமது விவசாயம் பாதிக்கப்படும். கால்நடைகளாலும் பல நேரங்களில் பாதிக்கப்படலாம். ஒரு விவசாயி தனது நிலத்தில் தானியங்களை உற்பத்தி செய்ய இத்தனையும் இதுபோன்ற இன்னபிற உதவிகளும் முறையாக கிடைத்தால்தான் விவசாயத்தில் வெற்றி பெற முடியும். இவ்வளவு காரணிகள் இருக்கும் போது சூரியனுக்கு மட்டும் சிறப்பாக படையல் செய்வதும் வணங்குவதும் எதற்காக?

//உங்கள் கருத்தில் நான் சிரிக்கலாம் என் கருத்தில் நீங்கள் சிரிக்கலாம்//

ஆக… சண்டை வராமல் ஒருவரையொருவர் பார்த்து சிரித்து கொள்வோம்.

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்'

:-))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனப்பிரியன்,
///இவ்வளவு காரணிகள் இருக்கும் போது சூரியனுக்கு மட்டும் சிறப்பாக படையல் செய்வதும் வணங்குவதும் எதற்காக?///---சிந்திக்க வேண்டிய சரியான பாயிண்ட்..!

அப்புறம் இன்னொரு பாயிண்டும் உள்ளது...!

எந்த ஒரு மனிதரும், வெறும் அரிசியை மட்டுமே சமைத்து பொங்கி சாப்பிட்டு வாழவில்லை. உப்பு, வெங்காயம், தக்காளி, எண்ணெய், பருப்பு, உளுந்து, கோதுமை, மிளகாய், இஞ்சி-பூண்டு... இப்படி நிறைய விவாசாய பொருட்கள் மக்களின் தினப்படி வாழ்வில் அத்தியாவசியமாக இருந்துகொண்டு இருக்க...

அரிசிக்கு மட்டும் சூரியனுக்கு நன்றி சொல்வது ஏன்..? மற்ற தானிய, எண்ணெய்வித்து, காய்கறிகளுக்கு சூரியனுக்கு நன்றி இல்லையா..?

சகோ.குடுகுடுப்பை...

ஆனால், நான் இதற்காகவெல்லாம் சிரிக்கவில்லை.

எதற்கு அந்த //ha...ha...ha...// என்றால்...

உங்கள் வாதத்துக்கு முற்றிலும் எதிர்மறையான உதாரணத்தை கூறி... அதன்மூலம் நீங்களே 'பொங்கலுக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் இல்லை' என்று சகோ.சுவனப்பிரியனுக்கு ஆதரவாய் கூறிவிட்டதைப்பற்றித்தான்..!

//உங்கள் கருத்தில் நான் சிரிக்கலாம் என் கருத்தில் நீங்கள் சிரிக்கலாம்//---யாருடைய கருத்தை படிக்கும்போது சிரிப்பு அதிகம் வந்தது என்பதே இங்கே மேட்டர் சகோ..!

:-))

//'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்'//

:-))

சிராஜ் said...

முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார்கள் சிலர் . நான் இது பற்றி முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன், இருந்தாலும் இன்று ஒரு சவால். உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். எதிர் குரூப் அவ்வாறு செய்யத் தயாரா??? பார்த்துவிடுவோம் யாருக்கு சகிப்பு தன்மை அதிகம் என்று.யார் மனிதனை மனிதனாய் மதிப்பவர்கள் என்று.

suvanappiriyan said...

//நான் இது பற்றி முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன், இருந்தாலும் இன்று ஒரு சவால். உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். எதிர் குரூப் அவ்வாறு செய்யத் தயாரா??? பார்த்துவிடுவோம் யாருக்கு சகிப்பு தன்மை அதிகம் என்று.யார் மனிதனை மனிதனாய் மதிப்பவர்கள் என்று.//

சகோ சிராஜின் சவாலை ஏற்க யாரும் தயாரா?

அப்துல் ஹகீம் said...

நபி பெருமானாருக்கு வலிப்பு நோய் இருந்ததால்தான் அவர் தன்னிடம் ஜிப்ரீல் வந்து பேசினார் என்று நினைத்துகொண்டார் என்று கூறுகிறார்களே.

அதனை பற்றி விளக்கி உண்மையிலேயே ஜிப்ரீல்தான் வந்து நபிபெருமானாரிடம் பேசினார் என்று விளக்கும்படி கேட்டுகொள்கிறேன்
நன்றி

ரஹ்மான் said...

சகோ சிராஜ்

எதற்கு இந்த சவால்? தவ்ஹீத் ஜமாத்துக்காரர்கள் சுன்னத் வல்ஜமாத்துடன் ஒட்டு உறவு வைத்துகொள்ளக்கூடாது என்று மேடையிலேயே பிஜே அறிவித்துள்ளார்.

காதியானிகளோடு யாரும் பழகக்கூடாது என்று இரண்டு பேருமே அறிவித்திருக்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது இவர்களோடு நீங்கள் மண உறவு வைத்துகொள்வீர்களா? அல்லது வெறுமே டீ குடிப்பதோடு சரியா?

அன்புடன் நான் said...

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சார்வாகன் said...

