Followers

Thursday, May 04, 2023

பிரித்திவி ராஜ் - பஜனை கோஷ்டி மாமியின் பொய்யும் புரட்டும்


 

பிரித்திவி ராஜ் - பஜனை கோஷ்டி மாமியின் பொய்யும் புரட்டும்


வரலாற்றை பாடப்புத்தகளில் மட்டும் அல்ல சமூகத்தில் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து தளங்களிலும் இந்துத்துவா சக்திகள் தங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதி வருகிறார்கள்.

முகமது கோரிக்கும் பிரித்திவிராஜ் சவுகானுக்கும் நடக்கும் இறுதி போரில் பிரித்திவி தோற்கடிக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டு கொல்ல படுகிறான் என்பதே வரலாறு .

ஆனால் முகமது கோரியை பிரித்திவி ராஜ் தான் கொன்றான் என்று ஒரு சினிமா தனமாக ஒரு கதையை அவிழ்த்துவிட்டு இருக்கிறது இந்த பஜனை கோஷ்டி!!

கதாகாலட்சேபம் என்கிற பெயரில் வரலாற்றை மாற்றி கப்சா விடுவதே இந்த பஜனை கோஷ்டியின் குலத்தொழிலாகிவிட்டது.

பிரித்திவிராஜ் சவுகான் இறந்தது 1192 ல்
முகமது கோரி இறந்தது 1206 ல் .


பிரித்திவிராஜ் இறந்தது பதினான்ங்கு ஆண்டுகள் கழித்து தான் முகமது கோரி தனது சொந்த படை வீரர் ஒருவனால் கொல்லபடுகிறான் என்பதே வரலாறு.

மன்னர் ஆட்சியை குறிப்பாக இந்து மன்னர்களை glorify செய்யும் வேலையை இந்த சனாதனவாதிகள் மீண்டும் மீண்டும் புனைவு கதைகள் வழியே செய்து வருகிறார்கள். ஏன் என்றால் மன்னாராட்சியில் தான் சனாதனம் தலைத்தோங்கியது, கொண்டாடப்பட்டது. மனிதர்களிடையே நால் வர்ண ஏற்ற தாழ்வு வலுவாக நிலை நிறுத்தப்பட்டது.

பொய்யை மட்டுமே முதலீடாக வைத்து கதாகாலட்சேபம் செய்து வயிறு வளர்க்கும் இந்த குரூபிற்கு சனாதனத்தை உயர்த்தி பிடித்த இந்து அரசனான பிரித்திவிராஜ் சவுகான் இன்றைக்கும் தேவை படுகிறான் .

சதனாதனத்தை அப்படியே பச்சையாக சொன்னால் இன்றைக்கு பலரும் கேள்வி கேட்கிறார்கள் என்பதால் சனாதனம் என்கிற கொண்டையை மறைக்க தேசபக்தி, தேசியவெறி எனும் ஆயுதத்தை இவர்கள் கையில் எடுக்கிறார்கள்.


முகமது கோரி என்னும் இஸ்லாமிய மன்னனை எதிரியாக காட்ட ஒரு இந்து மன்னனை கதாநாயகனாக்கி மிக சாதுரியமாக கதாகாலட்சேபம் மூலம் கதையாக சொல்லி. மக்களை தேசியவெறி மூலம் நம்பவைக்கிறது இந்த பாசிச கூட்டம்

முகமது கோரியாகட்டும் , பிரித்திவிராஜ் சவுகானாகட்டும் இருவரும் இன்றைய நவீன ஜனநாயக அமைப்பிற்கு தேவையில்லாத ஆணிகள் தான்.

ஆனால் பாசிசம் மீண்டும் மீண்டும் பழைய வரலாற்று பொய் பெருமைகளை பேசி பேசி மக்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினருக்கு எதிரான துவேஷத்தையும், தேசிய வெறியையும், பிரிவினையையும் ஊட்டி வளர்க்கிறது.

கீழே உள்ள காணொளி நமக்கு உணர்த்தும் செய்தி அது தான்.

-

Sivakumar Sankarlingam

No comments: