Followers

Thursday, May 18, 2023

திருநெல்வேலி, ஹைகிரவுண்ட்...

 

திருநெல்வேலி, ஹைகிரவுண்ட்...

 

இந்தியாவில் அதிக அளவிலான படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளில் பிரசித்திபெற்றது திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இது 2400 படுக்கை வசதிகள் கொண்டது. 

 

இந்த கல்லூரியையும், மருத்துவமனை யையும் கட்டுவதற்கு பெருந்தலைவர் காமராஜர் முடிவெடுத்து அன்றய தினம் திருநெல்வேலியில் அதற்கு பொருத்தமான இடம் தேடுகிறார். காமராஜரின் இந்த நோக்கத்தை அறிந்த அவரது நண்பரும், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தாலுகா, #பெட்டைகுளத்தைச் சார்ந்த #காதர்மீராசாகிப் அவர்கள், தனக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை தானமாகவே கொடுக்கிறார். அந்த நிலப்பகுதியே இன்று நெல்லையில் "ஹைகிரவுண்ட்" என அழைக்கப்படுகிறது.

 

அங்கு தான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியும்,  மருத்துவமனையும் இயங்குகிறது. இன்று அந்த இடத்தின் விலை ஒரு சென்ட் 15 முதல் 20 லட்ச ரூபாய். அய்யா காதர் மீரா சாகிப் இன்றைய தருணத்தில் நினைவு கூறப்பட வேண்டியவர்.

 

 Murugesan Ponnaiah




8 comments:

Dr.Anburaj said...

ஆம்.
தியாகங்கள் மூலம் பெருங்காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.ஆனால் இந்துக்களின் தியாகங்கள் மறைக்கப்படுகின்றது. அதற்கு காரணம் மதவெறி.சுவனப்பிரியனின் மதவெறி.இந்த மண்ணில் தியாகம் செய்தவர்களின் மதம் என்ன என்று பார்ப்பது முட்டாள்தனம்.
-------------------------------------------------------------
வில்லி பாரதம் - சாதி கடந்த இடம்

நல்ல விஷயங்களை சொல்லவே அத்தனை இலக்கியங்களும் படைக்கப் பட்டன. நல்ல விஷயங்களை , நல்ல கதா பாத்திரங்கள் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. எதிர் மறை குணம் கொண்ட பாத்திரங்கள் மூலமும் நல்லதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

கம்ப இராமாயணத்தில் கூனி அறம் சொல்லுவாள், கும்பகர்ணன் சொல்லுவான்.

பாரதத்தில் சில இடங்களில் துரியோயாதான் நல்ல விஷயங்களைப் பேசுவான்.

அர்ஜுனனோடு வில் வித்தைக்கு கர்ணன் களத்தில் இறங்குகிறான்.

இது அரசர்களுக்கு உண்டான போட்டி. நீ யார், உன் குலம் என்ன என்று அங்கிருந்த பெரியவர்கள் வினவுகிறார்கள்.

துரியோதனன் சொல்கிறான்...."கற்றவர்களுக்கு, அழகான பெண்களுக்கும், தானம் செய்பவர்களுக்கும், வீரர்களுக்கும், அரசர்களுக்கும், ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் சாதி என்பது கிடையாது" என்று.

பாடல்

கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்வண்மைகை
உற்றவர்க்கும்வீரரென்றுயர்ந்தவர்க்கும்வாழ்வுடைக்
கொற்றவர்க்குமுண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்குமொன்றுசாதி நன்மைதீமையில்லையால்.


பொருள்


கற்றவர்க்கு = கல்வி கற்றவர்களுக்கு

நலனிறைந்த = நலம் நிறைந்த (அழகு, அறிவு, பண்பு) நிறைந்த

கன்னியர்க்கும் = கன்னிப் பெண்களுக்கும்

வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும்

வீரரென்றுயர்ந்தவர்க்கும் = வீரரென்று உயர்ந்தவர்க்கும்

வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும்


உ ண்மையான = உண்மையான

கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும்

நற்றவர்க்குமொன்று சாதி = நல்ல தவம் செய்தவர்களுக்கும் சாதி ஒன்று தான்

நன்மைதீமையில்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை


வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால், வேறு ஜாதிக் கார இராணுவ வீரர் காப்பாற்றினால், மாட்டோம் என்போமா ?

பசியில், வறுமையில் தவிக்கும் ஒருவன், வேறு ஜாதிக் காரன் தரும் உதவியை வேண்டாம் என்பானா ?

மாற்று ஜாதிக் காரன் என்பதால், ஒரு அரசன் சொல்வதை கேட்காமல் இருக்க முடியுமா ?

அழகான பெண், மாற்று சாதிக்காரி என்பதால் அவளின் அழகு பண்பு குறைந்து விடுமா ?
உண்மையான துறவிகள் எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சாதி போன்ற பிரிவுகளை கடந்து மேலே செல்வோம்.

அறிவோம். உயர்வோம்.

Dr.Anburaj said...

திருவாளா் காதா் மீரா அவர்களின் அல்லது தாத்தா. .பாட்டனாா் .. . .ஓட்டனாா்

நிச்சயம் இந்துக்கள்தான். அதில் எதாவது சந்தேகம் உள்ளதா சுவனப்பிரியன்.

Dr.Anburaj said...

ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்"



பாடல்

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்

உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்

ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே

முந்தையோர் கண்ட முறை.

Dr.Anburaj said...

அறம் என்றால் என்ன? ஒரு ஒழுங்கு, ஒரு நியதி, ஒரு உண்மை...அது தான் அறம்.


அறம் தான் நம் வாழ்வை செலுத்துவது.