ஸலாம் நண்பர் சுவனப் பிரியன்
அருமையான பதிவு.
ஆனால் மிக பெரிய ஆபத்து!!!!!!!!!.
இப்படி தாமதமாக பதிவு இட்டு பலரின் வழ்வையே சிக்க்லாக்கிவிட்டீர்கள்!!!!!!!!!!!.

யோகா பற்றி உண்மை தெரியாமல் சகோ ஹைதர் இப்படி பதிவும் இட்டு அனைவருக்கும் விள்க்கிய போதே சொல்லி இருக்க்லாம்
யோகாசனமும் இஸ்லாமிய தொழுகையும் ஒர் ஒப்பாய்வு.பகுதி-1
http://valaiyukam.blogspot.com/2011/08/blog-post_14.html
***********8
என்ன செய்வது வெள்ளைக்காரன் சொன்னால் சரியாக இருக்கும் என்ற உங்களின் கருத்தே சரி!!!!!!!!!!!!!!!!!!1.

முதலில் சகோ ஹைதருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குங்கள் அவசரம்.இந்த இரு பதிவுகளை சரியாக கலந்து பிரச்சினையின்றி சுமுகமாக் ஒரு பதிவிட ஒரு வேண்டுகோள். அவ்சரம்!!!!!!!!!!!!!!!!!!!Act Fast!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

suvanappiriyan said...

அப்துல் ஹக்கீம் என்ற புனைப் பெயரில் ஒளிந்துள்ளவருக்கு!

//நபி பெருமானாருக்கு வலிப்பு நோய் இருந்ததால்தான் அவர் தன்னிடம் ஜிப்ரீல் வந்து பேசினார் என்று நினைத்துகொண்டார் என்று கூறுகிறார்களே.//

யார் கூறுகிறார்கள்?

இஸ்லாமிய எதிரிகள் அதன் கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கடைசியாக எடுத்த ஆயதமே முகமது நபிக்கு வலிப்பு நோய் இருந்ததாக கதை கட்டி விட்டது. முகமது நபிக்கு தலையில் எத்தனை நரை முடிகள் இருந்தது என்பதைக் கூட அவரது தோழர்கள் ஹதீதுகளில் குறித்து வைத்துள்ளனர். அது பொல் முகமது நபி எப்பொழுதெல்லாம் நோய் வாய் பட்டார்களோ அவை அனைத்தும் தேதி வாரியாக ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு முறை கூட முகமது நபிக்கு வலிப்பு நோய் இருந்த ஒரு குறிப்பையும் காணவில்லை. அன்றைய இஸ்லாமிய எதிரிகள் கூட இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்தவில்லை. வழக்கமான திசை திருப்பும் வேலையே வலிப்பு நோய் என்பது. இமை எல்லாம தாண்டி இஸ்லாம் இன்று வெகு தூரத்துக்கு வந்து விட்டது.

//அதனை பற்றி விளக்கி உண்மையிலேயே ஜிப்ரீல்தான் வந்து நபிபெருமானாரிடம் பேசினார் என்று விளக்கும்படி கேட்டுகொள்கிறேன்
நன்றி//

இதனை ஒரு பின்னூட்டத்தில் விளக்க முடியாது. தனி பதிவாகவே இடுகிறேன். முன்பும் இட்டிருக்கிறேன்.

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//3.எல்ல இனத்தவரை குறித்தும் மதத்தினரை குறித்தும் நல்லேண்ணம் கொள்வது எங்கு நல்ல விஷயங்கள் கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்வது.//

அந்த பதிவில் வரும் இந்த ஒற்றை வரியே உங்களின் பல கேள்விகளுக்கு விடையாக உள்ளது. இந்த பதிவும் யோகா முழுவதும் உடல் நலத்துக்கு தீங்கு என்றும் சொல்லவில்லை.

suvanappiriyan said...

திரு சி கருணாகரசு!

//வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள். நமது தமிழகம் சீரும் சிறப்பும் பெற்று பல துறைகளிலும் முன்னேற எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறையை பிரார்த்திக்கிறேன்.

ஷர்புதீன் said...

ஹ்ம்...

Anonymous said...

நல்ல வேளை.பிளாக்கில் அட்ரஸ் எல்லாம் தரவேண்டும் என்று கூகிள் நிபந்தனை விதிக்கவில்லை. மாற்றுக்கருத்து சொல்பவன் வீட்டுக்கு குண்டு வைத்துவிடுவீர்கள் போல.அதான் ஜிகாத் என்று புத்தகத்தில் சொல்லியிருக்கிறதே! அதை சப்போர்ட்டுக்கு வைத்துக

கால்கரி சிவா said...

என் மனைவியின் தாத்தாவிற்கு வயது 90. சிறுவயது முதல் யோகசாசனம் செய்கிறார். இன்றும் அதிகாலையில் தலைக்கீழாக நிற்கிறார். வேண்டிய அளவிற்கு இனிப்புகளை சாப்பிடுகிறார். எல்லா இடங்களுக்கும் பஸ்ஸிலோ நடந்தோ செல்கிறார். சில தினங்களுக்கு முன் மதுரையில் இவர் பஸ்ஸிலிருந்து இறங்கும் போது பஸ் கிளம்பி விட்டது இவரும் இவருடன் சேர்ந்து ஒரு சிறுவனும் விழுந்து விட்டான். இவருக்கு சிறு சிறாய்ப்புகள் சிறுவனுக்கு கை எலும்பு முறிவு. யோகாவிற்கும் விபத்திற்கும் சம்பந்தமில்லை.

