ரமலான் துணுக்குகள்...(6)
இவர் பெயர் அஜய் குமார்...
மலப்புறம் மாவட்டத்தில் வற்றலூர் கிராமத்தில் அமைந்துள்ளது "உமறுல் பாறூக் மஸ்ஜித்" குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் அதிகமுள்ள வற்றலூர் ஜமாஅத் நிர்வாகம் சார்பில் மஸ்ஜித் இமாம் சம்பளம் உட்பட பெரும் சிரமத்திற்கு மத்தியில் சமாளித்து வருகின்றனர்..
போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பல வருடங்களாக மஸ்ஜித் கட்டிடம் புனரமைப்பு மற்றும் சுவர்கள் வர்ணம் பூச முடியவில்லை...
வற்றலூர் கிராமத்தைச் சேர்ந்த சூரிய நாராயணன்.. கத்தாரில் பணியாற்றி வருபவர் விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்திருந்தார்..
ரமலான் மாதம் நெருங்கிய நிலையில் அருகாமை இடங்களில் உள்ள மசூதிகள் அனைத்தும் பெயிண்ட் அடித்து புத்தம் புதிதாக காட்சி தரும் நிலையில், தனது ஊரில் உள்ள மஸ்ஜித் பொலிவிழந்து காணப்படுவதை கண்டு வருந்திய சூரிய நாராயணன் பள்ளிவாசல் இமாமை அணுகி தனது செலவில் மசூதிக்கு பெயிண்ட் அடித்து தரும் விருப்பத்தை தெரிவித்தார்..
இமாம் மசூதி நிர்வாகிகளிடம் சூரிய நாராயணன் விருப்பத்தை தெரிவிக்க, நிர்வாகிகள் ஆலோசனை செய்து சம்மதம் தெரிவித்தனர்.
சூரிய நாராயணனே பெயிண்டர்களை ஏற்பாடு செய்து முழு வேகத்தில் பெயிண்ட் அடிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று, பல வருடங்களுக்கு பிறகு "உமருல் பாறூக் மஸ்ஜித்" சுவர்கள் வண்ணம் தீட்டப்பட்டு அழகானது..
பெயிண்ட் பணி பூர்த்தியாகும் முன்பு சூரிய நாராயணனுக்கு கத்தார் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட, மீதமுள்ள பணிகளை தனது சகோதரர் அஜய் குமாரிடம் ஒப்படைத்து கத்தார் பயணித்தார்...
சூரிய நாராயணன் உபயத்தில்
அஜய் குமார்
மேற்பார்வையில் ரமலானுக்கு இரண்டு தினங்கள் முன்பு மஸ்ஜித் சுவர்கள் முழுவதும் பல
வண்ணங்களில் பொலிவானது...
இது சூரிய
நாராயணன்கள் சூழ் உலகு
1 comment:
தினமணியில் வந்ததுஎன்று நினைக்கிறேன்.
ஈவது விலக்கேல் என்பது ஔவைபாட்டியின் அமுத மொழி.
யாவருக்கும் ஈமின் அவனிவன் என்றன்மின்-திருமூலா்
------------------------------------------------------------
நல்ல இந்து.நல்ல வெகுளி இந்து . ஏதோ உதவிட நினைத்துள்ளாா்.
ஈசன் ஃஇந்திய கடவுள் அவரது நற்குணத்தை தொண்டை சேவையை அங்கிகரிக்கட்டும்.அங்கிகரிப்பாா்.
ஆனால் அரேபிய கடவுள் காபீர்களின் நல்ல காரியங்களை. . சிலை வணங்கிகளின்
.தொண்டுகளை அங்கீகரிக்க மாட்டாா். இது அஜய் க்கு தெரியாது.
காபீர்கள் . . ..ஆங்கிலத்தில் infidels .. . . எனற பதத்தின் வஞ்சகம் தெரியாமல் இப்படித்தான் கோடி கோடி இந்துக்கள் தங்களை அழிக்க செயல்படும் ஆலகால விஷத்திற்கு உதவி வருகின்றாா்கள்.
4 மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து வீடு திரும்பினாா்கள்.
வழியில் புலி ஒன்று செத்து . ..எலும்புக் கூடாய் கிடந்தது.
ஒருவன் என்னால் இதன் எலும்புகளை இணைத்து சரிசெய்ய முடியும் என்றான்.
ஒருவன் என்னால் இதற்கு சதை கொடுத்து இதை முன் போலவே ஆக்க முடியும் என்றான். அடுத்தவன் என்னால் அதற்கு உயிா் கொடுக்க முடியும் என்றான்.
4 வது மாணவன் நமக்கு இது தேவையற்ற காரியம்.நம் வழியேச் செல்வோம் என்று அறிவித்தான். 3 பேரும் கேட்கவில்லை. எனவே 4 வது மாணவர் விரைந்து அவ்விடத்தை விட்டு அகன்று ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டான். அவனவனுக்கு தெரிந்த கலையை சாதித்தாா்கள். புலி உயிா் பெற்று எழுந்தது. 3பேரையும் அடித்துக் கொன்றது.
------------------------------------------------------------------------------
இந்த கதைக்கும் அஜய்குமாருக்கும் சம்பந்தமில்லை.
Post a Comment