நம் வாழ்வின் அடிப்படை அறம் தான்.

எனவே தான் இல்லறம், துறவறம் என்று வாழ்வை இரண்டாகப் பிரித்தார்கள்.

உலகுக்கு நீதி சொல்ல வந்த வள்ளுவர் - அறம் , பொருள் , இன்பம் என்று திருக்குறளை மூன்றாகப் பிரித்து அறத்தை முதலில் வைத்தார்.

வில்லறம் , சொல்லறம் என்று அனைத்திலும் அறத்தை கண்ட வாழ்க்கை நெறி நமது.

அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை என்பார் வள்ளுவர்.

Einstein said "I believe in the god of Spinoza who exists in the orderly harmony of what exists"

ஒரு ஒழுங்கு. அது தான் இறைவன்.

காரைக்கால் அம்மையார் இறைவனை "அறவா " என்று அழைக்கிறார். அறமே வடிவானவன். அறம் தான் கடவுள்.

பாடல்

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்

பொருள்

இறவாத இன்ப அன்பு வேண்டிப் = நமக்குத் தோன்றும் அன்பு கொஞ்ச நாளில் இறந்து போய் விடுகிறது. விழுந்து விழுந்து காதலித்தாலும், திருமணம் ஆன சில நாளில் அந்த அன்பு மறைந்து போய் விடுகிறது. இறவாத அன்பு வேண்டும் என்கிறார். இன்ப அன்பு. நினைத்துப் பாருங்கள் எத்தனை அன்பு இன்பமாக இருக்கிறது?

Dr.Anburaj said...


நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றதுபோல் ஒரு சில நல்லவர்கள் இருப்பதால் இந்த உலகம் இயங்குகிறது என்கிறது புறநானூறு.

யார் அந்த நல்லவர்கள் ? அவர்கள் என்ன செய்வார்கள்?

அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல், மற்றவர்களோடு பகிர்ந்து உண்பார்கள்.

கோபப்படமாட்டார்கள்.

மற்றவர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவார்கள்.

புகழுக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

பழி வரும் என்றால் உலகமே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.
தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பார்கள்.


உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

Dr.Anburaj said...

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வது இனிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வு இனியது இல்

பொருள்

ஆற்றானை = ஒரு செயலை செய்ய முடியாதவனை

ஆற்று என்று = செய் செய் என்று

அலையாமை முன் இனிதே = அவன் பின்னால் அலையாமை இனியது

கூற்றம் = எமன்

வரவு உண்மை =நம் வாழ்வில் வருவது உண்மை என்று

சிந்தித்து வாழ்வது இனிதே = சிந்தித்து வாழ்வது இனிமையானது

ஆக்கம் அழியினும் = நம்முடைய செல்வம் அழிந்தாலும்

அல்லவை கூறாத = தவறானவற்றை சொல்லாத

தேர்ச்சியின் = அறிதலின்

தேர்வு இனியது இல் = அதை தேர்ந்து எடுத்து கை கொள்வதை போன்ற

இனியது வேறு ஒன்றும் இல்லை

Unknown said...

அன்புள்ள சகோதரர் அன்புராஜ்... உங்கள் மீது எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் கருணையும்.
நீங்கள் வேதங்கள்/பைபிள்/குரான் (குறைந்தபட்சம்) அடிப்படை விஷயங்களைப் படித்திருக்கிறீர்களா?

Dr.Anburaj said...

பெயா் சொல்லாத நண்பரே நான் படித்திருக்கின்றேன்.
தங்களுக்கு என்ன சந்தேகம்.

தாங்கள் விவேகானந்தா் ஞானதீபத்தை படித்திருக்கின்றீர்களா?
திருமந்திரம் படித்திருக்கின்றீர்களா?
யோகசுத்திரம் படித்திருக்கின்றீர்களா?
சங்கீதம் படித்திருக்கின்றீர்களா? ராகங்கள் பற்றி அறிந்திருக்கின்றீர்களா?

விநோபா காந்தி எழுதிய பகவத்கீதை உரை படித்திருக்கின்றர்களா?
இறையில்லா இசுலாம் என்ற வலைதளம் படித்திருக்கின்றீர்களா?
ஈசாகுரான் என்ற வலைதளம் படித்திருக்கின்றீர்களா?
செங்கொடி என்ற வலைதளத்தில் அரேபியம் என்ற விஷம் குறித்த கட்டுரைகளைப் படித்திருக்கின்றீர்களா?
1971 இந்திய பாக் போருக்கு முன் பாக்கிஸ்தான் ராணுவம் கிழக்க பாக்கிஸ்தானில் செய்த கொடுமைகளைப் பற்றிய புத்தகங்களைப் படித்திருக்கின்றீர்களா?
இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினையின் சோகக்கதை.. . .படித்திருக்கின்றீர்களா?
ஜெய ஜெய பவானி என்ற நாவல் படித்திருக்கின்றீர்களா?
ஸ்ரீரங்கம் என்ற இந்து நகரம் அழிக்கப்பட்ட வரலாற்றை பற்றிச் சொல்லும் அரங்கன் உலா என்ற நாவலைப் படித்ததுண்டா?
பிறாமணன் எங்கே - சோ எழுதிய நாவல் படித்ததுண்டா?
ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டு அம்மானை படித்திருக்கின்றீர்களா?
மகான் பவவேஸ்வராின் போதனைகளைப் படித்திருக்கின்றீர்களா?
திருக்குறளை முழுவதுமாக வாசித்ததுண்டா?படித்திருக்கின்றீர்களா?

பதிலை பதிவிடுங்கள். அட்மின் அனுமதித்தால் உரையாடலாம்.கதைக்கலாம்.