மேலே ஒருவர் சொன்னது போல் சூரிய உதயத்தில் உடற்பயிற்சி என்றால் ஏற்றுக் கொள்வீர்கள் போலிருக்கு ம்ம்ம்ம்ம்ம்

suvanappiriyan said...

திரு கால்கரி சிவா!

ஓ........இணையத்தில் சந்தித்து வெகு நாட்களாகிறதே! நான் இன்னும சவுதியில் தான் பணி புரிந்து வருகிறேன். நீங்கள் தற்போது கனடாவிலா அல்லது இந்தியாவிலா? உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

//இவருக்கு சிறு சிறாய்ப்புகள் சிறுவனுக்கு கை எலும்பு முறிவு. யோகாவிற்கும் விபத்திற்கும் சம்பந்தமில்லை.//

யோகாவினால் நல்லதும் உள்ளது. அதே சமயம் சில சமயம் சூரிய நமஸ்காரம் போல கண்ணுக்கு கேடு தரும் ஒரு சில பயிற்சிகளும் உண்டு. அதைத்தான் காணொளிகளும் விளக்குகின்றன. யோகா உங்களுக்கு பிடித்திருந்து அதை முறையாக பயின்றால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் என்னையும் அவகியம் யோகா பயில வேண்டும் என்று நிர்பந்திப்பதும், பள்ளி குழந்தைகளை கட்டாயமாக சூரிய நமஸ்காரம் செய்ய வைப்பதும்தான் இங்கு விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

//கருப்பு மையை பாபாராம்தேவ் மீது ஊற்றியவர் ஒருகால் யோக கலையின் முலம் பாதிப்படைந்தவராகக் கூட இருக்கலாம். :-) //

இல்லை
கருப்பு மையை ஊற்றியவர் காம்ரான் சித்திக்கி என்ற வலிப்புநோய்காரரின்சீடர்

கபிலன் said...

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"

என்பது தங்கள் கட்டுரைக்கு சாலப் பொருந்தும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சூரிய நமஸ்காரமென்பது காலை இளம் கதிரவனைப் பார்த்தல், காலைக் கதிரவனின் ஒளியால் கண்ணுக்குத் தீங்கில்லை,அதுவும் சில செக்கன்கள் தான். இதனால் பெரும் பகுதியினருக்குப் பாதிப்பில்லை. பாதிப்பிருந்தால் தவிர்க்கலாம். வயிற்றுப் புண் இருப்பவர் விரதத்தைத் தவிர்ப்பது போல், ஆனால் எதையும் எல்லோருக்கும் கட்டாயமாக்குவதைத் தவிர்க்கவேண்டும்.
அத்துடன் விருப்பமும் முக்கியம்.
என் இளமைக்காலத்தின் வீடுகளில் பார்த்துள்ளேன். பிறந்த சில நாட்களேயான மழலைகளை எண்ணெய் பூசி ,தடுக்கில் கிடத்தி இளம் வெய்யில் படும் இடத்தில் ஒரு அரை மணி நேரமாவது கிடக்க விடுவார்கள். அப்போது
மழலைகள் மெல்ல மெல்ல கண்ணைத் திறந்து சூரிய ஒளியை பார்த்து ,கண்னூடு உள்ளெடுப்பதை அவதானித்துள்ளேன்.
அப்படி நான் பார்த்த என் உறவுக் குழந்தைகள் பல இப்போ 40- 45 வயதாக உள்ளார்கள். அவர்கள் இன்னும் கண்ணாடி கூட பாவிக்கத் தொடங்கவில்லை. அவர்கள் குழந்தைகள் நிழலில் வளந்தோர் 12 - 15 வயது , பாட்டி
வைத்தியம் அறியாதோர், கண்ணாடி போடுகிறார்கள்.
இங்கு சமீபகாலமாக என் மனைவிக்கு வைத்தியர், விற்றமின் டீ - கொடுத்துள்ளார். அப்போது நான் வைத்தியரிடம் கேட்டேன், இயற்கையாக இக்குறைபாட்டை நிவிர்த்தி செய்ய வழி கூறும்படி, அவர்- என்மனைவியை தினமும் அரை மணிநேரமாவது சூரிய ஒளியில் இருக்கும் படி கூறினார். அப்போ து ஒரு சில செக்கன்கள் சூரியனைப் பார்ப்பதால் சிக்கல் வருமென நான் கருதவில்லை.
எதுவும் அளவோடு இருப்பது நலமே!
வியாதிகளுக்கு மருந்துகள் உள்ளன, அம்மருந்துகள் பல வகையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே பாவனைக்கு வருகிறது. அவற்றில் பக்கவிளைவுகள் என ஒரு பட்டியல் தருவார்கள். அவை இருந்தால் நிறுத்திவிடவேண்டும். ஆனால் அப் பக்க விளைவுகள் எல்லோருக்குமிருக்க வேண்டுமென்பதல்ல!
அது போல் யோகா, சூரிய நமஸ்காரம், நோன்பு போன்றவற்றால் ஒவ்வாமை இருந்தால் நிறுத்திவிட வேண்டியதே! ஆனால் நமக்கு ஒவ்வாமை இருப்பதால் இது உலகுக்கே ஒவ்வாதெனப் பரப்புரை செய்வது
அழகல்ல!
எனக்கு ஒரு நேரம் சாப்பிடவில்லையானால் தலையிடி வந்து வாந்தி எடுத்து அல்லலுறுவேன். நான் நோன்பு பற்றி சிந்திக்கமுடியுமா?
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கீழத்தேய விடயங்களை எப்போதும் கேள்விக்குரியதாக்குவதில் ஒரு அலாதியான மகிழ்ச்சி உள்ளவர்கள்.
இவர்கள் இப்படி கேள்விக்குரியதாக்கியபோதும்; வருடாவருடம் கேரளாவுக்கு இயற்கை வைத்தியம், யோகா வை நாடிச் செல்வோர் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
அதனால் எல்லாவற்றிலும் போலிகள் போல், இதிலும் போலிகள் அதிகரித்து விட்டது.தவறு எங்கேயுள்ளது.
யோகாவைச் சட்டமாகியது மிகப் பெரிய தவறு.

Anonymous said...

//உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். எதிர் குரூப் அவ்வாறு செய்யத் தயாரா??//
திரு சிராஜ்
அடேயப்பா பயங்கரமான சவால் தான். இந்துக்களாகிய நாங்கள் சதி வெறி பிடித்தவர்கள் தான் ஒத்து கொள்கிறேன். நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். இந்துவாகிய நான், மத, சாதி வெறி இல்லாத உலக உத்தமர்களாகிய உங்கள் இறை இல்லத்தை உள்ளே வந்து பார்க்க விரும்புகிறேன் அதாவது உங்கள் காபாவில் நான் இந்துவாகவே வர விரும்புகிறேன் மத வெறியும் சாதி வெறியும் இல்லாத நீங்கள் என்னை அங்கே அழைத்து செல்ல தயாரா. அல்லாவை வந்து வணங்க எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. ஆனால் இந்துவாகவே வருவேன் எப்படி சம்மதமா

அனானிமஸ் said...

!அல்லாவை வந்து வணங்க எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. ஆனால் இந்துவாகவே வருவேன் எப்படி சம்மதமா!

மகன்:
"எதிர்த்த வீட்டுக்காரனையும் அப்பா என்பேன்.
பக்கத்து வீட்டுக்காரனையும் அப்பா என்பேன்.
உன்னை கல்யாணம் பண்ணியவரையும் அப்பா என்பேன்.

எனக்கு நளபாக சாதம் சமைத்து அதனை குழைத்து அன்போடு உன் கையால் பாசமாக உணவு பரிமாறு என்னை பெற்ற தாயே"

அம்மா:
"இனிமேல் வீட்டு வாசப்படி மிதிச்சே விளக்குமாத்துக்கட்டை பிஞ்சிரும் மவனே. வெளியே போடா. இனி உனக்கு அனுமதி இல்லை என் வீட்டில். உன்னை என் வீட்டில் சேர்த்துக்க சம்மதம் இல்லை."

suvanappiriyan said...

//இந்துவாகிய நான், மத, சாதி வெறி இல்லாத உலக உத்தமர்களாகிய உங்கள் இறை இல்லத்தை உள்ளே வந்து பார்க்க விரும்புகிறேன் அதாவது உங்கள் காபாவில் நான் இந்துவாகவே வர விரும்புகிறேன் மத வெறியும் சாதி வெறியும் இல்லாத நீங்கள் என்னை அங்கே அழைத்து செல்ல தயாரா. அல்லாவை வந்து வணங்க எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. ஆனால் இந்துவாகவே வருவேன் எப்படி சம்மதமா//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது தானே நமது முன்னோர்களின் பழக்கம்! ஆயிரம் கடவுள்களை நீங்களாகவே உண்டாக்கிக் கொண்டு அதற்கு இந்து மதம் என்ற புதிய பெயரையும் நீங்களாகவே சூட்டிக் கொண்டு( இந்த பெயர் கூட மொகலாயர்களும், பிரிட்டிஷாரும் வைத்ததாக அறிக்கை கூறுகிறது) வந்தால் அது யார் செய்த தவறு? நம் முன்னொர்களின் மார்க்கமான ஏக இறைவனை மட்டும் வணங்குவதாக உறுதி கொடுத்து அந்த இறைவனால் கடைசியாக அனுப்பப்பட்ட தூதர் முகமது நபி என்ற உறுதியையும் எனக்கு தந்தால் நானே உங்களை கஃபாவுக்குள் கூட்டிச் செல்கிறேன். சம்மதமா?

suvanappiriyan said...

1) தொடரும் வன்கொடுமைகள் பற்றி-

1995 முதல் 2007 வரை எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட 4,41.424 வழக்குகளில்...

கொலைகள் : 9593

படுகாயம் ஏற்படுத்திய தாக்குதல்கள் : 61168

வன்புணர்ச்சிகள் : 20865

சூறையாடல் : 4699

ஆள்கடத்தல் : 4484

தீண்டாமை சம்பந்தமான

வழக்குகள் : 10512

(என்.சி.ஆர்.பி. இந்தியாவில் குற்றச்செயல்கள் 1995-2007, புதுதில்லி 1996-2008)


2) வெளிவராத வன்கொடுமைகளுக்கு காரணங்கள் பற்றி…
• வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்ய காவல்துறையினர் தயங்குகின்றனர்
• காவல்துறையினரிடம் நிலவும் சாதி பாகுபாட்டு உணர்வும், ஊழலும்
• தங்களது அதிகார எல்லையில் குறை வான குற்றங்கள் நடப்பதாக காட்டுவது.-
• வழக்கு மெதுவாக நடப்பதும்-குறைவான தண்டனையும்
(தேசிய எஸ்சி ஆணையம்-2004-05 அறிக்கை)


3) சட்டம் சொல்வதென்ன?
• வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி. தான் விசாரிக்க வேண்டும்.
• 30 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும்
• முன் ஜாமீன் வழங்க தடை விதிக்கப்பட் டுள்ளது (2008 உசi டுது 4779).
• மத்தியப்பிரதேச மாநில அரசு எதிர் ராம்கிரிஷன் பலோத்தியா மற்றும் ஒருவர் வழக்கில்(1995) இச்சட்டத்தின் 18 வது பிரிவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒரு வருக்கு முன் ஜாமீன் வழங்க இந்தப்பிரிவு கட்டுப்படுத்துகிறது (நாடாளுமன்றக்குழு 2004-2005)
• 2004 ல் குஜராத் மாநிலத்தில் பதிவு செய் யப்பட்ட 400 வழக்குகளில் முன் ஜாமீன் வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதும்(320)80சதவீதம்முன்ஜாமீன்வழங்கப் பட்டுள்ளது. (ஃபிரண்ட் லைன், 4.12.2009)
• பெண் அரசு ஊழியரை சாதிப்பெயரை சொல்லி திட்டி, அடித்த ஓர் வழக்கில், புகார் தாரரை அவமானப்படுத்தியதுடன், அரசு நிர்வாகப்பொறுப்பிலிருக்கும் அதிகாரிகளை யும் திட்டினார் என்று தண்டனை வழங்கப் பட்டது. 2010 ஊசi டுது 948(ர்ஞ)

ஆனால் என்ன நடக்கிறது..?
• வன்கொடுமை புகார் அளித்தால் காவல் துறை உடனடியாக பதிவு செய்வதில்லை.
• எதிர் வழக்கு..
• கட்டப்பஞ்சாயத்து …
• காலம் கடத்துதல்....
• மாவட்ட விழிக்கண் குழுக்கூட்டத்தில் மேல் நடவடிக்கையைக் கைவிட முடிவு செய்வது.
-thanks
http://www.maattru.com/2012/01/blog-post_19.html

suvanappiriyan said...

திரு யோகன் பாரிஸ்!

//அதனால் எல்லாவற்றிலும் போலிகள் போல், இதிலும் போலிகள் அதிகரித்து விட்டது.தவறு எங்கேயுள்ளது.
யோகாவைச் சட்டமாகியது மிகப் பெரிய தவறு.//

இதைத்தான் நானும் சொல்கிறேன். உங்களை நான் வந்து கட்டாயம் ரம்ஜானில் நோன்பு பிடிக்க வேண்டும் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?

யோகாவில் நன்மையும் உள்ளதை நான் மறுக்கவில்லை. சூரிய நமஸ்காரம் என்பது மத ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் விமரிசனத்துக்குள்ளானதை தெளிவுபடுத்தவே இந்த பதிவு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

http://viduthalaidaily.blogspot.com/2011/09/blog-post_14.html

வாழும் கலை ரவி சங்கரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

சுழியம் said...

சுவனப் பிரியன்,

மத வெறி வந்தால் எப்படி எப்படி எல்லாம் எழுதுவார்கள் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

//இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்காத முஸ்லிம்களை இங்கு கல்வி அமைச்சகம் சூரிய நமஸ்காரத்தில் ஈடுபடுத்துவதுதான் பிரச்னையே!//

இப்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சகம் சொல்லவில்லை. விரும்புபவர்கள் செய்யலாம் என்று அனுமதி அளித்து உள்ளது. ஆனால், மொகலாயக் காலக் கட்டத்தில் நடந்தது போலக் கட்டாயப்படுத்துதல் இருக்கும் என்று நீங்களாகக் கதை கட்டி விடுகிறீர்கள்.

வஹாபி வெறியர்கள் சொல்லுவது போல காஃபிர்களின் பழக்கங்கள் மோசமான பழக்கங்கள் இல்லை என்று ஸூரிய நமசுகாரம் செய்து பலன் அடைந்த முஸ்லிம்கள் அறிந்து விடக் கூடாது என்று நீங்கள் முயல்வது தெரிகிறது.

//எனது தாத்தா காலையில் எழுந்து பள்ளிக்கு சென்று தொழுவதும் அல்லாமல் தினமும் வீட்டிலேயே யோகா பயிற்சியை எடுப்பார். ...ஆரோக்கியமாக இருந்தவர் திடீரென்று ஒருநாள் தண்ணீரில் வழுக்கி விழுந்தவர் பிறகு எழும்பவே இல்லை. இரண்டு நாளில் மரணமடைந்து விட்டார். நன்றாக இருந்தவர் ஒரு சிறிய விபத்தில் இறந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒருக்கால் அவர் தினமும் செய்த யோகா அவரது மரணத்தை சிக்கிரமே கொண்டு வந்திருக்கலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன்.)//

வயதானவர்கள் வழுக்கி விழுந்தால் படுத்த படுக்கையாகி மாதக்கணக்கில், பல சமயங்களில் வருடக் கணக்கில் தனக்கும் குடும்பத்தாருக்கும் சொல்லவொண்ணா கஷ்டங்களுடன் இருந்து, பின் மறைவார்கள்.

யோகாசனம் செய்து வந்த உங்கள் தாத்தா யாருக்கும் தொந்தரவு தராமல் உடலை உகுத்து உள்ளார். இதற்கு நிச்சயம் யோகாசனம் உதவி இருக்கும்.

நல்லதாக இருந்தாலும் காஃபிர்களின் வழக்கத்தைப் பின்பற்றாமல் படுக்கையில் மலஜலங்களுடன் துன்புற்றுத்தான் சாவேன் என்று இருப்பவர்களை யாரும் வற்புறுத்தப் போவதில்லை.

நல்ல வழக்கங்கள் எங்கு இருந்தாலும் பின்பற்றலாம் என்று காட்டிய உங்கள் தாத்தா தனது அடுத்த பிறவியில் மிகச் சிறந்த மனிதராகப் பிறந்திருப்பார். பின்பற்ற வேண்டிய இஸ்லாமியர் அவர்.

.

Anonymous said...

//ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது தானே நமது முன்னோர்களின் பழக்கம்! ஆயிரம் கடவுள்களை நீங்களாகவே உண்டாக்கிக் கொண்டு அதற்கு இந்து மதம் என்ற புதிய பெயரையும் நீங்களாகவே சூட்டிக் கொண்டு( இந்த பெயர் கூட மொகலாயர்களும், பிரிட்டிஷாரும் வைத்ததாக அறிக்கை கூறுகிறது) வந்தால் அது யார் செய்த தவறு? நம் முன்னொர்களின் மார்க்கமான ஏக இறைவனை மட்டும் வணங்குவதாக உறுதி கொடுத்து அந்த இறைவனால் கடைசியாக அனுப்பப்பட்ட தூதர் முகமது நபி என்ற உறுதியையும் எனக்கு தந்தால் நானே உங்களை கஃபாவுக்குள் கூட்டிச் செல்கிறேன். சம்மதமா?//

நன்றி, பிற மதத்தவனை உங்கள் இடத்தில் அனுமதிக்க முடியாது என்று ஒத்து கொண்டதற்கு. பிறகு எந்த மூஞ்சியை வைத்துகொண்டு இந்துக்கள் ஜாதி பாகுபாடு காட்டுகிறார்கள் என்று எங்களை கை காட்டுகிறீர்கள். இந்துக்களின் ஜாதி வெறிக்கும் உங்களின் மத வெறிக்கும் என்ன வித்தியாசம். தாழ்ந்த ஜாதியார் கோவிலுக்கும் வரகூடாது என்று எழுதி இருப்பதற்கும். பிற மதத்தவன் பள்ளிவாசலுக்குள் வரகூடாது என்று எழுதபடுவதற்கும் என்ன வித்தியாசம். என்ன ம.. ட்டி புரட்சிய உண்டாக்கி விட்டீர்கள். பிறரை பார்த்து குறை கூறி கொண்டு திரிகிறீர்கள். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புகூடதான் இஸ்லாம் என்ற ஒன்று இல்லை. பிற மத புத்தகங்களையும் வேதங்களையும் காப்பி அடித்து இஸ்லாம் என்ற ஒன்றை உருவாக்கவில்லையா. எதற்கும் தொடக்கம் இருக்கும் அல்லவா. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது என் முன்னோர்களின் பழக்கம் தான். ஆனால் அந்த முன்னோர்கள் முகமது என்ற இறை தூதர் என்று சொல்லிக்கொண்ட மனிதரின் வழிகாட்டுதல் எதையும் பின்பற்றவில்லையே.உங்கள் முன்னோர்களே ஓர் இறைவனை பற்றி கூறி இருக்கும்போது பிறகு எதற்கு எங்கோ பாலைவனத்தில் வந்த ஒரு அரபு வியாபாரியை நீங்கள் பின்பற்றி கொண்டு இருக்கிறீர்கள். முன்னோர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை பற்றி என்ன கூறி இருக்கிறார்கள் என்பதை தேடி அறிந்து அதை பின்பற்றவேண்டியது தானே. உங்கள் சொந்த நாட்டிலேயே உங்களுக்கு தேவையானது இருக்கும்போது ஏன் அரபு நாட்டுக்காரனின் காலை கழுவிக்கொண்டு இருக்கிறீர்கள். அந்த அரபு வியாபாரியின் கருத்துகளை புறக்கணித்து விட்டு உங்கள் சொந்த நாட்டின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் தேவன் கருத்துக்களை நீங்கள் பின்பற்ற தாயாரா? (இந்த தத்துவத்தை தான் மீள சொல்ல வந்தவர்தான் முஹமது என்று தயவு செய்து உளறிக்கொண்டு இருக்காதீர்கள் ) //மகன்: "எதிர்த்த வீட்டுக்காரனையும் அப்பா என்பேன்............................அம்மா: "இனிமேல் வீட்டு வாசப்படி மிதிச்சே விளக்குமாத்துக்கட்டை பிஞ்சிரும் மவனே)// அனானி... எல்லா குழந்தைகளுக்கும் அப்பன் யார் என்று தாய் ஒருவரை காட்டி இருப்பார். எத்தனை பேரை அப்பன் என்று அழைத்தாலும் சொந்த அப்பனை, தாய் சொல்லிய அப்பனை யாருக்கும் தெரியாமல் இருக்காது. என் தாய் ஒருவனை அப்பன் என்று சொல்லி இருக்க, எங்கோ தெருவில் செல்லும் ஒருவன் வந்து 'அவர் உன் அப்பன் இல்லை, வேறு ஒருவர்தான் உன் அப்பன் என்று' சொன்னால் அதை கேட்டு ஏற்று கொள்வதற்கு இங்கே யாரும் முறை தவறி பிறந்தவர்கள் கிடையாது. முறை தவறி பிறந்தவர்களுக்கு தான் தன் சொந்த தகப்பனை பிறர் சொல்லி அறிந்து கொள்ளும் நிலை வரும். பிறகு அவர்தான் தகப்பன் என்று ஊர் ஊராக விளக்க கூட்டம் நடத்த வேண்டிய தேவையும் வரும்

suvanappiriyan said...

அனானி!

//நன்றி, பிற மதத்தவனை உங்கள் இடத்தில் அனுமதிக்க முடியாது என்று ஒத்து கொண்டதற்கு. பிறகு எந்த மூஞ்சியை வைத்துகொண்டு இந்துக்கள் ஜாதி பாகுபாடு காட்டுகிறார்கள் என்று எங்களை கை காட்டுகிறீர்கள். இந்துக்களின் ஜாதி வெறிக்கும் உங்களின் மத வெறிக்கும் என்ன வித்தியாசம். தாழ்ந்த ஜாதியார் கோவிலுக்கும் வரகூடாது என்று எழுதி இருப்பதற்கும். பிற மதத்தவன் பள்ளிவாசலுக்குள் வரகூடாது என்று எழுதபடுவதற்கும் என்ன வித்தியாசம்.//

இவ்வளவு தெளிவாக எழுதி விட்டு என்ன வித்தியாசம் என்று என்னிடமே கேட்கிறீர்கள்! ஐயா....கோவிலுக்குள் விட மாட்டேன் என்று சொல்வது ஒரே மதத்தில் உள்ள இரு பிரிவுகள். இதற்கும் கஃபாவில் முஸ்லிம்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்க்கும் சத்தியமாக உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா? :-)

//ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புகூடதான் இஸ்லாம் என்ற ஒன்று இல்லை. பிற மத புத்தகங்களையும் வேதங்களையும் காப்பி அடித்து இஸ்லாம் என்ற ஒன்றை உருவாக்கவில்லையா. எதற்கும் தொடக்கம் இருக்கும் அல்லவா//

இவ்வளவுதானா இஸலாம் பற்றிய உங்கள் அறிவு? முதல் மனிதர் ஆதாம் முதல் கடைசி நபி முகமது வரை அனைவரும் இஸ்லாமியரகளே! அனைவரும் ஏக இறைவனையே போதித்தனர். நம்மொழிக்கும் தூதர் வந்துள்ளார். அவர் திருவள்ளுவராகக் கூட இருக்கலாம்.

//உங்கள் சொந்த நாட்டிலேயே உங்களுக்கு தேவையானது இருக்கும்போது ஏன் அரபு நாட்டுக்காரனின் காலை கழுவிக்கொண்டு இருக்கிறீர்கள்.//

என் நாட்டில் இந்த நூற்றாண்டில்தான் மனிதனை மலம் திங்க வைத்ததும், பாப்பாரப் பட்டி கீரிப்பட்டியில் தலித்கள் கொடுமைப் படுத்தப் படுவதும், இரட்டை டம்ளர் முறையில் தலித்களை ஒதுக்கவதும் தினமும் நடந்து வருகிறது. இன்று வரை அதனை உங்களால் தடுக்க முடிந்ததா? அந்த மதத்திலேயே இருந்து திருத்தப் பார்த்த பெரியாரையே இன்று சிலை வைதது வணங்க ஆரம்பித்து விட்டீர்களே! இன்னுமா நம்பிக்கை.

//அந்த அரபு வியாபாரியின் கருத்துகளை புறக்கணித்து விட்டு உங்கள் சொந்த நாட்டின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் தேவன் கருத்துக்களை நீங்கள் பின்பற்ற தாயாரா? (இந்த தத்துவத்தை தான் மீள சொல்ல வந்தவர்தான் முஹமது என்று தயவு செய்து உளறிக்கொண்டு இருக்காதீர்கள் //)

நான் சொல்ல வேண்டிய பதிலை நீங்களே சொல்லி விட்டீர்கள்.

suvanappiriyan said...

சுழியம்!

//நல்ல வழக்கங்கள் எங்கு இருந்தாலும் பின்பற்றலாம் என்று காட்டிய உங்கள் தாத்தா தனது அடுத்த பிறவியில் மிகச் சிறந்த மனிதராகப் பிறந்திருப்பார். பின்பற்ற வேண்டிய இஸ்லாமியர் அவர்.//

யோகாவில் நல்ல விஷயங்களும் உள்ளது. உடலுக்கு உபாதை தரக் கூடிய பயிற்சிகளும் உள்ளது என்பதையே பதிவுகளும் யுடியூப்களும் நமக்கு சொல்கின்றன. மறுபிறவி என்பது அறிவியல் பூர்வமாக தவறென்று ஒத்துக் கொள்ளப்பட்டது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

http://www.indg.in/health/lifestyle-disorders/b9abc2bb0bbfbaf-ba8baebb8bcdb95bbebb0baebcd-b9abc2bb0bbfbaf-bb5ba3b95bcdb95baebcd

Nellai Premkumar said...

//இவ்வளவு தெளிவாக எழுதி விட்டு என்ன வித்தியாசம் என்று என்னிடமே கேட்கிறீர்கள்! ஐயா....கோவிலுக்குள் விட மாட்டேன் என்று சொல்வது ஒரே மதத்தில் உள்ள இரு பிரிவுகள்.//
ஒரே மதத்தில் உள்ள பிரிவினை நான் மறுக்கவில்லையே, ஒரே மதத்தில் இருந்துகொண்டே சாதியால் பிரிப்பதை மிகவும் கேவலம் என்று ஒத்து கொள்கிறேன், அதே நேரத்தில் மதத்தினால் பிரிவினை பாராட்டுவது சரிதான் என்று நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா என்பது தான் எனது கேள்வி //இதற்கும் கஃபாவில் முஸ்லிம்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்க்கும் சத்தியமாக உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா? :-)//
எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அது மத வெறி, என்பதாக மட்டுமே தெரிகிறது. உங்களுக்கு என்ன தெரிகிறது.

//இவ்வளவுதானா இஸலாம் பற்றிய உங்கள் அறிவு? முதல் மனிதர் ஆதாம் முதல் கடைசி நபி முகமது வரை அனைவரும் இஸ்லாமியரகளே! அனைவரும் ஏக இறைவனையே போதித்தனர். நம்மொழிக்கும் தூதர் வந்துள்ளார். அவர் திருவள்ளுவராகக் கூட இருக்கலாம்.//
அப்படியா ! அப்படியானால் நாங்களும் சொல்வோமே முதல் மனிதர் ஆதாம் முதல் கடைசி நபி முகமது வரை அனைவரும் இந்துக்களே அவர்கள் அனைவரும் இந்து சமயத்தையே போதிக்க வந்தனர், அவர்களில் ஒரு தூதர் தான் திருவள்ளுவரும். இந்த கருத்தை இன்னும் பல உதாரணங்கள் மேற்கோள்கள். அங்கே இருக்கிறது ஆதாரம் இங்கே இந்த புத்தகத்தில் இதை தான் கூறி இருக்கிறது என்று பரவலாக பரப்ப ஆரம்பித்து விட்டால் போதுமே அபிரகாமும் ஏசுவும் கூட இந்துக்கள் ஆகி விடுவார்கள்.

//என் நாட்டில் இந்த நூற்றாண்டில்தான் மனிதனை மலம் திங்க வைத்ததும், பாப்பாரப் பட்டி கீரிப்பட்டியில் தலித்கள் கொடுமைப் படுத்தப் படுவதும், இரட்டை டம்ளர் முறையில் தலித்களை ஒதுக்கவதும் தினமும் நடந்து வருகிறது. இன்று வரை அதனை உங்களால் தடுக்க முடிந்ததா? அந்த மதத்திலேயே இருந்து திருத்தப் பார்த்த பெரியாரையே இன்று சிலை வைதது வணங்க ஆரம்பித்து விட்டீர்களே! இன்னுமா நம்பிக்கை.//
பிறரை நோக்கி ஒரு விரலால் சுட்டி கட்டும்போது உங்களை மூன்று விரல்கள் சுட்டி காட்டுவதை மறக்க வேண்டாம் சுவனப்ரியன். ஏன் நீங்கள் இந்த நாட்டில் பிறக்கவில்லையா? அல்லது உங்கள் முன்னோர்கள் இந்த நாட்டில் பிறக்கவில்லையா? என்னை நோக்கி சாதி வெறியை நீ ஏன் தடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டும் நீங்களும் உங்கள் கூட்டமும் அதே கடமை உங்களுக்கும் இருக்கிறது என்பதை மறந்தது ஏன் உங்களுக்கு அரேபியனின் மதம் பிடித்திருக்கிறது என்றால் அதை உங்கள் வரையில் வைத்துகொள்வது தான் நல்லது. ஏன் என்றால் எந்த சிறப்பும் சிறந்த தத்துவங்களோ உங்கள் மார்க்கத்தில் இல்லை